Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவில் பாகுபாடு – உமாசந்திரபிரகாஸ் வடக்கில் உள்ள மாவட்டங்களிலேயே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் பெரும் வித்தியாசம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய (30) தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உமாச்சந்திர பிரகாஸ் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ‘யுத்தத்தின் பின்னர் குறிப்பிடத்தக்களவானவர்கள் சிறுநீரக, இருதய மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளியொருவரை சந்தித்தேன். கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளிகளிற்கு மாதாந்தம் 1000 ரூபா உதவித் தொக…

  2. மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர். அந்த காரை செலுத்திச் சென்றவர், தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொல…

  3. சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …

  4. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் 1,229வது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகளே இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். இதன்போது நாடாளுமன்ற வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றோருக்கு எதிரான பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. https://newuthayan.com/வவுனியாவில்-காணாமல்-ஆக்க/

  5. ஊருக்குள் புகுந்த முதலை சிக்கியது! மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (29) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அடி நீளமான முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://newuthayan.com/ஊருக்குள்-புகுந்த-முதலை/

  6. மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித் மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன். உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை. இதுவா மக…

    • 0 replies
    • 370 views
  7. முகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல் இலங்கையில் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (30) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/முகக்கவசம்-அணியாத-2658-பேர்-த/

  8. பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=130325

    • 0 replies
    • 396 views
  9. வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வககணணம-நடவடகக-கல-8-மணகக-ஆரமபம/150-252574

    • 0 replies
    • 490 views
  10. கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர by : Yuganthini இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்திற்கு எதிராக போராடி, யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். நாம் நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராகத்தான் அன்று போரிட்டோம். எனவே, இனியும் நாட்டில் சமஷ்டிக்கு …

    • 0 replies
    • 433 views
  11. வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்.! வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது. வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி கோட்ட…

    • 5 replies
    • 704 views
  12. கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை- தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை June 30, 2020 பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பினை மேற்கொள்வது என்ற போர்வையில் சமூக ஊடங்களில் தனிநபர்களின் விபரங்களை பெறும் நடவடிக்கை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குழுக்களில் இணையுமாறும்,தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்குமாறும் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் இவ்வாறான வேண்டுகோள்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்க…

  13. ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் 125 பேருக்கு தொடர்பு: அம்பலமாகியது இரகசிய கடிதம் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி.சதரசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் அரச உளவுச் சேவை பணிப்பாளராக செயற்பட்ட நிலந்த ஜயவர்தன, கடந்த 2019 ஏப்ரல் 10ஆம் திகதி, மட்டக்களப்பு பகுதிய…

  14. இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள். 1.…

    • 10 replies
    • 1.7k views
  15. பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொ…

  16. பணிப்புறக்கணிப்பை கைவிட்ட தபால் ஊழியர்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு, இன்று (29) வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் தபால்மா அதிபரால் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு சீட்டுகள் விநியோகத்தை காரணமாக கொண்டு நேற்று (28) நள்ளிரவு முதல் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். இதற்கு முன்னர் குறித்த நடவடிக்கை, கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. https://new…

  17. வைத்தியசாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் மக்கள் சிரமம்! கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுபடுத்துகிறது எனவும், அதனால் துர்நாற்றம் வருகிறது எனவும் வைத்தியசாலை சூழலில் வசிக்கின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கழிவு நீரை ஆற்றுக்குள் விடப்பட்டு வருகிறது. இந்த நீரானது ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. கிளிநொச்சிக் குளத்திலிருந்தே குடிநீருக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இராசயனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே, அவற்றை…

  18. சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பிரவேசித்த ஆயிரத்து 200 இற்கும் அதிகமானோர்; தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கென முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கோட்டை, பொரள்ள, தெமட்டகொட, கடவத்தை, கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்…

  19. யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர். வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் ச…

  20. 20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி by : Vithushagan காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக…

    • 1 reply
    • 396 views
  21. மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் அறிவித்துள்ளார். அந்த வகையில், ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். டெங்குத் தொற்றுக்கு ஆளாகிய அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இறப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவ…

  22. 2019’ சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://newuthayan.com/2019-சாதாணதர-பரீட்சை-எழுதிய/

  23. முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு: அமைச்சர் டக்ளஸ் by : Litharsan முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சார் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவத்தார். குறித்த கலந்துரையாடலில், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தலை தடை செய்தல், அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட அனுமதித்தல், வெளிமாவட்ட மீனவர்களைக் கட்டுப்ப…

    • 0 replies
    • 420 views
  24. ஒரே தினத்தில் இலங்கை வங்கியின் 3 கிளைகள் புதிய இடங்களில் திறப்பு - கே.எல்.ரி. யுதாஜித் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மூன்று கிளைகள், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத் தொகுதிகளுக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருமதி. குமுதினி யோகரட்ணத்தினால் இந்தக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, ஆரையம்பதி ஆகிய கிளைகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் கிளையும், இவ்வாறு புதிய முகவரிகளில் திறந்து வைக்கப்பட்டன. …

    • 0 replies
    • 438 views
  25. வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட இன்று (29) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இன்று அவரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாக ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் 11 இளைஞர்களை கடந்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். இது தொடர்பில் …

    • 0 replies
    • 422 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.