ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
மங்கள சமரவீரவிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை by : Jeyachandran Vithushan சுமார் 05 மணிநேர விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாவது தடவையாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சி.ஐ.டி.யில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில் சுமார் 5 மணி நேர வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் மங்கள சமரவீர, குற்றப்புலனாய்வுத் திணைக்கள வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை …
-
- 0 replies
- 491 views
-
-
சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு! by : Jeyachandran Vithushan பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடக பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 பேர் மேஜர் ஜெனரல்களாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும், 60 பேர் மேஜர்களாகவும் மற்றும் 60 பேர் லெப்டினன்ட்களாகவும் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று,…
-
- 0 replies
- 385 views
-
-
விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோர…
-
- 25 replies
- 3.8k views
-
-
சாமிமலை , வட்டவளையில் வெள்ளம் (Photos) ஹட்டன் , மஸ்கெலியா பகுதிகளில் பெய்யும் கடும் மழையால் அந்த பிரதேசங்களில் பல இடங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன. சாமிமலை பகுதியிலும் , வட்டவளை பகுதியிலும் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹட்டன் – கினிகத்தேனை பிரதான வீதியில் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/சாமிமலை-வட்டவளையில்-வெள/
-
- 0 replies
- 590 views
-
-
பலாலியில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில் இலங்கை பலாலி விமானப் படைத்தளபதி எயா மார்சல் டி.எல்.எஸ்.டயஸ் சார்பாக பலாலி விமானப்படைத் தளபதி குறூப் கப்டன் எ.வி.ஜயசேகர, முன்னிலையில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு பேருந்து மூலம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாத குழந்தை ஒன்று உள்ளிட்ட 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா …
-
- 0 replies
- 373 views
-
-
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை மறுதினம் (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், …
-
- 13 replies
- 1.1k views
-
-
லங்கா IOC நிறுவனம், நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி, 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் லீட்டர் ஒன்றின் விலை தற்போது 142 ரூபாயாக அதிகரித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/நள்ளிரவு-முதல்-பெற்றோல்-விலையில்-அதிகரிப்பு/175-250366
-
- 5 replies
- 642 views
-
-
இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவி்த்துள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது மொத்தமாக 991 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆகக் காணப்படுவதுடன் வைத்தியசாலையில் 423 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-தொற்று/
-
- 0 replies
- 383 views
-
-
சிலாபம் மாரவில நகரில் சிலரை ஒன்றுக் கூட்டி பிரார்த்தனை ஜெபக் கூட்டத்தை நடத்திய கிறிஸ்தவ போதகருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மஹாவெவ சுகாதார பரிசோதகர் பீ.எம்.வஜிர நிலந்த தெரிவித்துள்ளார். இந்த ஜெபக் கூட்டம் இன்று மதியம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாரவில பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர். மாரவில நகரில் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இந்த ஜெபக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு நான்கு சிறுவர்களுடன் 18 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் என 27 பேர் கூடியிருந்ததாகவும் நிலந்த குறிப்பிட்டுள்ளார். ஜெபக் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பலர் முக கவசங்களை அணிந்திருக்கவில்லை. தன…
-
- 6 replies
- 1.4k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற அமர்வொன்று இன்று, நாடு மூன்று மாதங்களுக்கு மேல் இயங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று உயர் நீதிமன்றில் தெரிவித்தார். அரசியலமைப்பின் உறுப்புரைகளை ஆதாரம் காட்டி மேற்படி வாதத்தை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்போது சட்ட ரீதியாக வலுவற்ற ஆவணம் எனவும், அதனால் தற்போது, குறித்த திகதியில் இருந்த பாராளுமன்றம் உயிர்ப்புள்ளது எனவும் வாதிட்டார். 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக்கோரி உயர் நீதிமன்றில் தாக்…
-
- 4 replies
- 597 views
-
-
சங்குப்பிட்டியில் இருந்து யாழ். நோக்கி திருப்பி அனுப்பப்பட்ட வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினார் செம்மணியில் அஞ்சலிக்காக சென்ற சமயம் அங்கும் அவர்களுக்கு தடை தடையேற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.செம்மணிப் பகுதியில் அஞ்செலி செலத்துவதற்காக முற்பட்டபோது அவர்களை பின்தொடர்ந்த பொலிஸார் அங்கும் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது திருப்பி அனுப்பியுள்ளனர். முன்னதாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். இவ்வாறு சென்றுகொண்டிருந்த வடமாக…
-
- 3 replies
- 820 views
-
-
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னன் பிபிசி தமிழுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தினார். குறிப்பாக இன்றைய தினம் காலை முதல் இலங்கையின் மிக முக்கியமான 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்ற அடையாளத்தை கொண்ட ஒரு பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. …
-
- 19 replies
- 1.5k views
-
-
யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர் யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு உள்ளாகி அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது. அவர்கள் கடுமையான தலை காயங்களுக்கு உள்ளாகியு…
-
- 0 replies
- 440 views
-
-
உயிர்நீத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி! இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய ஊடகவியலாளர் குறிப்பிட்டார். இன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு நேற்றைய தினம் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டு குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர். இதேவேளை, முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட…
-
- 12 replies
- 971 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அரசியல் வாதிகள் மற்றும் அந்தணர்கள், சமூக ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பிரார்தனையை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆலயத்திற்கு வெளியில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆத்ம சாந்தி பூஜை இடம்பெற்று கொண்டிருந்தபோது ஆலயத்திற்குள் நுளைந்த புலனாய்வு பிரிவு அலுவலர் ஒருவர் நிகழ்வினையும், நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களையும் புகைப்படம் எடுத்திருந்தார். ஆலயத்திற்குள் நுளைந்து அவர் புகைப்படம் எடுத்தமை அங்கிருந்தவர்கள் மத்தியில…
-
- 2 replies
- 797 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய ஜனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது. எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படு…
-
- 0 replies
- 875 views
-
-
இலங்கையை ஈழம் என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை, இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவருகிறது. இதற்கான பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழம் என்பது, இலங்கையின் பூர்வீகப் பெயரல்ல என்று, இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதுவர் வௌியிட்டுள்ள கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன, “இந்த அரசாங்கம் இனங்களிடையே ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை என்பது…
-
- 1 reply
- 487 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டது. தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தல…
-
- 0 replies
- 384 views
-
-
அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் அம்பன் சூறாவளி வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.90 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும்அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும்மேலாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 06 மணித்தியாலங்களில் ஒரு…
-
- 0 replies
- 543 views
-
-
மட்டக்களப்பிலும் நினைவேந்தலுக்கு தடை கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - புதுமுகத்துவாரம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இன்று (18) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய முற்பட்டபோது, பொலிஸாரும் இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையிலான கட்சி ஆதரவாளர்கள் மதத் தலைவர்கள் உட்பட 10 பேர், புதுமுகத்துவாரத்திலுள்ள களப்பு பகுதியில் நினைவேந்தலுக்காக இன்று காலை 7.30 மணிக்குச் சென்ற போது, அங்கு பொலிஸார், இராணுவத்தினர் நினைவு கூர்வதை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சுகாதார முறையை பின்பற்றி நினைவு கூருவதாகவும் …
-
- 0 replies
- 472 views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவோம் – இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளுக்கு, வீடுகளில் சுடரேற்றி, அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.இறுதிப் போரில் அரச படைகளின் பலவிதமான தாக்குதல்களினால் எமது உறவுகள் பலர் முள்ளிவாய்க்கால் மண்ணில் சாகடிக்கப்பட்டனர். சாட்சியங்கள் எதுவுமின்றி போர் விதிகளுக்கு முரணாக இறுதிப் போர் இந்த மண்ணில் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். போரை உடன் நிறுத்தும்படியும் ஆட்சியில் இருந்த அரசைக் கோரினேன் என்றும் தெரி…
-
- 0 replies
- 411 views
-
-
தடையை மீறி சுடரேற்றிய சிவாஜி. May 18, 2020 யாழ்.செம்மணி பகுதியில் காவல்துறையினரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக , யாழில் இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்.மன்னார் வீதியூடாக பயணித்த போது , சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ்.செம்மணி…
-
- 0 replies
- 705 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அந்த அடிப்படையில் சுமந்திரன் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடி ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும். தனியொரு நபராக நான் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாதென்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியினால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து நீங்கள் உள்ளிட்டவர்கள் அதுதொடர்பில் ஊடக அறிக்கைள் ஊடாக பிரதிபலித்திருந்த நிலையில்; அவர் தன்னிலை…
-
- 4 replies
- 599 views
-
-
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.vir…
-
- 1 reply
- 491 views
-
-
இலங்கை | பாராளுமன்றத் தேர்தல்கள் பின்போடப்படலாம்இலங்கை பாராளுமன்றத் தேர்தல்கள் பின்போடப்படலாம்?? கோவிட்-19 தொற்றுத் தவிர்ப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்ற நிலமையில், அடுத்த மாதம் (ஜூன் 20) நடைபெறவிருந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலைப் பின்போடுவது பற்றி ஜனாதிபதி செயலகம் உத்தேசித்து வருவதாகச் சில செய்திகள் கசிந்துள்ளதாக கொழும்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது. புதிய தேர்தல் திகதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 20 இலிருந்து மேலும் 3 – 6 வாரங்களுக்குத் தள்ளிப் போடப்படலாம் என அறியப்படுகிறது. அதே வேளை, ஆகஸ்ட் 16 இற்கு முதல் தேர்தலை நடத்திவிடவேண்டுமென்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாகவுள்ளதாகவும், அன்றுடன் ஆணையத்துக்கான கடமைத் தவணை முடிவடைகிறது எனவும் தெரிய வர…
-
- 3 replies
- 478 views
-