ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
இலங்கையில் சட்டரீதியான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் எனினும் நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அந்த ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். ஊரடங்குச் சட்டத்தை மீறியமை…
-
- 61 replies
- 4.5k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் இன்று இரு சிறுவர்கள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். குறித்த இரு சிறுவர்களும் விஷேட சாட்சியாளர்களாக அங்கு விசாரணையாளர்களால் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இரகசிய வாக்கு மூலம் நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து பெறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்ட, புத்தளம் - வனாத்தவில்லு , காரைத் தீவு பகுதியின் மத்ரஸாவில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தியே குறித்த சாட்சியாளர்…
-
- 1 reply
- 415 views
-
-
பணதூய்தாக்கல் – மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் by : Jeyachandran Vithushan பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட அதன் பட்டியலிலிருந்து இலங்கையினை ஐரோப்பிய ஆணைக்குழு நீக்கியுள்ளது. 2017 ஒக்டோபர் மாதத்தில் சாம்பல் நிறப்பட்டியல் என பொதுவாக இனங்காணப்படுகின்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் இணங்குவித்தல் ஆவணத்தில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நியாயாதிக்க பிரதேசமாக அச் ச…
-
- 1 reply
- 612 views
-
-
சுதாகரனுக்கும் கண்ணதாசனுக்கும் வாதாட வக்கற்றவர் சுமந்திரன் தமிழினத்தின் இருப்பு உயிர்வாழும் உரிமை மறுதலிக்கப்பட்ட போது உங்களின் அதிமேதாவித்தனம் உங்களை உங்களது சிங்கள எஜமானர்களோடு மகிழ்சியாக வைந்திருந்திருக்கலாம், ஆனால் கிராமங்களில் புத்தகப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஏந்தி நின்ற ஆயுதங்களே இன்றுவரை இலங்கைத்தீவில் தமிழர்களை உயிர்காத்து வைத்துள்ளது என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். அண்மையில் சுமந்திரனால் வெளியிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியம் தொடர்பில் தீர்க்கமான பார்வை இல்லாதவர்கள் ஆயுதப் போ…
-
- 1 reply
- 638 views
-
-
ஆளும்தரப்புடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது நோக்கமல்ல – ஐ.தே.க. by : Jeyachandran Vithushan ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என்ற கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மறுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர…
-
- 0 replies
- 407 views
-
-
சுகாதார பரிந்துறைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து முக்கிய கலந்துரையாடல் சுகாதார பரிந்துறைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது, சுகாதார பரிந்துறைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் வேட்பாளர்களுக்கான இலக்கங்களை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, கட்சிகளின் செயலாளர்களுடன் பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துறையாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி, நாளைய தினம் …
-
- 0 replies
- 307 views
-
-
சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை தொரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் சிங்கள அரசாங்கங்கள் தற…
-
- 2 replies
- 556 views
-
-
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தலைமறைவாக உள்ள ரௌடிகள் சிலரை தேடி, பல வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை செய்தனர். கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சில இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மீட்க சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கினார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை. நாகர்கோவில் பகுதியில் அன்றைய தினம் மதுபோதையி…
-
- 27 replies
- 2.9k views
-
-
(நா.தனுஜா) சீனாவிலிருந்து தற்போது பெருமளவான முதலீட்டாளர்கள் வெளியேறியிருப்பதனால் அவர்களை மீள முதலீடு செய்வதற்காக எமது நாட்டை நோக்கிக் கவர்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுபற்று அவர் மேலும் கூறியிருப்பதாவது, எமது பொருளாதாரத்தை விரைவாக மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவையொன்றுள்ளது. தற்போது சீனாவிலிருந்து பெருமளவான முதலீட்டாளர்கள் வெளியேறியிருப்பதனால் அவர்களை மீள முதலீடு செய்வதற்காக எமது நாட்டை நோக்கிக் கவர்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும்…
-
- 3 replies
- 548 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுடன் பொலனறுவை - வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடக்கைச் சேர்ந்த இருவர் நேற்று வீடுகளுக்குத் திரும்பியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 பேரும், வவுனியாவைச் சேர்ந்த ஒருவருமாக 16 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வடக்கில் சுவிஸ் மத போதகருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் தாவடியைச் சேர்ந்தவர் முதலாவது நோயாளியாக அடையாளம் காணப்பட்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் ஏனை…
-
- 2 replies
- 459 views
-
-
2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர் தர கற்கை நெறியைத் தொடரவுள்ள மாணவர்கள் அதற்கென இணையத் தளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்தள்ளது. இதற்கமைவாக கல்வியமைச்சின் www.info.moe.gov.lkஎன்ற இணையத் தளத்தின் ஊடாக உயர்தரத்தில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும், அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு (2020.06.12 ) முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/142977
-
- 2 replies
- 389 views
-
-
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானவர்களிடம் இன்று(11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது கடந்த ஆறாம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொலிஸாரினால் மூன்று நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று முல்லைத்தீவுக்கு வருகைதந்த மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகரிடம் பாதிக்கப்படடவர்களை அழைத்து சென்று கலந்துரையாடியுள்ளனர் இதனடிப்படையில் இன்று மாலை பொலிஸாரால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன …
-
- 0 replies
- 403 views
-
-
சகா பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின்பேரில் மீண்டும் அம்பாறைமாவட்டத்தில் கத்தரிக்காய் இரட்டை நிவாரணச் செயற்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று பொத்துவில் பிரதேசத்துக்குச்சென்று ஊறணி விவசாயக்கிராமத்தில் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது. கிலோகிராம் 30 ரூபாய் வீதம் 1,500 கிலோகிராம் கத்தரிக்காய்களும் கிலோகிராம் 100 ரூபாய் வீதம் 200 கிலோகிராம் மிளகாய்களும் கொள்வனவு செய்யப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிப் பிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன் ஆகியோர் நேரடியாக வந்து இச்செயற்பாட்டில் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். இவர…
-
- 1 reply
- 611 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பெற்றோரின் பொறுப்பில் இருந்த மூன்று சிறுவர்களை தாம் சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்சுறுத்தி ஆவணங்களில் பலாத்காரமாக கையெழுத்து வாங்கியதாக கூறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த மூன்று சிறுவர்களையும் மனுதாரர்களாக கொண்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அவர்களது பெற்றோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மனுவானது சட்டத்தரணி பிரபுத்திகா திசேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவில் பிரதிவாதிகளாக, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். காரைத்தீவு அல் சுஹைரியா…
-
- 0 replies
- 409 views
-
-
(ஆர்.யசி) எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கடந்த 45 நாட்களுக்கு அதிகமான காலம் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் கூறினார். விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. கு…
-
- 0 replies
- 432 views
-
-
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி முன்னிலையில் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க , அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுகாதார அமைச்சின் செயலாளராக இது வரையில் கடமையாற்றிய பத்ராணி ஜயவர்தன வர்த்தக அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/81809
-
- 1 reply
- 612 views
-
-
ஊடரங்குச் சட்டத்தைப் பிறப்பித்து நாட்டை 'ஷட் டவுன்' பண்ணுவதாகக் கூறினாலும், உலகில் எந்தவொரு நாட்டையும் முழுமையாக 'ஷட் டவுன்' பண்ண முடியாதெனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மக்களில் அதிகமானோர் வீடுகளில் இருக்கும்போது, மேலும் பல மில்லியன் பேர் மக்களுக்காக வேலை செய்யவேண்டி ஏற்படுகிறதென்றார். நாட்டின் இயல்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறிய அவர், கொரோனா வைரஸ் பரவல், இந்நாட்டிலிருந்து முழுமையாக மறைந்து போகவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவிற்கொள்ள வேண்டுமென்றார். இது தொடர்பில், நேற்றைய தினம் (10) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது கொரோனா நோய…
-
- 1 reply
- 459 views
-
-
(ந.தனுஜா) மனித உயிர்களைக் காப்பதற்காக இன்னமும் உண்மையான வீரர்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கையில், சுகாதார அமைச்சர் இதனை ஒரு பாடசாலை விளையாட்டுப்போட்டி என்று கருதிக்கொண்டிருக்கிறார் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார். இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர மேலும் கூறியிருப்பதாவது: உலகளாவிய ரீதியில் இன்னமும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், எமது சுகாதார அமைச்சர் தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப்பதக்கத்தையும் அதிபர் மற்றும் உப அதிபருக்கு இடையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு பாடசாலை விளையாட்டுப்போட்டி என்று கருதிக்கொண்டிருக்கிறார். ஆன…
-
- 0 replies
- 324 views
-
-
க.கமல் கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதெனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்த நிலைமைகளுக்கு மத்தியில் டயஸ்போரா (புலம்பெயர்ந்த தமிழர்கள்) குழுவினர் நாட்டுக்குள் நுழைய முடியாதெனவும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தற்போது சமூகத்துக்குள் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கடற்படையினர், தனிமைப்படுத்தப்படுத்தல் முகாம்களுக்குள் உள்ளவர்கள் மாத்திரமே தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என்றார். அக்குரணை, புத்தளம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தது தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற…
-
- 0 replies
- 564 views
-
-
தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல் by : Dhackshala யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இராணுவம் என்ற ரீதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப எம்மால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்ளத்தான் நாம் எத…
-
- 0 replies
- 393 views
-
-
இரணைமடுவில் தனிமைப்படுத்தப்பட்ட 175 பேர் இன்று விடுவிப்பு இரணைமடு இலங்கை விமானப்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 175 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். http://tamil.adaderana.lk/news.php?nid=128643
-
- 0 replies
- 457 views
-
-
23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு – கொழும்பில் நிறுவன செயற்பாடுகள் ஆரம்பம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எ…
-
- 0 replies
- 343 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் – மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் கைது ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து இடம்பெறும் விஷேட விசாரணைகளில் ஒரு அங்கமாக, திருகோணமலை – தோப்பூர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து மூதூர் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், பயங்கரவாதி சஹ்ரானின் பிரதான சகாவான மொஹமட் இப்ராஹீம் சாஹித் அஹமட்டிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைய கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி சம்பூர் பொலிஸ் பிரிவில் ஆயுத பயிற்சி முகாம் ஒன்று ஒரு வருடத்தின் பின்னர் கண்டறியப்பட்டது. இதனையடுத்…
-
- 0 replies
- 411 views
-
-
விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பா?. பதில் - இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு 70 ஆம் ஆண்டுகளில் உருவானது. ஆனால் எமது கட்சி 1949 ஆம் ஆண்டு உருவானது. கேள்வி -ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்தினார். பதில்- இல்லை. கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கூட்டத்தை பிரபாகரனே நடத்தினால், அதில் சம்ப…
-
- 7 replies
- 968 views
-
-
நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து தமிழ் பத்திரிகைக்கு பதிலளிக்கையில் நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிர…
-
- 6 replies
- 771 views
-