ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
யாழில் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் – அரசாங்க அதிபர் ஊரடங்கு சட்ட நேரத்தில் சீவல் தொழிலாளர்களினால் சேகரிக்கப்படும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், பனை அபிவிருத்தி சபை மற்றும் கலால் திணைக்களம், சுகாதார பரிசோதகர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் முடிவில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன குறிப்பாக சீவல் தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் அவர்களால்சேகரிக்கப்படும்ப் பதநீரை விற்பனை செய்ய முடியாதவாறு அரசாங்கத்தி…
-
- 1 reply
- 348 views
-
-
சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என தேரர் ஒருவர் விடுத்த கோரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக, பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இரவு, பிரதேசத்தின் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளராக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, தன்னை கைதுசெய்ய வேண்டாம் என கோரியுள்ளார். இது குறித்து உடனடியாக ஏனைய அதிகாரிகளையும்…
-
- 9 replies
- 1.5k views
-
-
(எம்.மனோசித்ரா) கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இவ்விடயத்தில் ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார். இன்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலால் நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என…
-
- 2 replies
- 401 views
-
-
நாடு முழுவதிலும் அமுலில் உள்ள ஊரடங்கு திங்கட்கிழமை தளர்வு: பொலிஸ் தலைமையகம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று அதிகாலை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடைபொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கு…
-
- 0 replies
- 298 views
-
-
கனகராசா சரவணன் கணவாய் உணவு ஒவ்வாமையால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சே ர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி, மாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இம்மாதம் 18ஆம் திகதி, வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாய் வாங்கி, உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் ஆகியோரைத் தவிர, குடும்பத்தவர்கள் ஐவர், அன்றையதினம் பகல் உணவு சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது.…
-
- 23 replies
- 1.6k views
-
-
இன்று இரவு மீண்டும் அமுலாகின்றது ஊரடங்கு! by : Benitlas கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு மீளவும் அமுலுக்கு வரவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகின்றது. இந்தநிலையிலேயே கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மீளவும் இரவு 8 மணிக்கு அமுலாகிறது. இவ்வாறு அமுல்படுத்தப்படவ…
-
- 1 reply
- 383 views
-
-
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; வலி.மேற்கு பிரதேச சபைக்கு உள்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பவினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் …
-
- 8 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் ஒன்றான பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச மக்கள் தங்களது பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட, நீதி மன்ற வழக்கிற்கு, அரச திணைக்கள தேவைகளுக்கு, அத்தியாவசிய தேவைக்கு அல்லாத பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள என பல்வேறு தேவைகளுக்கு பளையிலிருந்து கிளிநொச்சி நகருக்கு செல்ல முடியாதுள்ளது எனவும் அவ்வாறு வருகின்ற பொதுமக்களை ஆனையிறவில் படையினர் செல்லவிடாது திருப்பி அனுப்புகின்றனர் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நிர்வா…
-
- 2 replies
- 470 views
-
-
வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்கும் நடைமுறை திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வருகின்ற கல்வி பொது உயர்தர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இணையத்தை பயன்படுத்தி ஒன்லைன் சூம் (ZOOM) என்ற ஆப்ஸின் ஊடாக வீட்டில் இருக்கும் உயர்தர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடியவாரு ஆசிரியர்கள் வீட்டிலிருந்தவாறே கற்பிக்கக் கூடியவாறு கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் இணையத்தளம் பாவிக்கக்கூ…
-
- 0 replies
- 333 views
-
-
(ஆர்.யசி) கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. எனவே தொடர்ந்தும் மக்கள் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டியுள்ளது என கூறும் அரச சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலும் ஒருவார கால செயற்பாடுகளை அவதானித்து மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சுகாதார பணிப்பகம் மற்றும் அரசாங்கம் அவதானித்துள்ள விடயங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்ல…
-
- 0 replies
- 255 views
-
-
நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு- பண்டாரநாயக்க பகுதியில் உள்ளவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் ஒருவர் ஊடாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள சிறிய உணவகங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத காரணத்தால், மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேணுவதுடன் சுகாதார வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய…
-
- 12 replies
- 1.2k views
-
-
கொரோனோ சந்தேகத்தில் அழைத்து வரப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணம்! கொரோனோ நோய் சந்தேகத்தில் கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு யாழ் கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாமினுள் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த எம்.அ.நசார் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று(வியாழக்கிழமை) நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொ…
-
- 4 replies
- 435 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்விசாரா ஊழியர்களின் செயற்பாடுகள் உட்பட்ட நிர்வாக செயற்பாடுகளை வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க யாழ். பல்கலைக்கழக நிர்…
-
- 2 replies
- 370 views
-
-
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அரசியல்வாதி ஒருவர் சென்றுள்ளமை குறித்து வட மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆதவன் செய்திப் பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொறுப்பான அரசியல்வாதி ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். யாழ் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டார். http://athavannews.com/ந…
-
- 3 replies
- 915 views
-
-
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று (24) காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினையடுத்து விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு கொண்டு வந்தனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக பேரூந்துகள் அனைத்தும் தண்ணீரினால் கழுவிய பின்னர் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து அதன் பின்னரே சேவையில் ஈடுபடுகின்றன. இதுவரையிலான காலப்பகுதியில் வவுனியா இ.போ.ச சாலையிலும் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இன்று இ.போ.ச வவுனியா சாலையிலுள்ள பேருந்துகள் தொற்று நீக்காமையினால் தாம் சேவையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இ.போ.ச வவுனியா சாலைக்கு வி…
-
- 0 replies
- 372 views
-
-
யாழ். பல்கலையின் நிர்வாக நடவடிக்கை ஆரம்பமாகிறது: தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு by : Litharsan யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க அரசாங்கத்தால் அனு…
-
- 0 replies
- 283 views
-
-
அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகம்- சிவமோகன் by : Litharsan ஒரு ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக்கொண்டு நாட்டை சுமூகமான நிலையில் நடத்த வேண்டிய கோட்டாபய அரசாங்கம் அதற்குப் புறம்பான நடவடிக்கைகளை எடுத்துவருவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தைப் புறந்தள்ளி செப்ரெம்பர் வரை செயற்பட இருந்த நாடாளுமன்றத்தை தனது ஏதேச்சதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கினார். தனக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்த முடியாமல் போகும் சந்தர்ப்ப…
-
- 0 replies
- 324 views
-
-
100 கோடி நஷ்டஈடு கோரிய அங்கஜன் April 23, 2020 “கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ” என யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் அங்கஜன் இராமநாதனையே குறிப்பிட்டுள்ளதாக கூறி , குறித்த பத்திரிக்கைக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் கடந்த 20ஆம் திகதி “கொடையாளர…
-
- 3 replies
- 561 views
-
-
(ஆர்.யசி) கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அமைச்சரவையில் அறிவித்துள்ளார். அதற்கமைய எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பழைய பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்கிறது அரசாங்கம். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வேளையில், அரசியல் அமைப்பு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் மூலமாக ஒதுக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை நிதி ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் அரசாங்கம் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எதனையும் முன்னெடுக்க…
-
- 4 replies
- 450 views
-
-
நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளர்கள், இடைக்கிடையே அடையாளம் காணப்படவில்லை என்றும் ஒரு தொடர் சங்கலியாகவே நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்று நோயாளருக்கும் எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டிருந்தது என்றும் பின்னரே, ஏற்கெனவே கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவருடன் ஒரு வகையில் தொடர்பிருந்தமையால் இந்நோய் ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். “கொவிட்- 19 வைரஸ், எங்கிருந்தோ வந்துவிடாது. அதற்கென்று ஒரு வேர் தொடக்கம் உள்ளது. அடையாளம் காணப்பட்ட நோயாளியின் தொடர்பு சங்கிலி தொடர்பாக ஆராய…
-
- 2 replies
- 799 views
-
-
வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் வடக்கைப் பொறுத்தவரைக்கும் புதியதொழில் முயற்சியாளர்கள் தற்பொழுது உருவாகிக்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு அதன்காரணமாக அவர்களின் முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவ்…
-
- 0 replies
- 342 views
-
-
மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை! ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியவசிய சேவைகளைத் தவிர மாவட்டங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் முகக் கவசம் அணியாத பயணிகள் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/மாவட்டங்களுக்கிடையில்-ம/
-
- 1 reply
- 327 views
-
-
(ஆர்.யசி) நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு குறுகியகால கடனாக இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான உடன்படிக்கையை செய்துகொள்ள அமைச்சரவை அனுமதியும் பிரதமரினால் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி இப்போது பதிவாகியுள்ளது. சகல நாடுகளின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை செல…
-
- 3 replies
- 515 views
-
-
யாழ்ப்பாணம் அரியாலை ஆலயத்தில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பரிசோதனைகள் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 16 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 46 பேருக்கு இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தாவடியைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு முறை பரிசோதனைகள் நடதப்பட்டன என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் நல்லூர் மருத்து …
-
- 3 replies
- 416 views
-
-
இலங்கை கடற்படையினர் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொலனறுவை பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மாத்திரம் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது. http://athavannews.com/30-கடற்படை-வீரர்களுக்கு-கொ/
-
- 2 replies
- 452 views
-