ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
(இரா.செல்வராஜா) சிறு குற்றங்களைப் புரிந்தவர்களையும், பிணை செலுத்த முடியாமல் சிறையிலிருக்கும் சுமார் 4000 கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சிறு குற்றங்களை செய்தவர்களையும், பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அக்குழுவினர் பலமுறை கூடி ஆராய்ந்து சிறையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் சிபாரிசு செய்யவுள்ளனர். இதனடிப்படையில் சுமார் 4000 கைதிகள் விடுதலை செய்யப்பட…
-
- 0 replies
- 284 views
-
-
110 கைதிகள் யாழ். சிறைச்சாலையிலிருந்து பிணையில் சென்றனர் (தி.சோபிதன்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்…
-
- 1 reply
- 399 views
-
-
ஹொரவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல்களை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்! ஹொரவபொத்தான பிரதேசத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரவபொத்தான பெரிய பள்ளிவாசலினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் நாட்டின் தற்போது நிலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான பெரிய பள்ளிவாசலின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். http://athavannews.com/ஹொரவபொத்தானையில்-உள்ள-பள/
-
- 1 reply
- 421 views
-
-
பயணிகள் வருகையின் தடை நீக்க காலம் நீடிப்பு! Published by J Anojan on 2020-03-29 11:56:27 இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், அனைத்து பயணிகள் வருகையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது. தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் சகல வணிக பயணிகள் விமானங்களையும் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் நிறுத்தி வைப்பதாக இலங்கை சிவில் விமான சேவைகள் பணியகம் நேற்றையதினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்த போதிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம்…
-
- 0 replies
- 296 views
-
-
விமானப்படை தளத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்! முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/விமானப்படை-தளத்தில்-துப்/
-
- 0 replies
- 394 views
-
-
Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 08:26 - 0 - 12 டி.விஜித்தா யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளமையால், பொதுமக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, யாழ்.மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், பொதுமக்களின் அத்தியவசியத் தேவை தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை அந்தந்த பிரதேச செயலாளர்கள் முன்னெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட தகவல் பொதுமக்களுக்கு தாமதம…
-
- 0 replies
- 647 views
-
-
(எம்.மனோசித்ரா) கொரோனா ஒழிப்பிற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்காக அஸ்கிரிய, மல்வத்து பீடம் மற்றும் தலதா மாளிகை என்பன 2 கோடி ரூபா நிதியுதவியளித்துள்ளன. இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபா ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை…
-
- 3 replies
- 454 views
-
-
(எம்.மனோசித்ரா) பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் சுமார் 26 நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார். அதற்கமைய மருத்துவ ஆலோசனைகளின் படி குறித்த 26 பேரும் அந்த பகுதியிலேயே தன…
-
- 11 replies
- 956 views
-
-
(ஆர்.யசி) நாட்டு மக்கள் எந்த பாகுபாடும், இன பேதங்களும் இன்றி ஒன்றிணைந்து ஒரே நாடாக மீள வேண்டிய தருணம் இதுவென அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக பீடங்கள் தெரிவித்துள்ளன. அரசாங்கம், மருத்துவத்துறையினர் மற்றும் பாதுகாப்பு துறைகளின் கடமை பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து நாட்டின் பிரதான பெளத்த பீடங்களான மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள அறிவித்தலில் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்து மல்வத்து அனுநாயக தேரரான நியங்கொட விஜிதசிறி தேரர் கூறுகையில், இன்று நிலவும் ஊரடங்கு சட்டம் மேலும் சிலகாலத்திற்கு நீடிக்க வேண்டும் என்பதே பலரதும் கருத…
-
- 3 replies
- 509 views
-
-
வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை March 28, 2020 வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவiலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம், கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு மாறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா பரவக் கூடிய அபாய வலயமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக அம்மாவட்டங்களை அபாய வலயங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது #வடமாகாணம் #கொரோனா #அபாயவலயம் http://globaltamilnews.net/2020/13…
-
- 1 reply
- 317 views
-
-
அன்றாடம் கூலித்தொழில் செய்வோருக்கு எந்தவித வேலைவாய்ப்புகளும் அற்ற சூழல் நிலவுகிறது. இதனால் முழு இலங்கையிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கே அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஆரம்பம் முதற்கொண்டு இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நடவட…
-
- 3 replies
- 426 views
-
-
மன்னாரில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின்போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக மன்னாரில் எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் அவசரத் தேவைக்காக நடமாடுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பாஸ் நடைமுறையானது அரச உத்தியோகத்தர…
-
- 0 replies
- 323 views
-
-
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிடப்பட்ட போது குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (சனிக்கிழமை) அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கு…
-
- 1 reply
- 429 views
-
-
பல்கலைக்கழகங்களில் 2020ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைக்கும் பதிவுக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த கால எல்லை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஆயினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளின் அடிப்படையில், 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்…
-
- 0 replies
- 282 views
-
-
மட்டக்களப்பில் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ளும் முறை குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் குறித்த மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய நோயாளர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தங்களது கிளினிக் இலக்கத்துடன் கிளினிக் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் தங்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயரினை வழங்குவது காட்டாயமானது எனவும், இந்த தகவல்களை வழங்கி மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியச…
-
- 0 replies
- 244 views
-
-
(செ.தேன்மொழி) அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத ந…
-
- 4 replies
- 508 views
-
-
நல்லூர் – திருக்கோணேஸ்வரர் ஆலயங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை! திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய கோபுரத்தின் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களின் மூலமாக போலியான செய்திகள் பரப்பட்டுவந்தன. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாமென திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் இடம்பெறவில்லை என எமது செய்தியாளர்களும் உறுதிப்படுத்தினர். இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் போபுர கலசம் உடைந்து வீழ்ந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை எ…
-
- 0 replies
- 297 views
-
-
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் எமக்குத் தெரிவித்தார், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. . போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட மட்டில் இடம்பெற்று வருகிறது நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை முதல் மதியம் 2 மணி வரை பலசரக்கு கடைகள் மருத்துக நிலையங்கள் சில திறக்கப்பட்டிருந்தது. ;பொலிஸ் நிலையம் பிரதேச செயலகத்தில் வியாபார அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் வழமைபோன்று நகர…
-
- 0 replies
- 461 views
-
-
கொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பல்தரப்பு, இருதரப்பு உதவி முகவர் நிறுவனங்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி&nb; உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் -19 சமூக இடைவெளி, பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த நிவாரணம் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். https…
-
- 8 replies
- 1.1k views
-
-
கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும். சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது …
-
- 19 replies
- 1.5k views
-
-
மாவட்டங்களுக்கிடையிலான பயணங்களுக்குத் தடை Editorial / 2020 மார்ச் 27 , பி.ப. 05:35 - 0 - 64 மாவட்டங்களுக்கிடையில் பயணம் செய்வதற்கு தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்தத் தடை அமுல்படுத்த்படாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மவடடஙகளககடயலன-பயணஙகளககத-தட/175-247511
-
- 0 replies
- 413 views
-
-
ஹொரோவொபொத்தானை கிவுலகட பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளிவாயலில் இன்று தொழுகை நடத்தியதற்காக பள்ளிவாய லின் தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவை தொடர்புகொண்டபோது , ஊரடங்கு விதிகளை மீறும் வகையில் சுமார் 50 பேர் தொழுகை நடத்தியுள்ளதாக மடவளை நியூசுக்கு தெரிவித்தனர். பொலிஸார் வந்தவுடன் பலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். கைது செய்யப்பட்ட 18 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.எனினும் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பா…
-
- 1 reply
- 562 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வுகூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அனலைதீவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வை்ததியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு மருத்துவர்கள் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர். அவரது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். எனினும் அடுத்த வாரம் தொடக்கம் கொரோனா வைர…
-
- 0 replies
- 371 views
-
-
உலகெங்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கை ஆணொருவர் சுவிற்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடையவரெனவும், கடந்த 25ஆம் திகதி இவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இவரது இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமெனவும், அது தொடர்பாக சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/78780
-
- 0 replies
- 385 views
-
-
(எம்.மனோசித்ரா) ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கிக் கூடம் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று நீக்கிக் கூடம் முதற்கட்டமாக கடற்படை முகாம்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பொதுமக்கள் வசிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. …
-
- 2 replies
- 638 views
-