ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கடந்த ஒருவாரத்தில் 4 ஆயிரத்து 217 பேர் கைது! by : Benitlas ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் 4 ஆயிரத்து 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலக்கட்டத்தில் அதனை மீறும் வகைய…
-
- 1 reply
- 494 views
-
-
ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு ஊடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள …
-
- 0 replies
- 445 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரிருநாட்களில் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்- இராதாகிருஷ்ணன் by : Litharsan நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஓரிரு தினங்களில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலாளர். ஆர்.எம்.பீ.புஷ்பகுமார தன்னிடம் இதனைத் தெரிவித்ததாக நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்…
-
- 0 replies
- 344 views
-
-
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகியுள்ள "இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்" இணையப் பக்கம் (நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகலாவிய ரீதியில் நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான இணையப்பக்கமொன்றை வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக நாம் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' என்ற இணையப் பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இப்பக்கத்திற்கான…
-
- 0 replies
- 303 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்)<br /></em><br />அடுத்தவாரம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை அடுத்தவாரம் முழுவதும் நீடிக்க அரசாங்கம் நேற்று தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அரச, தனியார் நிறுவங்கள் அனைத்தும் அதன்படி செயற்பட வேண்ட…
-
- 2 replies
- 486 views
-
-
உயர் நீதி மன்றங்களின் தீர்ப்பை உடைத்து எறிந்த ஜனாதிபதி தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள கைதிக்கு மன்னிப்பு .அரசியல் கைதி அந்த தமிழனுக்கு அது வேற சட்டமாம் .இலங்கையில் நீதி எப்பவோ இறந்துவிட்டது .சோஷலிச ஜனநாயக குடியரசாம் அனைவரும் இங்கு சமத்துவமாம் .(Separation of powers )என்று சொல்லப்படுகின்ற Division of legislative, executive and judicial functions must be exercised by different political bodies. ஆனால் இலங்கையில் சட்டம்,நிர்வாகம் ,நீதி அனைத்தும் அந்த மன்னரின் கையில்தான். இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தானே தலைவர் என்றார்.இப்போ இவர் யாரின் ஜனாதிபதி?
-
- 0 replies
- 445 views
-
-
கொரோனா தொற்றுடன் சுவிஸ் நாட்டில் இருந்து அரியாலை தேவாலயத்திற்கு வந்திருந்த மத போதகரை பாதுகாத்தது யாழ்ப்பாணம் பொலிசாரே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் இந்த சம்பவத்தின் பின்னணியில் பல சம்பவங்கள் உள்ளன விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படுத்துவேன் என்று குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் இன்று (254.03.2020) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் தோற்று அபாயம் ஏற்பட்டவுடன் மத மக்களை அதிகமாக கூட்டி கூட்டங்கள் பிரார்த்தனைகள் நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுருத்தியிருனத்து. எனினும் அந்த கட்டளையை மீறி யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள தேவாலயம…
-
- 14 replies
- 1.1k views
-
-
In இலங்கை March 26, 2020 1:57 am GMT 0 Comments 1197 by : Benitlas பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக இ-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. http://www.e-thaksalawa.moe.gov.lk …
-
- 1 reply
- 832 views
-
-
(ஆர்.யசி) வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த 18, 093 சுற்றுலாப்பயணிகள் தமது மீள் பயணத்தை உறுதிசெய்து நாட்டினை விட்டு வெளியேற எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக இலங்கை அரசாங்கம் நாட்டுக்கான விமான சேவைகளை தடை செய்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் மீண்டும் அவர்களின் பயணங்களை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனி…
-
- 4 replies
- 554 views
-
-
மீள அறிவிக்கும் வரை யாழில் ஊடரங்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 6 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்…
-
- 0 replies
- 478 views
-
-
வடக்கில் அத்தியவசியப் பொருட்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிப்பு! by : Litharsan வடக்கு மாகாணத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் காலை 6 மணி தொடக்கம் மதியம் 2 மணி வரை தளர்த்தப்படவுள்ளது. இந்நிலையில், மக்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் இன்றைய தினம் மொத்த வியாபாரிகளுக்கும் அதேநேரத்தில் கிராம மட்டத்தில் இயங்கும் சிறிய வியாபாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஊடாக வழங்கப்பட்டுள்ள விசேட பாஸ் அனுமதியுள்ள …
-
- 0 replies
- 426 views
-
-
முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையின…
-
- 5 replies
- 767 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள காத்தான்குடி, பாலமுனை,காங்கேயனோடை,பூனொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து தெரிவு செய்த நாளாந்தம் கூலித் தொழில் செய்கின்ற தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் வசதியற்ற 4000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சுமார் 50 இலட்சம் ரூபாய் நிதியினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு வழங்கி வைத்தார். பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை நகர முதல்வர…
-
- 0 replies
- 243 views
-
-
>ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சந்தைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு முன் அதிகளவில் ஒன்று கூடுவதனை தவிர்ப்பதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை வெற்றிக்கொள்ள பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இன்று (25-03-2020) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை பதினொறு மணிக்கு அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊர…
-
- 3 replies
- 476 views
-
-
திருநெல்வேலி சந்தையை பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க தீர்மானம் யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் நேற்று புதன்கிழமை பிரதேச சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை தங்களின் இடங்களிலோ அவர்களது கிராமங்களிலோ விற்பனை செய்ய முடியும். பொதுமக்கள் திருநெல்வேலி சந்தைக்கு வரும் பாதைகள…
-
- 0 replies
- 355 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதன்படி இலங்கையில் இதுவரை ( நேற்று இரவு 7.00 மணி) அடையாளம் காணப்பட்ட 102 கொரோனா தொற்றாளர்களில் மூவர் குணமடைந்துள்ளதுடன், மேலும் 99 பேர் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார். இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொ…
-
- 1 reply
- 581 views
-
-
நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்? நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறைந்த பட்சம் பொதுத் தேர்தல் 3 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்ற தேர்தலானது முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் கொரோனா நிலைமையை அடுத்து, வேட்ப…
-
- 1 reply
- 401 views
-
-
“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும். ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் ஊரடங்குச் சட்டத்தை வடக்கில் நீடித்துள்ளோம். ஏனெனில் வடக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அவர்கள் வெளியில் திரியும்போது நோய்த் தொற்று அதிவேகத்துடன் பரவும். எனவே, அவர்கள் தேவையற்று வெளியில் வராமல் சில நாட்களுக்கு வீட்டுக்குள்…
-
- 30 replies
- 2.8k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இராணுவ கேர்ணல் ஒருவரும் அவரது மகனும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த கேர்ணலின் தாயும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காரணமாக கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கு சொந்தமான வேரஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. ஏற்கனவே 22 ஆம் தொற்றாளராக இராணுவ மேஜர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.அவர் இத்தாலியில் இருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டவராவார். இந்த இராணுவ வீரர் 44 பேருடன் நெருங்கிய தொடர்புகளைக் …
-
- 0 replies
- 362 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பேசப்பட்டதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. இந் நிலையில் குறைந்த பட்சம் பொதுத் தேர்தல் 3 மாதங்களுக்கு தள்ளிப் போகும் என அந்த தகவல்கள் கூறின. பாராளுமன்ற தேர்தலானது முன்னதாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் கொரோனா நிலைமையை அடுத்து, வேட்பு மனு தாக்கலின் பின்னர் அந்த தேர்தலானது தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரால் காலவரையறையி…
-
- 0 replies
- 245 views
-
-
(எம்.மனோசித்ரா) வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/78645
-
- 0 replies
- 228 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முழு நாட்டு மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அரசியல் தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை பல்வேறு வழிமுறைகள் ஊடாக முன்னெடுத்து வருகின்றது. முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் ஒரு தரப்பினர் அரசியல் நோக்கங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகி விடுகின்றது என இம்மானுவல் ஆர்னோல்ட் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஊரடங்கு சட்டம் நேற்று குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் யாழ். மத்தியில் ஒன்று கூடியிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. இவ் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் முக்கிய நோக்கமான மக்கள் கூட்டாக ஒன்று கூடுவதை தடுக்கும் செயன்முறை ஊரடங்கு தளர்த…
-
- 0 replies
- 452 views
-
-
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார். இம்முறைப்பாடுகளில் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும்இ பாதிக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டிற்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 40 முறைப்பாடுக…
-
- 0 replies
- 413 views
-
-
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் நாடுமுழுவது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டபாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்று உள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளன…
-
- 2 replies
- 432 views
-