Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கேப்பாபுலவு விமானப்படைதளத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளனர். வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறித்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் இருந்து 210 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். அந்தவகையில் இவர்களை தனிப்படுத்தும் மையங்களாக இரணைமடு விமான நிலையம்,கேப்பாபுலவு விமான நிலயைம்,பலாலி விமான நிலையம் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் விமானப்படையினரால் அமைக்கப்பட்டுள்ளன. இன்னிலையில் (21.03.2020) இன்று காலை மு…

    • 0 replies
    • 425 views
  2. நாளை 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணிபுரியும் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மூன்று மொழிகளிலும் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை - அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை. வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்” என இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. …

    • 8 replies
    • 595 views
  3. அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-ரபயன-பறமத-வழசச/175-247301

    • 4 replies
    • 980 views
  4. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை நாட்டின் அனைத்து மக்களையும் வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள பொறுப்புகளைப் போலவே, பாதுகாப்பு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், முப்படை மற்றும் பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து இலங்கையர்களும் கொரோனா வைரஸ் தக்கத்திலிருந்து 22 மில்லியன் மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள அனைவரும் வேறுபாடுகளை களைந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் குறித்து சமூக வல…

  5. வெளிநாடுகளிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட 174 பேர் கிளிநொச்சியில் March 21, 2020 வெளிநாடுகளிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா. இன்று காலை 5 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து கண்காணிக்கப்படவுள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள் இலங்கையர்கள் எனவும், உலகில் காணப்படும் கொரோனா தொற்று காரணமாக அவர்களை 15 நாட்கள் குறித்த முகாமில்; வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரண்டாயிரத்த…

  6. இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ் கோரிக்கையை விடுத்துள்ளனர். இவ் கோரிக்கையில், நாட்டில் பேசுபொருளாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் விடயமாகவும் கருதப்படும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் இடம்பெறும் நித்திய நைமித்திய பூஜை நிகழ்வுகளின் போது மக்கள் கூடுவதைத் தவிர்த்து ஆலயக் கடமைகளை நிறைவேற்றவேண்டுமென அனைத்து இந்து ஆலயங்களின் பரிபாலன சபையினருக்கும் பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்துக்களின் கடமையாக இருக்கும் …

    • 3 replies
    • 860 views
  7. நல்லூருக்கு பூட்டு March 17, 2020 நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #நல்லூர் #ஆலயம் #பக்தர்கள் #சுற்றுலாபயணிகள் #பூட்டு http://globaltamilnews.net/2020/138437/

    • 37 replies
    • 3.5k views
  8. (எம்.ஆர்.எம்.வஸீம்) பாெதுத் தேர்தலில் 22மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்துகொள்வதற்காக 7ஆயிரத்தி 452பேர் போட்டியிடுகின்றனர். அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்காக 697 வேட்புமனுக்கள் சமர்க்கப்பட்டு 80 நிராகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் 617 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 12திகதி முதல் நேற்று முன்தினம் 19ஆம் திகதி நண்பகல்வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் 22மாவட்டங்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 339 அரசியல் கட்சிகளும் 358 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 35 அரசில் கட்சிகளினதும்; 45 சுயேட்சை குழ…

    • 0 replies
    • 414 views
  9. (எம்.மனோசித்ரா) யுத்தத்தை நிறைவு செய்ததைப் போன்று முப்படையினரைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. மருத்துவத்துறை சார்ந்தவர்களின் கைகளிலேயே தற்போது நாட்டு நிலைவரம் தங்கியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார், ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கடந்த 5 வருட கால ஆட்சியில் எம்மால் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமையின் காரணமாகவே அரசியல் ரீதியான தீர்வை புறந்தள்ளி தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்தி வைப்பதற்கு சுதந்திரமாக முடிவை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். யுத்தத்தின் போது ம…

    • 0 replies
    • 420 views
  10. யாழ் மறைமாவட்டத்தில் அனைத்து திருப்பலிகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை -யாழ். ஆயர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை திருப்பலிகள் வழிபாடுகள் எதுவும் நடைபெறமாட்டாது என யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவித்துள்ளார்.அத்துடன் மக்களையும் குருக்கள் துறவிகளையும் இல்லங்களில் இருந்தவாறு இக்கடின காலத்தில் இருந்து விடுதலை பெற இறை வேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்களை ஒன்று கூட்டும் எந்த ஒரு நிகழ்வையும் ஒழுங்கு செய்ய வேண்டாமென பங்குத் தந்தையர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.இதன்படி மறு அறிவித்தல் வரை தவ…

    • 1 reply
    • 305 views
  11. சுற்றுலாப் பயணிகள் வௌியேற நடவடிக்கை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த நாட்டிற்கு மீள செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 38 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நாட்டில் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக எமிரேட்ஸ் நிறுவனம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாளாந்தம் 4 தடவைகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் வரை இந்த விமான ச…

    • 1 reply
    • 362 views
  12. வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள் களமிறங்கியுள்ளார்கள். தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா நோய் தொடர்பான பயிற்சிப்பட்டறையைத் தொடர்ந்து அவர்கள் இந்த விழிப்புணர்வுச் செயல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சமுகத்திலுள்ள தன்னெழுச்சி மிக்க இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணி அளவில் யாழ் போதனா வைத்த…

    • 4 replies
    • 956 views
  13. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருபவர்களை கண்காணிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கொரோனா வைரஸ்' தொடர்பான 2 ஆவது முன்னாயத்த கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போதே இவ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் 'கொரோனா வைரஸ்' தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்ட பின் வெளிநாடுகளில் இருந்து புத்தளம் மாவட்டத்திற்கு அதிகளவானவர்கள் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய பின் அங்கு ஊரடங்கு சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவை நீக்கப்பட் பின் ப…

    • 2 replies
    • 563 views
  14. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தினை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதுடன் வன்னி தொகுதியை புறந்தள்ள கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் தொகுதியில் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு எனக்கு மத்தியகுழுவால் வழங்கப்பட்டது. அருந்தவபாலனும் அதற்கு உடன்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் பலருடன் கதைத்தபோதும் யாரும் கட்சியில் இணைந்து போட்டியிட முன்வரவில்லை. எனினும் நான் ம…

    • 2 replies
    • 989 views
  15. அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை! அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசம் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. N95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபாய் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளை விட அதிகரித்த விலையில் முகக் கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என தேசிய மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அல்லது அவற்றை பதுக்கும் நபர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நாடளாவ…

  16. நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை வரவேற்றார் சஜித்! நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்றுள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்றனர். பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதுடன், நாட்டு மக்களின் நலன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியதற்காக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய …

  17. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலங்கை தேசிய இரத்ததான சேவையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி லக்ஷ்மன் எதிரிசிங்க, கொரோனா வைரஸ் பரவலையடுத்து இரத்ததான முகாம்கள் இரத்துச்செய்யப்பட்டமையால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையை உறுதிசெய்துள்ளார். இப்பற்றாக்குறை காரணமாக அன்றாடம் ஏனைய நோயாளர்களுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாம். நாடளாவிய ரீதியிலுள்ள 15 அரச வைத்தியசாலைகளில் இரத்தம் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை இரத்தத்தைப் பெறமுன்னர் மு…

    • 0 replies
    • 274 views
  18. தமிழ் மக்களுக்கான தேவைகளை ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் – விஜயகலா தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக ரீதியான வாழ்க்கையினை கடந்த 5 வருடமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். ஆனாலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஊடாக எங்களுடைய கட்சியின் வேட்பாளருக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்திருந்…

  19. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தங்களை தடுப்பு முகாமுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்வோர், தனிமைப்படுத்தும் மய்யங்களிலிருந்து தப்பியோடுவோர் ஆகிய அனைவரும், தேசத் துரோகிகளாக கருதப்படவேண்டும் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு, அவர்களே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் நாட்…

    • 0 replies
    • 460 views
  20. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ஸ்ரீலங்காவிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அனைத்து மருத்துவ தேவைகளையும் மருத்துவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களின் அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் மனிதாபிமான செயல்பாடுகள் தொடர்பிலும், கொழும்பு அங்கொட IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர், “நாங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு செல்லாமல் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சேவை செய்கின்றோம். முழுமையான வைத்தியசாலை ஊழியர்களும் கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளுடனேயே உள்ளோம். வைத்தியர்கள், தாத…

    • 13 replies
    • 795 views
  21. கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான அபே ஜன பல கட்சியால் குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 3 சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அப-ஜன-பல-கடசயன-வடப-மன-நரகரபப/175-247254

    • 4 replies
    • 794 views
  22. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 330 பேர் போட்டியிடவுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று (19) நண்பகலுடன் நிறைவடைந்த நிலையில். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. கிடைக்கப் பெற்ற வேட்பு மனுக்களின் மீது 24 ஆட்சேபனைகள் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் ஆட்சேபனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த 19 அரசியல் கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிடைக்கப்பெற்ற சுயேச்சைக் குழுக்களில் மூன்று சுயேச்சைக் குழுக்களி…

    • 2 replies
    • 825 views
  23. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் விரிவுரையாளருமான சுரேன் ராகவனுக்கு பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி, சமூக ஆய்வாளர் கெவிது குமாரதுங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின…

    • 0 replies
    • 610 views
  24. (இராஜதுரை ஹஷான்) விலைக் குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலைக்கு அதிகமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு ஜனாதிபதி விசேட ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் விற்பனை நிலையங்களை கண்காணிப்பதற்கும் புதிய வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனதெரிவித்தார். கொரேனா வைரஸ் ; தாக்கத்தை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாக காணப்படுகின்றது. மக்களின் ; ஒத்துழைப்பின் ஊடாக மாத்திரமே நிலைமையினை வெற்றிக் கொள்ள முடியும். சுகாதார சேவைக்கு ; எவ்வித நெருக்கடியும் ஏற்பட கூடாது . என்பதற்காக மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடனை மீள் ச…

    • 0 replies
    • 462 views
  25. (இராஜதுரை ஹஷான்) உலக - சந்தையில் எரிபொருளின் விலை குறைந்தாலும், கூடினாலும் இலங்கையில் எரிபொருளின் தற்போதைய நிர்ணய விலையில் - இவ்வருடம் முழுவதும் எவ்வித மாற்றமும் ஏற்படாது. நெருக்கடியான - நிலையிலும் நிவாரண அடிப்படையிலேயே எரிபொருள் நுகர்வோருக்கு - விநியோகிக்கப்படுகின்றது. என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற - அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் - சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை.என - எதிர் தரப…

    • 1 reply
    • 318 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.