ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
"வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படுத்தப்படுவர்" (எம்.மனோசித்ரா) வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்த போவதில்லை என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த இருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இணங்காணப்பட்டுள்ளது. எனவே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமே கண்காணிப்பு உட்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட…
-
- 0 replies
- 297 views
-
-
பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல பிரித்தானிய கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் அவரது மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். தமது பிள்ளைகளில் உடல்களை ஏற்க இவர்கள் இலங்கை வருவார்களா என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 46 வயதான ஹோல்ச் போவ்ல்சென் ஸ்கொட்லாந்தின் முக்கிய நிலப்பகுதிகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அவரும் அவருது மனைவியும் சுமார் 200,000 ஏக்கர் மலைப்…
-
- 8 replies
- 1.7k views
-
-
கொரோனா வைரஸ் சந்தேக நபர்களை மன்னாரிற்கு கொண்டு செல்லவுள்ளதாக தகவல் March 15, 2020 நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையிலும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றதாக தெரிய வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மன்னார் மாவட்டத்தில் இயங்காமல் இருக்கும் மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ கட்டிட தொகுதியில் குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் மத்தியில் தகவல் ஒன்ற…
-
- 0 replies
- 288 views
-
-
கொரோனா வைரஸ் – தனியார் துறையினருக்கும் நாளை விடுமுறை கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு தனியார் துறையினருக்கும் நாளை (திங்கட்கிழமை) அரச விடுமுறை தினமாக அமுல்ப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இலங்கையையிலும் கோரத்தாண்டவமாடுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தில் இதுவரையில் 103 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …
-
- 0 replies
- 394 views
-
-
(ஆர்.விதுஷா) நாட்டு மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்த்த எந்த விடயமும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், பல பதவிகளை வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை எனவும் வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல், மத்தியவங்கி பிணைமுறி மோசடிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை மக்கள் ஆதரித்திருந்தனர். ஆனால் இன்று, மக்கள் எதிர்பார்த்த எதையாவது இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா? கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொதுத்தேர்தலுக்கு முன்…
-
- 4 replies
- 426 views
-
-
ஏப்ரல் 21 குண்டுதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹசிமுடன் தற்கொலை குண்டு தாக்குதலுக்காக சத்தியபிரமாணம் மேற்கொண்டவர்களில் ஒருவர் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாகவும் அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள செயற்பாட்டு பணியகத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் சுகத் அமரசிங்க வழங்கிய சாட்சியத்தின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த பிரதான அதிகாரியாவார். குறித்த தாக்குதலின் பின்னர் முற்பகல் 10.45 மணியளவில் கட்டுவ…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியில் ஏற்கனவே பலபேர் அங்கத்துவ உரித்தைப்பெற்று பணியாற்றிவரும் நிலையில் கட்சியில் இல்லாத ஒருவரை தேர்தலில் போட்டியிட வைக்க முடியுமா என்பதே தமக்குள்ள முதலாவது பிரச்சினை என்கிறார் இலங்கை தமிழரசுக்கட்சின் கொழும்புக் கிளையின் உப தலைவர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன். ஐ .பி .சி தமிழுக்கு அவர் அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்காத ஒருவரை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சியில் சுமந்திரனே ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில் https://www.ibctamil.com/srilanka/80/138799
-
- 3 replies
- 586 views
-
-
நாட்டிற்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட அழைப்பு விடுக்கின்றோம் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார். வவுனியா அருந்ததி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் கூடி முடிவெடுத்ததன் பிரகாரம் அனைத்து இனத்தவரையும் பிரதிபலிக்கின்ற பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பெரும் சக்தியாக இந்த தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம். இன மத பிரிவினை அற்ற அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்துவது எமது எதிர்பார்ப்பாகும். அந்தவகையில் ஐக்கியதேசியக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டு …
-
- 1 reply
- 281 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பில் சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு விசாரணையாளர்கள் இன்று அறிவித்தனர். குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்லியூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த பெப்ரவரி …
-
- 13 replies
- 1.3k views
-
-
கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள். இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டு…
-
- 17 replies
- 929 views
-
-
மன்னார் மனித புதைகுழி தொடர்பாக விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு வடமாகாண மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் புதைகுழி வழக்கு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசராஜா உத்தரவு பிறப்பித்திருந்தார் இந்த நிலையில் குறித்த தீர்ப்பினை இடை நிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இன்று வடமாகாண மேல் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் மூலம…
-
- 1 reply
- 804 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்தான் பண்பில்லாது, ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் உபதலைவி மிதுலா சிறிபத்மநாதன்தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது கட்சியில் இல்லாத ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் வினவியபோது அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான உங்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்ச…
-
- 5 replies
- 733 views
-
-
72 நாடுகளை தோற்கடித்து முல்லை மண்ணை சேர்ந்த மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஈழத்தில் யுத்த வடுக்களில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் எமது உறவுகள் தினம் தினம் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர். அவ்வாறு யுத்தத்தில் அங்கவீனமுற்றவர்களுக்கு இந்த மாணவனின் கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... https://www.ibctamil.com/srilanka/80/138792
-
- 3 replies
- 676 views
-
-
இலஞ்சம், ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய புலனாய்வு ஊடக செயலமர்வைத் தொடர்ந்து புலனாய்வு ஆக்கங்களை சமர்ப்பித்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாணம் கிரீன் க்ராஸ் ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட ஊடக செயலமர்வில் கலந்து கொண்டு பயிற்சிபெற்ற ஊடகவியலாளர்கள் புலனாய்வில் ஈடுபட்டு, ஆக்கங்களைச் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் ஒன்பது ஊடகவியலாளர்கள் இங்கு விருது வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் இலஞ்சம், ஊழல் தொடர்பாக தகவலறியும் உரிமையைப் பயன்படுத்தி புலனாய்வில் ஈடுபட்டிருந்ததோடு, ஊடகவியலாளர்களின் ஆக்கங்களின் புலனாய்வுத் தன்மை, பொதுமக்கள் நலன், கதையாக்கம் போன்ற விடயங்களின…
-
- 1 reply
- 535 views
-
-
கொலையான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் மகள், கலிபோர்னியாவில், கோத்தாவுக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்ட கீழ் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. தள்ளுபடி செய்யப்பட்ட முடிவினை எதிர்த்து மேல்நீதிமன்றில் லசந்த மகள் தொடர்ந்த வழக்கினை விசாரித்து, தள்ளுபடி செய்யப்பட்டதனை தள்ளுபடி செய்து விட்டனர். ஆக, இந்த வழக்கானது மீண்டும் விசாரிக்கப்படக் கூடியதான ஒரு நிலைமையில் உள்ளது. இது குறித்து கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த செய்திக்கு 5 பின்னூடடம் வந்து இருந்தது. கோத்தா அமெரிக்க குடிமகன் இல்லாத படியால் அமெரிக்கா ஒன்றுமே பண்ண முடியாது என்றும் ஒன்றும், அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரை வழக்கு…
-
- 7 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்: மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை! by : Litharsan மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இந்நிலையில் பதற்றநிலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் கைதுசெய்யப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள்…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் தொற்றிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் நடத்திய பேச்சின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலையடுத்து அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை கல்வி அமைச்சால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/138950
-
- 0 replies
- 589 views
-
-
22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் by : Jeyachandran Vithushan எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.இராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தம் முடிந்து 10 வருட காலமாகியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத வகைய…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர் பகுதிகளில் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல்கள் மையங்கள் எதற்கு – கூட்டமைப்பு கேள்வி! கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக ”Batticallo Campus’ இனை…
-
- 3 replies
- 408 views
-
-
(செ.தேன்மொழி) கொரோனா வைரஸினால் யுத்த காலத்தையும் விட பெருமளவான இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான இரு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அச்சம் மேலும் வலுப்பெற்றுள்ளது. அரசாங்கம் தற்போது இத்தாலி , தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்பில் செலுத்தும் கவனத்தை , சீன பிரஜைகள் மீது ஏன் செலுத்தாமல் இருக்கின்றது. வெப்பநிலை அதிகமாக உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கின்றனர…
-
- 0 replies
- 597 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கைப் பிரஜை கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இதன் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார். சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அது அபிவிருத்தியடைந்துவரும் எமது நாட்டிற்குள் பரவுமானால், அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விடயமாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்…
-
- 4 replies
- 695 views
-
-
(ஆர்.விதுஷா) அதிகரித்திருக்கும் பொருளாதார பிரச்சினையினால் நாட்டுமக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அதிருப்தியை கருத்தில் கொண்டும் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பலம் பொருந்திய எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சியும் பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதனை அறிய கூடியதாகவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். தேர்தலை காலம் கடத்திவிட்டு இராணுவரீதியான ஆட்சிமுறைமையை முன்னெடுத்து விட்டு பின்னராக தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுதவதாக அரசாங்க உயர் மட்ட தகவல்களின் ஊடாக அறிந்து கொள்க்கூடியதாகவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச…
-
- 2 replies
- 299 views
-
-
எரிபொருளை பதுக்கினால் விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரம் இரத்தாகும் எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிலர் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டு வரவதாகவும், தற்பொழுது சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவதாகவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. பெருந்தொகை எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருப்பதாகவும் மின் சக…
-
- 0 replies
- 256 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் இதற்கு முகங்கொடுப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தற்போதைய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளும் இந்த வைரஸுக்கு முகங்கொடுக்க தமது சுகாதார வசதி போதுமானதாக இல்லை என அறிவித்துள்ளதாக அவர் குற…
-
- 0 replies
- 239 views
-
-
Gavitha இலங்கையிலுள்ள மதரஸக்களையும் காதி நிதிமன்றங்களையும் இல்லாமல் ஒழிப்பதற்கு, தற்போதுள்ள இந்த அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதிலளிக்கவேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்தண தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு, தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கியதாகவும் நாட்டிலுள்ள மதரஸாக்களை இல்லாமல் செய்வதாகவும் காதி நீதிமன்றங்களை இல்லாம் செய்வதாகவும் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ப…
-
- 1 reply
- 321 views
-