Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்த டி56 ரக துப்பாக்கிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/235241/ராஜிதவின்-வெள்ளை-வேன்-ஊடக-சந்திப்பில்-கலந்துகொண்ட-இருவர்-உள்ளிட்ட-10-பேர்-கைது

    • 0 replies
    • 585 views
  2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை. என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(25) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியில் கூட பெண்களாகிய எ…

    • 1 reply
    • 566 views
  3. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நே…

    • 5 replies
    • 1.3k views
  4. -நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சியின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ், 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான கூட்டம் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில், நேற்று (24) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளால் அக்கராயன் குளத்தின் 4ஆம் வாய்க்கால் உட்பட முக்கிய வாய்க்கால்கள் புனரமைக்கப்பட வேண்டும், நெல்லுக்கான நிர்ணய விலை அறுவடை தொடங்க முதல் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயிகளின் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/வ…

  5. திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள் அடுத்த பாராளுமன்றம் திருடர்கள் இல்லாத பாராளுமன்றமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆளும்கட்சி, எதிர்கட்சி எல்லா தரப்பிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கட்சி தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு சிலவேளை "கள்ளர்கள்" என அறியப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டி வரும். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது. ஆகவே "திருடர்" இல்லாத பாராளுமன்றம் உருவாவது மக்கள் கைகளில்தான் உள்ளது. கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பும் கட்சி சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள் விருப்பு வாக்கை "திருடர்களுக்கு எதிராக" வழங்குங்கள். யார் நல்லவர், வல்லவர் …

  6. புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை கோரும் கம்மன்பில! யுத்தத்தின் போது இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமெனில், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 40 இன் கீழ் ஒன்றாம் தீர்மானத்திலிருந்து இருந்து, வெளியேற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால், சிலர் 30 இன் கீழ் ஒன்றாம் தீர்மானம் தொடர்பாகவும் குழ…

  7. Tuesday, February 25, 2020 - 6:07pm - விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை - 2ஆம், 3ஆம் தவணைகளில் மாத்திரம் பரீட்சைகள் - இவ்வருடம் திட்டமிட்டபடி 1ஆம் தவணை பரீட்சைகள் எதிர்வரும் காலங்களில், பாடசாலைகளில் முதலாம் தவணையின் போது, தவணை பரீட்சைகளை நடாத்தாதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு உற்சவங்கள் மற்றும் வேறு விடயங்களுக்கான செயற்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ்விடயம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள், முதலாம் தவணை பரீ…

    • 0 replies
    • 664 views
  8. எச்சரிக்கை - கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம்! கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு இது குறித்த கவலை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவாகவே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,600 பேர் உயிரிழந்துள்ளனர். …

  9. இலங்கைக் குழு ஜெனீவா பயணம் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகக-கழ-ஜனவ-பயணம/150-246004

  10. 100 நாட்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் by : Dhackshala ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு. ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல். உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழி…

  11. ஹெல உறுமயவின் ஆதரவு சஜித்துக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரவண தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய சமாதான முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஹெல உறுமையவின் செயலாளர் சம்பிக்க ரணவக எம்.பி மேற்கண்டவாறு அறிவித்தார். சகல இன மக்களையும் பாதுகாக்கும் தரப்பாக தேசிய சமாதான முன்னணி அமைந்துள்ளதாகலேயே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். http…

  12. உலக நாடுகளுடன் இலங்கை மோதுவது 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானது- ரிசாட் by : Yuganthini இலங்கை அரசு உலக நாடுகளுடன் முட்டி மோதுவதானது இங்கு வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் ஆபத்தானதென நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரிசாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பொது வேட்பாளராக நிறுத்தியபோது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அக்கூட்டமைப்போடு இணைந்து அவரது வெற்றிக்காக இரவு பகலாக உழைத்தோம். குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பூ…

  13. “அழைப்பு விடுவதற்கு முன் ஐ.தே.க.விற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும்” – சஜித்திற்கு சுதந்திர கட்சி பதிலடி! by : Jeyachandran Vithushan பிற கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை சஜித் பிரேமதாச தீர்க்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வலியுறுத்தியுள்ளார். கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சுதந்திரக் கட்சிக்குள் எவரும் அரசியல் ரீதியாக சிக்கித் தவிக்கவில்லை என்றும் கட்சி ஒன்றுபட்டுள்ளது மற்றும் எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் எம்மால் தீர்க்க முடியும் என்றும் …

  14. மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் by : Yuganthini மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம், மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது. குறித்த போராட்டத்தின்போது, சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ப…

  15. மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள். 71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள். 2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் த…

    • 32 replies
    • 3.4k views
  16. மக்களின் முதன்மைத் தெரிவுகளை புறக்கணித்து தன்னிச்சையான தெரிவுகளை மக்களுக்கு திணிக்க முற்படும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரது செயற்பாட்டை கண்டிப்பதுடன் அவ்வாறு திணிக்கப்பட்ட முன்மொழிவுகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றபோது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போது கிராமத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி நிதிக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே கிராமங்கள் தோறும் மக்கள் தமக்கு அத்தியாவசிய தேவையான விடயங்களை முன்னிறுத்தி கிராம சேவகர…

    • 2 replies
    • 442 views
  17. ‘225 பேரில் தனக்கே அதிக நெருக்கடி’ சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டத்தை, பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத…

  18. பிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு! by : Jeyachandran Vithushan மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணையை கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  19. கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்து…

    • 6 replies
    • 1k views
  20. சசிகலா ரவிராஜை களமிறக்க தமிழரசுக் கட்சி முடிவு? தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் கூடியது. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவு விண்ணப்பங்க…

  21. எதிர்க்கட்சியினர் வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றனர்- மஹிந்த குற்றச்சாட்டு நாட்டு மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால்தான், எதிர்க்கட்சியினர், வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் ஹம்பந்தோட்டை வரையான பகுதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் வெளிவிவகார அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு தற்போது இருக்கின்றது. இதனை …

    • 6 replies
    • 580 views
  22. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று நாளை 2020.02.25 ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு. கல்வி மற்றும் எதிர்கால தலைமுறைக்காக...ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல். உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் கல்வியினால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமாகும். உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆ…

  23. -விஜயரத்தினம் சரவணன் சர்வதேச விசாரணைகளில் யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக முற்படுவதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, அவ்வாறு அவர்கள் நினைத்தவுடன் விலகுவதற்கு இது ஒன்றும் அவர்கள் வீட்டுக் கல்யாணம் இல்லையெனவும் கூறினார். முல்லைத்தீவு - மாந்தைக் கிழக்குப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் காரியாலயத்தை, இன்று (24) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றும் தாம் அபிவிருத்தி என்பதைத் தாண்டி, தமது தமிழர்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையோடும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே …

    • 0 replies
    • 887 views
  24. -சுப்பிரமணியம் பாஸ்கரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, இலங்கை மீறினாலும் அதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற தமிழரசு கட்சியின் தீர்மானமானது, வெறும் கண்துடைப்புக்கானதென, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சியில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம், தமது பிள்ளைகள் தொடர்பான நீதியை பெற்று தராதெனவும் ஓ.எம்.பி அலுவலகத்தை நிறுவி, அதன் ஊடாக சில உதவிகளை வழங்கி, தம்மை ஏமாற்ற நினைப்பதாகவும் சாடினார். ஆனால், தாம் சர்வதேசத்தையே நம்பி நிற்பதாகத் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்…

    • 0 replies
    • 318 views
  25. வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பந்தலுக்கு முன்பாக கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே, தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர பாதுகாக்கப்பட…

    • 0 replies
    • 360 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.