Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெடியமடு, களிக்குளம் கிராமங்களுக்குள் கடந்த பல நாட்களாக காட்டு யானைகள் ஊடுருவி நடமாடித் திரிவதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். கற்புதானை, மதுரங்கண்டடிச்சேனை, நெடியமடு களிக்குளம், ஒளிமடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்கள் இந்த அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை சில யானைகள் ஏறி மிதித்துக் கொண்டு விவசாய நிலங்களுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளன. இதனால் இங்குள்ள விவசாய நிலங்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பதில் இவர்களுக்கு பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய…

  2. பாறுக் ஷிஹான்--என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது.அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை.சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரிவிற்கான பொதுமக்கள் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(12) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற வேளை அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தனது கருத்தில்தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல பிளவுக…

    • 4 replies
    • 1.4k views
  3. யாழில் சுவரோவியம் மீது இனந்தெரியோதோர் கழிவுநீர் வீச்சு யாழ். கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனந்தெரியாதோர் கழிவு நீரை ஊற்றியுள்ளனர். நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீது நேற்று (சனிக்கிழமை) இரவு இனந்தெரியாதோர் கழிவு நீரை ஊற்றி அதனை நாசம் செய்துள்ளனர். தாம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் முகமாக வரைந்த சுவரோவியத்தை விசமிகள் நாசம் செய்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்க…

  4. கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்திலிருந்து இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சவூதி-ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி சென்ற இந்தோனேசிய லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 77 வயதுடைய பெண்ணும் 64 வயதுடைய ஆணொருவரும் விமானத்தி…

  5. ஐ.தே.க.வை விட்டு வெளியேற மாட்டேன் என்கிறார் விஜயகலா by : Yuganthini எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே போட்டியிடுவேன். வேறு கட்சிக்கு ஒருபோதும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும். எந்தக் கட்சிக்கும் நான் …

    • 1 reply
    • 344 views
  6. சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய கூட்டணி ஒருவரை கட்டியெழுப்ப வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நாம் குழப்பமடைய மாட்டோம். அது தவறு. நேர்மையற்ற செயல். சாதாரணமாக நானும் நீங்களும் தொலைப்பேசியில் உரையாடினால் அந்த உரையாடலை பதிவு செய்வது தவறாகும். அது சட்டவிரோத செயல். அதனை செய்ய முடியாது. மேலும், இதன் மூலம் வௌியாகியுள்ள விடயங்க…

    • 0 replies
    • 323 views
  7. தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர் by : Jeyachandran Vithushan சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு நல்லது என்றாலும், இதனை தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளினால் குடும்பங்களுக்குள் ப…

    • 0 replies
    • 408 views
  8. போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு இலங்கை உதவ வேண்டியேற்படும்- பொன்சேகா by : Yuganthini ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 2007 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால், சிலவேளை போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு தளபாட ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். அமெரிக்கா- ஈரானுக்கிடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை நாம் தொட…

    • 0 replies
    • 414 views
  9. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம் சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவின் ஜுவன்டா விமான நிலையம் நோக்கி பயணித்த லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த இரு பயணிகள் சுகயீனமுற்றதை அடுத்து விமானம் இவ்வாறு உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விமானத்தை தரையிறக்கி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே குறித்த இரு பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசிய நாட்டை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும் 64 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பின்னர் குறித்த இரு சடலங்…

    • 0 replies
    • 416 views
  10. தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்போது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள். இந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத…

  11. வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் பலரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முயற்சி எடுத்தவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறே காணப்பட்டது. இவ்வாறு ஏமாற்றப்பட்ட விடயங்கள் வவ…

  12. பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர் பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாத்துவ, மொள்ளிகொட வஜிரகோன் மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை ஆவணத்திற்கு அமைச்சரவை சாதகமான தீர்மானமொன்றை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜ…

  13. ஆயுத குழுவை உருவாக்கவே கருணாவின் களமிறக்கம் – காேடீஸ் கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில பேரினவாத சக்திகளின் கைகூலிகள் அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளன. இவர்களின் திட்டம் எமது தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாதொழித்து எமது மக்களை நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளுவதே தவிர வேறொன்றுமில்லை. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தான் பதவியில் இருக்கும் போது அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு சில இடங்களுக்கு வந…

  14. யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினரான இருவர் வீட்டின் பாதுகாப்புக் கருதி வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டுச் சமையலறையின் புகை போ…

  15. இன்றைய சூழ்நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டமாகும்- சீ.வீ.கே. சிவஞானம் இன்றைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டமாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராஜா போன்ற பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குவது தவறானது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரும் இழப்பாக அமையும்.ஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இளைஞர்கள் வரவேண்டும். அதேவேளையில் வயது மூத்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பது வெற்றுக் கோசமாகவே இருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் தலைவர…

  16. யாழ்ப்பாணம் குருநகர் பகுதி சுற்றிவளைப்பு…. January 12, 2020 யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் காவற்த்துறையினர் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையை இன்று மேற்கொள்ளப்பட்டனர். புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று காவற்த்துறையினர் தெரிவித்தனர். அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவற்த்துறையினர் , சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத…

  17. மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா மானியமாக வழங்க முன்வந்துள்ளபோதும் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என வல்வெட்டித்துறை நகர பிதா தெரிவித்துள்ளார். 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு, மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலைய…

    • 0 replies
    • 363 views
  18. அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அஸர்பைஜானின் பகூவில் உள்ள Western Caspian தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 21, 23 மற்றும் 25வயதான இலங்கை மாணவிகள் சம்பவத்தில் உயிரிழந்தனர். குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக மூன்று மாணவிகளும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றுள்ளனர். மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மின் ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என தெரியவந்துள்ள…

  19. கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே எனது பொறுப்பு.!! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்ட சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந…

    • 9 replies
    • 1.4k views
  20. கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமொன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 1952 ஆம் ஆண்டு 44 இலக்க கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையின் சாதாரண திருமண சட்டம் மற்றும் முஸ்லிம் திருமண சட்டம் ஆகியன தொடர்பில் திருத்தங்களுடனான நான்கு சட்டமூலங்களை அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் டொக்டர் துசிதா விஜேமான்ன ஆகியோர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கண்டிய-திருமணச்-சட்டம்-ர/

  21. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம பெண்கள் விடுத்த கோரிக்கையினை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.பொது மக்களின் இக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட இராணுவம் உடனடியாக தாங்கள் குறித்த இடத்தில் இராணுவ சோதனை சாவடி ஒன்றை அமைக்க இணக்கம் தெரிவித்தனர். இதன் பின்னரே பொது மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் உழவு இயந்திரங்கள், டிப்பர்கள் அதிக வேகத்துடனான போக்குவரத்தால் குழந்தைகள் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இவ்வீதியால் அனுப்புவது என்பதே மிகப்பெரும் ஆபத்தான விடயமா…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இருவரும் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமூடாக நாடாளுமன்ற உறுப்பினராக வர இருப்பது கூட்டமைப்புக்குள்ளும் பங்காளி கட்சிகளுக்குள்ளும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் ஒரு அறை கூவலை விடுத்திருந்தார். அந்த அறைகூவலில் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னுரிமை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். சம்பந்தன் கடந்த 43 வருடங்களாக நாடாளுமன்ற அரசியலில் இருந்து 87 வயதைக் கடந்துள்ள நி…

  23. இஸ்ரேலிய பாணியில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு: தடுத்து நிறுத்த தமிழக அரசியல்வாதிகளை ஒன்றிணைய விக்னேஸ்வரன் வேண்டுகோள் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடும் இந்த உலகத் தமிழர் திருநாள் விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகம் பூராகவும் பரந்து கிடக்கும் தமிழ் உறவுகள் இவ்வாறு வருடா வருடம் கூடுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வோர் நாடுகளில் இருந்தும் வந்து தமது தனித்துவமான தற்போதைய பிரச்சினைகளை எமது உறவுகள் இங்கு வெளியிடவும், எமது தமிழ் இனத்தின் பாரம்பரிய ஒன்றித்த கலை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை இங்கு அரங்கேற்றவும், உலகெலாம் பரவிக் கிடக்கும் எமது உறவுகளின் வருங்கால வாழ்வு மேம்பாட்டுக்காக இங்கு வந்து கருத்துப் பரிமாறி உரிய நடவடி…

  24. றிப்கான் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை! January 11, 2020 வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினரும், முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரருமான முஹமட் றிப்கான் பதியுதீனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி காணி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இடம் பெறும் விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய றிப்கான் பதியுதீனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவரை தேடி வருவதாக சி.ஐ.டி.யினர் …

  25. அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "அபிவிருத்தி உதவியாளர்கள் சேவை" என்ற புதிய பதவியை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/235894?ref=home-feed

    • 1 reply
    • 317 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.