Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது - சம்பந்தன் Published by J Anojan on 2020-01-08 15:58:17 (ஆர்.யசி, எம்.ஆர்..எம்.வசீம்) அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ …

    • 10 replies
    • 1.2k views
  2. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் குழப்ப நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில், சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

    • 4 replies
    • 941 views
  3. நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள்! நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபச்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களை கைது செய்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களை கைது செய்திருக்கமாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யாது அங்கும் இங்குமாக டீல் போட்டதால் தான் இன்று கைதுகள் இடம்பெறுகின்றது. …

    • 3 replies
    • 476 views
  4. முல்லைத்தீவிலும் திறந்து வைக்கப்படவுள்ள ‘அம்மாச்சி’ உணவகம் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் ‘அம்மாச்சி’ என்றபேரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு அபிவிரத்தி ஒருங்கிணைப்பக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைக்கவுள்ளார். இதன் மூலம் மல்லாவி மக்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்ட…

    • 8 replies
    • 1.8k views
  5. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/72515 ரஞ்சன் வீட்டில் பொலிஸார் சோதனை முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை செய்துவருகிறார்கள். தனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியோடு பொலிஸார் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக டுவிட் செய்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர், தான் எந்தவொருக் குற்றச்செயல்…

  6. 50 தினங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள்…. January 8, 2020 நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து ஏனைய நாடுகளுடன் சமநிலையை பேணக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பணிகள் ஆரம்பம்… கடந்த 50 தினங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள்…….. தேசிய அபிமானத்தையும் இறைமையையும் பாதுகாத்து எந்தவொரு நாட்டுடனும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளத்தக்க கௌரவமிக்க ஆட்சி ஏற்படுத்தப்படும், என எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ”சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்காக கடந்த 50 நாட்களுக்குள் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையி…

    • 2 replies
    • 551 views
  7. தவப்பிரியா மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை நிறைவு கட்டத்தில் நிந்தவூரில் இம்மாதம் முதலாம் திகதியன்று அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை வியாழக்கிழமை (09) முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஆரம்பமானது. இவ்விசாரணையின் போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமை தாங்கியதுடன் குறித்த சம்பவத்தில் முறைப்பாட்டாளர் சார்பாக பெண்ணின் கணவர் சுபராஜ் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சேவை திணைக்கள உதவி ஆணையாளர்…

    • 1 reply
    • 384 views
  8. இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய கவலைகள் குறித்து பேச்சு! by : Vithushan இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் உள்ள இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய கவலைகள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (வியாழக்கிழமை) இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், “அமைச்சர் குணவர்தனவுடன் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய கவலைகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தியா மற்றும் இ…

    • 1 reply
    • 301 views
  9. சுவிஸ் தூதரக அதிகாரியை CIDயில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு by : Dhackshala சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸ், நவம்பர் 25 ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக சுவிஸ் தூதரகமும் அதிருப்தி வெளியிட்டதை அடுத்து, பொலிஸார் மற…

    • 1 reply
    • 402 views
  10. பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஐ.தே.க. by : Vithushan எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தொகுத்து, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய ரணில் விக்ரமசிங்க, திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமே அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியைத் தயார்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து த…

    • 0 replies
    • 350 views
  11. “எனக்கு சிங்கள இராச்சியமோ, தமிழ் இராச்சியமோ, முஸ்லிம் இராச்சியமோ வேண்டாம். இலங்கை இராச்சியமே வேண்டும். நான் முதலில் ஒரு இலங்கையன். அதற்குபிறகுதான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்கள பெளத்த இராச்சியத்தை கட்டி எழுப்ப முயல்கிறீர்கள் என்ற அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை இராச்சியத்தையா அல்லது சிங்கள பெளத்த இராச்சியத்தையா நீங்கள் இந்த நாட்டில் உருவாக்க விளைகிறீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள்” என, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில், தனிநபர் பிரேரணை மூலம் சிறுபான்மை கட்சிகளின் …

    • 0 replies
    • 354 views
  12. ஜனாதிபதி கோட்டாவின் நேரடிக் கண்காணிப்பில் 12 விட யங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட் டுள்ளதாக தென்னிலங்கை ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1. குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழியச் சிறை. 2.முச்சக்கரவண்டிகள் இற க்குமதி செய்வது முற்றாகத் தடை. 3. பாடசாலை அனு மதியின்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தி யாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர். 4.பகிடிவதை செய்து சிக்கினால் 8 வரு டம் பரீட்சை எழுத தடை விதிக்கப் படும். 5. பாராளுமன்ற உறுப்பினர் 80மூ மேல் அமர்வுகளில் சமுகமளித்திருத்தல் வேண்டும். தவறினால் 5 வருடங் களுக்கு எந்தவித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது. 6. அரச ஊழியர்கள் சே…

    • 7 replies
    • 835 views
  13. சுமந்திரனை கொலை செய்யும் முயற்சி: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு குறித்த கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் 5 …

  14. சிங்கப்பூர் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் சட்டம் தொடர்பான அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதற்கமைய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். மேலும் அவருடன் ஐந்து பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வந்துள்ள அமைச்சர் கே.சண்முகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடவுள்ளார். அத்தோடு இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சிங்கப்பூர்-அமைச்சர்-இலங/

  15. -எஸ்.நிதர்ஷன், என்.ராஜ் யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மறவண்புலவு பகுதியிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால், இன்று (18) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக, கொடிகாமம் பஸ் நிலையத்தில் இருந்து ஏ9 வீதியூடாக சாவகச்சேரி பிரதேச சபையை நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள், பிரதேச சபைக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர், இந்தத் திட்டம் தொடர்பில், பிரதேச சபைக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் சபையின் அனுமதியில்லாமலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட…

  16. ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணப் பாதையில் மாற்றம் ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொழும்பு -லண்டன் பயணத்தின் பயணப் பாதையை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு பயணப்பாதை மாற்றப்பட்டுள்ளது. ஈரான் மாறும் ஈராக் வான் பரப்புக்களில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவையும் இவ்வாறு தனது பயணப் பாதையை மாற்றியுள்ளது http://www.dailyceylon.com/195070/

    • 1 reply
    • 633 views
  17. 19 ஆவது திருத்தத்தை நீக்குவதென்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது : துஷார இந்துனில் Published by R. Kalaichelvan on 2020-01-08 15:54:27 (நா.தனுஜா) அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதென்பது ஜனநாயகத்திற்கான இடைவெளியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும். அதனை இல்லாமல் செய்து மீண்டுமொரு ஏகாதிபத்திய யுகத்திற்குள் உள்நுழைந்து, அனைத்து அதிகாரங்களையும் தனியொரு குடும்பம் தம்வசமாக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அறைகூவல் விடுத்தார். கொழும்பிலுள்ள எதி…

    • 0 replies
    • 210 views
  18. ஈரான் – அமெரிக்கா மோதலின் உச்சம் : பயணப்பாதையினை மாற்றியது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்! ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக பயணப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – லண்டன் – கொழும்பு வான்வெளி பயணப்பாதையிலேயே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அடுத்தடுத்து ஒன்பது தடவைகளுக்கு மேல் இவ்வாறு தாக்குதல…

  19. யாழில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க 30 பேர் கொண்ட குழு நியமனம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மக்கள் இந்த விடயம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கிழக்குப் பகுதிகளான குடத்தனை, பொற்பனை மற்றும் மணற்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெருமளவான மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக த…

  20. ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் மீண்டும் தொடங்கியது காணி பறிப்பு..! வலி,வடக்கில் 5 ஏக்கா் மக்களின் காணியை பறிக்க திட்டம். யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் 400 மீற்றா் நீளமான பகுதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அதனை மீறி தனியாா் காணிக்கு ஊடாக பாதை அமைக்க விமானப்படையினா் முயற்சித்து வருகின்றனா். விமான நிலையத்திற்கு செல்லும் 400 மீற்றா் நீளமான வீதி செப்பனிடப்படாமல் விடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பாதையை செப்பனிட காணியை விமானப்படை வழங்கவேண்டும். என தொடா்ச்சியாக கோாிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள 11 பொதுமக்களுக்கு சொந்தமான சுமாா் 5 ஏக்கா் காணி…

  21. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் கூறுவது உண்மையென இன்னமும் நம்ப முடியாதுள்ளது. நல்ல வேளையில் இருக்கும் பெண், குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட 10 நாட்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் உயிரைக்கூட பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைப்பாரா என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் மீண்டும் வெள…

    • 4 replies
    • 901 views
  22. பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் பெண் அரச உத்தியோகத்தரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …

    • 7 replies
    • 1.2k views
  23. எதிர்க்கட்சித் தலைவர் சுமந்திரனா? – மஹிந்த அணி கேள்வி! இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சித் தலைவரின் கன்னியுரை சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும். சஜித் பிரேமதாசவின் அதிக…

  24. January 7, 2020 Add Comment ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயாராகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்…

  25. அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை(7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு மருத்துவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். …

    • 2 replies
    • 935 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.