ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
க்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை கைது செய்யுமாறு சிங்கள பௌத்த மத அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த முஸ்லிம் தலைவர், சிங்கள மக்களுக்கு எதிராக போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளரை கைது செய்ய வேண்டுமென தேசிய சங்கப் பேரவையின் தலைவர் ரஜவத்தே வப்பா தேரர் கோரியுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தில் கடும்போக்குடைய முஸ்லிம் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாக முஸ்லிம் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்…
-
- 1 reply
- 311 views
-
-
முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்வது குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று புதன்கிழமை கூடி ஆராய்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
மட்டக்களப்பு ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்கேத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் மூவரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டல் உதவியாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) மட்டக்களப்புப் பொலிஸார், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை பெண்களுக்கான விளக்கமறியலும் ஏனைய இருவருக்கும் பிணையும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலை பொலிஸார் முற்றுகையிட்ட போது மூன்று இனங்களையும் சேர்ந்த மூன்று பெண்களும் இராணுவ முக்கிய பதவி வகிக்கும் இரண்டு அதிகாரிகளும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் ஹேட்டல் உரிமையாளர், உதவியாளர் கைது செய்யப்பட்டிருந்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுடன் இருந்த இராணுவத…
-
- 0 replies
- 453 views
-
-
சட்டவிரோத சாராய போத்தல்கள் கிளிநொச்சியில் மீட்பு சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராய போத்தல்களை கிளிநொச்சி பொலிஸார் மீட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் 46 லீற்றர் சாராயத்தை மீட்டுள்ளனர். வட்டக்கச்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதே குறித்த சாராயம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14372
-
- 0 replies
- 293 views
-
-
எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவி்கும் போதே இதனைத் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மேலும் பதில் அளித்த கடற்றொழில் அமைச்சர், அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர…
-
- 0 replies
- 466 views
-
-
சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு – செல்வம் அடைக்கலநாதன் 27 Views “வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப் படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் த…
-
- 1 reply
- 340 views
-
-
ஊடககங்களுக்கு போலியான தகவல்களை ஹெகலிய வழங்கக்கூடாது - சரவணபவன் எம்.பி! [Tuesday, 2013-04-16 16:42:38] அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவன் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிழையான செய்திகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் தனது உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் பத்திரிகை வழமை போன்று வெளியாகுவதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்திருந்தமை பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது வெப் ஓப் செட் அச்சு இயந்திரம் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும…
-
- 1 reply
- 528 views
-
-
சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்திற்கான செய்தி எனவிடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பினூடாக, இன்று 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 14ந் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலான காலப்பகுதியை போர்நிறுத்த காலமாக அறிவித்துள்ளதாகச் சற்று முன் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள தமிழ் புத்தாண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாக இப் போர்நிறுத்த காலம் அமையுமெனவும் தெரிவிக்…
-
- 9 replies
- 1.7k views
-
-
சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். விடுதலை செய், விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டாதே, கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும். என பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது எழுப்பினர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்ன…
-
- 5 replies
- 702 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது சிங்களக் கடையர்கள் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் அச்சம் காரணமாக தமது வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் சென்று மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளச்சிக்கடைத் தோட்டம், போகாலைன் தோட்டம் ஆகிய பகுதிகளிலேயே சிங்களக் காடையர்கள் புகுந்து தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இந்தத் தோட்டங்களுக்குள் பிரவேசித்த சிங்கள இளைஞன் ஒருவரின் செய்கையால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெருமளவு பெருமளவு சிங்களவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் சகி…
-
- 2 replies
- 946 views
-
-
போர் முடிந்து 11 வருடங்களாகியும் வட, கிழக்கில் முன்னேற்றம் இல்லை – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் விக்கி 18 Views இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று வண்பகல் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரின் அழைப்பின் பேரில் விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேய…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கையுடனான உறவை வருகிற 20ம் தேதிக்குள் துண்டிப்பதாக சோனியா காந்தி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 23ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் குதிப்போம் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். பாரதிராஜா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் சத்யராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பாரதிராஜா கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர். ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக ப…
-
- 0 replies
- 887 views
-
-
இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம் திகதி: 22.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] கொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 25ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியில் பரப்புரைக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. …
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பணிகளை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட விபரங்கள் வெளியிடப்படாத போதிலும், யுத்த நிறைவினைத் தொடர்ந்து கிரமமான முறையில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ஆண்டில் 504 பேரும், 2010ம் ஆண்டில் 608 பேரும், 2011ம் ஆண்டில் 865 பேரும், 2012ம் ஆண்டு இதுவரையில் 717 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2013ம் ஆண்டு இறுதியில் நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91395/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 315 views
-
-
போர்க் குற்றங்கள் பற்றிய ‘வாசிப்பு குழுவினை’ உருவாக்கும் இலங்கை -ITJP கூட்டறிக்கை 50 Views இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில், போர்க் குற்றங்கள் பற்றிய ‘வாசிப்பு குழுவினை’ உருவாக்கும் இலங்கை என்ற தலைப்பில் ITJP என்ற அமைப்பு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மனித உரிமை மீறல்கள் உண்மையில் நாட்டில் இடம் பெற்றதை கடந்த கால விசாரணைகள், ஆணைக்குழுகள் வெளிப்படுத்தியுள்ளனவா என்பதை ஆறு மாதகாலத்திற்குள் கண்டறிவதற்கு இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்னுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். ஜெனிவாவிலுள்ள மனித உரிமை…
-
- 0 replies
- 410 views
-
-
-
- 0 replies
- 238 views
-
-
ஒடுக்கப்பட்டு வரும் தமிழ்மக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம் என்ற வலியுறுத்தல் உலகு எங்கிலும் இருந்து தொழிலாளர் நாளில் விடுக்கப்பட வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் - இலங்கையிடம் இந்தியா கோரிக்கை! [Friday, 2013-05-17 22:13:12] இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்…
-
- 0 replies
- 421 views
-
-
பணத்திற்காக எதையும் செய்வோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக மட்டக்களப்பில் நேற்று மீட்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிகாவின் சடலம் உள்ளது. கிழக்குத் தலைநகர் திருகோணமலையில் செல்வி யூட்றெஜி வர்ஷா கடத்தப்பட்டு பணத்திற்காக கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதத்திற்குள் மட்டக்களப்பில் கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலை நிகழ்ந்துள்ளது. இரண்டு மாணவிகளதும் கொலைகள் ஒத்ததாகவே உள்ளது. திருகோணமலை புனித மரியாள் கல்லூரி தேசியப் பாடசாலை மாணவி வர்ஷா பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் பேக்கில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. ஆனால் மட். கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடந்த செவ்வாக்கிழமை 28 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்று வீடு திரும்ப…
-
- 0 replies
- 678 views
-
-
தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பே வடமாகாணத் தேர்தல்:ஹெல உறுமய கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 மே, 2013 - 16:46 ஜிஎம்டி ஹெல உருமயத் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் குண்தாச அமரசேகர ஆகியோர் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனா எதிர்ப…
-
- 0 replies
- 318 views
-
-
13வது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டால் கூட்டமைப்பு பாராளுமன்றை நிராகரிக்கும்- சிங்கள ஊடகத்திற்கு சிவாசிலிங்கம் பேட்டி!! மகிந்த அரசினில் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றை பகிஷ்கரிக்க நேரிடும் என ரெலொ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய தனிப்பட்ட நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார். இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.…
-
- 0 replies
- 499 views
-
-
சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது. அவரது முதலாவது இலக்கு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவாகும். அந்த பெரஹா மீதே, தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் முதலாவதாக திட்டமிட்டிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெரு…
-
- 2 replies
- 443 views
-
-
சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில், நான் 2007ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிள் தலைவர்களின் ஒருவரான தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினேன். எப்படி இரங்கல் கவிதை எழுதலாம் என்றும், உடனே கருணாநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். இன்று தனி ஈழம் பெற்று தருவேன் என்று பேசுகிறார் என்றால், ஜெயலலிதா பேச்சு வேடிக்கையாக உள்ளது. கடந்த இ…
-
- 9 replies
- 1.7k views
-
-