ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
ராஜித பிணையில் விடுதலை வெள்ளை வான் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவரை 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவருக்கான வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று அவர் சாட்சியமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/ராஜித-பிணையில்-விடுதலை/
-
- 0 replies
- 376 views
-
-
4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை! 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடந்த 27ஆம் திகதி நடந்த ஆண்டு நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டார். திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்காக, இலங்கை அரசாங்கம் நிதியைத் திரட்டுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://athavannews.com/4-8-பில்லியன்-டொலர்-கடனைத்-த/
-
- 0 replies
- 777 views
-
-
நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை கடந்த 26ம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நெடுந்தீவு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டு பிடிக்க முடியவில்லை.இதனால் நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மர்ம…
-
- 2 replies
- 778 views
-
-
இது ஆரம்பம் மட்டுமே – எச்சரிக்கிறார் சரத் பொன்சேகா! “ஐ.தே.கட்சிக்குள் இருக்கும் சிலர், கட்சியினதோ அல்லது நாட்டினதோ எதிர்காலம் பற்றி அக்கறை கொள்ளாது கட்சிக்குள் தமது இருப்பையும், அதிகாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்வதிலேயே அக்கறைப் படுகிறார்கள். கட்சி மறு சீரமைக்கப்படுவதோ அல்லது தலைமைப் பீடம் மாறுவதயோ அவர்கள் எதிர்க்கிறார்கள். தங்கள் நன்மையை அட்டும் முன்வைத்து கட்சியை இப்படியே தொடர்ந்தும் வைத்துக்கொள்ள முனைகிறார்கள்” என சரத் பொன்சேகாதெரிவித்தார். ஹொரணவில் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது அவர் இப்படித் தெரிவித்தார். தலைமைப் பதவி விடயத்தில் ஐ.தே.கட்சியில் ஒரு பாரிய அபிப்பிராய பேதம் இருக்கிறது. மக்களின் நம்பிக்கையை…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு Dec 26, 20190 தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பில் நாளை பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் கொழும்பு நன்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதாக விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்று சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். http://www.samakalam.com/செய்திகள்/சிவாஜிலிங்கம்-தமிழினப்-ப/
-
- 10 replies
- 1.4k views
-
-
‘வெள்ளை வான்’ சம்பந்தமாக என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன – விக்கிரமபாகு கருணாரட்ண டிசம்பர் 28, 2019 மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபலமான வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக தன்னிடமும் ஆதாரங்கள் உள்ளதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரமாகு கருணாரட்ண கூறியுள்ளார். கொழும்பு பிரிவின் முன்னாள் டி.ஐ.ஜி.யும் பின்னர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ஆகப் பதவி மாற்றப்பட்ட புஜித் ஜயசுந்தர அவர்கள் வெள்ளை வான் பயங்கரவாதம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டதாலேயே குருநாகலைக்கு சடுதியாக இடம் மாற்றப்பட்டார் என டாக்டர் கருணாரத்ன மேலும் தெரிவித்தார். நீண்ட காலத்துக்கு முன்னர் தமிழர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது சகோதரி கேட்டுக்கொண்டதையடுத்து தா…
-
- 2 replies
- 974 views
-
-
எமது இனத்திற்கு விரோதமாக இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு எமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளீர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கு சமஸ்டி கட்டமைப்பில் ஒரு தீர்வு வரவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறி…
-
- 3 replies
- 617 views
-
-
நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை – மக்களே அவதானம்! இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் இதனை ஏற்ற வகையில் கருவிகளை பயனபடுத்தி பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள். இது வடமாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் கிளிநொச்சிக்கு கீழாக அநுராதபுரம…
-
- 4 replies
- 928 views
-
-
எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு ஜனவரி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் அரசாங்க கொள்கை பிரகடனம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடனத்தையடுத்து பிற்பகல் 12.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதியிலிருந்து சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முறைமைகள் குறித்து அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வு கூடவுள்ளது. இதன்போத…
-
- 0 replies
- 188 views
-
-
கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா (பாறுக் ஷிஹான்) கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார். இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கருணா அம்மான், “அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது. இங்கு பயணிகளும் வாகன சாரதிகளும் பல்…
-
- 162 replies
- 15.2k views
-
-
தமிழ் பிரிவினைவாதத்தை வளர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உடனடியாக புனர்வாழ்வளிக்க வேண்டும்-மாகல்கந்தே சுதந்த தேரர் தமிழ் மக்களை வைத்துக் கொண்டு ஏதாவது புரட்சி ஏற்படுத்த முயன்றால் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஏற்பட்ட நிலைதான் சுமந்திரனுக்கும் ஏற்படும். மேலும் தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றும் கூட்டமைப்பின் உறுப்பினர் வெளியிடும் கருத்துக்கள் பாரதூரமானவை என பிக்குகள் என்ற ரீதியில் கண்டிக்கின்றோம் என சிஹலே ராவய அமைப்பின் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தமிழ் பிரிவினைவாதத்தை போசிக்கும், தமிழ் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும், சமஷ்டி கேட்கும், வடக்…
-
- 2 replies
- 573 views
-
-
காணிகளில் குடியேறாதவர்களின் காணிகளை சுவீகரியுங்கள் - வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு 800 இற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதனால் ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்க…
-
- 0 replies
- 436 views
-
-
தேசிய ஐக்கியம் பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கை-சஜித் பிரேமதாச அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது தேசிய ஐக்கியம், பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கையாகும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அத்துடன் எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள நான் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு, எக்ஸா, சோஃபா ஆகிய சர்வதேச உடன்படிக்கைகளை இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார். பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும…
-
- 0 replies
- 496 views
-
-
மஹிந்தவை சந்திக்க தயாராகும் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு பெறாமல் காணப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். எனவே, குறித்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கி, அவற்றை நிறைவு பெறச்செய்ய வேண்டும் என்பதில் கூட்டமைப்பு அக்கறை காட்டி வருதாக கூறப்படுகின்றது. இந்நிலை…
-
- 0 replies
- 380 views
-
-
பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் December 26, 2019 பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப…
-
- 10 replies
- 2.1k views
-
-
நாட்டில் பௌத்தத்தை இல்லாதொழிக்க திட்டம் – மஹிந்த சாடல் வரலாற்றைத் திரிபுபடுத்தி, நாட்டில் ஐக்கியத்தையும் பௌத்தத்தையும் இல்லாதொழிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும். இதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் அவதானித்துக் கொண்டுதான் வந்தோம். பௌத்தர்களைக் கொண்டே பௌத்தத்திற்கு எதிராக செயற்பட்டார்கள். சிங்களவர்களின் உரிமை எதிர்க்கப்பட்டது. இது ஒரு கட்டத்தி…
-
- 2 replies
- 810 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" - நடிகர், ஜெயபாலன்
-
- 2 replies
- 785 views
-
-
கொழும்பு வருகிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் DEC 28, 2019 | 4:38by கார்வண்ணன்in செய்திகள் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சர்க்ஹாரோவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் கொழும்பு வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். “இதன் போது, ரஷ்ய – சிறிலங்கா உறவுகளின் தற்போதைய நிலை, அரசியல் பேச்சுக்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், வர்த்தகம், பொருளா…
-
- 1 reply
- 584 views
-
-
வடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார DEC 28, 2019 | 4:43by கி.தவசீலன்in செய்திகள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார். ”சிறிலங்கா அதிபரின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோருவோம். மேலும் 2020 ஜனவரி 3 ஆம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று அதிபர் ராஜபக்கவிடம் கேட்டுக்கொள்கிறோம். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/12/28/news/41717
-
- 1 reply
- 337 views
-
-
அமைச்சர்களுக்கான வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் – தகவல் கசிவு முன்னாள் அமைச்சர்கள் ஐந்துபேர் இதுவரையில் அமைச்சர்களுக்குரிய உத்தியோகபுர்வ இல்லங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்களான, ராஜித சேனாரத்ன, பி. ஹரிசன் மற்றும் கயந்த கருணாதிலக்க உட்பட ஐந்து பேர் இவ்வாறு அமைச்சர்களுக்கான உத்தியோகபுர்வ இல்லங்களை ஒப்படைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெர்ணாந்து மற்றும் நிரோசன் பெரேரா உட்பட முன்னாள் அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களுக்கான வாசஸ்தலங்களை ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 305 views
-
-
கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல் DEC 28, 2019 | 4:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு எதிர்வரும் 30ஆம் நாளே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ராஜித சேனாரத்னவை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டார். அதற்கமைய கொழும்பு நீதி…
-
- 0 replies
- 702 views
-
-
பொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதன்போது முக்கியமாக வேட்பாளர் பட்டியலில் ஆசனப் பங்கீடு குறித்து ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில், வேட்பாளர் பட்டியலில்…
-
- 0 replies
- 640 views
-
-
(ஆர்.யசி) நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கடந்த காலங்களில் 3 வீதத்திற்கும் குறைந்த தன்மையையே காட்டுகின்றது. எவ்வாறு இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியினால் அரசாங்க கொள்கை அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ள காரணத்தினால் 6 வீத வளர்ச்சி அல்லது 6.5 வீத வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும் என அரசாங்கம் கூறுவதாகவும் அது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்ட…
-
- 1 reply
- 420 views
-
-
மிலேனியம் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் – சஜித் மிலேனியம் சவால் நிதிய ஒப்பந்தம் மட்டுமல்லாது எக்சா, சோபா, இலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் என இலங்கைக்கு எதிரான அனைத்து ஒப்பந்தங்களையும், ஸ்ரீ மா போதிக்கு முன்னாள் துண்டுத் துண்டுகளாக கிழித்தெறிவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் பெரும்பான்மையானோர், நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால், இந்த சர்ச்சை எப்படி ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் வந்தது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. இவ்…
-
- 0 replies
- 283 views
-
-
பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71728 முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு…
-
- 10 replies
- 2.5k views
-