Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூரில்... வழிபாடுகளை, மேற்கொண்டார் ரணில்! வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்ற அவர், நல்லூர் ஆதீன கர்த்தாவுடன் சந்திப்பினை மேற்கொண்டார். அதன்பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் எ…

  2. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தமை சரியான தீர்மானமே என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டினுள் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் எனவும், மற்றையவர் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட வேட்பாளராக தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222162/ஜனாதிபதி-வேட்பாளர்-…

    • 10 replies
    • 1.1k views
  3. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதனால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவி ரத்தாகும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . #மகிந்த ராஜபக்ஸ #சுதந்திரக் கட்சி #உறுப்புரிமை #ரத்து …

  4. August 15, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கண்காணிப்பு பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸவை மகிந்த களமிறக்கியதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தாபயவின் பிரவேசம் நாட்டை பேரழிவிற்கு இட்டுச…

  5. சிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “வசந்த கரன்னகொடவுக்கு அட்மிரல் ஒவ் தி பிளீட் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒன்பது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு கட்டளையிடும் அதிகாரிக்கு மட்டுமே வெளிநாடு நாடுகள் இத்தகைய பதவியை வழங்குகின்றன. சிறிலங்கா கடற்படை…

    • 1 reply
    • 806 views
  6. இந்து சமுத்திரத்திற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு திட்டம் இலங்கையில் நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது என ஜப்பானை தளமாக கொண்ட நிக்கேய் ஏசியன் ரிவியு தெரிவித்துள்ளது. சோபா உடன்படிக்கையின் கீழ் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை இலங்கையுடன் செய்துகொள்வதற்காக அமெரிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் இலங்கையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆழமாக பிளவுபட்டகூட்டணியில் அமெரிக்க சார்பு அணிக்கு தலைமை தாங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் கூட சீற்றமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நிக்கேய் ஏசியன் ரிவியு …

    • 2 replies
    • 326 views
  7. மன்னார் மடுமாதா திருத்தலத்தின் வருடாந்தர ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 அளவில் ஆரம்பமானது! http://www.hirunews.lk/tamil/222249/ஆவணி-மாத-திருவிழா-திருப்பலி-இன்று மடு திருத்தலத்தின் நாளை ஆவணித் திருவிழா மடு திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா திருப்பலி, நாளை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கைக் கத்தோழிக்க ஆயர் பேரவைத் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணான்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனியும் நடைபெறும். http://www.…

    • 1 reply
    • 434 views
  8. வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயமொன்று உடைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள புனித இராஜப்பர் தேவாலயத்தில் விசமிகள் சிலரால் நேற்று இரவு உடைத்திருக்கலாம் என சந்தேகத்துடன் நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச்சென்ற பொதுமக்கள் சிலுவைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள பூச்சாடி எரியூட்டப்பட்டிருப்பதை அவதானித்ததையடுத்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இன்று (15.08) காலை தேவாலயத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் சென்று பார்த்த போது தேவாலயத்தின் பின் பக்கமாக உடைக்கப்பட்டு உள்ளே சிலர் சென்றுள்ளதாகவும் நிறப்பூச்சை பயன்படுத்தி ஆலயத்தின்…

    • 0 replies
    • 518 views
  9. பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுதந்திர தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை , அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு நாம் எமது உறுதியான ஆதரவை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

    • 0 replies
    • 270 views
  10. மயிலிட்டித் துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதம் தான் அவ்வாறு கூறுவதற்கு இயலாத ஒன்றாகவே உள்ளது என்றும் மக்களின்காணிகள் மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மயிலிட்டித்துறைமுகம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த ஆண்டு மயிலிட்டித்துறைமுகம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மயிலிட்டித்துறைமுகமானது பிரேமதாஸ பிரதமராக இருந்தபோது தந்தை செல்வநாயகம் மக்களின் வேண்டுகோளுக்க…

    • 1 reply
    • 657 views
  11. கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை தொடர்பில் பலரதும் அவதானம் விழுந்துள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் யானை கொடுமைப்படுத்தபடுவாதாக குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் டிகிரி தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும், தவறான சித்தரிப்புகளை மேற்கொள்ளவதாகவும் குறிப்பிட்டு வளர்ப்பு யானைகள் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி பண்டார கருணாரத்னவும் , டிகிரி யானையின் உரிமையாளர் எல்.எல்.திலகரத்னவும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டிகிரி யானை குறித்து மேலும் தெரியவருவதாவது, டிகிரி யானைக்கு …

    • 1 reply
    • 533 views
  12. சஜித் – கோத்தாவை மோதலில் சிக்க வைக்கும் இணைய முடக்கிகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவையும், சஜித் பிரேமதாசவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள். சஜித் பிரேமதாசவின் பெயரில் உள்ள, www.sajithpremadasa.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், கோத்தாபய ராஜபக்சவின் பெயரில் உள்ள, www.gota.lk என்ற இணையத்தளத்துக்கு தானாகவே கொண்டு செல்லப்படுகிறார்கள். அதுபோல, கோத்தாபய ராஜபக்சவுக்காக பரப்புரைகள் செய்யப்படும், gotabayarajapakse.com என்ற இணையத் தளத்துக்குள் நுழைவோர், சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான http://www.prisons.gov.lk இற்குள் …

    • 0 replies
    • 219 views
  13. மட்டக்களப்பில் வாவியூடாக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் பிரதேச வாசிகள் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை மக்கள் இந்த மண்டூர் குருமன்வெளி வாவியூடாக இயந்திரப்படகின் மூலம் தங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இலகுவாக மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் அண்மைக்காலங்களாக இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் வாகன சாரதிகள்,பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்கள் மத்தியில்…

    • 1 reply
    • 378 views
  14. செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவான நிர்மாணக்கப்பட்ட நினைவுத் தூபி, பல்வேறு தடைகளுக்கு மத்தியில், இன்று (14) திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பொறிக்கவும் அவர்களுடைய பெயர்களை எழுதவும் தடைவிதித்திருந்த பொலிஸார், நினைவுத் தூபியை மட்டும் நிர்மாணிக்க அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில், இன்று (14) குறித்த நினைவுத் தூபியில், நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க முடியாவிட்டாலும், தற்காலிகமாக மாணவர்களுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்டும் “செஞ்சோலை வளாக வீதி” என எழுதப்பட்ட நிலையிலும், குறித்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது, நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ச…

    • 6 replies
    • 1.3k views
  15. மைலிட்டி துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர்! யாழ்ப்பாணம் மைலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர்,யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். 150 மில்லியன் ரூபாய் செலவில் மைலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைமுக மேம்படுத்தலில் 50 மீற்றர் நீளமான அணை மேம்பாடு, வலைபின்னும் மண்டபங்கள், எரிபொருள் நிலையங்க…

  16. தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார். அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வா…

  17. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நகர்வுகள் - அமெரிக்காவின் இரட்டை முகம் சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்! ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென மைத்திரியிடம் சஜித் வேண்டுதல் இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனா…

    • 1 reply
    • 559 views
  18. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமிழ் மக்கள் தெளி­வாக இருக்­கி­றார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்­று­மையைவிட கூடு­த­லாக தற்­போது ஒற்­றுமை இருக்­கி­றது. எங்­க­ளுக்கு இருப்­பது இரண்டு பலங்கள். ஒன்று எங்­க­ளது ஒற்­றுமை. மற்­றை­யது சர்­வ­தேசம். ஆகவே இவை இரண்­டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தமிழ் மக்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சம­கால அர­சியல் நிலை­வரம் …

  19. கண்டி விநாயகர் ஆலயத்தில் கோட்டாபய விசேட வழிபாடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடளாவிய ரீதியிலுள்ள மதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இதன்படி கண்டிக்கான விஜயத்தை மேற்கொடுள்ள அவர் அங்குள்ள கடுகெல விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இந்த வழிபாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றனர். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய பீடத்திற்குச…

    • 2 replies
    • 788 views
  20. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. வேட்பாளரை அறிவித்த பின்னர் தான் கூட்டணி குறித்து பேசப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் குரலெழுப்ப கூட்டணிக்கான பங்காளி கட்சிகள் அதற்கு எதிரான நிலைப்பட்டில் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையடலின் போதும் கடும் வாதபிரதிவாதங்களே ஏற்பட்டுள்ளது. எனவே 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அலரி மாளிகையில் கூட்டணிக்கான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் , ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இச் சந்திப…

    • 1 reply
    • 615 views
  21. அர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வ­தாக பதவி முடிந்து செல்லும் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­தி­ருக்­கிறார். இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் பத­வி­யி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்ள நிலையில் தொலைக்­காட்சி சேவை­யொன்­றுக்கு வழங்­கிய அவ­ரு­டைய இறுதி நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் போன்ற விட­யங்­களில் அர­சாங்­கத்­தினால் சில முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க…

    • 1 reply
    • 579 views
  22. வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் துரத்தி துரத்தி தூர நோக்கி புகைப்படம் பிடித்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அவரது அடையாளத்தையும் உறுதிப்படுத்துமாறும் போராட்டத்தைப் புகைப்படம் பிடிப்பவர்கள் யார் என்று உறுதிப்படுத்துமாறும் கோரியபோது அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் அவர்களின் கைகளில் தாங்கியிருந்த பதாதைகளையும் சுற்றி சுற்றி புகைப்படம் பிடித்துள்ளார்…

    • 0 replies
    • 537 views
  23. யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லூர்க்கந்தன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார். இதன் போது இராணுவத்தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத் தளபதி ஆலயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தார் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை நாளையத்தினம் பிரதமரின் வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் ப…

    • 3 replies
    • 537 views
  24. நாட்டில் அண்மைக்காலமாக பெருமளவில் பேசப்பட்ட விவகாரமாக சோஃபா, எக்ஸா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் காணப்பட்டன. அவை குறித்து நான் தலையிடவில்லை. தற்போது எம்முடைய வெளிவிவகாரக் கொள்கை யாதெனின், உலகலாவிய ரீதியில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை மேலும் விரிவுபடுத்துவது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்த கடப்பாடுகளை முழுமையாக இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இரண்டாவதாக ஜீ.எஸ்.பி வரிச்சலுகையுடன் தொடர்புடைய வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். பண்டாரநா…

    • 1 reply
    • 414 views
  25. தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை ஒன்றை நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார். http://www…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.