ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143199 topics in this forum
-
ரணில்- மஹிந்த இரகசிய பேச்சுவார்த்தை! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உதவியாளர்கள் எவருமின்றி தனியானதொரு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்தே அதிகம் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் விடயத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படலாமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை ரணில்- மஹிந்தவின் இந்த சந்திப்பில் அரசியலில் புதிய ம…
-
- 0 replies
- 234 views
-
-
அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்தன தேரர் நடத்தி வருகின்றார். மேலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர், நீர் மாத்திரம் அருந்திப் போராட்டத்தை முன்னெடுத…
-
- 0 replies
- 178 views
-
-
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது. போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை…
-
- 5 replies
- 769 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது.எனவே இனியாவது தமிழர்கள் தங்களுக்கு பொருத்தமான தேசியத் தலைவரை எதிர்வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற சமூர்த்தி நிவாரண உருதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் உள்நாட்டு போரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் வரை தமிழ் மக்களே கொல்லப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் எத்தனையோ சமூகம் வாழ்கின்ற போதிலும் இன்றுவரை தமிழர்களே …
-
- 0 replies
- 700 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், போர் நிறைவடைந்த 10 வருடங்கள் கடந்துள்ளபோதும் போரினால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் கட்டியெழுப்பப்படவில்லையென தெரிவித்துள்ள அவர், இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் தமிழ் மக்களின் எதிர்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற இந்நிகழ்வில் மாவை சே…
-
- 4 replies
- 556 views
-
-
யாழ்ப்பாணம்பொதுநூலகம் எரிக்கப்பட்டு 38 ம் ஆண்டு நிறைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் மரணமடைந்த தனிநாயகம் அடிகளாரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நினைவு தினம் ரெலோ கடசியினரால் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது.இந்த நினைவு தின நிகழ்வில் ரெலோவின் உள…
-
- 5 replies
- 1.6k views
-
-
முஸ்லிம்கள் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம் -ரவூப் ஹக்கீம் இன்றைய பதற்றமான சூழ்நிலையில் சந்தேகங்களும், நிச்சயமற்ற தன்மையும் மக்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள வேளையில், சமகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் கடமையும், பொறுப்புமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ஊடகங்களில் பணிபுரிவோர் தவிர்த்து கொள்ள வேண்டுமென வினயமாக வேண்டிக் க…
-
- 8 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ் கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகொப்டரில் யாழ் கோட்டையில் வந்து இறங்கினார் மேற்படி வரவேற்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.. யாழில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளி…
-
- 3 replies
- 803 views
-
-
யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து குறித்த ஊசி போடப்பட்டது. ஊசி போடப்பட்டு சில நிமிடங்களில் மாணவிகள் சோர்ந்து மயங்கும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மாணவிகளை அருகில் இருந்த சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் தெரிவிக்கையில், ஊசி ஏற்றப்பட்டதும் சில…
-
- 0 replies
- 782 views
-
-
அரசியல் தீர்வு விடயத்திலிருந்து அரசாங்கம் விலகவில்லை என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சமுா்த்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், இந்த சந்தா்ப்பத்தில் நாட்டில் உள்ள சகல மத தலைவா்களுக்கும் நன்றி கூறவேண்டியவனாக இருக்கிறேன். குறிப்பாக கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆ ண்டகை நாட்டில் சமாதானத்தை உண்டாக்க கடுமையாக உழைத்திருந்கின்றாா். அதேபோல் சகல மத தலைவா்களும் ஒன்றிணைந்த இந்த நாட்டி ல் மீண்டும் பயங்கரவாதம் தலைதுாக்க கூடாது என்பதற்காக பணியாற்றியுள்ளாா்கள். மேலும் உயிா்த்த ஞாயிறு த…
-
- 0 replies
- 335 views
-
-
அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நரா.அருண்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை கண்டி, ஹலகா பலலேகல தோட்டத்தில் ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை உடனடியாக கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இலங்கை இந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காலை 8 மணிக்கு சம்மேளனத் தலைவர் நரா.அருண்காந்தி ஆரம்பித்த இந்த போராட்டத்தில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இந்து மத குருமார்கள் மற்றும் பௌத்த துறவிகள் கலந்துகொண்டனர். இந்த உண…
-
- 0 replies
- 421 views
-
-
அகில இலங்கை இந்து சம்மேளனமும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தது! அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நரா.அருண்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை கண்டி, ஹலகா பலலேகல தோடத்தில் ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை உடனடியாக கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இலங்கை இந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காலை 8 மணிக்கு சம்மேளனத் தலைவர் நரா.அருண்காந்தி ஆரம்பித்த இந்த போராட்டத்தில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் இந்து மத குரும…
-
- 0 replies
- 233 views
-
-
பதவி விலகமாட்டேன் – அடம் பிடிக்கும் அசாத் சாலி கொழும்புச் செய்தியாளர்Jun 02, 2019 | 3:55 by in செய்திகள் எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் விலக வேண்டும் என்றும், அவர்களை சிறிலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக இன்று மூன்றாவது நாளக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். எனினும், தாம் பதவி விலகப் போவ…
-
- 1 reply
- 555 views
-
-
பிரதமர் தலைமையிலான நிகழ்வுகள் யாழில் ஆரம்பம்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு யாழ். முற்றவெளியில் தற்போது இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மதகுருமார்கள், சமுர்த்தி பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதமர் இணைப்புச் சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார். …
-
- 0 replies
- 418 views
-
-
முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது . அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்சி திணைக்களகளின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. …
-
- 5 replies
- 1.2k views
-
-
வசாவிளானில் குண்டு வெடிப்பு. யாழ்ப்பாணம் வசாவிளானில் குண்டு வெடிப்பு. ஒரு ராணுவவீரர் பலி. இருவர் காயம். மேலதிக விபரம் தெரியவில்லை. http://www.sundaytimes.lk/article/1089929/explosion-in-jaffna-one-army-personnel-dead-two-injured
-
- 6 replies
- 1.4k views
-
-
திருமலையில் சீன முதலீட்டுடன் இரும்பு உருக்கு தொழிற்சாலை? திருகோணமலை கப்பற்றுறை பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றினை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு 600 ஏக்கர் காணியினை வழங்க வேண்டும் என்று சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்கிரம விடுத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது திருகோணமலை கப்பற்றுறைப் பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலையை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு 600 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மலிக் சமர…
-
- 17 replies
- 1.7k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள்…
-
- 9 replies
- 2.2k views
-
-
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, மடிகே மற்றும் அனுக்கான உள்ளிட்ட கிராமங்களிலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. நிலைமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர். நேற்றைய தினம் சிலாபத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையால் நேற்றிரவு குளியாப்பிட்டியவிலுள்ள பள்ளிவாசல்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டபோதும் இன்றையதினமும் பல முஸ்ல…
-
- 42 replies
- 4.9k views
-
-
மட்டக்களப்பு - பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு முன்பாக நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடமாக உள்ளே வைத்து ள்ளதாக தெரிவித்து தனது மகளை மீட்டுத்தருமாறு தாயொருவர் குறித்த சபைக்கு முன்பாக நேற்று மாலை போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த தாயை சபையின் பணியாளர்கள் உள்ளே விட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறி தாயார் போராட்டம் நடாத்தியுள்ளார். தனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், தனது மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப் பட்டுவருவதாகவும், தனது மகளை மீ…
-
- 0 replies
- 260 views
-
-
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்த பழங்குடி மக்கள்! திருகோணமலை உப்பூறல் பகுதியில் பதட்டம்!! 2009 இற்குப் பின்னர், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கையகப்படுத்தப்பட்ட மூதூர் உப்பூறல் பகுதியிலுள்ள தமிழர் காணிகள், மீண்டும் அப்பகுதியிலுள்ள தமிழ் பழங்குடியினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன . ஹிஸ்புல்லாவால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்குள் தமிழ் மக்கள் வெகுஜன அமைப்புகளின் உதவியுடன் நுழைந்த தமிழ் பழங்குடியினர் அந்த காணியில் குடிசைகள் அமைத்து தங்கிவருகின்றார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மேலதிக தகவல்கள் https://www.ibctamil.com/srilanka/80/121094?ref=home-imp-parsely தமிழர்களின் நிலங்களை தனது அதிகாரத்தைப…
-
- 1 reply
- 944 views
-
-
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றது . இந்த பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு ஒருவர் குருகந்த ரஜமஹா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்துள்ளதுடன் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றினையும் அமைத்துள்ளார் . http://www.virakesari.lk/article/57241
-
- 1 reply
- 404 views
-
-
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரண…
-
- 18 replies
- 1.2k views
-
-
“வடக்கின் முதலமைச்சரும் நானே அமைச்சர்களும் நானே! “ - ஆளுநர் சுரேன் ராகவன் June 1, 2019 வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தற்போது இல்லாமையினால், முதலமைச்சரும், அமைச்சர்களும் நானே என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வட மாகாண தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து லட்சம் மக்களின் வாக்குகளிலேயே அவர்களுக்கு கண் என தெரிவித்துள்ள அவர், இங்குள்ள மக்களின் நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் மேலும் வெளிநாட்டில், நாடு கடந்த அரசாங்கம் நடாத்தும் ஒருவர் இங்குள்ள விடயங்களை கிண்டிக் கொண்டிருப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் தனியார் ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் தரிப்பிடமற்ற பகுதியில் சடுதியாக தரிக்க முற்பட்டபோது, அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில்…
-
- 0 replies
- 553 views
-