ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142758 topics in this forum
-
பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு Human-Rights-Commission-of-Sri-Lanka-60-60 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக ஆவர்தன பரிசீலனையின் போது ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில், ‘இலங்கையில் மரண தண்டனையை நீக்க வேண்டும்’ என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில மாற்றங்களுடன் தகவல் பெறும் உரிமை சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வெண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகளின் நிலைமை பற்றி வெளிவிவகார அமைச்சும் தனியாக ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது. இவற்றைவிட, மாற்றுக…
-
- 2 replies
- 699 views
-
-
மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்து இன்று வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் மிகவும் சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மோசடிக்கார கும்பலும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் க…
-
- 0 replies
- 388 views
-
-
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிடப்பட்ட போது குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (சனிக்கிழமை) அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கு…
-
- 1 reply
- 423 views
-
-
யுத்தம்தின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் போரின் அவலங்கள் சுமந்து நிற்கும் களத்துக்காட்சிகள். அங்கு வாசிக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வெடிபொருட்களுடன் வாழுகின்றார்கள். http://thaaitamil.com/?p=34414
-
- 1 reply
- 615 views
-
-
13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
கொட்டாவைக்கும் ருக்மலைக்குமிடையில் பிரதான வீதியிலி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் இரத்தக்கறை படிந்த செருப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சடலத்துக்குரியவருக்கு முப்பது வயதிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. வேறெங்கோ வைத்துக் கொலை செய்து விட்டு சடலத்தை இப்பகுதியல் கொண்டு வந்து போட்டிருக்கலாம் எனப் பொலிஸாரால் நம்பப்படுகிறது. மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 937 views
-
-
பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட இலங்கை விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரினால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் இரண்டு தடவை அழைக்கப்பட்டபோதும் அவர் எழுந்திருக்காததை அவதானித்த சபை ஊழியர் ஒருவர் ஓடிவந்து பிரதியமைச்சரை தட்டி எழுப்பினார். இதனையடுத்து திடுக்கிட்டு எழுந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்னை சுதாகரித்துக்கொண்டதுடன் சில விநாடிகள் அமர்ந்திருந்தவாறே பாதணிகளை…
-
- 2 replies
- 737 views
-
-
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழ…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும்: வைகோ இலங்கை அரச படையினர் தமிழர்களைக் கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு விட்டனர். இது போன்ற அக்கிரமங்களைச் செய்த எத்தனையோ உலக நாட்டுத் தலைவர்களைப்போல இலங்கை ஜனாதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிகையில் ராஜபக்ஷ கூட்டம் இலங்கைத் தமிழர்களை அழிக்கின்றது எனச் செய்தி வெளிவந்துள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
கட்டுக்கோப்பாக வாழ்ந்த சமூகம் அவ்வாறில்லாமல் இருக்கின்றது! - ஆளுநர் நா.வேதநாயகன் adminNovember 6, 2025 கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் – அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரையிசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்ப…
-
- 0 replies
- 95 views
-
-
திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சேர்பனா ஜுரோங் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, திருகோணமலைப் பெருநகரப் பகுதி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான நீண்டகால அபிவிருத்தித் திட்டத்தை, சிங்கப்பூர் நிறுவனம் வரையவுள்ளது. சிறிலங்கா வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. திருகோணமலை பெருநகர அபிவிருத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனுராத…
-
- 1 reply
- 333 views
-
-
நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 10:22 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வா…
-
- 0 replies
- 661 views
-
-
வடகிழக்கு இணைப்பு மக்களின் அபிலாசையா? திருமலையில் சிவில் சமூகத்தினருடன் பிரித்தானியதூதுவர் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கை இணைக்கும்படி கோருவது மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலா என்று இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்த தூதுவர் சிவில் அமைப்புக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய திருகோணமலை சிவில் அமைப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை எகேட் நிறுவன மண்டபத்தில் சந்தித்து உரையாடினார். இக்கலந்துரையாடலில் திருகோணமலை …
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கையில் சட்டரீதியான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் எனினும் நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அந்த ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். ஊரடங்குச் சட்டத்தை மீறியமை…
-
- 61 replies
- 4.5k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்படுவது மகிழ்ச்சி – சந்திரசேகரன்: இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்படுவதாக, சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை மதித்துத்தான் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். அதுபோலவே இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் செயற்பாடுகள் முழு உலகத் தமிழர்களும் மறந்துவிட முடியாத வரலாற்று நிகழ்வாகும். அந்நேரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், …
-
- 2 replies
- 968 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கோரிக்கை இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த கட்சியின் தலைவர் கே கிருஸ்ணசாமி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று அழைத்திருக்கும் சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி பங்கேற்கும் என தெரிவித்தார். இந்த மாநாட்டில் கட்சிகள் அனைத்தும் இணைந்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும். அது இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை மையமாக கொண்டிருக்க வேண்டும் என கிருஸ்ணசாமி குறிப்பிட்டார். இதன் …
-
- 0 replies
- 536 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் நலன்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட விடயம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். "ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இலங்கை - இந்திய உறவுகள் கடந்த காலங்களிலேயே கவனம் செலுத்தும் நிலையிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்ந்துள்ளன. இந்த உறவுகள் வலுவானவையாக மாறியுள்ளதுடன், உயர்மட்ட ஈடுபாடுகளில் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. 2015 ஜனவரிக்குப் பின் இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் தலைவர்களும் பரஸ்பரம் பல விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். பலர் கருதுவதற்கு மாற…
-
- 2 replies
- 287 views
-
-
கதிர்காமத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் தாக்கியழிப்பு: ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 19 ஒக்ரோபர் 2008, 09:20 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதல் அணியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அக்காவலரணில் இருந்து ஆயுதங்களும் அடையாளம்…
-
- 0 replies
- 631 views
-
-
போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை தூதுவராக ஏற்காதீர்! - தென்னாபிரிக்காவிடம் உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!! தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தென்னாபிரிக்க அரசிடம் உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படைத்தரப்பில் முக்கிய பங்கு வகித்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது ஐக்கிய நாடு;கள் சபைக்கான சிறிலங்காவின் பிரதித்தூதுவராக கடமையாற்றி வருகின்றார். இப்போரில் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சரணடைந்த போராளிகள், பொதுமக்கள் படுகொலை செய்யப்பட…
-
- 2 replies
- 688 views
-
-
வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள் 28 December 2025 இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகப் பாரிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். குறித்த நிவாரண உதவிகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தின் அதிகாரிகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர். இதன்படி தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள், 2 கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் 12,33,604 இந்திய ரூபாய…
-
- 0 replies
- 135 views
-
-
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன் ஒன்பது மாகாண அலகுகள் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று அல்லது நான்கு மாகாண அலகுகளின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதனை நல்லிணக்கமாக கருதுகின்றார் என்பதனை புரிந்து…
-
- 4 replies
- 496 views
-
-
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ மேஜர் ஒருவர் தொடர்ந்தும் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ லெப்டினன் ஒருவருடைய 13 வயதான மகளை குறித்த இராணுவ மேஜர் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ மேஜரை கைது செய்த கஹாதுடுவ பொலிஸார் அவரை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்க மறியலில் வைத்திருந்தனர். இந்த இராணுவ மேஜரை தொடர்ந்தும் சேவையில் வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பேபுஸ்ஸ சிங்க ரெஜிமன்ட் முகாமில் இந்த இராணுவ மேஜர் கடமையாற்றியுள்ளார். மனைவியின் சகோதரரின் மகளையே இவ்வாறு துஸ்பிரயோகம்…
-
- 3 replies
- 357 views
-
-
நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சுன்னாகம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த தே.நடேசு (வயது 44) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அண்மைக்காலமாக யாழில். வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரு…
-
- 0 replies
- 492 views
-
-
புகையிலை, சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்! புகையிலை மற்றும் சிகரெட் பாவனைக் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளில் 83 சதவீதமானவை தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றது. இந்த இறப்புகளில் செல்வாக்கு செலுத்தும் நான்கு பிரதான காரணிகளில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும் என்றும் ADIC சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் சுமார் 1.5 மில்லின் பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதேநேரம், உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் புகையிலை பயன்பாடு காரணமாக ஒரு இறப்பு பதிவாவதாக புகையிலை மற்றும் மதுபானம் த…
-
- 0 replies
- 67 views
-