ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது இந்தியா இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை இந்தியா தளர்த்தியுள்ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500 ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்தனர். இதையடுத்து, இலங்கைக்கு செல்வதனை மறு அறிவித்தல் வரை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி …
-
- 1 reply
- 565 views
-
-
தலவாக்கலை தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை! தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 51 பேரும், பெண்கள் 49 பேரும், அடங்குகின்றனர். வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகர சபை தீயணைப்பு படையினர், …
-
- 1 reply
- 770 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal negligence) 21/4 தாக்குதல் நடந்ததாக குற்றஞ்சுமத்தி, ஜனாதிபதி மீது பொறுப்பு கூறும் (Vicarious Liability) மனித உரிமை வழக்கொன்று தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21/4 தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சார்பாக ஐவர் இணைந்து சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் த…
-
- 0 replies
- 494 views
-
-
சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் தேவைகளுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி பயங்கரவாத நிலையை தோற்றுவிக்க, சில மோசடி அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் மங்கள சமரவீர ''உலக நாடுகளும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இலங்கையும் அண்மையில் எதிர்கொண்டது. ஆனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளத. எனினும், இலங்கையில் இன்னுமொரு பயங்கரவாதத்திற்கு குரூர அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இனவாத …
-
- 1 reply
- 556 views
-
-
நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று காலை முதல் வதந்திகள் பரவியதாகவும், இந்த வதந்திகளினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற வதந்தி பரவியதாகவும், இதனால் பொதுமக்களும், பெற்றோரும் பதற்றமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவ்வாறு பரவிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இவை வெறும் வதந்திகள் மட்டுமே எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன், பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். பாடசாலைகளுக்குள் வெளிநபர்களை அனுமதிக்கவோ, பாடசாலை நேரங்களில் மாணவர்களை வெளியே…
-
- 0 replies
- 850 views
-
-
அவுஸ்திரேலியா நோக்கி கடல்பயணம்- இலங்கையர்களிற்கு என்ன நடந்தது? அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று உட்பட 20 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன குறிப்பிட்ட படகுடன் அதிலிருந்தவர்களை கிறிஸ்மஸ்தீவுகளில் தடுத்துவைத்திருந்த அவுஸ்திரேலிய அதிகாரிகள…
-
- 1 reply
- 742 views
-
-
உலக வாணிபத்துக்கு மிகவும் முக்கியமானதாக இந்துசமுத்திரம் விளங்குகின்ற நிலையில், கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் இணங்கியிருப்பதாக டோக்கியோ பங்குப் பரிவர்த்தனையின் சந்தை நிலைவர ' நிக்கீ ' அட்டவணையின் மூலம் தெரியவந்திருக்கிறது. தெற்காசியாவிலும் அதைச் சுற்றியும் கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதும் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பரும அளவை அதிகரிப்பதுமே இந்த கூட்டுச் செயற்திட்டத்தின் இலக்குகளாகும். அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தொடங்கப்படவிருக்கும் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் மூன்று நாடுகளும் விரைவில் கைச்சாத்திடவிருப்பதாக…
-
- 22 replies
- 2.2k views
-
-
'வன்னி மக்களுக்கு ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை': கருத்திட்டப் பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா இராஜினாமா கடந்த இரண்டு வருடகாலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ்வரும் அமைச்சின் ஊடான அபிவிருத்தி கருத்திட்ட பணிப்பாளராக கடமையாற்றிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபாகணேசன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரபா கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நான் கடந்த இரண்டுவருடகாலமாக ஜனாதிபதியின் வன்னி மாவட்ட கருத்திட்ட பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே இது ஒரு அரசியல் நியமனமேயாகும். இந்த பதவ…
-
- 0 replies
- 342 views
-
-
அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு தேவை - சம்பந்தன் ஆஸி. தூதுவருக்கு வலியுறுத்தல் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதேவேளை, தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் ஹொலி…
-
- 0 replies
- 297 views
-
-
கண்காணிப்புகள் பலவீனமாக இருப்பின் மீண்டும் என்ன நடக்கும் என்பதை கூற முடியாது - பாதுகாப்பு செயலாளர் (ஆர்.யசி) குறுகிய காலத்தில் நாட்டினுள் நடத்தப்படவிருந்த தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. பதற்றகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கண்காணிப்பு பலவீனமானால் எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை குருநாகல் பகுதியில் குழப்பமேற்படுத்த தேரர்கள் சிலரும் அவர்களுடன் இணைந்து பலம்பொருந்திய நபர்கள் சில…
-
- 0 replies
- 328 views
-
-
ஞானசார தேரர், கலீல் மௌலவி ஆகியோரை விசாரணைக்கு அழைக்கும் தெரிவுக்குழு (ஆர்.யசி) பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் ,கலீல் மௌலவி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறிய சகலரையும் விசாரணைக்கு அழைக்க பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த விசாரணை அமர்வுகளுக்கு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானி ரவி செனவிரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் அறிக்கை ஒ…
-
- 0 replies
- 425 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - 31 பேருக்கு பிணை அண்மையில் நாட்ன் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=114482&mode=lead
-
- 1 reply
- 550 views
-
-
May 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொதுச் சந்தையைக் குத்தகைக்கு விடவேண்டாமென வலியுறுத்தி சந்தை வியாபாரிகள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தை மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது. போராட்டத்துக்கு நகரப் பகுதி வர்த்தகர்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க சந்தேகநபர் விடுதலை வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. திருகோணமலையைச் சேர்ந்த மீனவரான கனகசூரியன் அழகதுரை என்பவர், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தில் 2008 ஜூன் 29ஆம் நாள், உப்பூறல் சோதனைச் சாவடியில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ், திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அரசாங…
-
- 1 reply
- 792 views
-
-
சுற்றுலாத்துறையை, விரைவில் வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் பல நாடுகள் இலங்கை மீது விதித்திருந்த பயணத் தடையை நீக்கியிருப்பதால் சுற்றுலாத்துறையை, விரைவில் வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பின்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர், நாட்டின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் தற்போது வழமை நிலைக்குத் திரும்பி வருவதாகவும் கூறினார். சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதே தற்போது செய்ய வேண்டிய பிரதான விடயமாகும். அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து அங்கு கவனம் செலுத்தப்பட்டது.…
-
- 0 replies
- 297 views
-
-
மக்கள் வேண்டுவதைக் கொடுப்பதனால் இனப்பிரச்சினை ஏற்படும்- அமைச்சர் மனோ இந்த நாட்டில் மக்கள் வேண்டியதை அரசியல் தலைவர்கள் கொடுக்க முற்படுவதனாலேயே இனவாதம் தலைத்தோங்குகின்றது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மக்கள் வேண்டுவதை ஒரு புறம் வைத்து விட்டு, மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும், நாட்டுக்கும் மக்களின் எதிர்காலத்துக்கும் எது நல்லது என்பதை தீர்மானித்து வழிகாட்டுபவரே உண்மையான தலைவர் ஆவார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக அவற்றை நடைமுறைப்படுத்துவது ஒரு உண்மையான தலைவருடைய பண்பாக இருக்காது. மாறாக, அவர்கள் வேண்டினாலும், சிறந்ததை தீர்மானித்து ஆலோசனை வழங்குவதே தலைவரின் பணியாக இருக…
-
- 0 replies
- 414 views
-
-
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. தீவகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவி ஒருவர் தனது உணவாக குண்டுத்தோசை எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய உணவினை எடுத்துச் சென்றுள்ளார். அவர் தீவகத்திலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு நுழையும் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக இறக்கிவிடப்பட்ட நிலையில் சோதனையினை மேற்கொண்ட இராணுவத்தினர் சாப்பாட்டு பெட்டியைக் காட்…
-
- 1 reply
- 651 views
-
-
அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும் வேலை வாய்ப்பினை பெற்று தவறுவதாக எட்டு பேருக்கு மேல் ஏமாற்றி பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளன எனவும் , ஏமாற்றம் அடைந்தவர்கள் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர். அது தொடர்பில் பா…
-
- 0 replies
- 583 views
-
-
கெகிராவ மடாடுகம பகுதியில் தௌஹீத் ஜமாத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்கள் மற்றும் பிரதேச பிரதான பள்ளிவாயல் உறுப்பினர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரதேசத்தில் நூலகம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாயலில் தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மடாடுகம பள்ளிவாயல் நிர்வாகி அக்பர் சிங்கள ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை அடுத்து இந்த பள்ளிவாயல் பிரதேசத்திற்கு அவசியமற்றதாக கருதுவதாக அங்குள்ள பள்ளிவாயல் நிருவாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.madawalaen…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய - கொட்டாரமுல்லை பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில நீதிவான் நீதிமன்றில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார். இதேவேளை மினுவங்கொடை வன்முறைகள் தொடர்பிலும் கைதாகி விளக்கமறியலில் இருந்த 15 சந்தேக நபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/57054
-
- 0 replies
- 293 views
-
-
May 29, 2019 வடமாகாணத்தில் உள்ள அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறையை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் தெரிவித்தது. நரம்பு , எலும்பு சார்ந்த செயற்படாத உடற்பாகங்களை தூண்டல் மூலம் குணப்படுத்தும் ஒரு சித்த வைத்திய முறைமையே வர்ம சிகிச்சை எனப்படுகின்றது. வடமாகாணத்தில் உள்ள 13 சித்த வைத்திய நிலையங்களில் 8 வகையான சித்த வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. யோக , அக்கு பஞ்சர் உள்ளிட்ட இந்த எட்டு வகையான சிகிச்சை முறைகள் மூலம் அகம் மற்றும் புற ரீதியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. …
-
- 2 replies
- 1.1k views
-
-
May 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாய மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்றையதினம்(27) இரவு வாள்வெட்டு ரவுடிக்கும்பலொன்று வீடு புகுந்து தாக்கியதில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக ளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாங்குளம் புதியகொலனியைச் சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் அடித்து சேதமாக்கியுள்ளது. இவர்களது தாக்குதலுக்குள்ளான பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த சில பெறு…
-
- 1 reply
- 722 views
-
-
அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி-சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் மன்றத்தின் அறிக்கை அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி வந்த ஒரு அகதிக் குடும்பம், அவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பொலிசாரின் எச்சரிக்கை காரணமாக, மீண்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதை இட்டு யாழ்ப்பாணத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் என்ற வகையில் எங்கள் கவலையையும் வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் : முட்டை விஷமாகியிருக்கலாம் என சந்தேகம் (தி.சோபிதன்) யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில், தரம் 2இல் கல்வி பயிலும் மாணவனொருவன் உணவு ஒவ்வாமையினால் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில் தரம் 2இல் கல்வி பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒர…
-
- 1 reply
- 492 views
-