Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – சிஐடி அறிக்கை சட்டமா அதிபரிடம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் இந்த விசாரணைகள் நிறைவடைந்தது. இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைக்காத நிலையில், பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் பங்கு தொடர்பான துல்லியமான விபரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை என்று கூறப்…

    • 0 replies
    • 320 views
  2. ஐபிசி தமிழின் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி தாயகத்தையும், தாயகம் சார்ந்த நிகழ்வுகளையும் புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு வழங்கிவருகின்றது. இந்நிலையில் வணக்கம் தாய்நாடு நிகழ்வின் இந்த பகுதி ஈழத்தமிழர்களுக்கு மறக்க முடியாத வடுவான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துயர்மிகு 10 ஆண்டு நினைவுதினத்தை முள்ளிவாய்க்காலிலிருந்து வழங்கியிருக்கின்றது. இது தொடர்பான முழுமையான காணொளி.. https://www.ibctamil.com/srilanka/80/120727?ref=imp-news

    • 0 replies
    • 287 views
  3. பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்தார்கள். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் குற்றமிழைக்காதவர்கள் என இனம்காணப்பட்டவர்களை விடுக்குமாறு, மூன்று…

    • 1 reply
    • 929 views
  4. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை கோரிய போதும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கடந்த 12-03-2019 அன்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் மாவட்டத்தில் கடந்த 2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட அபிவிருத்திப் பணிகள் என்ன? அவற்றுக்கான கேள்விக் கோரல் எந்த பத்திரிகைகளில் எந்த திகதியில் கோரப்பட்டது? எத்தனை விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என்பன கோரப்பட்டது. ஆனால் இவற்றுக்கு உரிய காலத்தில் எந்த பதிலையும் வழங்காத மாவட்டச் …

    • 1 reply
    • 678 views
  5. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் ஊடகங்களால் முஸ்லிம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும் ஊடகங்கள் உதவ வேண்டும் என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் ஜம்இய்யதுல் உலாமா சபையினரின் ஊடக சந்திப்பு , யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர். https://newuthayan.com/story/15/யாழ்ப்பாண-முஸ்லிம்களின்.html

  6. வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கிருந்து வெளியேறினார். சுமார் 5 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியு ள்ளார். 2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப் பட்டிருந்தது.. இந்தநிலையில் இடம்பெற்றுள்ள மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியள வில் அமைச்சர் அங்கு ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.. https://www.ibctamil.com/srilanka/80/1…

    • 0 replies
    • 864 views
  7. விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். https://www.ibctamil.com/s…

  8. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இன்று இடம்பெற்றது. https://www.ibctamil.com/srilanka/80/120372

    • 3 replies
    • 1.1k views
  9. சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார். ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில்…

    • 8 replies
    • 1.3k views
  10. சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை Editorial / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, பி.ப. 06:32 Comments - 0 இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்ததான அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்துமாறும், பிரதமர் கோரினார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடனான சந்திப்பொன்று, அலர…

    • 2 replies
    • 745 views
  11. சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது - டக்ளஸ் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந…

  12. பொலிஸ் உத்தியோகத்தர் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் 3 பேர் கைது மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போனார். இந்நிலையில் கடந்த வருடம் வவுணதீவு இரு பொலிஸார் து…

  13. “நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்” May 24, 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய மக்களுக்கு தொடர்ந்து …

    • 7 replies
    • 732 views
  14. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. அத்துடன் இதற்கான நிதியும் சட்டவிரோதமாகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது என ஆசுமாரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மட்டககளப்பு மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் இருக்கின்றன அவற்றில் காத்தான்குடி கல்வி வயத்தில் புதிதாக 5 பாடசாலைகள் உட்பட மொத்தம் 8 பாடசாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த…

    • 1 reply
    • 536 views
  15. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அதற்கமைய, 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். https://www.newsfirst.lk/tamil/2019/05/24/ஏப்ரல்-21-தாக்குதல்-சந்தேக/

    • 1 reply
    • 325 views
  16. இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர். தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள். அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்ற…

    • 5 replies
    • 913 views
  17. பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் விடுதலைசெய்யப்பட்டுள்ளமையால் எனது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் உரிய பாதுகாப்பை வழங்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். ஞானசார தேரர் சிறையிலிருக்கும்போதே அவரது ஆதரவாளர்கள் என்னை தூற்றி வந…

    • 3 replies
    • 486 views
  18. இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் இன்று அமெரிக்க தூதுவரிடம் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படும் நிலையில், இருதரப்பிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நேருக்கு நேர் கதைப்பது உகந்தது என தாம் கருதுவதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயம் தமக்கு புரிவதாக அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://www.newsfirst.lk/tamil/2019/05/23/மல்வத்து-மகாநாயக்க-தேரர்/

    • 1 reply
    • 475 views
  19. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை தாம் நம்பவில்லை என காணாமால் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அதிகளவான சாட்சிகளைக் கொண்ட ஒருவர் குறித்து விசாரித்து நல்ல தீர்வைத் தந்தால் இதுகுறித்த அலுவலகத்தை தாம் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “கடந்த 16ஆம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறக்கப்பட்டுள…

    • 0 replies
    • 279 views
  20. புங்குடுதீவு மனைவி சிவலோகநாதன் வித்தியா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுருத்த ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வித்தியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு உதவியதாக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 எதிரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் இவ் வன…

    • 2 replies
    • 418 views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத குறை மிக நீண்டகாலமாக நிலவி வருகின்றது. அந்த வகையிலே இளைஞர்கள் தங்களுக்கான ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கித் தருமாறு பலதடவை பலரிடம் கூறி வந்த நிலையில் அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் குறித்த இளைஞர்களது கோரிக்கைக்கு அமைவாக ஐந்து இலட்சம் ரூபா நிதி குறித்த ஒரு மைதானத்தை அமைப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய திருமுறிகண்டி பகுதியில் மைதானம் ஒன்றை துப்பரவு செய்யும் பணியில் இளைஞர்கள் பிரதேச செயலகத்தின் உடைய அனுமதி கடிதத்தோடு ஈடுபட்டிருந்தனர். குறித்த வேலைகள் இடம்பெற்று …

    • 0 replies
    • 404 views
  22. யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி இராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். அதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்ட…

  23. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது… May 24, 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்திற்கு சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1 வர…

    • 1 reply
    • 638 views
  24. யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4 ஆயிரத்து 693 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களிற்குள் அதி கூடிய தேவை உடைய தொகை இதுவாகும். அதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 113 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. இத…

    • 1 reply
    • 683 views
  25. கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. மெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் முறையில் நடக்கும் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மருத்துவ சிகிச்சைக்காக கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்கு, மே 24 தொடக்கம் ஜூன் 2 வரை அனுமதி தர வேண்டும் என்று, நீதிமன்றிடம் அவரது சட்டவாளர் கோரியிருந்தார். …

    • 1 reply
    • 619 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.