ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் வெலிசரை கடற்படை முகாம் ஊடாக விநியோகிக்கப்பட்டவை – அதிர்ச்சி தகவல் வெளியானது! கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் வெலிசரை கடற்படை முகாம் ஊடாக விநியோகிக்கப்பட்டவையாக இருக்கலாம் என கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அதிகளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்படும் வெடிபொருட்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பியல் டி சில்வா இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கல்குவாரிகள் தொடர்பாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்படு…
-
- 2 replies
- 834 views
- 1 follower
-
-
முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் 1984 தோன்றியது!!ஆதாரத்துடன் 2006ஜெனிவாவில் அன்டன் பாலசிங்கம் வெளியிட்டார்!! முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் இப்போது தான் தோன்றியது போல பலர் பேசி வருகிறார்கள் .அது உண்மை அல்ல. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் இந்த ஜிகாத் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜிகாத், பின் பாரிய கொலைகள், கற்பளிப்புக்கள் எனத் தொடங்கி கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை/வர்த்தக ஸ்தாபனங்களை அழிக்கத் தொடங்கினார்கள். அக்கால கட்டத்தில் தேசிய ஊடகங்களின் வளர்ச்சியின்மையை சாதகமாக பயன்படுத்தி, இலங்கை முப்படைகளின் ஆசியுடனும், பாதுகாப்புடனும் கொடூரங்களை செய்து கொண்டிருந்தார்கள். மத முலாம…
-
- 1 reply
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் …
-
- 1 reply
- 343 views
-
-
தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை – பரபரப்பு தகவல் வெளியானது ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் உடல் என்று சொல்லப்படுவதுடன் சஹ்ரானின் உடலமைப்பு ஒத்துப்போகாமை குறித்தும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள…
-
- 2 replies
- 981 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்! AdminMay 3, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றது என அத்துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னாள் போராளிகளின் உதவியை 512 படைகளின் தளபதி கேட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் துறையின் இயலாத்தன்மையை வெளிக்காட்டுகின்றது எனவும் முன்னாள் போராளிகளிடம் பிச்சை எடுப்பது போல உள்ளது என…
-
- 0 replies
- 703 views
-
-
மசூதி மயானத்திலிருந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு! மட்டக்களப்பு – காத்தான்குடியில் உள்ள மசூதி மயானத்தில் இருந்து கைக்குண்டுகள், ஆயுதங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா மசூதி மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் இன்று (சனிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளன. பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், வாள், கைக்கோடாரி, வாக்கிடோக்கி இரண்டு, கணனி கார்ட் டிஸ்குகள் உட்பட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டுவரும் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்…
-
- 2 replies
- 817 views
- 1 follower
-
-
புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் MAY 01, 2019 | 4:32by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், ”தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணி…
-
- 24 replies
- 2k views
- 1 follower
-
-
ஆசையாய் விளையாடிய கடற்கரையின் அருகே புதைக்கப்பட்ட வெளிநாட்டு சகோதரர்கள்! இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானியர்கள் இருவரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானிய சகோதரரும், சகோதரியும் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அ…
-
- 0 replies
- 354 views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் May 4, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலய திருவிழாவை நடத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் முப்படை தளபதிகள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினர் ஆலய நிர்வாக உறுப…
-
- 1 reply
- 583 views
-
-
சாய்ந்தமருது மக்கள் தேசபக்தியுடையவர்கள் May 4, 2019 சாய்ந்தமருதில் பதுங்கிய பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய அப்பகுதி மக்கள் தேசபக்தியுடையவர்கள் என பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும் காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (3) தனக்கு கிடைக்கப்பெற்ற பதவியுயர்வு மற்றும் வெகுமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் இவ்வாய்ப்பு அதிஸ்டம் எனவும் தனது மக்கள் தொடர்பாடலுக்கு கிடைத்த வெகுமதி எனவும் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது கல்முனை காவல்நிலையத்திற்கு 2015 ஆண்டு காலப்பகுதியில் இருந்து பணியாற்றுவதாகவும் அவ்வாறு பணியாற்றும் போது அன்றைய தினம்(26) அன்று தேசபக்தி மிக்க மக்களில் இ…
-
- 0 replies
- 415 views
-
-
May 3, 2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் காவற்துறையினர் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி…
-
- 1 reply
- 924 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சோதனை தேடுதல் என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க முயற்சியா? வடபகுதிக்கு இருபது வாகனங்களில் வெடிபொருட்கள் ஆயுதங்கள் கொண்டுசொல்லப்பட்டதா? எழும் சந்தேகங்கள் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் தெற்கிலிருந்து வடபகுதிக்குள் 20 வாகனங்கள் வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் பிரவேசித்துள்ளதாக இலங்கைப் படையினர் புதிய தக…
-
- 2 replies
- 709 views
-
-
எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்
-
- 11 replies
- 1.8k views
-
-
(ஆர்.யசி) கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார் நாட்டில் நிலவும் பயங்கரவாத சூழல் குறித்து அவர் அளித்துள்ள செவ்வியொன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் அவர் மேலும் கூறுகையில், இந்த தாக்குதலுக்கு வெறுமனே இலங்கைக்குள் எந்த திட்டங்களும் இருக்க முடியாது, நிச்சயமாக இதில் வெளிநாட்ட…
-
- 1 reply
- 859 views
-
-
சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை தமக்கு வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில், கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவது நல்லதென்றும் இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இராணுவத் த…
-
- 5 replies
- 1.1k views
-
-
பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு சிறிலங்காவில் கடந்த 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 12 வெளிநாட்டவர்கள், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களுக்குள் இவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிக்கும் என்று கூறப்…
-
- 2 replies
- 712 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மன்றில் முன்னிலையாகத்ததால் வழக்கு ஜூன் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. கோத்தாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிங்க, தமது கட்சிக்காரர் அடுத்த தவணையில் மன்றில் முற்படுவார் என்று மன்றுரைத்தார். 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்…
-
- 0 replies
- 694 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 750 views
-
-
Batticaloa Campus எனும் பெயரில் மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. புனானை பகுதியில் வெலிகந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள Batticaloa Campus-இன் ஆரம்பம் 2013 ஆம் ஆண்டு முதல் பின்நோக்கி செல்கிறது. மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில், அப்போதைய தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை ஹிரா மன்றமும் தனியார் பங்களிப்புடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. …
-
- 0 replies
- 988 views
-
-
"அடிப்படைவாத கொள்கைக்கு அடிபணிந்துள்ளவர்களுக்கு புனருத்தாபனம் தேவை" - கோத்தபய (இராஜதுரை ஹஷான்) பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை நியமித்தார். இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பில…
-
- 2 replies
- 555 views
-
-
கிளிநொச்சி பாரிய விபத்தில் நால்வர் காயம்! கிளிநொச்சி நகரில் நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித் விபத்து பாரிய அளவில் இடம்பெற்றுள்ளபோதிலும், தெய்வாதீனமாக உயிரிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பளையிலிருந்து முறிகண்டி திசை நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு வேககக் கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி நகரின் நீதிமன்றத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்றபோது குறித்த ரிப்பர் வாகனத்தில் ஐவர் பயணித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு…
-
- 0 replies
- 397 views
-
-
யாழ் பல்கலை மருத்துவபீட மாணவர் விடுதி சுற்றிவளைப்பு… May 3, 2019 யாழ்ப்பணப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் சோதனை செய்யப்பட்டது. அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. #jaffnauniversity #stf #policeroundup #Eastersundayattacklk http://globaltamilnews.net/2019/120452/
-
- 0 replies
- 445 views
-
-
சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டதாரி உயிரிழப்பு – உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு May 2, 2019 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 29ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கே.கணேசலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த 27 வயதான பரமேஸ்வரன…
-
- 0 replies
- 431 views
-
-
மிருசுவிலில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் பலி -இருவர் காயம் May 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மிருசுவில் பகுதியில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்பாப்பிள்ளை சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே உயிரிழந்தவராவர். அவரது மனைவி சு. மகாலட்சுமி (வயது 63) மனைவியின் சகோதரியான கா.கோணேஸ்வரி (வயது 60) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் வீட்டு வேலியில் இராட்சத குளவி கூடு காணப்பட்டதாகவும் அவை காற்று வீசியமை…
-
- 0 replies
- 485 views
-
-
ஆலயங்களில் மிருக பலியிடல் ; மனு மீதான தீர்ப்பு 10 ஆம் திகதி இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்தது. இந்து ஆலயங்களில் மிருக பலியிடலை …
-
- 3 replies
- 888 views
-