ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு: மாவை தலைமையில் மட்டு.வில் கலந்துரையாடல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துயாடலும் இடம்பெற்றது. இதில் முக்கியமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அத்துடன் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய உறுப்பினர்களை இணைத்தல் குறிப்பாக இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொது…
-
- 0 replies
- 414 views
-
-
உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது பயனற்றது – லால் விஜேநாயக்க சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது தொடங்கி, எப்போது முடிவடைகிறது என்று, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது பயனற்றது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணரான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, சட்டநிபுணர் லால் விஜேநாயக்க, “ 19 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிபரின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தச்சட்டத்தின் 30.2 பிரிவு, தேர்தல…
-
- 0 replies
- 336 views
-
-
வட்டுவாகலில் வைத்து சிறீலங்கா இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே.....??? வட்டுவாகலில் நின்று கேட்கிறோம்..... சர்வதேசமே பதில்கூறு..... வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்
-
- 0 replies
- 297 views
-
-
இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்கள் | ஜெரா நமது உடல் பூ போன்றது என்பர். அல்லது பூ போலக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பர். அதற்கிணங்கவே, நமது உடலும் பூ போன்றதுதான் என்பதை சிறு தலைவலி வந்தாலே நாம் உணர்ந்துகொள்வோம். அதிலும், காலில் சிறு முள் குத்தி, அந்த முள்துண்டு இரண்டொரு நாளைக்கு வெளியில் எடுக்கமுடியாது போய்விட்டால் துடித்தே போய்விடுவோம். இரவில் உறங்கமுடியா தளவுக்கு ஒரு வலியிருக்கும். காய்ச்சல் வந்ததுபோலவும், வராததைப்போலவும் ஓர் உணர்வு கொதித்துக்கொண்டேயிருக்கும். சாதாரண முள் குத்தியதற்கே இந்தநிலையெனில், உடலில் வெடிபொருட்களுடன் வாழ்பவர்களைப் பற்றி என்றாவது நினைத்துப்பார்த்திருக்கிறோமா? இலங்க…
-
- 0 replies
- 689 views
-
-
சிவாஜிலிங்கம் தலைமையில் மண்டைதீவில் போராட்டம் மண்டைதீவு கடற்படை முகாம் விரிவாக்கத்துக்கு, நிலம் அளவிட வந்த அதிகாரிகள், சிவாஜிலிங்கம் தலைமையிலான மக்களின் போராட்டத்தினால், அளவீடு செய்ய முடியாது திரும்பிச் சென்றனர். http://www.dailymirror.lk/breaking_news/Survey-on-navy-camp:-Sivajilingam-and-others-protest/108-165383
-
- 1 reply
- 620 views
-
-
இலங்கையில் நீதித்துறையின் பாகுபாடு சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்? கைதானால் தமிழர்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டமும் சிங்களவர்களுக்கு வேறு சட்டமும் இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
முக்கிய செயற்பாட்டுக்காக பாதுகாப்பு செயலாளரை சந்திக்கும் சம்பந்தன் (ஆர்.யசி) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. வடக்கில் பொதுமக்களின் காணிகளை பாதுகாப்பு படைவசமாக்க மீண்டும் காணி அளவீடுகள் இடம்பெறுகின்ற விடயம் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. http://www.virakesari.lk/article/53864
-
- 0 replies
- 444 views
-
-
பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் போகும் மைத்திரி. தான் பதவிக்கு வந்த அரை ஆண்டின் பின்னர், ஜூன் மாதம் 21, 2015 தான் 19A அமுலுக்கு வந்து ஜனாதிபதி பதவிக்காலத்தினை 5 வருடத்துக்கு மட்டுப்படுத்தியது. ஆனால் தான் பதவிக்கு வந்தது ஜனவரி 2015, பழைய சட்டத்தின் படி தான் ஆறு வருடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக கருதுவதால், அது குறித்து தெளிவு படுத்துமாறு உச்சநீதிமன்றதினை அணுகுகிறார் மைத்திரி. ஆயினும், கடந்த வருடம் ஜனவரி மாதமளவில் இது குறித்து நீதிமன்று சென்று, 5 வருடம் தான் பதவிக் காலம் என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. மேலதிகமாக ஆறுமாதம் நீடித்தால், 4 1/2 வருடமுடிவில், இந்த அரசாங்கத்தினை பதவி நீக்கி, புதிய தேர்தலை நடாத்த விரும்புவதாக தனது கட்சி முக்கியதர்களு…
-
- 2 replies
- 782 views
- 1 follower
-
-
கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை ஆவணபடுத்தி தருமாறு வடக்கு மாகாண சுரேன் ராகவன் ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கீரிமலைக்குச் சென்றிருந்தார். ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடிய ஆளுநர், அவற்றை ஆவணப்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டார்.https://newuthayan.com/story/16/கீரிமலை-விவகாரம்-ஆளுநர்.html
-
- 0 replies
- 548 views
-
-
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நீண்ட காலத்தின் பின் இன்று(11) இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. கடந்த வருடம் யூலை மாதம் 24 இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் இன்று இடம்பெற்றுள்ளது. இன்றையக் கூட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன. பல தீர்மானங்களும் முற்கொள்ளப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 399 views
-
-
April 11, 2019 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களின் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளன உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு என்ற வகையில், கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகா…
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப் பிரசுரம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன? இது குறித்து பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புற…
-
- 3 replies
- 1.3k views
-
-
கடும் வறட்சி- 4,67, 000 பேர் பாதிப்பு!! பதிவேற்றிய காலம்: Apr 11, 2019 நாட்டில் நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 67 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்15 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 182 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 67 ஆயிரத்து 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 175 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 44 ஆயிரத்து 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 63 பேரும…
-
- 0 replies
- 464 views
-
-
கலைக்கப்படும் மாகாண சபைகள் – தேர்தல் நடத்தப்படுமா? தென் மாகாண சபை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் கையொப்பமிட்டுள்ளார். தென் மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று 10ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கமைய, தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வடமேல் மற்றும் வட. மாகாண சபையின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அத்தோடு மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையுள்ளதுடன் …
-
- 0 replies
- 388 views
-
-
உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பொன்சேகாவை நியமிக்குமாறு பரிந்துரை உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்படவுள்ளது. இந்த பரிந்துரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய தனிப்பட்ட பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது. சரத் பொன்சேகா உள்ளிட்ட ஆறு புதிய அம…
-
- 0 replies
- 467 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியை சேர்ந்த 2019ம் ஆண்டு உயர்தர பிரிவை சேர்ந்த மாணவ முதல்வர்கள் பாடசாலையின் கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி அதை காணாளிப்படுத்தி “TikTok” டிக்டொக் செயலியில் பதிவேற்றியுள்ள சம்பவம் யாழ் கல்விச் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டு மரங்களிற்கு கீழும் தறப்பாள் கொட்டகைக்குள் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க இவ்வாறான மாணவர்கள் தமக்கு இருக்கின்ற வசதிகளையே தமது சிற்றின்பத்திற்காக அடித்து நொறுக்குவது தமிழர் தேசத்தின எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தான ஒரு விடயமாகும். பல மாவீரர்களை இந்த மண்ணுக்காக உகந்த ஒரு பாடசாலையில் இவ்வாறான சம்பவம் நடந்தேறியிருப்பது கவலைக்குரிய …
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு…. April 8, 2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/117836/
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - உடன்படிக்கை கையெழுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்ப…
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
இரண்டு சமூகத்தினரும் இணைந்த புத்தாண்டாக இந்த ஆண்டுப் புத்தாண்டு அமையும் என்று முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார். தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், தேசிய ஒருமை பாட்டுக்கும் நல்லிணத்துக்குமான அலுவலகம், அரச கரும மொழிகள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- இதுவரை காலமும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை த…
-
- 1 reply
- 948 views
-
-
“தென்பகுதி மீனவர்களை தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்” யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடலட்டை பிடிப்பவர்களைத் தடை செய்வது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்க முடியாது. அவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கனகராஜ் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று குடாநாட்டு மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்நனர். இந்நில…
-
- 1 reply
- 779 views
- 1 follower
-
-
தனது காணியில் தனது அனுமதி இல்லாமல் பௌத்த மடம் அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பெண் ஒருவர் தனது காணியைத் தனக்கு மீளத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் பின்புறமாக உள்ள காணியில், விகாரையைப் பராமரிக்கும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கு இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றார். அந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
April 10, 2019 அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர பயணமொன்றை. மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் வருகை தரவுள்ளனர். பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் எவ்வித விசாரணையுமின்றி பல்கலை நிர்வாகத்தால் இடைநிறுத்தப் பட்டமை, ஊழியர்…
-
- 0 replies
- 633 views
-
-
பொதுமக்களிடமிருந்து 2077 பில்லியனை வரி வருமானமாக பெற அரசாங்கம் முயற்சி - மஹிந்த (இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் இவ்வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து 2077 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இத்தொகையானது கடந்த 2014 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட வரி வருமானத்தை போல் இரண்டு மடங்காகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு அமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட மாதாந்த கொடுப்பனவு 2500 ரூபா வழங்கல், சமுர்த்தி பயண…
-
- 0 replies
- 429 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் ப…
-
- 1 reply
- 828 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வடக்கு ஆளுநரின் வாசஸ்தலத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசியும் சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் பங்களாதேஷின் உயஸ்தானிகரும் இன்று மாலை வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்த்திற்குமான அலுவலகம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்…
-
- 0 replies
- 466 views
-