ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
36 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவர். யுத்தக் காலத்தில் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் 36 பேர் இன்று (27) நாடு திரும்ப உள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 850 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை இவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/36-இலங்கைத்-தமிழர்கள்-நாடு-திரும்புவர்/175-201371
-
- 0 replies
- 191 views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த தமிழீழ அரசு, மக்கள் அவை போன்றவற்றிற்காக சனநாயக ரீதியில் வாக்களிப்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனூடாக புலம் பெயர் தமிழர்களின் தங்களின் கருத்தை உலகிற்கு சனநாயக முறையில் வெளிப்படுத்த முடியும். ஆனால் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏதாவது சந்தர்ப்பம் இருக்கின்றதா? அல்லது அவ்வாறு தமது கருத்தை வெளிப்படுத்த ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? அவர்கள் எவ்வாறு தமது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவது? ஸ்ரீ லங்கா அரச அதிபருக்கான தேர்தலை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த பயன்படுத்த முடியுமா? முடியாதா? இதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்துகள் எம்மிடமிருந்து வருமா? அல்லது வழக்கம் போல் துரோகி…
-
- 1 reply
- 866 views
-
-
பிரித்தானிய மகாராணியிடமிருந்து இளைஞர் தலைமைத்துவ விருதுவென்ற இரு இலங்கையர்கள் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருதுவென்ற இலங்கையர்களான ரகிதமாலேவன மற்றும் செனெல்வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இந்த இரு இளைஞர்களும் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்காலத்திற்காக தனது ஆசிகளை தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளில் உள்ள மக்களிடம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனிப்பட்டதிறன்களை பொதுமக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பயன்படுத்தும் இளைஞர் யுவதிகளை அடையாளம் காண்பதற்காக இந்…
-
- 0 replies
- 185 views
-
-
ஆலய வளவில் தேரரின் சடலத்தை எரித்த ஞானசார தேரர் மீது சட்டம் பாயாது: மனோ! முகநூலில் பதிவிடும் தமிழ் இளைஞர்களின் வீட்டுக்கு பொலிஸ் வருகிறது செயலணியின் பெயரை ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் என பிரேரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி…
-
- 0 replies
- 166 views
-
-
கிழக்கு கடலில் மீன்பிடி தடை நீக்கம் கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக எவ்வேளையிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமுடியுமெனவும் அதுபோல் எவ்வேளையிலும் கரைக்கு திரும்பி வரவும் முடியுமென கடற்தொழில் பிரதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கிழக்கில் மீன்பிடித்தலுக்கான தடையில் சில தளர்வுகளை மட்டும் இவ்வருடத்தின் துவக்கத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்டபோதிலும் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது கிழக்கு கடலில் மீன்பிடித்தலுக்கான தடையை முற்றாக நீக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. – மீனகம் செய்தியாளர் http…
-
- 0 replies
- 481 views
-
-
கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் நான்கு இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில் நடைபெற்றுள்ளன. வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொள்ளை சம்பவத்துக்கு உள்ளான கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு நேரடியாக இன்று காலை சென்ற மனோ கணேசன், அங்கு ஆலய குருக்கள் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து…
-
- 0 replies
- 267 views
-
-
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நியமித்துள்ள இரு அதிகாரிகள் சம்பந்தமான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமரின் அலுவலகத்தில் இன்று கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் முழு செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்…
-
- 0 replies
- 548 views
-
-
அகதிகளை மீள்குடியமர்த்தவிடாது அவர்களை முகாம்களில் தடுத்துவைத்திருந்தவர் அப்போதைய படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐ.தே.கட்சி யின் எம்.பி. ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறி யவை வருமாறு: நாம் இப்போது அகதிகளை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். இந்த அகதிகளை மீள்குடியமர்த்த விடாது அப்போதைய படைத்தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாதான் அகதிகளைத் தடுத்து வைத்திருந்தார். அம்மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்குமாறு பொன்சேகா படையினருக்கு உத்தரவிட்டார். அம்பாறை மாவட்ட அகதிகளை மீள்குட…
-
- 0 replies
- 720 views
-
-
யாழ் வருவாரா மன்மோகன்சிங்? இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது என கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. “யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமருக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. உண்மையில் இந்த அழைப்புக் குறித்து நாம் நாளிதழ்களிலேயே படித்து அறிந்து கொண்டோம்” என்று இந்தியத் தூதரக மத்திய பொது தகவல் அதிகாரியான கௌரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூலமாகவா, அல்லது வெளிவிவகார அமைச்சின் ஊடாகவோ இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். இந்த அழைப்பு இந்தியத் தூதரகம் ஊடாக அனுப்பப்படவில்லை என அவர் குறிப்பிட்…
-
- 0 replies
- 349 views
-
-
பொலிஸ் அத்தியட்சகர் – துன்னாலை மக்களுக்கிடையே சந்திப்பு காங்கேசன்துறை மூத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றொசாந்த் பெனாண்டோ மற்றும் துன்னாலை மக்களுக்கிடையேயான சந்திப்பொன்று இடம்பெறுகிறது. காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இச் சந்திப்பில் நெல்லியடி, பருத்தித்துறைப் பொலிஸார் மற்றும் படையினரும் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/19816.html
-
- 0 replies
- 542 views
-
-
பாதுகாக்கபட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் - யாரும் தடுக்க முடியாது மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மருதங்கேணி, வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(22) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள…
-
- 0 replies
- 114 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் மகாவித்தியாலையத்தில் உயர்தரக் கல்வி கற்று வந்த பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி க. பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக பெபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு தான் கல்வி கற்று வந்த பாடசாலைக்கும், அறிவையூட்டிய ஆசிரியர்களுக்கும் பெருமையையும் சிறப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட மாணவியின் தாயார் இவரின் ஒரு வயதிலேயே இறந்து விட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மூத்த ஆண் சகோதர்கள் மாவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இடை நிறுத்தப் பட்ட இவரின் படிப்பு பின் பல இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர முடிய…
-
- 16 replies
- 1.1k views
-
-
வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அந்நகர மக்கள் இன்று வெற்றி பெற செய்துள்ளனர். கடந்த வாரம் வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து பேரையும் இன்று பொதுமக்கள் சபைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்தனர். 400வாக்கு பெற்ற குலநாயே வி.வி.ரிக்கு தவிசாளரா? தமிழரசுக்கட்சியே தரங்கெட்டவர்களை தூக்கி எறி, பதவி மோகத்தால் நல்லவர்களை பழிவாங்காதே போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கி…
-
- 3 replies
- 715 views
-
-
வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பிரச்சனை – ஜூலையில் மீண்டும் விசாரணை! February 9, 2022 கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 111 views
-
-
ரயில் கடவை சமிக்ஞையால் பதற்றம் வவுனியா ,தண்டிக்குளம் ரயில் கடவையில் உள்ள அபாய மணி ஒலி கடந்த 2 மணித்தியாலயத்திற்கும் மேலாக ஒலித்த நிலையில் காணப்படுவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பலர் பயம் காரணமாக கடவையை கடக்க முயலாமல் காத்து நிற்பதால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் கடவையானது பாதுகாப்பற்றது கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இக்கடவையில் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார். மேலும் குறித்த ரயில் கடவையில் இதற்கு முன்னரும் அபாய ஒலி பலமணிநேரம் ஒலித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் உ…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பும் போர்க் குற்றங்களைச் செய்ததாக ஐ நா பொதுச் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கூறியிருந்தது. போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனில் இருந்து இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சி சில வீடியோ படங்களை வெளியிட்டது. இவற்றின் உண்மைத் தன்மையை குறித்து ஐ நாவின் நிபுணர்களும் பி…
-
- 11 replies
- 977 views
-
-
(தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும், உலகளாவிய ரீதியில் தீவிரவாதம், அர்த்தம் அற்ற ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைகளையும், நாகரிகத்தையும் மறுதலித்தல் மற்றும் ஏனைய இனங்கள், மதங்களின் உரிமைகளை நிராகரித்தல் என்ற உயிரோட்டத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு …
-
- 3 replies
- 778 views
-
-
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலில் களமிறங்காமல் சுயேட்சையாக போட்டி? அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பெயரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான குழவினர் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதன் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதனால் தலமைப் பதவியைக் காரணம் காட்டி நீதிமன்றம் செல்வது அல்லது தேர்தல் ஆணையகத்தில் முறையிடுவதானால் சிக்கல்கள் உருவாகும் என்பதனால் சுயெட்சையாக தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியினரையும் மற்றும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது பட்ட…
-
- 0 replies
- 822 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்னதாக ராஜதந்திரவட்டாரங்கள் பலவும் வட- கிழக்கிற்கு தொடர்ந்தும் படையெடுத்து வந்தவண்ணமேயுள்ளன. அவ்வகையில் யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த கனேடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கனேடிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஜே.எஸ்.நிகார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இரு நாள் பயணமாக நேற்றுக் காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினை சந்தித்த அவர்கள் நண்பகலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்துள்ளனர். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலேயே இவர்கள் அதிகளவு க…
-
- 0 replies
- 639 views
-
-
கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாபுலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாபுலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது.தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும் வயல்வெளியிடையே வீடும் அருகே நந்திக்கடல்வெளியும் வற்றாப்பளை கண்ணகி அருகிருந்து அருள்புரிய 2009க்கு முன் எழில்கொஞ்சும் வளம்பொருந்திய கிராமம் இன்று இராணு…
-
- 1 reply
- 463 views
-
-
மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம் இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதென எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போத…
-
- 0 replies
- 254 views
-
-
நிதியமைச்சரை... நீக்குவது குறித்து, நேற்று ஆளும்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டதா? நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஆளும் தரப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது. நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என்றும் மாறாக அவரது நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன என்றும் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்…
-
- 1 reply
- 175 views
-
-
ஊடகவியலாளர்கள் அடிக்கடி கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்லும் சம்பவங்கள் இடம் பெறும் நாடுகள் பற்றி ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு எடுத்த மதிப்பீட்டில் ஈராக், சோமாலியா, சியறாலியோன் ஆகியவற்றை அடுத்து இலங்கை நான்காம் இடத்தை வகிக்கிறது. ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடுகளை பொறுத்த மட்டில் இலங்கை 13ஆம் இடத்தில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய தவறிய நாடுகள் குறித்து எடுக்கப்பட்ட மதிப்பீடு தொடர்பான குழுவின் 2009ஆம் ஆண்டு அறிக்கையில் இலங்கை எந்தவொரு சம்பவம் பற்றியும் விசாரணை செய்து பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nerudal.com
-
- 0 replies
- 472 views
-
-
பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்! பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும். எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க ம…
-
- 0 replies
- 133 views
-
-
இறுதி யுத்தத்துக்குப்பின்னரான மீளக்குடியமர்த்தல் செயல்பாடுகளின் போது, கேப்பாப்புலவு மக்களின் 400 ஏக்கர்; காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்து விட்டு, அக்காணிகளுக்கு உரித்துடையவர்களுக்கு மாற்று நிலங்களை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். “மாற்று நிலங்கள் தமக்கு வேண்டாம், தமக்கு தமது பூர்வீக நிலங்கள் தான் வேண்டும்.” என்று இன்று வரை தமது நிலத்துக்காக அப்பகுதி மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் குறித்த 400 ஏக்கர் காணிகளும் உரித்துடைய மக்களுக்கு மீள கையளிக்கப்படுவதாக கடந்த 25.01.2014 அன்று கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் 59வது டிவிசனுக்கு பொறுப்பான பிரிகேடியர் தர அதிகாரி கூறியிருந்தார். இந்த அறிவிப்பையடுத்து, கேப்பாப்புலவு பிரத…
-
- 0 replies
- 420 views
-