ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பிரித்தானிய வெளிவகார அமைச்சர் மேற்கொண்டார். அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக்கும் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வினவப்பட்ட கேள்வி பதிலளிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81329-2013-09-04-10-11-23.html
-
- 0 replies
- 306 views
-
-
திருகோணமலை கடற்கரையில் இனப்படுகொலை வார நினைவேந்தல் நிகழ்வு! திருகோணமலையில் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகில் இன்று மதியம் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=182532&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 293 views
-
-
வடக்கு மாகாண சபைக்கான தலைமை செயலகம் மாங்குளத்தில் 900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளது என சிறிலங்கா அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 429 views
-
-
சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என …
-
- 3 replies
- 470 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் தலையீட்டுடன் தான் ஆரம்பிக்கப்பட்டதா??
-
- 4 replies
- 364 views
-
-
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் அரசு தடுத்து வைத்துள்ள சுமார் 10 ஆயிரம் பேரை விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சிறிலங்கா அரச தலைவர் செயலகம் தெரிவித்தது. "சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு இந்த யோசனை உதவும். இதன் அர்த்தம் ஆயிரக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிக்க முடியும் என்பதாகும்" என அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைகளுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுமதி வழங்கி உள்ளார் என அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகளை வ…
-
- 0 replies
- 529 views
-
-
நண்பர்களே ஒரு சிங்கள இனதுவசவாதி Face book இல் இருந்து பல தவறான கருத்துக்களை பரப்பிவருகிறான்...தயவு செய்து அவனை நண்பணாக்கிக்கொண்டு அவனுடய Post இற்கு தகுந்த பதில் அளியுங்கள்... தயவு செய்து இதை செய்யுங்கள்... முடியாவிடின் அவனை Report ஆவது பண்ணுங்கள் Profile : http://www.facebook.com/profile.php?id=1644414889&ref=nf அவனுடய சில பதிவுகள் : http://www.facebook.com/group.php?gid=1492...6659&ref=mf
-
- 0 replies
- 791 views
-
-
கிழக்கில் நடந்த மோதல்களை அடுத்து இடம்பெயர்ந்து திருகோணமலை இடைத்தங்கல் முகாமில் தங்கி இருந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!! கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்! கேப்பாபிலவு இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை காணிக்குள் வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது. தமது காணிகளை பாரத்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடியுள்ளனர் என்றும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங…
-
- 4 replies
- 786 views
-
-
காணாமற் போனவர்கள் தொடர்பாக... எதனையும் மறைப்பதற்கில்லை – அரசாங்கம் காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம் என்றும் இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்த…
-
- 0 replies
- 326 views
-
-
யாழ் மாவட்டத்திலிருந்து 630 பேர் சிறிலங்கா பொலிஸில் இணைவு! WRITTEN BY SARA THURSDAY, 01 OCTOBER 2009 13:38 யாழ். மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கென 631 பேர் நேற்று தெவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 630 பேர் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். முதற்கட்டத் தேர்வின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 880 பேரில் இருந்தே இவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வினூடாகத் தெரிவாகியுள்ளனர். இவர்களுள் 593 ஆண்களும், 37 பெண்களும் பயிற்சியின் பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதுடன், மேலும் ஒருவர் பொலிஸ் சாரதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன தெரிவித்தார். பொலிஸ் சேவையில் இணைவதற்காக…
-
- 0 replies
- 831 views
-
-
போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் இலங்கைவர முயன்ற நான்கு இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த பாக்கிய நாதன் (33), சசிதரன் (26), மரியம் சர்மிளா, மற்றும் ஜீவன்தாரா (19) ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தங்கியிருந்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை விட அதிக நாட்கள் சென்னையில் தங்கியிருந்ததும், அதற்காக போலி சான்றிதழ் தயாரித்து இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் நால்வர…
-
- 0 replies
- 234 views
-
-
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகல் உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி தனமல்வில பிரதேசத்தின் ஊவ குடாஓய அலிமங்கட பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அவர்களது ஆயுதங்களை களவாடியமை ஆகியனவே இந்த முன்னாள் புலிப் போராளிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாக…
-
- 0 replies
- 378 views
-
-
இன்றைய சன் பத்திரிகை இப்படி கூறுகிறது! http://www.thesun.co.uk/sol/homepage/news/...l#ixzz0TQlFLnFF இது பற்றிய உண்மைகளை யாராவது தருவார்களா? வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஸ்கொட்லன்ட் யாட் விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நு…
-
- 98 replies
- 12.6k views
-
-
ஆயுதப் பலத்தால் தோற்கடிக்கப்பட்ட அமைப்பொன்றுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியமையானது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் ஒரு மிகப் பெரிய தவறை செய்துள்ளது. உலகில் எங்கும் நடைபெறாத வகையில் தூரநோக்கற்ற முட்டாள்தனமான தீர்மானத்தை இந்த அரசாங்கம் எடுத்துள்ளளது. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கம் கட்டாயம் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும். உலகில் எங்கும் ஆயுதத்தினால் தோற்கடிக்கப்பட்ட எந்த அமைப்புக்கும் அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. பிரிவினைவ…
-
- 1 reply
- 416 views
-
-
பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் இப்போது சுகமாக இருக்கிறார். அவர் நாளை 22 ஆம் திகதி உயர்நீதிமன்றில் ஆஜராகவுள்ளார். மேலும் உயர்நீதிமன்றில் தான் ஆஜராவதற்கு தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்று சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் பாதுகாப்பு வழங்கப்பட்டாலே நீதிமன்றில் ஆஜராக முடியுமென்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று மதியம் ராஜகிரியிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் …
-
- 0 replies
- 371 views
-
-
வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு 14 கோடி – நீடித்த நன்மைகளை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு, கடல் பாசி செய்கை மற்றும் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புகின்ற தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து பயனாளர்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செ…
-
- 0 replies
- 183 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றிய எண்ணம் சிங்களவர்களிடம் மாற்றம் “அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிங்களவர்க ளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்பகுதி முதலமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களுமே மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர்” இவ்வாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரம ரட்ண தெரிவித்தார். புதிய அரசமைப்பு உரு வாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகரில் நே…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிக் கட்ட மோதல்களின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இரு தரப்பினராலும் யுத்தக் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான துரித விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டதனைப் போன்று இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையை கண்டறியும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என நவனீதம் பிள்ளையின் பேச்சாளர் ரூ…
-
- 0 replies
- 409 views
-
-
புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா [ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் நாள் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக, 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் ஏனையவ…
-
- 16 replies
- 1.6k views
-
-
நீங்கள் மதிக்காததை அவர்கள் மதிப்பார்களா? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைமை கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களின் கடும் எதிர்ப்பினால் பிசுபிசுத்துப் போயிற்று. பரவாயில்லை முதலமைச்சர் விக்னேஸ் வரன் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அறிய முடியாதவர்கள் செய்த வேலை என்று விட்டுவிடலாம் என்றால் அதற்கும் உடன்பாடு இல்லாது உள்ளது. தமக்கு ஏற்பட்ட தோல்வியை சகிக்க முடியாதவர்கள் தேவையில்லாமல் கதைத்து தங்களின் செல்வாக்கை இழந்து வருகின்றனர். இவ்வாறு கதைப்பவர்களால் தமிழரசுக் கட்சிக்கு மக்களின் ஆதரவு மிக வேக…
-
- 0 replies
- 451 views
-
-
நாம் உணர்ந்துகொள்ளத் தவறும் படகுத் தமிழர்களின் துயரம்: பாரிஸ் ஈழநாடு சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது. மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது. சிறு கடல் தொ…
-
- 1 reply
- 510 views
-
-
இலங்கையைச்சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் 18 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்தாரென கூறப்படும் பல்கேரிய பிரஜையொருவரை அமெரிக்கா நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் ட்ரக் வண்டியில் மறைத்து எடுத்துச் சென்ற 18 இலங்கை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மூச்சுத்திணறி இறப்பதற்கு காரணமாக இருந்தாரென அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தலைமறைவாக வாழ்ந்து வந்த குறித்த சந்தேகநபரான பல்கேரிய பிரஜை அமெரிக்கா விலுள்ள சீட்டில் எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரை அவரது தாய் நாட்டுக்கு நாடுகடத்தக்கூடுமென அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை கூறினர். பல்கேரியாவில் 2002 இல் இவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் இவர் தலைமறைவாகிவிட்டார். இவர் கைது செய்ய…
-
- 1 reply
- 523 views
-
-
வடக்கில் சிவிலியன் ஒருவரே ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் - ஐ.தே.க 28 அக்டோபர் 2013 வடக்கில் சிவிலியன் ஒருவரே ஆளுனராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இராணவத் தொடர்பு அற்றவர் ஒருவர் வடக்கில் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டியது அவசியமானது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சிவிலியன் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்ற தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் ஆளுனராக நியமிக்கப்படுவதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள…
-
- 0 replies
- 304 views
-
-
நெல்லியடியில் நிலவிய பதற்ற நிலையால் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வெளியேற்றப்பட்டனர் யாழ். பருத்தித்துறை மணற்காடு பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது இந்த பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தினேஷின் இறுதிக் கிரியைகள் நேற்று (11) நடைபெற்றது. நீ…
-
- 0 replies
- 175 views
-