ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
01 DEC, 2024 | 02:31 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சீனாவும் இலங்கையும் நெருக்கமான உயர்மட்ட பரிமாற்றங்களைப் பராமரித்து, பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்புகளை முன்னெடுத்து வருகிறது. ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சியின் ஊடாக இலங்கை பல்வேறு வகையிலும் பயனடைகிறது என தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங், இத்தகைய இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளின் ஊடாக சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் இலங்கையுடன் சிறந்த ஒருங்கிணைப்பை சீனா எப்போதும் பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஷீ ஜிங்பிங்கின் விசேட வாழ்த்துச் செய்தியை இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் உறுதி December 1, 2024 யாழ்ப்பாணம், குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வி…
-
- 1 reply
- 289 views
-
-
01 DEC, 2024 | 10:05 AM ஆர்.ராம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது. விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அமைச்சர் சந்திரசேகரும், அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். அத்துடன், ஆட்சிப்பொறுப்பின…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்திடம் நிதி உதவி கோரிக்கை! adminDecember 1, 2024 யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜாவுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராலய குடிபெயர்வுக்கான முதனிலை செயலாளர் டொரிஸ் மொனொர் தலைமையிலான பிரமுகர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (30.11.24) சந்தித்து கலந்துரையாடினர். அக் கலந்துரையாடலில் தூதுவராலய பிரமுகர்கள் இலங்கையில் அனைத்து சமூகங்களினையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றமொன்றினைக் கொண்டுவந்தமையையிட்டு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதுடன் ஜனாதிப…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
யாழில். வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை! adminDecember 1, 2024 வீதிகள் கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமையும் குளங்களை தூர்வாருவது குறித்து கவனம் செலுத்தாமையுமே யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதற்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வெள்ள நிலைமைகள் குறித்து பார்வையிட்டு ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வெள்ள அனர்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டோம். அவர்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. பலபகுதிகளில் வெள்ளம் வழிந்தோட…
-
- 0 replies
- 106 views
-
-
01 DEC, 2024 | 09:56 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை கனமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன. அங்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு…
-
- 0 replies
- 64 views
- 1 follower
-
-
01 DEC, 2024 | 09:54 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தி ஆதரிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் இனவாத அடிப்படையில் அந்த நிகழ்வினை வெளிப்படுத்த விளைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் கடந்த 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அட…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதற்கமைய, 'அத தெரண' செய்திப் பிரிவு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் இது தொடர்பில் வினவியது. "எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டது. அதேநேரம் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். (ப) #Eelam #srilanka #jaffna #uthayannews #todaynews #breking …
-
- 2 replies
- 725 views
- 1 follower
-
-
30 NOV, 2024 | 01:43 PM தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என வெரிட்டே ரிசேர்ச்சின் publicfinance.lk ஆய்வினூடாக தகவல் வெளியாகியுள்ளது. வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 1.16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றன…
-
-
- 3 replies
- 478 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 08:20 PM நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்ன…
-
-
- 8 replies
- 855 views
- 1 follower
-
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி விட்டார் என மூன்று மாவீரர்களின் தாயொருவர் கண்ணீருடன் கவலைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை 6.55 மணியளவில் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவினார் எனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், புதன்கிழமை (27) அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன் மாவீ…
-
-
- 36 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி. இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ” கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பெளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக…
-
- 2 replies
- 485 views
- 1 follower
-
-
30 NOV, 2024 | 08:29 PM இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அதேநேரம் மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை …
-
- 2 replies
- 376 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார். மலேசியாவின் செல்வந்தர்கள் தரவரிசையில் ஆனந்த கிருஷ்ணன் மூன்றாம் நிலையை வகிப்பதாக போர்பஸ் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. மலேசிய தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் கூட்டாண்மையை நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது என பாராட்டப்பட்டுள்ளது. ஆனந்த கிருஷ்ணன் மலேசியா பொருளாதார நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிய காலத்தில் கிருஷ்ணன் பொருளாதாரத்திற்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என கூறப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, ஊடகம், சக்தி வளம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிருஷ்ணன் தடம் பதித்து வெற்றியீட்டி…
-
- 3 replies
- 666 views
- 1 follower
-
-
சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச…
-
-
- 9 replies
- 935 views
- 1 follower
-
-
“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் – சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என…
-
- 2 replies
- 231 views
- 1 follower
-
-
பி எம் எம் பெரோஸ் நளீமி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர், மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது வீட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது முகப்புத்தக பொது வெளியில் மல்யுத்த வீரர்களாக பிரகாசிக்கிறார்கள்.. கடந்த பல தசாப்தங்களாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் வடமாகாண முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் இன்னும் வட கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சினைகள், வியாபாரங்களை சுதந்திரமாக செய்ய முடியாமல் வியாபார தலங்கள் பள்ளி…
-
- 0 replies
- 205 views
-
-
சீனத் தூதுவர் இனவாதக் கருத்தை விதைக்கக் கூடாது; கஜேந்திரகுமார் கடும் கண்டனம் சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன எனக் கருத்துக் கூறியிருந்தார். இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிப்பாதோடு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான …
-
- 1 reply
- 281 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2024 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழ அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள். தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்த…
-
-
- 5 replies
- 690 views
-
-
30 NOV, 2024 | 10:17 AM ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 03:14 PM (நா.தனுஜா) கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமையக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பல்துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையைப் புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியம் என உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் (குளோபல் நெட்வேர்க் இனிசியேட்டிவ்) வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அற…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 05:32 PM (எம்.மனோசித்ரா) அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் …
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
அமைச்சுகளுக்கு சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்! தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு கார்களை பராமரிக்க அரசு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அத்துடன்…
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு இன்று வியாழக்கிழமை (21) புறப்பட்டார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் காலை 08.19 மணியளவில் இந்திய விமான சேவையின் ஏ. ஐ - 282 விமானத்தின் மூலம் இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/199300
-
-
- 10 replies
- 518 views
- 1 follower
-