Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி அவசியம் - முதல்வர் விக்னேஸ்வரன் [saturday, 2013-11-02 07:58:31] வடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுச்சிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் சர்வதேச நாடுகளின் குறிப்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவி அத்தியாவசியமானது என ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான விசேட தூதுவர் டேவிற் டெலியிடம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் மிக நீண்டகாலம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சிகள் மந்தகதியிலேயே இருந்து வருகின்றது. எனவே இந்த விடயத்தில் ஜரோப்…

    • 0 replies
    • 465 views
  2. பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை! நாடளாவிய ரீதியில் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். https://athavann…

  3. மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் , திருமங்கலம் ,மேலூர் ,சமயனலூர் , மதுரை நகருக்குள்ளும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக சுவர் ஒட்டிகள் பலமாக ஒட்டப்பட்டு இருந்தது. தமிழக காவல் துறை, அச்சகங்களுக்கு சுவர் ஒட்டிகளை அச்சடித்து தரக்கூடாது என மிரட்டல் விட்டு இருந்தது. அதையும் மீறி சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் சுவர் ஒட்டிகளை பரவலாக எங்கும் ஒட்டினர். இதன் காரணமாக அவ்வியக்கத்தின் பெரும்பாலான தோழர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. எதிர்க்­கட்­சித் ­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர் அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை தந்­துள்ள நிலையில் இன்று எதிர்க்­கட்­சித் ­த­லை­ரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­திக்­க­வுள்ளார். இச்­சந்­திப்பு இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னிகர் ப்ரைஸ் ஹட்­சனின் உத்­தி­யோகபூர்வ இல்­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜுலியா பிஷப் பொரு­ளா­தாரம் மற்றும் பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வதை நோக்­காக கொண்டே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத…

  5. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்கும் சிறீதரன் எம்.பி.யின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி, டிப்போ சந்தியில் சுற்றுவட்ட சந்தியை அமைத்து சைகை விளக்குகளை பொருந்துமாறு தா…

  6. Sri Lanka: people 'putting themselves at risk' - video President Mahinda Rajapaksa tells Channel 4 News he is "not concerned" by allegations of war crimes - but Jonathan Miller says people in Sri Lanka could be at risk after speaking to the programme http://www.channel4.com/news/sri-lanka-human-rights-president-rajapaksa-video

  7. ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமச்சந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக…

  8. எமது அர­சாங்­கத்தில் அம்­பாந்­தோட்டை உடன்­ப­டிக்கை இரத்துச் செய்­யப்­படும் கூட்டு எதி­ரணி அறி­விப்பு (ரொபட் அன்­டனி) எமது அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தற்­போது சீனா­வுடன் செய்­து­கொள்­ளப்­பட்­டுள்ள அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை இரத்துச் செய்­யப்­படும். இதனை மிகவும் வலு­வாக கூறிக்­கொள்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான சீனா­வு­ட­னான உடன்­ப­டிக்கை சட்­ட­வி­ரோ­த­மான முறை­யி­லேயே செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே அதனை அனு­ம­திக்க முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அம்­பாந்­த…

  9. ரவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு? வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தனது பதவையை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள ஊடகமொன்று, இன்று (05) வௌியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா …

  10. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து பல இடங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்! எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது. இதற்கமைவாக, மகரகம, கிரிபத்கொடை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு, பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல், சிலாபம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.…

  11. குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத் துறைக்கு பயன்படுத்தும் முறை இலங்கையில் இது வரை இடம்பெறவில்லை. கழிவு முகாமைத்துவத்திற்காக அபிவிருத்தி அடைந்த நாடுகளி…

  12. நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலை கூடிய பின்னர் கோத்தபாய, பசில் ஆகியோரிடம் இருந்து கூட்டமைப்பினை சந்திப்பதற்கு அழைப்புக்கள் வந்தது. இதே வேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதால் ஆளும் கட்சியுடன் பேசுவதனை சம்பந்தர் வெட்டிவிட்டார் என கூறப்படுகின்றது. எனினும் கோத்தபாய கூட்டமைப்பினரை பயமுறுத்தும் முகமாகவே அழைத்ததாக கூறப்படுகின்றது. இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாகச் சென்று சந்தித்து உரையாடிய பின்னர் சரத் பொன்சேகா சந்திக்க விரும்புவதாகவும் சரத்பொன்சேகா எழுத்து மூலமான உத்தரவாதத்தினை தர தயாராக இருப்பதாகவும் ஆகவே அவரை முடிவு எடுப்பதற்கு முன்பாக சந்திக்கவேண்டும் எனவும் ரணில் கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சரத்பொன…

    • 0 replies
    • 596 views
  13. துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார் - கே. கண்ணன் யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு காரணமான குழுவின் தலைவர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்க…

  14. போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம் உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாடுகளிற்கும் இடை…

    • 0 replies
    • 557 views
  15. வடக்கு முதல்வருக்கே முடியவில்லை: அமைச்சர் ரமேஸ்வரன் சாடல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுக்க வடக்கு முதலமைச்சரால் கூட முடியாமல் போய்விட்டது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மாகாணத்தில் எந்த வித போராட்டங்களுமின்றி 742 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா - கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இடம்பெற்ற இந்து விழி கணித பாட பயிற்சிக் கையேடு வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் எம்.ரமேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். 2000த்திற்கும் அதிகமான பட்டதாரிகள…

  16. சிங்கள களியாட்டக்காரர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழீழ கடற்கரைகள்: பிரித்தானிய ஊடகவியலாளர் போரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் வரைக்கும் சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரைகளை கடற்தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் விட்டு வைப்பதே சிறந்தது. பிரித்தானிய ஊடகவியலாளர் Gill Charlton என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது கட்டுரையின் முழுவிபரமாவது: 30 வருடங்கள் நீண்ட உள்நாட்டுப் போரின் பின்னர் சிறிலங்காவின் கிழக்குப் பகுதி கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் கரையோரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் …

    • 0 replies
    • 817 views
  17. இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அரசின் உண்மை நிலை தெரியும் : ஜே.வி.பி. கூறுகிறது சர்­வா­தி­கார இரா­ணுவ ஆட்­சி­யினை உரு­வாக்கும் நோக்­கத்­தி­லேயே ஜனா­தி­பதி மாகாண சபை­க­ளையும் பிர­தேச சபை­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்றார். இரா­ணுவ சப்­பாத்­து­களின் கீழ் நாட்டை அடக்க நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என்று ஜே.வி.பி. யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். வரவு செல­வுத்­திட்டம் தொடர்பில் இர­க­சிய வாக்­கெ­டுப்­பினை நடத்­தினால் அர­சாங்­கத்தின் உண்மை நிலைமை தெரியும். அமைச்­சர்­களே வரவு- செல­வுத்­திட்­டத்­திற்கு எதி­ராக வாக்­க­ளிப்பர் எனவும் ஜே.வி.பி.யினால் நேற்று பத்­த­ர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­தி…

  18. நாடாளுமன்ற உறுப்பினர்களில் கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை இருப்பதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை கொண்டுள்ளனர் என்ற விடயம் கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. இதன் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெப்ரல் அமைப்பு, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் தகவல்களை கோரி விண்ணப்பம் செய்திருந்தது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்ப…

  19. (நா.தனுஜா) இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று அந்தந்த நாடுகளைத் தளமாகக்கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீ…

  20. பொறுப்புக்கூறல் தாமதமானால் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கி எழுவார்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் காணப்படாவிடின் மக்கள் பொறுமை இழக்கும் அபாயநிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவிற்கான தென் ஆபிரிக்கத் தூதுவர் ரொபினா பி.மாா்க்ஸ் எச்சரித்துள்ளார். கடும்போக்காளர்கள் சமூகத்தில் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா கடந்துவந்த பாதைக்கு மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார். கொழும்பில் வைத்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கேள்வி – 2015ல் ஜெனிவாவில் அறிக்கையொன்றை விடுத்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிவதற்காக தெ…

  21. மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் கே.பி திகதி: 16.02.2010 // தமிழீழம் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈட்டுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர…

  22. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எழுதுமட்டுவாள் வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ம் திகதி பளை வரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது கிளிநொச்சி வரையே ரயில் சேவை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறை வரையான ரயில் பாதை அமைப்புப் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101092&category=TamilNews&language=tamil

  23. நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டிலிருந்து 60 தொண்டர்கள் இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர்களாக தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தங்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கவில்லை எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் உப்பு கராஜ் வீதிவழியாக நடைபவனியாக வந்து காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா…

  24. நாட்டில் 7 லட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியும் பெறவில்லை -மருத்துவர் ஹேமந்த ஹேரத் -சி.எல்.சிசில்- நாட்டில் சுமார் 07 இலட்சம் பேர் இதுவரை எந்த வொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இதுவரை 169 இலட்சம் பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

    • 0 replies
    • 179 views
  25. மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். 31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.