ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
வவுனியா புதுக்குளம் பகுதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார். குறித்த பாடசாலை மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் காதலிப்பதாக கூறி கடந்த ஆண்டிலிருந்து மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். மாணவியும் இளைஞனின் வார்த்தைக்கு இடம் கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/3900
-
- 0 replies
- 464 views
-
-
12 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வடமராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ் குடாநாடு போதைப்பொருள் வியாபாரத்தின் கேந்திர நிலையமாக மாற்றமடைகிறதா? என்ற கேள்வி இப்போது எழுகிறது. பொதுவில் யாழ்.குடாநாடு ஆட்களை இனங் காண்பதில் சிரமம் கொள்ளாத ஓரிடம். ஊர்களுக்குள் புதியவர்கள் வந்தால் எந்த ஊர் என்று கேட்பது; அவர் தனது ஊரை சொல்ல, அந்த ஊரில் இவருக்குத் தெரிந்தவர்கள் பற்றி விசாரிப்பது, அதிலிருந்து வந்த புதியவர் யார்? என்று உறுதி செய்வது என்பன தான் எங்கள் வடபுலத்தின் சிறப்பு.சில வேளைகளில் யாருடைய மகன் என்று கேட்பது கூட எங்கள் வாழ்வியலின் நெருக்கத்தை காட்டும் குறியீடாக இருந்தது. ஆனால் போருக்கு பின்பு புதிய முகம்களின் …
-
- 0 replies
- 306 views
-
-
மின்மாற்றிகளில் வெடிப்பு : ஆராய வருகின்றது ஜேர்மனிய விசேட குழு பியகம மற்றும் கொட்டுகொட ஆகிய பகுதிகளில் இரு மின்மாற்றிகளில் வெடிப்பு ஏற்பட்டமை தொடர்பில் ஆராய ஜேர்மனிய விசேட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மின்சக்தி பிரதிஅமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். வெடிப்பிற்குள்ளான இரு மின்மாற்றிகள் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்மாற்றிகள் வெடித்தமைக்கான காரணம் அந்நாட்டு குழுவினரால் இலகுவாக கண்டறிய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://onlineuthayan.com/news/11218
-
- 0 replies
- 245 views
-
-
டென்மார்க் சண்ணின் திரைக்கதை, கதை, இயக்கம், இசை, தயாரிப்பிலும் ஜெயசாந்த், முகுந்தன், பிரகாசினி மற்றும் பலரின் நடிப்பிலும் செல்வனின் ஒளிப்பதிவிலும் நிலானின் படத்தொகுப்பிலும் சித்திரை-30 டென்மார்க்(கொல்ரபுறோ) திரையரங்குளில் பிரமாண்டமாக வெளியிடவுள்ளது. யார் இந்த டென்மார் சண் யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய் என்னும் ஊரில் மருத்துவர் சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலை, கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டப் படிப்புக்கு தேர்வு பெற்றார். சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். திரைப்படத் துறையில் பணியாற்றுவதற்காக 1960 ஆம் ஆண்டின் ப…
-
- 0 replies
- 339 views
-
-
கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 6.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் இருவரை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த படகை மறித்து சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில், 6.5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன்போது, படகிலிருந்த இந்திய மீனவர்;கள் இருவரையும் கைது செய்த கடற்படையினர், பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். …
-
- 0 replies
- 250 views
-
-
ஐந்து ஆண்டுகளுக்கு தற்போதைய அரசை மாற்ற எவராலும் முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம் "நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதனை வழிநடாத்தும் தலைவர்கள் வெள்ளை வான்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததைப் போன்று செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல. எவ்வாறான கோஷங்களை முன்வைத்தாலும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை இந்த அரசை மாற்றுவதற்கு எவராலும் முடியாது. தோல்வியடைந்த அரசியல் சக்திகள் மேலும் தோல்விகளைத் தழுவி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்நாட்டுக்குத் தேவையான சமூக, பொருளாதார மா…
-
- 0 replies
- 433 views
-
-
வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நவசம சமாஜக் கட்சியின் பொருளாளர் வல்லிபுரம் திருநாவுக்கரசு தெரிவித்தார். நவசம சமாஜக் கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பிரதேசங்களில் இன்னமும் தமது கைங்கரியங்களை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியிலேயே உள்ளனர். அதனை அங்கீகரிக்க முடியாது. மேலும் அண்மையில்கூட இராணுவத்தினரால் கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்று அமைக்க…
-
- 9 replies
- 1.1k views
-
-
யாழ்.பல்கலையில் புத்தர் நாகமாக மாறினார்! புத்தர் சிலை இருந்த இடத்தில், திடீரென அந்த சிலையை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்த சம்பவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கலையரங்குக்கு நுழைவாயில் அருகில் மத்திய கலாசார நிதியத்தால் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுக்கு வழங்கப்பட்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழா ஆரம்பமாக முன்னர், அந்த இடத்…
-
- 1 reply
- 571 views
-
-
இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க உங்களுக்கென இலக்கொன்றிருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றிக்கொள்ளலாமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார். எல்லா விளையாட்டு வீரர்களின் வெற்றியும் திறமையில் மாத்திரமின்றி அவர்களது ஒழுக்கத்திலும் தங்கியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 96 கொண்டாடுவோம் - சேவ் த ஸ்போர்ட் கிரிக்கெட் பயிற்ச்சி முகாமின் தலைமை பயிற்சியாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். இப்பயிற்சி முகாம் தெஹிவல கௌடானாந்த சாஸ்திரானந்த (நவோதயா) மகாவித்தியாலயத்தில் நடைப்பெ…
-
- 4 replies
- 465 views
-
-
13வது திருத்தசட்டத்தினை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்காமையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாமைக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். பாலமுனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அனைத்து சமூகங்களும் அதிகாரப்பகிர்வில் நன்மையைடைய வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக அதிகார பகிர்வினை வலியுறுத்தி வருகின்றது. அதிகார பகிர்வினை மேற்கொள்ளவதில் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. எனினும் இலகுவாக தீர்க்க கூ…
-
- 2 replies
- 866 views
-
-
தமிழக தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் பகிரப்படுவதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். தமிழக அரசியலில் தமிழர், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பதங்களை பெருவாரியாக பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழர்களே தமிழகத்தை ஆழவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதனை மையப்படுத்தியே, தமிழகத்தில் தமது தேர்தல் பணிகளுக்காக புலம்பெயர் தமிழரிடம் இவ்வாறு நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக எமக்குத் தகவலளித்த புலம்பெயர் இலங்கைத் தமிழர் தெரிவித்தார். …
-
- 25 replies
- 2k views
-
-
மத்தல விமான நிலையம் அருகே சிறிலங்கா படையினரின் சிறப்பு நடவடிக்கை MAR 19, 2016 மத்தல அனைத்துலக விமான நிலையப் பகுதிகளில் நடமாடும் மான்களையும், காட்டெருமைகளையும் விரட்டியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் மத்தல அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ஒரே ஒரு விமான சேவை மட்டுமே நடத்தப்படுகிறது. வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் காட்டுப் பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்துக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தடுக்க, மின்சார வேலி அமைக்கப்பட…
-
- 0 replies
- 407 views
-
-
சர்வதேச நீதிபதிகள் எமக்கு வேண்டாம் ஜனாதிபதி சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பூரண நம்பிக்கை வைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியமான நிலை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தேசிய சட்டப் பேரவையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பேரவையில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தை பலப்படுத்தி பொறுப்புக் கூறல் செயற்பாட்டை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். வெவ்வேறு…
-
- 2 replies
- 341 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது தேசிய மாநாடு கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், பாலமுனையில் இன்று காலை ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் சரத் பொன்சேகா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டை கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி பகிஷ்கரித்துள்ளார். …
-
- 0 replies
- 756 views
-
-
இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்படும் உள்ளக விசாரணையின் மூலம், இராணுவத்தினர் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களால் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து மஹிந்த சமரசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். அவர் தனது பதிலில் மேலும் தெரிவித்தவை வருமாறு: இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்த குற்றங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகார சர்ச்சை, இறுதி யுத்த நேரத்தில் இராணுவத்தினர் வசம் சரணடைந்த பொதுமக்களின் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்து வரும் வாக்குமூலங்கள் தொடர்பிலும் அரசாங்கம் தீவிரமாக ஆராய்கிறது. இந்த வி…
-
- 0 replies
- 217 views
-
-
புங்குடுதீவு பகுதியில் கைவிடப்பட்டுள்ள, பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டார். புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சி.வித்தியா வழக்கு விசாரணையின் போது மேற்கண்டவாறு கூறினார். இவ்வழக்கில் இன்றைய தினம் ஆஜராகிய குற்றப் புலனாய்வு பிரிவினர் புங்குடுதீவு பகுதியில் அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெற சாத்தியம் அதிகம் இருப்பதற்கு காரணம் பாழடைந்த ,கைவிடப்பட்ட வீடுகள், கட்டடங்களே காரணம் என நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதன்போது ஏற்றுக்கொண்ட நீதவான் “இன்றிலிருந்து குறித்த கட்டடங்களை இனங்கண்டு அழிக்குமாறு” சம்பந்தப்பட்டவர்களிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் “வெளிநாட்டில் இருந்து…
-
- 6 replies
- 803 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் 12 இந்தியர்கள் கைது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து, ஆயுர்வேத மருந்துப் பொருட்களை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பெண்கள் உட்பட 12 இந்திய பிரஜைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். I சுற்றுலா விசாவில் வந்தவர்கள் குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியிலுள்ள தனியார் தங்குமிட விடுதியொன்றில் தங்கியிருந்து மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இந்தியத் தயாரிப்பான ஆயுர்வேத மருந்துப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந…
-
- 0 replies
- 455 views
-
-
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களது மரணம்; விசாரணைக்குத் தயாராகிறது ஸ்ரீலங்கா [ Saturday,19 March 2016, 03:09:48 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்களின் மரணம் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வோம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களில் இருந்து நாட்டையும் இராணுவத்தையும் காப்பாற்றும் ஒரே நோக்கத்திலேயே தேசிய அரசாங்கம் உள்ளதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்க…
-
- 2 replies
- 632 views
-
-
யாழில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா! முன்பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கான நான்காவது டிப்ளோமா பட்டமளிப்பு விழா இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுதல்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இணைப்பாளர் சுந்தரம் திவகலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், கல்வி அமைச்சர் குருகுலராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன்போது, 515 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் விசேட சித்திபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 372 views
-
-
உஷ்ணம் தொடரும் இலங்கைக்கு நேர் மேலே சூரியன் உள்ளதால் வெப்பமான காலநிலை ஏப்ரல் வரைத் தொடரும் எனவும் நாட்டில் வெப்பநிலை பகலில் 3 பாகை செல்ஸியஸ் ஆகவும் இரவில் 2 பாகை செல்ஸியஸ் ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வெப்பநிலை 26.5 பாகை செல்ஸியஸ்ஸுக்கும் 28 பாகை செல்ஸியஸ்ஸுக்கும் இடையில் வேறுபடுவது வழமை. அதிக வெப்பம் உணரப்படுவதற்கு எல்நினோ வெப்பம் காரணமாக இருக்கலாம். பெப்ரவரியிலும் மார்ச்சிலும் இலங்கைக்கு நேர் மேலே சூரியன் வரும். பூகோள வளிமண்டல சுழற்சி காரணமாக நாட்டில் வீசும் காற்று உலர்ந்ததாக இருக்கின்றது. அடுத்த வாரமளவில் பருவ இடை …
-
- 1 reply
- 362 views
-
-
பசுபிக் விமானப்படை அதிகாரி இலங்கைக்கு விஜயம் அமெரிக்காவின் விமானப்படையின் பசுபிக் விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஹவாயில் உள்ள பேர்ள் துறைமுக பசுபிக் விமானப்படைகளின் உதவித் தளபதியின் அணிதிரட்டல் உதவியாளரான மேஜர் ஜெனரல் ஏபெல் பரியென்ரஸ் எனும் உயர் அதிகாரியே இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தலைமை அதிகாரி எயாவைஸ் மார்ஷல் குருசிங்கவை சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித…
-
- 0 replies
- 302 views
-
-
மின்சாரம் தாக்கி 94 பேர் உயிரிழப்பு மின்சாரத்தின் தாக்கம் காரணமாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூட்டுத்தாபன தொடர்பாடல் பிரி வின் பிரதிப் பணிப்பாளர் வி.விமலாதித்தன் தெரிவித்தார். இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார நுகர்வோரின் உரிமைகளும் கடமைகளும் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் இணையப்பிரிவு பிரதிப்பணிப்பாளர் தனுஸ்க உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொ…
-
- 0 replies
- 727 views
-
-
மஹிந்த குழப்புகின்றார் குழப்புகின்றார் மஹிந்த சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவுகள் இல்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கட்சியை குழப்பிய அதே அணுகுமுறையை மஹிந்த ராஜபக்ஷ தற்போதும் முன்னெடுத்து வருகின்றார். எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு நாம் அஞ்சமாட் டோம். அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் மஹிந்த ராஜபக் ஷவின் நீண்ட நாள் கனவு ஒர…
-
- 0 replies
- 392 views
-
-
23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம் '2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார். இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.09 மணிமுதல் 7.24 மணிவரை நிகழும் என தெரிவிக்கப்படுகின்றது. பிற்பகல் 6.23 மணியளவில் நிலவின் 77 சதவீத பகுதி பூமியின் நிழல் படிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/168461/-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%…
-
- 0 replies
- 294 views
-
-
நல்லாட்சி அரசைக் கவிழ்க்க பொது எதிரணி சதித்திட்டம்! அதற்கே மின்தடை ஏற்படுத்துவதாக யாழ்.வந்த கல்வி அமைச்சர் தெரிவிப்பு! நல்லாட்சி அரசை ஜனநாயக முறையிலும், மக்களுக்கு உண்மைகளைத் தெரிவித்தும், அவர்களின் போராட்டங்கள் மூலமாகவும் தான் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்று பொது எதிரணியினர் தேங்காய் உடைத்தும், மின்சாரத்தைத் துண்டித்தும் அரசைத் திசை திருப்புவதற்கும், கவிழ்ப்பதற்கும் சதிகளைச் செய்கின்றனர். இவ்வாறு நேற்று யாழ்.வந்த கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் நாங்கள் அதற்கு அஞ்சப்போவதில்லை. மக்கள் ஆதரவோடு எதிர்வரும் ஐந்து- பத்து வருடங்களுக்கு நாட்டை அபிவிருத்திப் பாதை நோக்கி முன்னெடுத்துச் செல்லத் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார். …
-
- 0 replies
- 227 views
-