ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் முதலீடு தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம், முதலீட்டு துறைகளில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள டயஸ்போராக்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்…
-
-
- 34 replies
- 2.4k views
-
-
சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை! இலங்கை சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணமாகும். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407492
-
- 0 replies
- 251 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர். வவுனியா பெரிய புளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் ந…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது: பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள்…
-
-
- 31 replies
- 4.9k views
- 1 follower
-
-
இந்தியத் தூதரகத்தினால் திருமலையில் 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல. ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலை…
-
- 3 replies
- 488 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளில் தான் மாத்திரம் கொலை முயற்சியை எதிர்கொண்டவர் என்ற போதிலும் ஏன் ஏனைய ஜனாதிபதிகளிற்கு 100 முதல் 240 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கியுள்ளீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளால் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதா…
-
-
- 6 replies
- 302 views
- 1 follower
-
-
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (06) காலை குறித்த பிரதேசத்தில் இடம் பெற இருந்த நிலையில் அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைதொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூ…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
புதிய கடவுச்சீட்டை பெறவிரும்புபவர்களிற்கு ஆறாம் திகதி முதல் இணையவழி முன்பதிவு திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இணையவழி முன்பதிவு முறை மூலம் பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும் என குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுசா பாலசூரிய தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டை பெறுவதற்காக முன்பதிவை மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள…
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, மிகப் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரகலய போராட்டத்தில் புலம்பெயர் புலிகளின் தலையீடு இருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்துவருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச இருக்கவில்லை. எனினும், கட்சியின் அழைப்பின் பிரகாரமே அவர் போட்டியிட்டார…
-
-
- 5 replies
- 669 views
-
-
பாறுக் ஷிஹான்- நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்…
-
- 0 replies
- 252 views
-
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியவர் யார் எதற்காக போன்ற விடயங்களை தெளிவாக கூறுகின்றார்.
-
-
- 7 replies
- 654 views
- 1 follower
-
-
பொதுத் தேர்தலில் 113ஐ பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி: தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி பேச்சு நாடாளுமன்றத் தேர்தலில் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி பேச்சுகளை நடத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ளதுடன், 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எந்தவொரு வேட்பாளரும், கட்சியும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இக்காலப்பகு…
-
- 0 replies
- 213 views
-
-
அநுர கொண்டு வரவுள்ள அரசமைப்பு ஆபத்தானது; எச்சரிக்கையாக இருக்குமாறு கஜேந்திரகுமார் தெரிவிப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்போவதாகச் சொல்கின்ற புதிய அரசமைப்பு மிகமிக ஆபத்தானது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலை முன்னிட்டு இணுவிலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஜனாதிபதியாக அநுரகுமார பொறுப்பேற்ற பின்னர், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதியதொரு அரசமைப்புக் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார். மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தை ஓர் அரசமைப்புச் ச…
-
- 0 replies
- 205 views
-
-
வைத்தியர் மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு! குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார் இது தொடர்பாக நடத்தப்பட்டமருத்துவ அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் அறுவை சிகிச்சையால் குறித்த பெண்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளானார்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார். https://athavann…
-
- 0 replies
- 184 views
-
-
காலி முகத்திடல் தொடர்பில் விசேட தீர்மானம்! காலி முகத்திடலை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என 17-04-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது. காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு மாதாந்தம் சுமார் 2.5 – 3.0 மில்லியன் ரூபா …
-
- 0 replies
- 265 views
-
-
டெலிபோன் அணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: தமிழ் மக்களுக்கு மனோ விடுத்த அறிவிப்பு! டெலிபோன் அணிக்குள் இன்று நிகழும் விருப்பு வாக்கு போட்டியை தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விசேட தெளிவூட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளை தேடி அலைகிறார்கள். தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே …
-
- 0 replies
- 101 views
-
-
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (4) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…. 4ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலை…
-
-
- 5 replies
- 553 views
- 1 follower
-
-
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இட…
-
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல். தென்மராட்சி பாரளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராஜின் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .சிறிய உரசல் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் . தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது, சாவகச்சேரி தமிழரசுக் கிளையின் குழு ஒன்றும் அதன் பெண் ஒருவர் தலைமையில் மீண்டும் தாக்குதல் நிகழ்தப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் முன்பும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறித்த தொகுதி சட்டத்தரணி ஒருவரிடம் பொலிஸார் கையூட்டு பெற்றுக் கொண்டுள்ளார்களோ என எண்ணத்தோன்றுவதாக சசிகலா ரவிரா…
-
-
- 5 replies
- 438 views
-
-
Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 04:44 PM டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளி;ல் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்கா…
-
- 6 replies
- 606 views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (04) பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத் தாள்களை அச்சடித்ததாக அண்மையில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த கைது வந்துள்ளது. எவ்வாறெனினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது. https://athavannews.com/2024/1407246
-
- 1 reply
- 363 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் நேற்று(04.11.2024) கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அதனை நிராகரிப்பதாக டில்வின் சில்வா கூறியுள்ளார். சஜித் பிரேமதாச இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர் என டில்வின் சில்வா சுட்டிக்காட்டியள்ளார். எ…
-
- 1 reply
- 211 views
-
-
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் செய்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்ளச…
-
-
- 7 replies
- 796 views
- 1 follower
-
-
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
(பாறுக் ஷிஹான்) யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் 01ம் மற்றும் …
-
-
- 2 replies
- 361 views
-