ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியாவுக்கு முதலாவது விஜயத்தினை மேற்கொள்வதற்கு நீங்கள்…
-
- 2 replies
- 218 views
-
-
கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை குளம் முன்பாக இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். இந்த நிலையில் குறித்த இளம் பெண் வழமை போன்று தான் தங்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம், வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி பெண்ணை ஏற்றி சென…
-
- 6 replies
- 684 views
-
-
16 DEC, 2024 | 07:57 PM தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியா…
-
- 3 replies
- 411 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 07:22 PM (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசையளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரா தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்க…
-
-
- 14 replies
- 777 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 08:33 PM இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்தி…
-
-
- 4 replies
- 208 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 12:27 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் பொலிஸார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காரைநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்…
-
-
- 4 replies
- 474 views
- 1 follower
-
-
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும். கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார். அவர் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51,391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/313777
-
-
- 43 replies
- 2.1k views
- 2 followers
-
-
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வார்த்தைப் பிரயோகம் காரணமாக இராஜதந்திர ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தெரிய வருகையில், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணி விநியோகத்துக்குத் தேவையான துணிகளை சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதனை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. சீனத் தூதுவர் இந்நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்திருந்தார். இதன்போது சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன மக்கள் குடியரசு (People’s Republic of China (P…
-
-
- 2 replies
- 298 views
-
-
Published By: DIGITAL DESK 3 16 DEC, 2024 | 09:29 AM சீன கடற்படையின் மருத்துவ கப்பலான 'பீஸ் ஆர்க்' விரைவில் இலங்கைக்கு தரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார்மனிக்காக புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201387
-
- 2 replies
- 589 views
- 1 follower
-
-
16 DEC, 2024 | 06:35 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து வருகின்ற இரு தினங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த செல்வம் அடைக்கலநாதன்
-
- 1 reply
- 448 views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார் Published By: Vishnu 16 Dec, 2024 | 02:21 AM கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி முறிகண்டியை சேர்ந்த தன்னை சுயாதீன ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி அருட்தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும். இத் தாக்குதல் தொடர்பாக கிளிநொச்சி பொ…
-
- 0 replies
- 245 views
-
-
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி Published By: Vishnu 16 Dec, 2024 | 02:25 AM மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெர…
-
-
- 3 replies
- 273 views
-
-
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024 (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் …
-
- 0 replies
- 420 views
-
-
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைகள் கடல் பகுதிகளுக்கு, • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்…
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு புதுடெல்லியில் சிறப்பான வரவேற்பு! 15 DEC, 2024 | 08:05 PM உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். …
-
-
- 55 replies
- 3.1k views
- 1 follower
-
-
சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார். சபாநாயகர் பதவிக்கு எதிர்கட்சி முன்மொழியவுள்ள நபர் - தமிழ்வின் சபாநாயகர் நடுநிலைமையாக இருக்கவேண்டி இருப்பதால் சுயேச்சை உறுப்பினர் அர்ஜுனவே பொருத்தமானவர்.
-
- 2 replies
- 418 views
-
-
கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த …
-
-
- 35 replies
- 2.6k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார். இளைஞன் யாழ்ப்பாணம் போதனா…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார். கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார். தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெர…
-
-
- 18 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. பாவனைக்கு உதவாத அரிசி அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்…
-
- 1 reply
- 387 views
-
-
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியி…
-
-
- 6 replies
- 397 views
-
-
மன்னார் மறை மாவட்ட ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் adminDecember 14, 2024 மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். -மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு,அச் செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் …
-
- 0 replies
- 263 views
-
-
மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்! adminDecember 15, 2024 காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.12.24) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், “எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீ…
-
-
- 8 replies
- 478 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு, சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்ப…
-
-
- 9 replies
- 777 views
- 1 follower
-