ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
பிரபாகரனின் ஈழக் கனவை நனவாக்குகின்றார் மைத்திரி! புலி உறுப்பினரை விடுவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை, புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழக்கனவை நனவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆயுத ரீதியாக தோற்கடித்தாலும் அவர்களின் இலக்கு மற்றும் செயற்பாடுகள் முற்றுப் பெறவில்லை. புலிகள் மற்றும் பிரிவினைக்காரர்களின் மனம் மாறும் என்று மைத்திரி தப்புக் கணக்குப் போடுகின்றார். முப்பது வருடங்களாக போராட்டம் என்றும் போர் என்றும் இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனம் மாறிவிடும் என கணக்கு போட இயலாது. அவர்கள் சர்வதேச வலையமைப்பை இன்னமும் கொண்டிர…
-
- 2 replies
- 554 views
-
-
கிளிநொச்சியில் சடலங்கள் அகற்றப்பட்டு மணல் அகழ்வு; பொலிஸார் பாராமுகம் [ Monday,11 January 2016, 03:34:28 ] கிளிநொச்சி - வட்டக்கச்சி, பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயானப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் விவகாரத்தில் பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளார். அங்கு மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக்கொண்டுடிருந்ததாகவும், மயானத்தில் புதைக்கப்…
-
- 1 reply
- 671 views
-
-
தமிழ் மக்கள் பேரவை மூடிமறைத்து உருவாக்கப்பட்டதன் இரகசியம் என்ன? சுமந்திரன் கேள்வி [ Monday,11 January 2016, 03:08:44 ] தமிழ் மக்கள் பேரவை அரசியல் நோக்கமற்றதாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியாமல் மூடிமறைத்து ஏன் உருவாக்கப்பட்டது? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் உண்மை உருவம் இதுவரை வெளிவரவில்லை எனவும் அதனை மக்கள் சார்ந்த அமைப்பாக எவ்வாறு கருத முடியும்? என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும்…
-
- 3 replies
- 624 views
-
-
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்; பிரதமர் ரணில் அறிவிப்பு [ Monday,11 January 2016, 03:58:08 ] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச வங்கிகள் மற்றும் நாணய பரிமாற்றல்களின் கேந்திர நிலையமாக ஸ்ரீலங்காவை மாற்றியமைக்க உள்ளதாகவும், இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கொழும்பு துறைமுக நகரத்தை பயன்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே…
-
- 0 replies
- 534 views
-
-
தமிழ்மக்கள் பேரவையுடன் CVயின் தொடர்பு இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் அதிருப்தி? 11 ஜனவரி 2016 தமிழ்மக்கள் பேரவையுடன் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் நெருக்கமான தொடர்புகளை பேணுவது குறித்து கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் அதிருப்தி நிலவுதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழமக்கள் பேரவை தமிழர்விடயங்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை பேணுவது குறித்து கொழும்பை மையமாககொண்ட இராஜதந்திரவட்டாரங்கள் அதிருப்தியடைந்துள்ளன.தமிழர் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்வதற்காக சில இராஜதந்திரிகள் விரைவில் அவரை சந்த…
-
- 0 replies
- 614 views
-
-
சீன விஜயத்தை திடீரென ஒத்திவைத்த மஹிந்த ராஜபக்ச! [ திங்கட்கிழமை, 11 சனவரி 2016, 02:19.25 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். அவருக்கு எதிராகவும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளே இந்த தடைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுமார் ஒரு மாத கால பயணத்தை மேற்கொண்டு நாளை சீனாவுக்கு பயணமாவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பயணம் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு வி…
-
- 0 replies
- 362 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு இலங்கை வருகிறது! [ திங்கட்கிழமை, 11 சனவரி 2016, 04:31.28 AM GMT ] ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஏதுக்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன. http://www.tamilwin.com/…
-
- 0 replies
- 474 views
-
-
தனது மகள் ஹிருணிக்கா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் ஹிருணிக்கா பெரும் பங்களி…
-
- 5 replies
- 1.3k views
-
-
நியூசிலாந்தில் கிரிக்கட் போட்டியொன்றை பார்வையிடச் சென்ற இலங்கை ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறற்றப்பட்டுள்ளனர். நியூசிலாந்து பொலிஸாரும் மைதான பாதுகாவலகர்களும் இவ்வாறு இலங்கை ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர். பாடல் பாடி ட்ரம் இசைக்கருவியை வாசித்து வந்த ரசிகர்களே மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் பொலிஸார் ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர். எவ்வித விளக்கமும் அளிக்காது தம்மை மைதானத்தை விட்டு வெளியேற்றியதாக கிரிக்கட் போட்டியைச் பார்வையிடச் சென்றிருந்த திலினி விஜேசிங்க என்ற யுவதி தெரிவித்துள்ளார். பொலிஸார் தமது கடமைகளை செய்திருந்தாலும்ää போட்டியை மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய சந்த…
-
- 2 replies
- 537 views
-
-
-
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வேறொரு நிகழ்விற்காக வந்திருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து வருடங்களாக அகதிகளாக உள்ள வலி வடக்கு அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள ஈழ அகதிகளுடன் பேசினார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களை இறங்கி வந்து சந்தித்த மைத்திரிபாலவே என்று ஊடகங்கள் அவரைப் புகழ்ந்தன. அகதி முகாமுக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன அங்குள்ள மக்களுடன் உரையாடியதோடு, அவர்களின் குடிசைக்குள் நுழைந்து சமையலறை வரை சென்று அவர்களின் நிலவரங்களைப் பார்த்தார். குழந்தைகளுடனும், இளைஞர்களுடனும் உரையாடினார். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவினால் வலி வடக்கு அகதிகள் திரும்பிப் பார்க்கப்படாத சூழ்நிலையில், மைத்திரிபாலவ…
-
- 1 reply
- 419 views
-
-
யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரின் பிடியில் இருந்து புதிதாக விடுவிக்கப்பட்ட 701 ஏக்கர் பரப்பளவு பிரதேசத்தில் உள்ள வீமன்காமம் பகுதியில், இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன. அருகருகே காணப்பட்ட இரண்டு வீடுகளின் அமைப்புகள் மாற்றப்பட்டு, கூரைகளுக்குக் கீழாக முட்கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததும், வெளிச்சம் வரும் வழிகள் அடைக்கப்பட்டு இருட்டறையாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததும், ஏனைய இராணுவ அதிகாரிகள் கூட நுழையத் தடைவிதிக்கும் அறிவிப்பு பலகை காணப்பட்டதும், அந்த சந்தேகங்களை எழுப்பியிருந்தது. ஏற்கனவே இதுபோன்றதொரு வதைமுகாம் தடயம், வரணியில் இருந்த 52வது டிவிஷன் படைத்தளம், மிருசுவில் பகுதிக்கு மாற்றப்பட்ட பின்னரும…
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கையின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான றோயல் கல்லூரியின் அதிபர் இடமாற்றம் செய்யப்படவுள்ளார். றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிபரின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே கல்லூரியின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட உள்ளார். அதிபருக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குணசேகர, இதற்கு முன்னதாக இசிபதான கல்லூரியில் ஆறு ஆண்டுகளாக அதிபராக கடமையாற்றியிருந்…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு தினம் இன்று [ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2016, 05:45.39 AM GMT ] உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 9 தமிழர்களின் 42ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாகவுள்ள நினைவிடத்தில் நினைவுகூரப்பட்டது. 1974ம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது பொலிஸாரின் தாக்குதலில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். இவர்களின் 42ம் ஆண்டு நினைவு நாளே இன்று அனுட்டிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். http://www.tamilwin.com/show-RUmuyBSUSWjx2D.html
-
- 2 replies
- 477 views
-
-
இந்திய அழுத்தம் காரணமாக பாக்கிஸ்தானிடம் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் பின்தள்ளப்பட்டது:- 10 ஜனவரி 2016 இந்திய அழுத்தம் காரணமாக பாக்கிஸ்தானிடம் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் பின்தள்ளப்பட்டது:- இந்தியாவின் கடும் அழுத்தங்கள் காரணமாக பாக்கிஸ்தானிடமிருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தை ஆகக்குறைந்தளவில் தற்போதைக்கு இலங்கை கைவிட்டுள்ளது. சில வாரங்களிற்கு முன்னர் புதுடில்லி ஏன் இலங்கை குறிப்பிட்ட வகைவிமானங்களை கொள்வனவு செய்ய கூடாது என்பது தொடர்பில் இலங்கைக்கு இராஜதந்திர செய்தியொன்றை வழங்கியுள்ளது. குறிப்பிட்டசெய்தியில் குறிப்பிட்ட வகைவிமானத்தின் தொழில்நுட்ப மதிப்பீடுகளும் இடம்பெற்றிருந்தன, மேலும் இலங்கை;கு ஜேஎவ்- 17 ரக விமானங்கள…
-
- 1 reply
- 388 views
-
-
அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா் 09 ஜனவரி 2016 குளோபல் தமிழ் விசேட செய்தியாளா் அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா் அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளவர் தெரிவித்து உள்ளார். ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் , அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனான ச…
-
- 15 replies
- 862 views
-
-
எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபலசேன அமைப்பும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தாம் ஒரு பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஞானசார தேரர், பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 1 reply
- 499 views
-
-
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் முடிவு சரியானதே…! [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 06:25.58 PM GMT ] அதிக சர்ச்சைகள் விவாதங்கள், கருத்து மோதல்கள் என்று தனது அவதரிப்போடு இருக்கின்றது தமிழ் மக்கள் பேரவை. இன்றைய கால அரசியல் சூழலில் தமிழ் மக்கள் பேரவை தேவை தானா என்று ஒரு தரப்பும். வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தவறான தலைவர்களோடு இணைந்து விட்டார் என்று இன்னொரு தரப்பும். அரசியல் சூழல் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல இதுவென்று வேறு தரப்பும், முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு அரசியல் ஞானம் போதாது என்று பிரிதொரு பிரிவும் விவாதிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு அடைவதற்கான ஒரு அறிகுறியே இதுவென்று இன்னொரு கருத்தும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கிடையில், த…
-
- 1 reply
- 497 views
-
-
மூன்று இராஜதந்திரிகள் நாட்டுக்கு வருகின்றனர் வெளிவிவகார அமைச்சர்கள் இருவர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஒருவர் ஆகியோர், எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், எதிர்வரும் புதன்கிழமை, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான புதுப்பிக்கப்பட்டஇராஜதந்திர உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுண்ட்; நிதியை வழங்கி இருந…
-
- 0 replies
- 403 views
-
-
அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவிக்க மன்னிக்கப்பட்டவர் கோரிக்கை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் கோருவதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய சிவராஜா ஜெனிபன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்ட சிவராஜா ஜெனீபன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தக் காலப்பகுதியில், அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபனுக்கு, ஜனாதிபதி தான் பதவியேற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த…
-
- 1 reply
- 651 views
-
-
உயிரோடு இருப்பவர்களுக்கு மரணச்சான்றிதழா?: காணாமல் போனோரின் உறவுகளில் 48 பேர் மாத்திரமே இறப்புப் பதிவு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் கடந்த ஆண்டில் 48பேர் மாத்திரமே காணாமல் போன தமது உறவுகளுக்காக இறப்புப் பத்திரத்தை கோரி பதிசு செய்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரம் சர்வதேச அளவில் இல…
-
- 0 replies
- 417 views
-
-
ஊடகத்துறை ஜாம்பவான் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார் 'சுடர்ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலாமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87ஆகும். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார். கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முக்கிய…
-
- 3 replies
- 504 views
-
-
பிரதமர் பாராளுமன்ற நிலையியற் கட்டளை மீறியுள்ளார் – ஜே.வி.பி- பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றும் யோசனைத் திட்டத்தை நேற்றைய தினம் பிரதமர் பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். எனினும், இந்த யோசனையானது சட்டவிரோதமானது எனவும், பாராளுமன்ற நிலையியற் கட்டகளைகளுக்கு உட்பட்ட வகையில் அமையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த யோசனைத் திட்டத்திற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே தாம் எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அர…
-
- 0 replies
- 428 views
-
-
சுரேஸ் பிறேமசந்திரன் அவர்களின் பணிப்பிற்கமைவாக புனரமைக்கப்பட்ட யாழ் அச்சுவேலி செட்டிசீமா வீதி தொடர்பாக மக்களின் கருத்து...
-
- 0 replies
- 493 views
-
-
நல்லாட்சியின் போதே மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் தீர்வு எட்டப்படும் : மகிந்த அமவீர வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மீனவ சங்கப்பிரதிநிதிகள், மற்றும் மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர்கள், மற்றும் கடல்வள அமைப்பாளர்களுடான சந்திப்பு இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்களின் உதவிப்பணிப்பாளர் ப.ரமேஸ்கண்ணா தலைமையில் நடைபெற்றது. இதன் போது வடபகுதி மீனவர்களின் தேவைகள், மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி அதன் ஊடாக வடபகுதி மீனவர்களின் பாதிப்புக்கள், புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி இறங்கு துறைமுகங்கள், மற்றும் சமூக மேம்பாட…
-
- 1 reply
- 416 views
-