Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்றவர்கள் கைது யாழ்.பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.பொலிஸாரினால் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவர்களின் உடமையில் இருந்து 9கட்டு ஹெரோயின் பைகளினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இனுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறினார். நீண்டகாலமாக குறித்த நபர்கள் மாணவர்களை இலக்கு வ…

  2. கூட்டமைப்பை உடைக்க முடியாது! - இரா.சம்பந்தன் [Tuesday 2015-12-22 08:00] தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாகக் கூறி 'தமிழ் மக்கள் பேரவை' என்ற பெயரில் ஓர் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குள் உள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை …

  3. வவுனியா நேரியகுளத்தில் ரயில் மோதி ஒருவர் சாவு வவுனியா நேரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் நேற்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேரியகுளத்தை சேர்ந்த துரைச்சாமி என்ற சுமார் 47 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்தவராவார். மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி மாலை புகையிரதம் சென்று கொண்டிருந்த போது நேரியகுளம் பகுதியில் புகையிரத பாதையில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இறந்த நபருடன் சென்ற மற்றவர் புகையிரத பாதைக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/5400

  4. தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது. என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளை நாங்கள் மீள உருவாக்கப் போகிறோம். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டோம். என தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு பேசிவரும் தீவிரவாதிகளே வடக்கில் தேசிய பாதுகாப்பினால் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வந்து ஒரு தடவை பாருங்கள். நான் அந்த மக்களை சந்தித்தேன் அந்த மக்களுடைய வாழ்க்கை முறையை பார்த்தேன். அவர்கள் வாழ்ந்த…

    • 7 replies
    • 1.4k views
  5. இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்' இலங்கையின் வடக்கே காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உட்புகுந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகொன்று அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைநகர் மீனவர் ஒருவரின் வலைகளை நாசப்படுத்தியதுடன், அந்த மீனவரையும் படகுடன் இழுத்துச் சென்று நீரில் மூழ்கடிக்க முயற்சித்ததாக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருக்கின்றது. 'இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்' காரைநகரைச் சேர்ந்த லோகநாதன் என்ற மீனவரே கடற்படை அதிகாரிகளிடமும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடமும் இவ்வாறு முறையிட்டிருக்கின்றார். புதன்கிழமை இரவு பத்து மணியளவில் 25க்கும் மேற்பட்ட இழுவைப் படகுகளில் வந்த இந்திய மீனவர்களே இரண்டு லட்சம் ரூ…

    • 7 replies
    • 1.1k views
  6. இணையத்தளங்களில் அவதூறு செய்திகளை வெளியிட்டவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது இணையத்தளங்களில் அவதூறு செய்திகளை வெளியிட்டவர் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரை யாழ்.பொலிசார் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலம் அவதூறுக்கு உள்ளானவர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். குறிப்பிட்ட இணையத்தளங்கள் சில தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டு வந்தன. அவை தொடர்பில் யாழில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் திங் கள் கிழமை குறித்த இணையத்தளங்களை யாழில் இயக்கியவர் எனும் சந்தேகத்தில் ஒருவரை…

  7. அரசியல் கைதிகளுக்கு கொடுத்த வாக்குறுதி போல மீள்குடியேற்ற வாக்குறுதி இருக்கக்கூடாது இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு என்பது அரசியல் கைதிகளின் விடுதலையை போன்றதான உறுதியாக அல்லாது ஆறுமாத காலத்திற்குள் ஜனாதிபதி அந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து உள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் அவரிடம் கேட்டதெல்லாம் நாம் சொந்த இடங்களுக்கு செல்ல…

  8. தாஜூதீன் கொலைச் சந்தேகநபர் மகிந்தவின் மகன் யோசித்தவுடன் : வெளியானது புகைப்படம் பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜூதின் படுகொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், திஸ்ஸ என்பவரைத் தமக்குத் தெரியாது என்று மகிந்தவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாஜூதின் மரணத்துடன் இணைத்துப் பேசப்படும் மகிந்தவின் இரண்டாவது புதல்வரான யோசித்தவுடன் சந்தேகநபரான திஸ்ஸ சந்தோஷமாகக் கலந்துரையாடும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திஸ்ஸ என்பவர் தாஜூடீன் கொலை மற்றும் ம…

  9. கோத்தபாயவை முடக்க அரசு கடும் முயற்சி! முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்‌சவை முடக்கவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபடாத இராணுவ அதிகாரிகள் நால்வர் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்' என்று புதிய ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். புதிய ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.; அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி குறைவடைவதைத் தடுப்பதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை…

  10. ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்; சிலருக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கவும் தீர்மானம் [ Tuesday,22 December 2015, 03:09:20 ] நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, அமைச்சரவை 90 பேருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதோடு, இதில் 45 அமைச்சர்களும், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 45 பேரும் காணப்படுகின்றனர். தற்போது அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் உள்ளதோடு, 23 பிரதியமைச்சர்களும், 19 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர். …

  11. மஹிந்தவின் தோல்வி உலகின் முக்கிய நிகழ்வு: பான் கீ மூன் [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 08:23.35 PM GMT ] இலங்கையில் அரசியல் தலைமையில் ஏற்பட்ட மாற்றம் சுகமான அதிகார பரிமாற்றம் ஆகியன இந்த வருடம் உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டிறுதி ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் நைஜீரிய அரசியலில் இடம்பெற்ற மாற்றங்களும் வரவேற்க்கத்தக்கவையென குறிப்பிட்டுள்ள அவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவியைப்பெற முயற்சி செய்த மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்து பதவி விலகியமையையும் சுட்டிக்காட்டியுள்ளார். …

  12. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் கரிசனை வெளியிட்டுள்ளது 22 டிசம்பர் 2015 தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் கரிசனை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த முழு அளவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவத…

  13. வாழைச்சேனை கடதாசி ஆலையை கோல்வ் திடலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக அறிவிப்பு:- 22 டிசம்பர் 2015 வாழைச்சேனை கடதாசி ஆலையை கோல்வ் திடலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலொசனையின் பெயரிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கிழக்கு மாகாணத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றில் பல சுற்றுலா பயணத்துறையை மையமாக கொண்டவை, இதில் வாழைச்சேனை கடதாசி ஆலையை கோல்வ் திடலாக மாற்றும் திட்டமும் உள்ளது. பிரதமர் வாகரை முதல் மட்ட்களப்பு …

  14. கொழும்பில் இருந்து தீவிரவாதம் பற்றி பேசுபவர்கள் வடக்கிற்கு வந்து பாருங்கள்! வலி. வடக்கு மக்களை எதிர்வரும் ஆறு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். மக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நல்லிணக்கம் என்னும் தொனிப்பொருளில் அரச நந்தார் தின விழா நேற்று யாழ் மாநகர சபையின் திறந்த வெளியில், நடைபெற்றது. கிறிஸ்தவ மத விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கு பிரதம அதிதியாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது, கடந்த 25 வருடங்களாக இடம்பெ…

    • 3 replies
    • 812 views
  15. . Published on December 20, 2015-12:30 pm · No Comments உணர்ச்சிவயப்படாது நிதானமாக,சம்பந்தன் பேசிய பேச்சொன்று,சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது.தனது அரசியல் அனுபவத்தை,அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன்.மட்டக்களப்பில் இடம்பெற்ற,தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே,சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார். ✽♚✽ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்,வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,பெரும் சர்ச்சையாய் வெடித்து,அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.ஒரே கட்சியின் இரு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் வெடித்த…

  16. யோசித்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி ஹெவ்லொக் விளையாட்டு கழக்கத்திற்கும் கடற்படை விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற றக்பி போட்டியில் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். போட்டியில் இடைநடுவில் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் யோஷித்தவை சுற்றிவளைத்து தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் றக்பி போட்டிகளின் போது யோஷித்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ரோஹித்த ராஜபக்ச ஆகியோரின் அரு…

  17. ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு -எம்.றொசாந்த் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதி, பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அடுத்து வட மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இவ்விரண்டு சந்திப்புக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. …

  18. இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை 'விரைவில் தொடங்கலாம்' இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் (ஆவணப்படம்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி - கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வி.மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்த பதிலிலேயே அமைச்சர் ராதாகிருஷ்ணன்…

  19. மகிந்தவின் வர்த்த நண்பர் கசினோ ஜேம்ஸ் பெக்கர் இராஜினாமா இலங்கையில் கசினோ சூதாட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகளை மேற்கொண்டவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வர்த்தக நண்பருமான ஜேம்ஸ் பெக்கர் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேம்ஸ் பெக்கரின் இராஜினாமா அறிவித்தலை அடுத்து அவர் பணிப்பாளராக கடமையாற்றிய கிரவுன் நிறுவனத்தின் வீழச்சி கண்ட பங்குகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஏபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய கசினோ மன்னனான ஜெம்ஸ் பெக்கரை பணிப்பாளராக கொண்ட கிரவுன் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை வீழச்சியடைந்ததை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களின் முன்னர் அவர் தனது பணியை இராஜினாமா செய்துள்ளார். இலங்…

  20. ஒரு முடிவு காணாமல் விடமாட்டன் எண்டுற மாதிரி கிடக்குது! யாழ்ப்பாணத் தம்பி இனியும் புலிப் பூச்சாண்டி காட்டி இனவாதப் பூதத்தை கிளப்பி அரசியல் செய்து காலம் தள்ளலாம் எண்டு மகிந்தர் நினைச்சுக்கொண்டு இருக்கிறார். அவரின்டை வாலுகள் அப்பிடித்தான் கூவிக்கொண்டு இருக்கினம். எடுத்ததுக்கு எல்லாம் புலி புலி எண்டு சொல்லியே காலத்தை ஓட்டுறார் விமல் வீரவன்ச. எது நடந்தாலும் அது தமிழீழ நாட்டை அமைக்கிறதுக்கு எண்டு புலம்புறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டுற மாதிரித்தான் இவரின்டைய கதையள்.. இன்னொண்டு இப்பிடிப் பேசினால்தான் இன வாதத்தை தூண்டி மதவாதத்தை தூண்டி அதிலை குளிர் காய்ந்து அரசியல் செய்யலாம் எண்டு நினைக்கிறார். ஏனென்ணடால் வேற திறமை இல்லைத்தானே. அதான்…

  21. யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzCRUSWkp2F.html

  22. உதயமானது தமிழ் மக்கள் பேரவை எதிர்கால தமிழர் அரசியல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்திருக்கின்றனர். இவ் அமைக்கப்பட்ட பேரவையில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழரசு கட்சியிலிருந்து முக்கியமான தேசியத்திற்காக குரல்கொடுப்பவர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து பேரவையில் நியதியுடன் செயற்படுவதற்கு சம்மதிப்பவர்களும் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தமிழ்…

  23. 'முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை இல்லை நிகழ்வொன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தால் அது வடமாகாண சபைக்கான அழைப்பு என்று யாரும் கருதக்கூடாது. முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை அல்ல. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரச நத்தார் கொண்டாட்ட ஆரம்ப விழாவுக்கு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மேற்படி நிகழ்வி…

  24. மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! - நாடாளுமன்றில் மாவை எச்சரிக்கை .. "மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார்'' என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா நேற்றுச் சபையில் குற்றஞ்சாட்டினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் உடன் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் காணி மீட்டுப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என எச்சரித்த அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.