Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் யாழில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நாளொன்றிற்கு மூன்று அல்லது நான்கு முறைப்பாடுகள் கிடைப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பலர் நேரில் சென்று முறையிட தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறான அச்சம் மற்றும் தயக்கம் காரணமாக குறித்த சம்பவங்கள் வெளிவராமல் போகின்றன. இதனால் மாவட்ட செயலகத்தின் விசேட இலக்கத்திற்கு இது குறித்து முறையிட கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தோம். இதன் பிரகாரம் நாள்…

  2. ஜனாதிபதி எழுப்பியுள்ள யதார்த்தமான கேள்வி [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2015, 04:10.53 AM GMT ] கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை கடந்த அரசாங்கம் விடுவித்து அவர்களுக்கு பதவிகளை கொடுக்க முடியுமாயின் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசாங்கம் பிணை வழங்குவதில் என்ன தவறு? என்று ஜனாதிபதி நியாயமான கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் பாரிய அவதானத்தை பெற்றுள்ள நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக யதார்த்தகரமான கருத்தொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கிறார். அதாவது கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் பிரதித…

  3. இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம் [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2015, 04:47.29 AM GMT ] ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2016- 2018வரை மேற்கொள்ளப்படவுள்ளன. உள்ளக இடப்பெயர்வுகளுக்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட்டெலி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சித்திட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர்…

  4. இலங்கை பெண்ணின் மரண தண்டனை பிற்போடப்பட்டது 07-12-2015 08:55 AM திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால் மேற்கொள்ளப்பட்ட முறையீடு, சவூதி அதிகாரிகளிடம் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்ததோடு, அரச, …

  5. கைதிகளை விடுவித்தால் பட்ஜெட்டுக்கு முழு ஆதரவு : அரசுக்கு ரெலோ நிபந்தனை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் வரவு- செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்திற்கு ரெலோ உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ரெலோ கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம்வ வகிக்கின்றார்கள். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, வரவு- செலவுத் திட்டத்திற்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ப…

  6. அரசாங்கத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு? [ Monday,7 December 2015, 03:21:02 ] தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் வகையில் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயற்பட்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வரவு செலவுத் திட்ட விடயத்தில் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழரசு கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கள…

  7. விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன? யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி.ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதிலளித்…

  8. [ வெள்ளிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2015, 12:52.45 PM GMT ] சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களை கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் இன்று பார்வையிட்டுள்ளார். திருகோணமலை சம்பூர் பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன், சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பார்வையிட்டார். இதன்போது, மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்கு தேவையானவற்றினை பகுப்பாய்வு செய்தனர். தற்போது சம்பூர் பிரதேசத்தில் UNHCR தொண்டு நிறுவனத்தினால் 210 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் மற்றும் 50 வீடுகள் ARR எனும் தொண்டு நிறுவனத்தினால் கட்டப்படவுள்ளதாகவும், இப்பிரதே…

    • 1 reply
    • 457 views
  9. பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டியத் தேவை உள்ளது: சம்பந்தர் இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார் ஞாயிற்க்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றறில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர…

  10. சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம [ Wednesday, 2 December 2015 ,11:19:16 ] இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைஒன்றினை ஐ.நா விதந்துரைத்துள்ள நிலையில், நிராயுதபாணிகளாகவெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைசிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றதாக நோர்வேயின் முன்னாள்சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.ஐ.பி.சி தமிழின் "ஈழத்தமிழரும் சர்வதேச அரசியலும்" நிகழ்ச்சிக்கு வழங்கியபிரத்தியேக செவ்வியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார். நோர்வேயின் முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம…

  11. ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதன் ஊடாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வலுப்பெற்று, சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNe…

  12. திருகோணமலை கடற்பரப்பில் சடலங்கள்: கடற்படை தேடுதல் வேட்டையில்! திருகோணமலை கடற்பரப்பில் சடலங்கள் பல மிதப்பதாக தகவல் கிடைத்தமையை அடுத்து கடற்படை தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படை இத்தகவலை தெரிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/121488/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9…

  13. விமானக் கொள்வனவு; இலங்கைக்கு இந்தியா அழுத்தம் பாகிஸ்தானுடன் போர் விமானக் கொள்வனவில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை, இந்தியாவிடம் இருந்து அதிகமான அழுத்தத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஜே.எப் 17 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது.முன்னாள் விமானப்படை தளபதி ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக இருந்தபோது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.ஒற்றை இயந்திரம் பன்மைத்துவ போரியல் தன்மையில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இதன் பெறுமதி 500 மில்லியன் டொலர்களாகும். எனினும், இதற்கு பதிலாக தம்மிடம் உள்ள போர் விம…

  14. தமிழக உறவுகளுக்கு உதவி புரிவது தொடர்பான எண்ணத்தில் வடக்கு மாகாண சபை பிளவு பட்டு உள்ளதா ? வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக மக்களுக்கு உதவும் நோக்குடன் வடமாகாண சபையினால் நிதியம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. வடமாகாண சபை பேரவைக்கட்டட த்…

  15. திருகோணமலை - நிலாவெளி பகுதியில் இன்று கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல்போன இந்திய மீனவருடையது அல்லவென இராமேஸ்வரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலாவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் சென்னையில் உள்ள நபர் என தெரிய வருகின்றது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் சென்னையில் வாகன சாரதி என அடையாள அட்டையின் ஊடாக உறுதிப்படுத்தப்படுவதாகவும் இராமேஸ்வர மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த நபர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் கரையொதுக்கியிருக்கலாம் என அந்த மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, திருகோணமலை - நிலாவெளி பகுதியில் கண்டெ…

  16. வசீம் தாஜூதீன் கொலை காணொளி விரைவில் நீதி மன்றில் ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்னதெரிவித்துள்ளார் தற்போது இரகசிய காவல் துறையினரிடம் இருக்கின்ற காணொளிகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார் அந்த காணொளிகளில் சில பிரபுக்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த வியாழக்கிழமை அது திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீ…

  17. ஆபத்தான விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து 06 டிசம்பர் 2015 அரசாங்கம் ஆபத்தான விடுதலைப்புலிகளை விடுதலைசெய்து வருவதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 500 ,ராணுவத்தினரை அரசாங்கம் விலகிக்கொண்டுள்ளதாக ,ன்று ஊடகங்களில் பரவலாக செய்திவெளியாகியுள்ளது. ,து சரியான தகவல் அல்ல ,முன்னாள் ஜனாதிபதிக்கு 120 ,ராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பினை வழங்கிவருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆபத்தான விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசாங்கம் விடுதல…

  18. சவூதியில் இலங்கைப் பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்; சபையில் கடும் சர்ச்சை சுமந்திரன் எம்.பி.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் இலங்­கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒரு­வரை ஷரி ஆ சட்­டத்தின் பிர­காரம் கல்லால் எறிந்து மரண தண்­டனை நிறை­வேற்­று­வ­தற்கு அளிக்­கப்­பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­படி தண்­ட­னைக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட நிலையில் சுமந்­திரன் எம்.பி.யின் இச்­செ­யற்­பாட்­டுக்கு அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன், உறுப்­பி­னர்­க­ளான நவவி, மரிக்கார் மற்…

    • 9 replies
    • 2.3k views
  19. புதிய அரசியல் அமைப்புக்கு நோர்வே பங்களிப்பு இலங்கையில் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதில் நோர்வேயும் பங்களிப்புச் செய்யவுள்ளது. இலங்கையில் நடைமுறையில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறையில் மாற்றங்களைக்கொண்டு வருவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் வெளிநாடுகளின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நோர்வே நாட்டு அரசியலமைப்பு நிபுணர் உள்ளிட்ட சிலர் நாளை இலங்கை வரவுள்ளனர். இதன்போது, பெறப்படும் ஆலோசனைகளில் இருந்து சிறந்தவற்றை மட்டும் தெரிவு செய்து அதனை அர…

  20. வடக்கில் முஸ்லிம்களை மீளக்குடியேற்றாவிடின் அமைச்சர் பதவியைத் துறப்பாராம் ரிஷாத்! [Sunday 2015-12-06 08:00] அடுத்த இரு வருடங்களுக்குள் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன். என்று சூளுரைத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன். அடுத்த இரு வருடங்களுக்குள் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன். என்று சூளுரைத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி மற்றும் உயர…

    • 2 replies
    • 853 views
  21. டக்ளஸ் ஒரு கொலையாளி! வடக்கில் 3000ற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர்!- சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு [ ஞாயிற்றுக்கிழமை, 06 டிசெம்பர் 2015, 12:34.55 AM GMT ] ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் தொடர்புடையவர். வடக்கில் 3000ற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர். என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்…

  22. எனது கணவரை விடுதலை செய்யுங்கள் : அரசியல் கைதியின் மனைவி கோரிக்கை அரசியல் கைதியான தனது கணவரை விரைவில் விடுதலை செய்யுமாறு மனைவி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தனது கணவருக்கு சிறைச்சாலையில் பல்வேறு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கணவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் தனது குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும், இதனால் பிள்ளைகள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன் கணவரின்றி தாம் தனிமையில் வசித்து வந்த நிலையில் பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய…

  23. தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த இடமளியோம் : ஜனாதிபதி உறுதி மீண்டும் ஒரு போர் ஏற்பட இடமளிக்கக் கூடாது. வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசின் கடப்பாடாகும். என்று ஜனாதிபதி தெரிவித்தார். பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோ, தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதோ தேசிய பாதுகாப்புக…

    • 1 reply
    • 1.2k views
  24. எனது கணவன் படுகொலை சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டி விட்டார்!- விஜயகலா சாட்டையடி [ ஞாயிற்றுக்கிழமை, 06 டிசெம்பர் 2015, 12:09.54 AM GMT ] எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாக நான் கூறிய போதிலும், அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், இன்று எனது கணவனின் பெயரைக் குறிப்பிட்டு அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு முன்னதாக உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாள…

  25. கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள Mulberry வீடமைப்புத்திட்டம் Published by MD.Lucias on Sat, 12/05/2015 - 11:38 கொழும்பு 09 இல் அமையவுள்ள Mulberry Residence வீடமைப்புத்திட்டம் எளிமையான, தரம் மற்றும் நிலையாண்மை ஆகியவற்றை மாற்றியமைக்கும் வகையிலமைந்த குடிமனைத் தொடராக அமையவுள்ளது;, மூன்று வீடமைப்புத் தொகுதிகளுடன்கூடிய வகையில் இந்த வீட்டுத்தொடர்மனை அமையவுள்ளது. ஒவ்வொரு வீடமைப்புத் தொகுதியிலும் பதினைந்து மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அவற்றில் கீழ் தளத்திலிருந்து முதல் இரு மாடிகளும் வாகனதரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமையவுள்ளன. 11 மாடிகளில் (3ஆம் மாடி முதல்– 13ஆம் மாடிவரை) குடியிருப்புகளை கொண்டமையவுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.