Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அந்த சட்டத்துக்கமையவே செயற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக அன்று குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், அதனை விட அதிகக் கடனைப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வாரத்துக்கொரு முறை புதிய கடனை பெற வேண்டும் என்ற யதார்த்தத்தை தற்போது ஜே.வி.பி. உணர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ, வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்ப…

  2. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவான பின் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு த…

  3. முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என திறைசேரியின் பிரதிசெயலாளர் ஆர்எம்பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்றுயோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்திற்கு பதில் திறைசேரி அதிகாரிகள் பல மாற்றுயோசனைகளை ஆராய்…

  4. யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற பட…

  5. 2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த…

  6. வட மாகாண மட்ட சிங்கள தின போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி அலுவலக கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த போட்டி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியை ஒருவரை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்…

  7. இறுதி தீர்வு சர்வஜன வாக்கெடுப்பினூடாகவே தீர்மானிக்கப்படவேண்டும்: தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து http://www.samakalam.com/wp-content/uploads/2024/10/TMK-Manifesto.jpg இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி 2024 ஆம் ஆண்டுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெ…

  8. இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (18) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வன்னிமாவட்டத்தில் இம்முறை தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே. சிவானந்தராசா, ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.…

  9. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம். இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகிறது. தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல…

  10. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி சுனில் குல்ஹாரி ஆவார். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக…

  11. இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வ…

      • Like
      • Thanks
      • Haha
    • 11 replies
    • 687 views
  12. இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையில் இந்தியா வழங்கிய உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகால தொடர்புகளை சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய உதவிகளையும் கடன் மறுசீரமைப்பின்போது இந்தியா வழங்கிய ஆதரவையும் நினைவுகூருகின்றோம் என்றும் இதன்போது வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196640

  13. வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள நிலத்தில் விளையக்கூடிய கீரை வகைகளை உண்பதை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊட்டச்சத்து நிபுணர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடும் மழை காரணமாக கழிவறைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தண்ணீரில் கலந்து நிலத்தில் தேங்குவதால் நிலத்தில் விளையும் கீரை வகைகளை உண்பது மிகவும் ஆபத்தானது" ஆகும். இதனால், மழை வெள்ளம் குறையும் வரை அகத்தி, முருங்கை போன்ற கீரை வகைகளை மாத்திரம் உண்பது சிறந்ததாகும். மேலும், கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், இயன்ற…

  14. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சி : யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு October 19, 2024 தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, …

  15. 400 பில்லியனுக்கும் மேல் கடன் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் – நாடு மீண்டும் அதள பாதாளத்துக்கு செல்லுமா? தற்போதைய அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். நிதி அதிகாரம் ஜனாதிபதியிடம் அல்ல. நாடாளுமன்றத்திடம் உள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது, அது எவ்வாறு செய்யப்பட வேண்டும், சரியானதா? அல்லது தவறானதா? எனக் கணக்கிடுவது அவசியம். நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் நாடாளுமன்றத்திடம் உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும…

    • 1 reply
    • 495 views
  16. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் செலுத்தப்படும் HPV தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அந்த மாணவிகளுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும், சுகயீனமுற்ற மாணவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்படும் போது மா…

  17. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. https://thinakkural.lk/article/291294

  18. சிறீதரன் வெற்றி பெற்றால் ”ஒழுக்காற்று விசாரணை” வெற்றிக்கு வேட்டு வைக்கும் - ப.கஜதீபன் இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதை எங்களால் உறுதி செய்ய முடியும். நீங்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றீர்கள். அப்படி செய்ய முடியாது என்பது தொடர்பாக …

  19. நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இன் விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள் திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது. இதன் காரணமாக இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பாத…

  20. வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டிட தொகுதியானது நீண்ட காலமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் மீளவும் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. இதன் பிரகாரம் குறித்த கட்டிடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன மேலும் சுமார் 14 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு முழுமையாக சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரவைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்த…

  21. ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து! ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவ‍ேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரி…

  22. வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி…

  23. 18 Oct, 2024 | 01:00 PM கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் வாகனப் பயணத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் இறங்கி, நடந்து செல்ல முடியும். மேலும், அப்பாலத்தினூடாக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் …

  24. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த வியாழேந்திரன், கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட…

  25. 18 Oct, 2024 | 03:51 PM யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும்.எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம்.வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டதுடன் ஆதரவாளர்களுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் இன்று வெள்ளிக்கிழமை (18) பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.