ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதற்கமைய, 'அத தெரண' செய்திப் பிரிவு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் இது தொடர்பில் வினவியது. "எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டது. அதேநேரம் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்? 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியபோது தமக்கான விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணித் தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், அவர்களை தமது மீட்பர்களாக ஏற்றுக் கொண்டாடியமைக்கும் இன்று அநுர அரசைத் தமிழர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கும் இடையே மிகவும் அபாயகரமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று இலங்கை அரசியலின் முன்னைய இருள்படிந்த அத்தியாயங்களிலிருந்து தம்மை முழுமையாக வெளியேற்றிக்கொண்டவர்களாக மைத்திரி ரணிலின் கூட்டணி அரசாங்கம் காட்டிக்கொண்டு மக்களின் முன்னால் வந்தது. இனவாதத்தைக் களைவதாகவும், புதியனவற்றை உள்வ…
-
-
- 76 replies
- 3.8k views
-
-
30 NOV, 2024 | 01:43 PM தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என வெரிட்டே ரிசேர்ச்சின் publicfinance.lk ஆய்வினூடாக தகவல் வெளியாகியுள்ளது. வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 1.16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றன…
-
-
- 3 replies
- 514 views
- 1 follower
-
-
30 NOV, 2024 | 12:05 PM இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் சமித பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/200067
-
- 3 replies
- 342 views
- 1 follower
-
-
30 NOV, 2024 | 08:29 PM இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அதேநேரம் மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை …
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம் நிலவும் வானிலை நிலைமைகள் மற்றும் வடக்கிலிருந்து உள்வரும் எல்லைக் குழப்பம் காரணமாக இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள தினசரி காற்றின் தர அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்றைய காற்றின் தரக் குறியீட்டின் படி கொழும்பு நகரம் 108 முதல் 116 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் 112 முதல் 120இற்கு இடையில…
-
- 3 replies
- 350 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிர…
-
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி. இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ” கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பெளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக…
-
- 2 replies
- 521 views
- 1 follower
-
-
பி எம் எம் பெரோஸ் நளீமி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர், மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது வீட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது முகப்புத்தக பொது வெளியில் மல்யுத்த வீரர்களாக பிரகாசிக்கிறார்கள்.. கடந்த பல தசாப்தங்களாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் வடமாகாண முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் இன்னும் வட கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சினைகள், வியாபாரங்களை சுதந்திரமாக செய்ய முடியாமல் வியாபார தலங்கள் பள்ளி…
-
- 0 replies
- 222 views
-
-
சீனத் தூதுவர் இனவாதக் கருத்தை விதைக்கக் கூடாது; கஜேந்திரகுமார் கடும் கண்டனம் சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன எனக் கருத்துக் கூறியிருந்தார். இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிப்பாதோடு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான …
-
- 1 reply
- 312 views
-
-
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி! November 30, 2024 06:45 am மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிப…
-
- 4 replies
- 532 views
-
-
30 NOV, 2024 | 10:17 AM ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
30 NOV, 2024 | 10:47 AM நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெ…
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 03:14 PM (நா.தனுஜா) கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமையக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பல்துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையைப் புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியம் என உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் (குளோபல் நெட்வேர்க் இனிசியேட்டிவ்) வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அற…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் – சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என…
-
- 2 replies
- 253 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 05:32 PM (எம்.மனோசித்ரா) அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச…
-
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய ம…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 08:20 PM நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்ன…
-
-
- 8 replies
- 898 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 08:04 PM யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளது பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது சம்பவத்தில் கிராம அலுவலருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள். மேலும் வேறு சிலரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முகநூல் பதிவுகளை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொ…
-
-
- 164 replies
- 11.1k views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 08:11 PM ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை (29) கட்டுநாயக்க விமான நிலைய தங்கப் பாதை முனையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நன்கொடைகளில் ஆம்புலன்ஸ்கள், குப்பை வண்டிகள், சுயமாக ஏற்றும் குப்பைத் தொட்டிகள், சமீபத்திய C-2 தொழில்நுட்ப பயணிகள் பேக்கேஜ் ஸ்கேனர்கள், கழிப்பறை அமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், குடிவரவு அதிகாரிகளுக்கான மின்னணு குடியேற்ற உபகரணங்கள் (எலக்ட்ரானிக் கேட்), பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் என்பன காணப்பட்டன. இதன்போது, இலங்கைக்கான ஜப்பானிய பிர…
-
- 0 replies
- 707 views
- 1 follower
-
-
29 NOV, 2024 | 08:18 PM வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால், பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பவற்றுக்காக ரூபா.11 மில்லியனும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவசர திருத்தப் பணிகளுக்காக ரூபா 1 மில்லியனும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200029
-
-
- 3 replies
- 357 views
- 1 follower
-
-
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இதனால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். (ப) #Eelam #srilanka #jaffna #uthayannews #todaynews #breking …
-
- 2 replies
- 743 views
- 1 follower
-
-
வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவ…
-
- 0 replies
- 554 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னரே, இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்ற…
-
- 1 reply
- 537 views
-