ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
தேசிய அரசாங்கத்தில் எமது தேசியத்தை அடகுவைக்க நாம் தயாரில்லை! - அமைச்சர் ஐங்கரநேசன் [Monday 2015-08-24 20:00] தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என வடக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையுடன் 2200மில்லியன் ரூபா நிதித் திட்டத்தின் கீழ் ஐந்து கட்டங்களாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று வடக்கு மகாண சபையின் விவசாய கால் நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் க…
-
- 1 reply
- 538 views
-
-
தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுங்கள் : கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கும் த.வி.கூ தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியிச் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு, தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. இந்த வேண்டுகோள் 60 ஆண்டுகளுக்குமேல் அரசியலில் பணிசெய்துகொண்டு இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் உலகில் எவரிலும் பார்க்க க…
-
- 2 replies
- 587 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரனை தோற்கடிப்பதென அவர் சார்ந்த தமிழரசுக்கட்சி மற்றும் பங்காளிக்கட்சிகள் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக ஆராயும் தமிழரசுக்கட்சியின் முக்கிய புள்ளிகள் கலந்து கொண்ட கூட்டம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையினில் அண்மையினில் இரகசியமாக நடந்தேறியுள்ளது. தற்போது மாவை சேனாதிராசாவிற்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வரும் சீ.வி.கே.சிவஞானம் சந்திப்பினில் கலந்து கொண்டவர்களிற்கு தமது முயற்சிக்கு மாவையின் ஆசீர்வாதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வடக்கு முதலமைச்சராக மாவையினை கொண்டுவர சீ.வி.கே.சிவஞானம் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. இதனை குழப்பியடித்தவர் சுமந்திரனேயென கு…
-
- 20 replies
- 1.3k views
-
-
"புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/ojzlqru8uy8x
-
- 11 replies
- 726 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். மிகவும் ஆழமாக சிந்தித்து விவாதித்த பிறகே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒவ்வொரு இடங்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனறும் முடிவு செய்யப்பட்டது. குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே சாந்தி தோல்வியடைந்திருந்தா…
-
- 2 replies
- 647 views
-
-
தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தல் செயல்முறை தொடர்பில் கட்சியின் மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. கஜேந்திரகுமார் …
-
- 51 replies
- 4k views
-
-
அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றுள்ளனர். - See more at: http://onlineuthayan.com
-
- 1 reply
- 353 views
-
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நவம்பரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு இவ்வாறு தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய முறைமையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த தேவையான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையொப்பமிட்டுள்ளார்.இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று பெரும்பாலும் வெளியிடப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. தடாலகே தெரிவித்துள்ளார். மேலும் 335 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.விகிதாசார மற்றும் தொகுதிவாரி அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
காப்பாற்றுமாறு குறுந்தகவல் அனுப்பிய மீனவரைக் காணவில்லை! - படகு மட்டும் மீட்பு [Monday 2015-08-24 20:00] திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக திருகோணமலை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. சல்லி 7ம் வட்டாரத்தை சேர்ந்த 25 வயதுடைய அழகராசா தங்கரூபன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த மீனவர் நேற்றிரவு 11.00 மணியளவில் தொழிலிற்குச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து அதிகாலை 3.00 மணியளவில் தான் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தன்னைக் காப்பாற்ற கடலிற்கு வருமாறும் அவருடைய நண்பருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த மீனவர் சென்ற படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருப்பதோடு …
-
- 0 replies
- 549 views
-
-
அனுராதபுர விமானப்படைத் தாக்குதல் வழக்கு செப்.4 முதல் தொடர் விசாரணை! - 2 புலிகளுக்கு விளக்கமறியல்[Monday 2015-08-24 20:00] அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விசேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 16 விமானங்கள…
-
- 0 replies
- 485 views
-
-
மாகாணசபைகளுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும்! - விக்கிரமபாகு கோரிக்கை[Monday 2015-08-24 18:00] இலங்கையின் புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் உடனடி முன்னுரிமை வழங்க வேண்டும் என, நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதிலும் அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் இருந்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே கருணாரத்ன இவ்வாறு கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கு சிறந்த தன்னாட்சியை வழங்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் ஒற்றையாட்சி கட்மைப்புக்குள் இதனை ச…
-
- 0 replies
- 573 views
-
-
மாறுபட்ட தளத்தில் பணிபாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது: -புளொட் தலைவர் த.சித்தார்த்தன் [Friday 2015-08-21 09:00] எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணிபாற்றுவதற்கான மபெரும் அங்கீகாரம் எனக்கு வழங்ப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வாக்களித்த யாழ். கிளிநொச்சி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விருப்பு வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்க…
-
- 59 replies
- 2.5k views
- 1 follower
-
-
அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சியில் அமர முடியாது! -ஐதேக கிடுக்கிப் பிடி[Monday 2015-08-24 07:00] அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளாமல் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சிரமமானதாக அமையும். அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது. மறுபுறத்தில் எதிர்க்கட்சிகளின் கடமைகளையும் மேற்கொள்ள சுதந்திரக் கட்சி முயற்சித்து வருகின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை …
-
- 0 replies
- 672 views
-
-
சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களுக்கு அமைச்சர் பதவி! [Monday 2015-08-24 07:00] ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன,துமிந்த திஸாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம, ஏ.எச்.எம். பௌசி, எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்டோருக்கே இந்தப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேசிய அரசாங…
-
- 0 replies
- 309 views
-
-
நாடாளுமன்றம் கூடிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு! [Monday 2015-08-24 07:00] நாடாளுமன்றம் கூட்டப்பட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுள்ள நாடாளுன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய சரியான அனுமானங்களை மேற்கொள்ள முடியவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஒருவரை நியமிப்பது தற்போதைக்கு பொருத்தமாக அமையாது என கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேசிய சுதந்…
-
- 0 replies
- 252 views
-
-
அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி! - தனித்து ஆட்சியமைப்பது குறித்தும் ஐதேக ஆலோசனை[Monday 2015-08-24 07:00] அமைச்சுப் பதவிகளை பகிர்வதில் இழுபறி நிலை தோன்றியுள்ளதால், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையேயான தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி விரும்பாவிட்டால் தேசிய அரசாங்க யோசனையைக் கைவிட்டு தனித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்கும் நிகழ்வு இன்று இடம்பெற மாட்டாது. இந்நிகழ்வு மேலும் காலதாமதமாகும் நிலைமை தலைதூக்கியுள்ளது. ஜ…
-
- 0 replies
- 382 views
-
-
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு - சங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமார் சங்கக்கார இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. இதனையடுத்து குமார் சங்கக்காரவுக்காக பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு சங்கக்காரவை கௌரவித்த ஜனாதிபதி "இந்த சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புகி…
-
- 2 replies
- 609 views
-
-
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேசத்திற்கு உரிமையில்லை என்கிறார் : ரணில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை நாட்டின் நீதித்துறையின் மீது நம்பிக்கை குறைவடைந்தமையினாலேயே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவ…
-
- 0 replies
- 305 views
-
-
வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர். சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரில் தர்மலிங்கம் சித்தார்த்தன் டாக்டர் சிவமோகன் ஆகியோர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளதுடன் அங்கஜன் இர…
-
- 0 replies
- 341 views
-
-
கோத்தபாயவிடம் விசாரணை ஆரம்பம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விசாரணைகளின் நிமித்தம் கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாயவிடம் இன்று விசாரணை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று வ…
-
- 0 replies
- 562 views
-
-
புத்திஜீவிகளை நாடாளுமன்றுக்கு நியமிப்பதற்கே தேசியப் பட்டியல் முறை உருவாக்கப்பட்டது என்கிறார் : உதய கம்மன்பில தேசியப் பட்டியல் ஊடாக தேர்தலில் தோற்றுப் போனவர்களை மீண்டும் நாடாளுமன்றம் அழைத்து வருவதற்கு தேசியப் பட்டியல் நியமனம் அறிமுகம் செய்யப்படவில்லை என்று உதய கம்மன்பில விமர்சித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றுப் போனவர்கள் தற்போது தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் பெயர்தான் நல்லாட்சியா? அல்லது இது எந்த வகை ஆட்சி என்பதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் நல்லாட்சியின் தலைவர்கள் என…
-
- 0 replies
- 394 views
-
-
TNAயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:- 23 ஆகஸ்ட் 2015 நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது. இ…
-
- 18 replies
- 3.1k views
-
-
சுதந்திரக் கட்சி, கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தீர்மானம் - 24 ஆகஸ்ட் 2015 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் n;தரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகம், கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பின்தள்ளி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் முன்…
-
- 0 replies
- 2.1k views
-
-
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 11:10.41 AM GMT ] திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். சம்பூர் மீள்குடியேற்றத்தை உத்தியோகவூர்வமாக ஆரம்பிப்பதற்கான வைபவ நிகழ்வு தற்போது சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு தற்சமயம் நடைபெற்று வருகிறது. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyIRWSVlx0A.html
-
- 10 replies
- 892 views
-
-
சிறிலங்கா விரைகிறார் நிஷா பிஸ்வால் – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி நகர்வுAUG 23, 2015 | 2:18by கார்வண்ணன்in செய்திகள் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாக, சிறிலங்கா அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக நிஷா பிஸ்வால் கொழும்பு வரவுள்ளார். கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் செவ்வாய் காலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத்துவார். நிஷா பிஸ்வாலின் பயணத்துக்கு முன்னதாக, மீண்டும் வெளிவிவகார அமைச்சராக, மங்கள சமரவீர பொறுப்பேற்றுக் கொள்வார் என…
-
- 6 replies
- 997 views
-