ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு அரசு ஒருபோதும் சம்மதிக்காது எனவும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் நேரத்தில் இப்படியான ஒரு கோசத்தை முன்வைப்பதாகவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான றாஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/540-unf-leadership-rules-out-self-government-for-tamils-in-sri-lanka அட அவங்களுக்கும் சம் சும்மின்ரை திருகுதாளங்களை சரியாத் தெரிஞ்சுதான் வைச்சிருக்கிறாங்கள்
-
- 4 replies
- 948 views
-
-
"ராஜீவ் கொலை... 7 தமிழர்களும் விடுதலையாவது உறுதி" - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' வானொலியின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் 'தமிழ் தேசம்' வாரப் பத்திரிகையின் ஆசிரியரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினருமான தோழர் தியாகு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/-7
-
- 1 reply
- 787 views
-
-
அவுஸ்திரேலிய கோர விபத்தில் 2 தமிழர்கள் பலி: நடந்தது என்ன? - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' வானொலியின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் பலியானவரின் உறவினர் விக்கி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/QzZWVkOG
-
- 0 replies
- 659 views
-
-
பிக்குவைப் பிடித்தார் சங்கரி…. July 24, 20159:43 am தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேற்று வியாழக்கிழமை (23) கண்டி மல்வத்தை பீடத்துக்கு விஜயம் செய்து மகாநாயக்கத் தேரர் வண.திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீசுமங்கள தேரரையும் அஸ்கிரிய பீடத்துக்கு சென்று வண. கலகம அத்ததஸ்ஸீ தேரரையும் சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார். நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது, எப்படியான ஒரு ஐக்கிய இலங்கையைக் கண்டோமோ அது போன்ற ஒரு இலங்கையை உருவாக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்று இதன் போது கூறினார். மஹிந்த சிந்தனை என்று திரும்பத் திரும்பிக் கூறிக் கொண்டே போய், அது தற்போது மக்களால் வழக்கொழிந்து விட்டது. இனி அது எடுபடவாய்ப்பில்லை என்றும் கூறினார். ஆனந்த சங்கரிக்கு நல்வாழ்த்துக்க…
-
- 2 replies
- 340 views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு: ஐதேமு தேர்தல் அறிக்கை ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் சகலதரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரசனைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐ நா அமைப்பினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சகலதரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளூர் சட்டக்கட்டமைப்பின் மூலம் தகுந்த பதில்கள் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 2 replies
- 397 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சம்பந்தன் அல்லது சுமந்திரன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பினில் கட்சி தலைமை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்த பட்டியல் வேறு எனவும் மறுபுறத்தே பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் உட்பட அதிருப்தி தரப்புக்களது பெயரை ஊடகங்கள் மூலம் பிரசுரித்து அவர்களை மௌனம் காக்க வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே தனக்கு தான் பதவி கிடைக்கப்போகின்றதென்ற கனவினில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரியில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றை பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் நடத்தி உள்ளார். பொதுஜன ஜக்கிய முன்னணி பிரபலமும் மஹிந்தவின் பிரதிநிதியுமான கல்லூரியின் பணிப்பாளர் என். …
-
- 2 replies
- 629 views
-
-
பிறேமதாசாவின் சாதனை இந்த தேர்தலில் முறியடிக்கப்படுமா?JUL 24, 2015 | 7:05by நித்தியபாரதிin கட்டுரைகள் பிறேமதாச சில சட்ட நகல்களுக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காகவே ஜே.ஆர் மிக வேகமாக, இரவோடு இரவாக நாடாளுமன்றைக் கலைத்தார் என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் பிரசாத் குணவர்த்தன எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் முக்கிய இரு அரசியற் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தம்மைத் தயார்படுத்தி வருகின்றன. இது தொடர்பில் இவ்விரு கட்சிகளுக்கும் இ…
-
- 1 reply
- 414 views
-
-
சிறிலங்காவின் தேசியக்கொடியை தீயிட்டு எரிக்க வேண்டும் – வட்டரகே விஜித தேரர்JUL 24, 2015 | 7:34by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்று, நவ சம சமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர், வண.வட்டரகே விஜித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நவ சம சமாஜக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறிலங்காவின் தேசியக் கொடியின் 75 சதவீதம் சிங்கள சமூகத்தையே பிரதிபலிக்கிறது. வாளேந்திய சிங்கமும், நான்கு வெள்ளரசு இலைகளும், தேசியக்கொடியின் பெரும்பகுதியில் இடம்பிடித்துள்ளன. ஏனைய சமூகங்களுக்கு சரியான இடமளிக்காத, இந்த தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குற…
-
- 1 reply
- 342 views
-
-
வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணைJUL 23, 2015 | 12:53by கார்வண்ணன்in செய்திகள் மீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சில் இணைப்பதிகாரியாகப் பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான், கடந்த திங்கட்கிழமை இரவு மீரிஹாவின் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இதில் இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மூன்று மெய்க்காவலர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இர…
-
- 6 replies
- 925 views
-
-
2009 மே மாதத்தின் பின்னராக கேட்பாரற்ற சமூகமாக எங்கள் பெண்கள் சமூகம் தள்ளப்பட்டுவிட்டது.சிவில் பாதுகாப்பு படைகளில் எங்கள் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். அன்றாட வாழ்வினிலும் கூட இதே நிலை தான் தொடர்கின்றது.குடும்ப வன்முறைகள் கூட கட்டுக்கடங்காது செல்கின்றதென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் விவகார குழு தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்மினி சிதம்பரநாதன். யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் வட-கிழக்கினில் 97 ஆயிரம் பெண்களை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள் இருக்கின்றன.ஆனால் அவர்களது அரசியல் அங்கீகாரம் என்னவென்பது கேள்விக்குறியே. நாங்கள் தொடர்ந…
-
- 3 replies
- 653 views
-
-
“SLMC” சுயரூபம் அம்பலம். July 22, 201512:15 pm வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது ‘ஸீ பிறீஸ்’ ஹோட்டலில், நடத்தி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், இனப்பிரச்சினைத் தீர்வினைப் பெற்றுக் க…
-
- 10 replies
- 880 views
-
-
இரு தேசம் ஒரு நாடு என்பது எமது நிலைப்பாடு இல்லை. அது மக்களின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடு. காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் தமிழ் அரசியல் மாற்றம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். இல்லையேல் எமது பிரச்சனைக்கு தீர்வு எட்டமுடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் புள்ளடி ஆட்சி மாற்றத்தை ஏ…
-
- 2 replies
- 439 views
-
-
அம்பாந்தோட்டையில் கப்பல்கட்டும் தளத்தை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்கா பச்சைக்கொடிJUL 24, 2015 | 12:18by கி.தவசீலன்in செய்திகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானப் பணியை மேற்கொண்டு சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனமே, இந்த கப்பல் கட்டும் தளத்தை( டொக்யார்ட்) நிறுவும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது. இந்த திட்டம், நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்காவின் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, அம்பாந்தோட்டை துறைமகத்தில் கப்பல் கட்ட…
-
- 0 replies
- 488 views
-
-
அமைச்சர் பதவியை உதறினார் ஜனக பண்டார – கவிதை வடிவில் மைத்திரிக்கு கடிதம்JUL 24, 2015 | 7:21by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, மாகாணசபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பதவி விலகியுள்ளார். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காதமையே தனது இந்த முடிவுக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தப் பதவி விலகல் கடிதத்தை கவித…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய 3 விடயங்களை உள்ளடக்கியதாக இருக்குமென கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன தெரிவித்துள்ளார். யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பருத்துறை, தென்மராட்சி, உடுவில் பகுதிகளில் 25ம், 26ம் திகதி களில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களில் மக்களுக்கு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு …
-
- 0 replies
- 624 views
-
-
மகிந்தவுக்கு நிதி உதவி வழங்கவில்லை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சீன நிறுவனம்JUL 24, 2015 | 6:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது எந்தவொரு அரசியல்வாதிக்கும், தாம் நிதியுதவி வழங்கவில்லை என்று, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 149 மில்லியன் ரூபாவை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த தகவல், தவறானது, அனைத்துலக மட்டத்திலி எமது நிறுவனத்துக்கு இழிவை ஏற்படுத்தக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில்…
-
- 0 replies
- 285 views
-
-
இணையங்களை முடக்கும் மஹிந்த சதி அம்பலம். July 24, 20158:49 am பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெறும் பட்சத்தில் முக்கிய இணையத்தளங்களை முடக்கிவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குருநாகலையில் அமையப்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லத்தில், ஓய்வு பெற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் உட்பட்ட தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி சார்பு செய்திச் சேவையொன்று தெரிவிக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சந்திரா வாகிஸ்த, கீர்த்தி ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். தொலைக்காட…
-
- 0 replies
- 280 views
-
-
வணக்கம் வீரயுகத்தை பிரசவித்த மண்ணிலிருந்து உங்கள் சமூகசேவை வள்ளலின் வணக்கங்கள். தாய் மண் பற்றும் தமிழ் மொழி என்ற சிறப்பும் எங்கள் தலைவன் பிரபாகரன் காட்டிய மரபும் நாங்கள் மறக்கமுடியாத வரலாற்று பொக்கிசங்கள். தந்தை செல்வா காட்டிய 30 வருச அறநெறியும் தலைவன் பிரபாகரன் காட்டிய 30 வருச களநெறியும் எங்கள் தானைத்தலைவன் சம்பந்தர்காட்டப்போகும் புதுநெறியும் கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க்குடிக்கு தலைப்பா கட்டும் காலங்கள். என்ன அப்பு என்ன நடந்தது என்று கேப்பிங்கள். பொறுமையாக கேளுங்கோ. இது தேர்தல் காலம் என்பதற்காய் சொல்லவில்லை. ஆனாலும் சொல்கின்றேன். ஆனந்தபுரத்தில் அலையாய் வந்து எதிர்த்தோரை மலையாய் எதிர்த்தவீரனின் மட்டற்ற உறவு மட்டுமல்ல. எங்கள் தலைவன் பிரபாவின் மக…
-
- 0 replies
- 205 views
-
-
//Ian Paisley (North Antrim) (DUP):- (British MP) , I took a day out and spent it with the leader of Tamil National Alliance, Mr Sampanthan. I spoke to him and his party colleagues at length, and I waited for him because I wanted to hear from him at first hand, without his being pushed or prodded into some of the difficult issues about the past. He did not raise with me the issue of the disappeared; he did not take time to raise with me the issue of war crimes; he did not take time to talk about routine torture, in his country, of his people. He had a politician with him from this nation and he did not want to talk about those things. In fact, he actively applauded the Go…
-
- 19 replies
- 1.2k views
-
-
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை: பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசாவுடன் செவ்வி…. (புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் தற்போதைய நிலவரம் என்ன? இவ்வழக்கில் இருந்து நீங்கள் விலகியதன் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன?, எதிர்காலத்தில் இந்த வழக்கில் ஆஜராவீர்களா?, தடயங்கள் அழிக்கப்பட்டதாக அரசியல்வாதி ஒருவரால் குற்றம் சாட்டுவதன் காரணம் என்ன? அந்த குற்றச்சாட்டு உண்மையா?... உங்களுக்கும், அந்த அரசியல்வாதிக்கும் உள்ள பிரச்சினை என்ன?? உட்பட பல கேள்விகளுக்கு, மனம்திறந்து ஆக்ரோஷமாகவும், ஆணித்தரமாகவும் அளித்த பதில்கள்..) http://www.athirady.com/tamil-news/howisthis/627997.html
-
- 0 replies
- 351 views
-
-
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்களை குழந்தையின் நிர்வாணப் படத்துடன் ஒன்றிணைத்து முகநூலில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவன் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளான். ஐந்து லட்சம் ரூபா இரண்டு சரீர பிணையில் மாணவனை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பெல்பிட்டிய நேற்று (23) உத்தரவிட்டார். குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் (மாணவன்) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அம்பலாங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட உயர் தரத்தில் பயின்றுவரும் மாணவனே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களைப் பய…
-
- 0 replies
- 420 views
-
-
நாட்டின் தேசிய சமாதான முனைப்புக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருக்கின்றார்கள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை பிரயோகித்து வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாகவே உலகின் பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழி தனி நாடல்ல எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தேசிய இனப்பிரச்சிச்னைக்கான தீர்வினை பிழையாக புரிந்து கொண்டதாகவும் அவர்…
-
- 0 replies
- 488 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு 01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை சாசனத்தினால் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு வழங்கப்படுமு; சுயநிர்ணய உரிமையுடன் கூடியதும் அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலுடன் கூடியதுமான தன்னாட்சியுடன் இணைப்பாட்சிக் கட்டமைப்பை அடைவதற்கான அரசியல் தீர்வை அடைவது. 02) அச்சுறுத்தல் காரணமாக குற்றங்களை நிர்ப்பந்த்தின்…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறது என கேட்பவர்களுக்கு சொல்ல வேண்டும். வெளிப்படையான எதிரியை, தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தை பெறாதவர்களை நாம் விமர்சிக்க வேண்டுமா? அல்லது நாம் இரத்தம் சிந்தி, உயிர் விலை கொடுத்து எங்கள் அடிமனதில் பதித்திருக்கும் தாயகம், தேசியம், …
-
- 0 replies
- 1.4k views
-
-
அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு, இணக்கப்பாட்டுடன் ஒற்றையாட்சி ஆட்சியின் கீழ் அதியுச்ச அளவில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (23) விகாரமாதேவி திறந்தவெளியில் வெளியிடப்பட்டது. இதில் உரையாற்றும்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தத் தேர்தல் வாக்குறுதிளை அளித்தார். பொருளாதாரத்தை மேம்படுத்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், முதலீடுகள் மற்றும் கல்வித் துறையை மேம்படுத்தல் ஆகிய ஐந்து பிரதான கொள்கைகளை முதன்மைப்படுத்தி ''60 மாதங்களில் புதிய நாடு'' என்ற கருப்பொருளில…
-
- 0 replies
- 343 views
-