ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
நாம் கடந்த 5 வருடங்களாக என்ன செய்தோம் என்று கேட்பவர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு போராட்ட களத்தினை திறந்து வைத்தவர்கள் நாமே. முல்லைத்தீவு கேப்பாபிலவில் முழுக் கிராமம் பறி போன போது தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று சொல்லிக் கொண்டோர் மௌனமாக இருந்தனர். நாமே அம்மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினோம் அது போல கிளிநொச்சி பரவிப்பாஞ்சன் நில அபகரிப்பு, தமிழ்க் கைதிகளின் (நிமலரூபன்) சிறைப் படுகொலை, காணாமல் போனோர் பிரச்சனை போன்றவை தொடர்பில் போராட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் நாமே. ஐ. நாவில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொள்வோர் உரையாற்றியதில்லை. நாம் ஐ. நாவிலும் இப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தோம். எமது பங்களிப்பை நியாயமாக சிந்திப்போர் தட…
-
- 2 replies
- 319 views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் "கருணா"வுக்கு சீட் வழங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. நியமன எம்.பி.யாகவும் கருணாவை அந்த கூட்டமைப்பு நியமிக்கவில்லை. இதனால் இலங்கை அரசியலில் இருந்து கருணா முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி இலங்கை அரசாங்கம் பக்கம் போனார். அவருக்கு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிப் போர…
-
- 46 replies
- 2.8k views
-
-
தேசியப் பட்டியலில் றோ உளவாளியாம்! - விலகிக் கொண்டார் நளின் டி சில்வா[Wednesday 2015-07-15 19:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகி கொண்டுள்ளதாக பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் இருப்பதன் காரணமாகவே தான் அதில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் றோ அமைப்பு மற்றும் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்புகள் இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன எனவும் நளின் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெ…
-
- 1 reply
- 379 views
-
-
மகிந்த இழைத்த அநீதிகளுக்காக கடவுளிடமிருந்து தப்ப முடியாது: மேவின் சில்வா:- 15 ஜூலை 2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ராஜபக்ஸ குடும்பத்தின் சதித்திட்டங்களுக்கு உள்ளாகியுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை உயர்த்தி வைப்பதற்கு செயற்பட்ட சிலரும் பசில் ராஜபக்ஸவும் வேட்பு மனு வழங்கும் செயற்பாட்டை தமது பொறுப்பில் எடுத்து செயற்பட்டமையினால் தனக…
-
- 3 replies
- 2.3k views
-
-
கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தமிழர் தரப்பினரும் முன்வைத்து அனைத்துலகத்திடம் நீதி வேண்டி போராடி வந்த சூழலில் கனடியத் தமிழர் தேசிய அவைய…
-
- 0 replies
- 376 views
-
-
கொழும்பில் கோத்தாவின் பாரிய மோசடி..! தப்பினார்கள் தமிழர்கள்…. July 15, 20159:00 pm மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டி னையடுத்து ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா நேற்று தெரிவித்தார். ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களுள் அநேகமானவர்கள் தமிழர்களாக இருந்த போதும் ஒப்பந்தப் பத்திரங்கள் தமிழில் இல்லாமை கவலைக்குரிய விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்காக கோத்தபய ராஜபக்ஷவின் மேற்படி ஒப்பந்தங்களை ரத்துச் செய்யுமா…
-
- 0 replies
- 466 views
-
-
மகிந்தவைக் காப்பாற்ற முனைந்து மாட்டிக் கொண்ட சுசில்JUL 16, 2015 | 2:10by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்திருக்க முடியாது. ஏனென்றால், 1981ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் சட்டப்படி, தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களை அல்லது, குறித்த தேர்தலில் போட்டியிட்டு…
-
- 0 replies
- 492 views
-
-
சிறிலங்கா தேர்தல் கண்காணிப்பில் 3 வெளிநாட்டுக் குழுக்கள் – அமெரிக்க குழுவுக்கு இடமில்லைJUL 16, 2015 | 2:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க மூன்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வரவுள்ளன. சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த அழைப்புக்கு அமையவே, இந்த வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், கொமன்வெல்த், சார்க் கண்காணிப்புக் குழுக்களே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் ஆணையம், கொமன்வெல்த் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அதிகாரிகள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள…
-
- 0 replies
- 187 views
-
-
மன்னாரில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு! [Wednesday 2015-07-15 19:00] தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகம் இன்று மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது. மன்னார் புகையிரத வீதிக்கு அருகில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் தேர்தல் நடவடிக்கைகளை மன்னாரில் முன்னெடுக்க அதன் முதலாவது கிளையை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வைபவ ரீதியாகத் திறந்துவைத்தார். தமிழரசுக் கட்சியின் கொடியை ஏற்றிவைத்த மாவை சேனாதிராஜா அதன் பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்து கட்சி காரியாலயத்தையும் வைபவரீதியாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதன்போது வன்னி மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி சார்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
திரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு! பகலவன் திரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு! பகலவன் வீரகேசரி-உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்களைப் பார்த்ததால் இக்கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன். “என் எழுத்தாயுதம்” நூலில் வெளிவந்த படங்கள் யாரையும் இது தொடர்பாக சுதந்திரமாகக் கருத்துச் சொல்லவும், தம்மை அடையாளப்படுத்துவும் வழிவகுக்க மாட்டா வென்பதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதுக்குள் ஒப்புக் கொள்வீர்கள். எமது மக்களுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் எப்போதும் சரியாகத்தான் நடந்துள்ளார்கள். இந்தியர்களைப் போலவோ, சிங்களவர்களைப் போலவோ, ஏன் மலையக மக்களைப் போலவோ அன்றி வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள். அவர்கள் எப்போதுமே மேற்குறிப்பிட்டவர்கள் பாணியில் நடந்ததில்லை. இந்தியாவில் நேரு- இந்திரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரமாட்டார்! -அடித்துச் சொல்கிறார் சிங்களச் ஜோதிடர்[Wednesday 2015-07-15 19:00] ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிய கடவுள் அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்கமாட்டார் என பிரபல சிங்கள ஜோதிடர் இந்திக தொட்டவத்த ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி ஆரூடங்களை வெளியிட்ட கண் பார்வையற்ற ஜோதிடர் இந்திக தொட்டவத்த, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என்பதை உறுதியாக கூறியிருந்தார். மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார் என்று பகிரங்கமாக ஆரூடம் கூறிய ஒரே ஜோதிடரும் இவரே.தாம் எப்போது உண்மையையே கூறுவதாகவும் பணத்தை சம்பாதிக்கு…
-
- 0 replies
- 469 views
-
-
ராஜித, ஹிருணிகா, உள்ளிட்ட ஐவரின் உறுப்புரிமையை பறிக்கத் திட்டம்! [Wednesday 2015-07-15 19:00] ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்ற ஐவரை அக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களால் மத்திய செயற்குழுவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள, ராஜித சேனாரத்ன, ஹிருணிகா பிரேமச்சந்திர, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, அர்ஜூன ரணதுங்க மற்றும் வடிவேலு சுரேஷ் ஆகியோரது உறுப்புரிமையை நீக்கும் படியே கோரப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார். http://www.seithy.com/brei…
-
- 0 replies
- 396 views
-
-
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்! [Wednesday 2015-07-15 19:00] நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் அரச அச்சகத்திற்கு தேவையான அனுமதி நேற்று வழங்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களில் குறித்த வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=135928&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் தபால் மூலம் வாக்களிக்க 12,500 பேர் விண்ணப்பம்! [Wednesday 2015-07-15 19:00] பாராளுமன்றத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணங்கள் அனுப்பி வைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்து 500 ற்கும் அதிகமானவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 17ம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்கான விநியோக அறிவித்தல் விடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி புதக்கிழமை தபால் மூல வாக்களிப்பிற்கான இடாப்பு அத்தாட்சிப்படுத்தல் நடைபெறவும் உள்ளது. மேலும் எதிர்வரும் 24ம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்னா விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படவும் உள்ளத…
-
- 0 replies
- 507 views
-
-
“சர்வஜன வாக்கெடுப்பு – 2020” - ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு:[Wednesday 2015-07-15 19:00] கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோ…
-
- 0 replies
- 331 views
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு வரும் 17ஆம் திகதி பதிலளி்க்கப் போகிறாராம் மகிந்த! [Wednesday 2015-07-15 19:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் 17ம் திகதி அனுராதபுரத்தில் பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர், அந்த உரைக்கு வரும் 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் பதில் தருகிறேன் எனக் கூறியுள்ளார். http:/…
-
- 0 replies
- 158 views
-
-
மைத்திரியின் அனுமதியின்றி சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் தடை! [Wednesday 2015-07-15 19:00] ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரது அனுமதியின்றி அக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஐனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையொன்றை ஆற்றினார். அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் தான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரபட்சம் இன்றி நடுநிலை வகிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று ந…
-
- 0 replies
- 261 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை பார்க்கக் கிடைத்தது. இவர்களது அரசியலையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். பல்கலைக்கழக ஆசிரியர்களை பல்கலைக்கழக மாணவர்களை கல்வியாளர்களை உள்ளடக்கிய வேட்புமனுவினைத் தாக்கல் செய்து அரசியலில் நுழைந்து தம்மையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்த்துக் கொண்டு அரசாங்கத்திடமிருந்து சொகுசு வாகனங்களையும் இதர வசதிகளையுமம் பெற்றுக் கொண்டு இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அரசியல் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியை அரசாங்கத்தில் இருத்துவதற்கு சிங்கள மக்கள் இன்னமும் தயாராயில்லை. ஆனாலும் மக்கள் விடுதலை முன்னணியின் புனிதமான அரசியலைக் கண்டு ஐக்கிய தேசியக் கட்சிக் காறனாக நான் வெட்கப்படுகிறேன் என ஐ…
-
- 9 replies
- 686 views
-
-
“TNA” தோற்றுவிடக்கூடாது அனந்தி. July 15, 20159:08 am தமிழ்த் தேசியத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி கேட்டுக்…
-
- 6 replies
- 829 views
-
-
தமிழர்களுக்கு வந்த வீடுகளை பஸில் ராஜபக்ஷவை வைத்து முஸ்லிம்களுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கினார் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிசோர் தெரிவித்தார். வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், எங்களை புலிகள் நியமித்தமையினால் அடுத்த தேர்தலில் எம்மை புலிகளுடன் தொடர்புகொண்டு ஆசன ஒதுக்கீடுகளை கேளுங்கள் நாம் உங்களுக்கு ஆசனங்களை தரமுடியாது என மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். ஆனால் இன்றும் அந்த கட்சியை வைத்தே அவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி நான்கு கட்சிகளையும் தமிழ்த் தேசியக…
-
- 2 replies
- 773 views
-
-
குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக் கூட என்னால் பதிலளிக்க முடியாது என நீதிமன்றிற்கு நேரடியாக தெரிவித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. கடந்த 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள், கப்பம் பெற்றமையுடன் ஈ.பி.டி.பியினர் தொடர்புபட்டுள்ளனர் என்று உதயன் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. குறித்த செய்தியினால் தனது நற்பெயருக்க…
-
- 1 reply
- 518 views
-
-
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இம்முறை குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபைக்குத் தெரிவான சிவாஜிலிங்கம் இம்முறை பொதுத் தேர்தலில் திடீரென குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்த பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும், மகிந்த ராஜபக்சவின் பிரசாரத்திற்கு வலு சேர்ப்பதற்காகவே சிவாஜிலிங்கம் குருணாகல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளதாக எம்முடன் உரையாடிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கான பின்னணியும், காரணமும் குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய போது, ''மகாராஜா கூட்டு நிறுவனத்திற்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங…
-
- 6 replies
- 623 views
-
-
குருநாகல “SLMC” ஆதரவு உடைந்தது…! பலமாக “JVP” July 15, 20151:34 pm குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடயிருந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா வேட்பாளர் பெயர் பட்டியிலிருந்து நீக்கியதை அடுத்து குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் ஆதரவாளர் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவிலுள்ள முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வருவதாக நம்பத் தகுந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுப்பத்திரத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா 18 வதாக கையொப்பமிட்டதாகவும் அது டிபெக்ஸ் மூலம் அழிக்கட்டு சஹாப்தீன் முஹமட் சாபி என்பவருட…
-
- 0 replies
- 635 views
-
-
பதவி விலகாத அரசியல் தலைவர்கள் பலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி. July 15, 20158:36 am மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று மாகாண முதலமைச்சர்கள் தமது பதவியை விட்டு விலகாமலேயே, எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடுகின்றனர். ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ பதுளை மாவட்டத்திலும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பகா மாவட்டத்திலும், வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜெயசேகர குருநாகல மாவட்டத்திலும் போட்டியிடு…
-
- 0 replies
- 351 views
-
-
ஐ.நா பிரகடனத்தை சட்டமாக்குவேன்! - முதல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் [Wednesday 2015-07-15 07:00] ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க தற்போது நாட்டிலுள்ள சட்டங்கள் போதாது. அதனால் ஐக்கிய நாடுகளின் ஊழல் மோசடி பிரகடனத்தை இந்த நாட்டுக்குள் சட்டமாக்குவேன்.அதன் ஊடாக ஊழல் மோசடிகளை கண்டுபிடிக்க புதிய அமைப்பொன்றை அமைப்பேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு கூறினார். கடந்த அரசு செய்த ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்யும்போது எமக்கு பாரிய பிரச்சினையாக இருந்தது. அந்த விசாரணைகளை முன்னெடுக்க பயிற்சிபெற்ற உத்தியோகத்தர்கள் இன்மையே ஆகும். அ…
-
- 6 replies
- 2k views
-