ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கையர்களின் நீண்டகாலக் காத்திருப்பு வீணாகக் கூடாது – அமெரிக்க ஊடகம்JUL 15, 2015 | 14:12by நித்தியபாரதிin செய்திகள் சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படும் சிறிலங்காவில் கடந்த பத்தாண்டாக குடும்ப ஆட்சி நிலவியது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காத் தீவில் நிலைநாட்டப்படுவதற்கு இக்குடும்ப ஆட்சி வழிகோலியது. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அதிகாரம் மிக்க அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருந்த இவரது இரண்டு சகோதரர்களும் நாட்டின் 70 சதவீத வரவுசெலவுத் திட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவர்கள் மட்டுமல்ல இவர்களுடன் இணைந்து ராஜபக்சவின் அரசாங்கத்தில் கடமையாற்றிய 29 உறுப்பினர்கள் பல்வேறு உயர் பதவிகளை வகித்தனர். ராஜபக்சவ…
-
- 0 replies
- 439 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார குழுத் தலைவராக மகிந்தராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள் ளார். அந்த கூட்டணியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் இன்று ஒன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் இடம்பெற்ற போது மகிந்த ராஜபக்ஷவே அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி இருந்தார். இதில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருக்கவில்லை. மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கப்படும் போது, அவர் பிரசார குழுவின் தலைவராக நியமிக்கப்பட மாட்டார் என்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/41594/57//d,article_full.aspx
-
- 1 reply
- 388 views
-
-
சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்புJUL 15, 2015 | 13:07by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிரவு 8 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா அறிவித்திருந்தார். இதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடைவிதித்திருந்தார். அதையும் மீறி கூட்டம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரசன்ன சோ…
-
- 0 replies
- 365 views
-
-
இன அழிப்பானது 30 ஆயிரம் அங்கவீனர்களையும், 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகளையும், 12 ஆயிரம் அனாதை சிறுவர்களையும், 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து யுத்தக் குற்றத்தினை புரிந்துள்ள மகிந்த அரசாங்கம் மீண்டும் கதிரையேற அனுமதிக்க கூடாதென முன்னாள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜக்கிய தேசியக் கட்சி 100 ற்கும் அதிகமான ஆசனங்களை கைப்பெற்றி ஆட்சி அமைக்கும். பிரதமராக மக்களால் ரணில் விக்கிரமசிங்க …
-
- 14 replies
- 1.1k views
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் வன்னியில் வேட்புமனுவை கையளித்தனர். இதில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன், சிவரதி ராஜ்குமார், வீ.திகாஸ் விக்னேஸ்வரன், இந்திராணி விவேகானந்தன், செ.பாலசுப்பிரமணியம், க.பார்த்தீபன், ப.ஜனன், முன்னாள் போராளியான இ.பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ;- தமிழினத்தின் இருப்பை காப்பாற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் தமிழ் மக்கள் கைகோர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி தொகுதி முதன்மை வேட்பாளர் சிவபாதம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா மாவட்ட ச…
-
- 1 reply
- 350 views
-
-
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறமுடியும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் சரிசமமான பிரதிநிதிகளைப் பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு ஏற்பட்டால் நாம் பாராளுமன்றத்தில் ஆட்சியைதீர்மானிக்கும் சக்தியாக மாறுவோம் என்றும் கூறினார். திருகோணமலையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/articles/2015/07/14/கூட்டமைப்பின்-வெற்றிக்காக-அனைவரும்-உழைக்க-வேண்டும்-இராசம்பந்தன்
-
- 9 replies
- 812 views
-
-
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஈபிடிபி 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் வெற்றிபெற்றிருந்தன. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவேண்டிய வாக்குகளையே அது பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அத்தேர்தலில் போட்டியிடாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 6 ஆசனங்களும் தேசியப்பட்டியலில் 2 ஆசனங்களும் ஈபிடிபிக்கு ஒரு ஆசனமுமே கிடைத்திருக்கும். ஆனால் அடுத்து இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும், மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடாத நிலையில் எதிர்க்கட்சிகளே இல்…
-
- 1 reply
- 328 views
-
-
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டத்திற்கு 43 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். அவ்வகையினில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றிற்கு வடமாகாணசபையால் வெறும் மூவாயிரத்து ஜநூறினையே வழங்கமுடியுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர். வடமாகாணத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரும் போரால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உயிரிழப்பு,சொத்து இழப்பு போன்றவற்றால் எமது மக்கள் மனதளவில் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த போரின் வாயிலாக எமது மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில் நான் எனது அமைச்சுப் பொறுப்பை பதவியேற்றதன் பின்னர் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள கிராமங்களிற்கு செல்கின்ற …
-
- 2 replies
- 584 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வெற்றி பெறவைக்கவேண்டுமென சர்வதேச தரப்புக்கள் கூறுகின்றனவென கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கட்சி ஆதவாளர்களை திருமலையினில் சந்தித்த அவர் தெற்கினில் நிரந்தரமான ஆட்சி அமையாதெனவும் அதனால் கூட்டமைப்பு பலத்துடன் இருந்தாலேயே பேரம் பேசமுடியுமென தெரிவித்துள்ள சம்பந்தன் எனினும் புதிய அரசுடன் இணைந்து அமைச்சரவையினில் கதிரையினை கைபற்றுவது பற்றி பரிசீலிப்பதாக தெளிவான பதில் எதனையும் தெரிவித்திருக்கவில்லை. தனிப்பட்ட துண்டுபிரசுரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளவேண்டாமென தனது சக வேட்பாளர்களிடையே பணிப்புரை விடுத்துமுள்ளார்.தனது வெற்றி தொடர்பினில் அச்சம் கொண்டுள்ள சம்பந்தன் தனது கட்சி அங்கத்தவர்கள் தொடர்பிலும் போட்டி மனோநிலையினில…
-
- 0 replies
- 527 views
-
-
மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மை மக்களை பழிவாங்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளாலேயே மகிந்தராஜபக்ஷ தோல்வியை தழுவினார். தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் மைத்திரிக்கே அதிக அளவு வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் சிறிலங்காவின் தெற்கு பகுதிகளில் சிங்கள மக்கள் பெரும்பாலும் மகிந்தவுக்கே வாக்களித்திருந்தனர். இந்த நிலையில் தமது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ள தமிழ் மக்களை பழிவாங்கும் எண்ணம் மகிந்தவிடம் தீவிரமாக காணப்படுகிறது. இதன்காரணமாகவே போட்டியிடும் குருணாகலை மாவட்டத்தில், அவரது தலைமையிலான வேட்பாளர் குழுவில் ஒரு சிறுபான்மை இனத்தவரேனும் உள்ளடக்கப்படவில்லை என்று …
-
- 0 replies
- 360 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சுயேச்சைக் குழு தமது சின்னமாக புலிமுகச் சிலந்தியைத் தெரிவு செய்துள்ளது. தாம் சிலந்தி சின்னத்தை தெரிவு செய்திருப்பதாகவும், அது புலிமுகம் கொண்டதாக இருப்பதால், தமது கட்சிக்கு நல்லது என்றும் சுயேச்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் ந.வித்தியாதரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் …
-
- 0 replies
- 319 views
-
-
நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை பிரிக்கும் வேலையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து வருகின்றார். மீண்டும் ரணில் கையில் ஆட்சியை கொடுத்தால் நாட்டை புலிகளின் காலனித்துவ நாடாக மாற்றிவிடுவார். ஆகவே, மக்களுக்கு கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட வேண்டாம் என தேசிய சுதந் திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வெற்றிக்கனவில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது போயுள்ளது. அதற்கு காரணமும் உள்ளது. கடந்த பல ஆ…
-
- 1 reply
- 354 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலைசிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாகசமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய யாழ்.மருத்துவர்சங்கத்தின் தலைவருமாகிய முரளி வல்லிபுரநாதன்தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும்அவர் கூறியுள்ளார். ஜுலை 11ம் திகதி உலக குடித்தொகை தினத்தை ஒட்டிஇலங்கையில் தமிழர்களின் எதிர் கால இருப்பு தொடர்பாகயாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த வருட குடித்தொகைதின தொனிப் பொருளாக அபாய நிலையில் உள்ள ஊறு படத்தக்க குடித்தொகையை…
-
- 3 replies
- 501 views
-
-
சித்தாண்டி பிரதேசத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு முறைகேடான முறையில் நடைபெற்றத்தையிட்டு, சித்தாண்டி இளைஞர் அணியினர் சுயேட்சைக் குழுவில் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ளது என்று அதன் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் தெரிவித்தார். சித்தாண்டியில் திங்கட்கிழமை (13) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேர்தலில் களம் இறங்கவிருந்த வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்றது. கல்குடாத்தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் இம்முறை களம் இறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சித்தாண்டி பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க புதுமுக வேட்பா…
-
- 1 reply
- 290 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி உடுவிலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை. சேனாதிராஜா தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு வார காலத்தினுள் தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட வடகிழக்கு வாழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை உள்ளடக்கி எமது தேர்தல் விஞ்ஞாபனமானது வெளியிடப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தே…
-
- 7 replies
- 547 views
-
-
2005ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா செய்ததனைப் போன்றே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்வதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்கா மிரருக்கு தெரிவித்துள்ளார். ''மைத்திரி இதுபோன்று கருத்து வெளியிடுவார் என்பதனை நான் எதிர்பார்த்திருந்தேன். இது குறித்து பதற்றம் அடைய வேண்டியத் தேவையில்லை. 2005ஆம் ஆண்டு மகிந்த வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னர் சந்திரிக்கா இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்டிருந்தார். யார் மீதும் குரோம் கொள்ளக் கூடாது எனக் வந்த மைத்திரியின் குரோதம் எவ்வளவு கடுமையானது என்பதனை மக்கள் நேற்று புரிந்து கொண்டார்கள். கட்சித் தலைவர் என்ற ரீதியில் மைத்திரி பலவீனமடைந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. …
-
- 0 replies
- 264 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளினால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் டாலி வீதியில் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தற்போது கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சமூகமளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தக் கூட்டம் குறித்த செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பிலுள்ள 16 கட்சிகளின் பிரதிநிதிகளும் இங்கு கூடியுள்ளதாக தெரியவருகிறது. http://www.tamil.srilankamirror.com/news/item/3500-2015-07-15-07-57-04
-
- 0 replies
- 378 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இன்று (15) நள்ளிரவு 8 மணிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் எமது இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட கருத்துக்களினால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் முழுமையாக சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்தார். இது மிகப்பாரிய அனர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து தனக்கு தனித் தீர்மானமொன்றை எடுக்க முடியாது என்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தி…
-
- 0 replies
- 394 views
-
-
பொதுத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்க உள்ளது 15 ஜூலை 2015 இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்க உள்ளது.இலங்கை அதிகாரிகளின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் பெரேடா தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தல்களை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக்கொண்டதாக ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான பிரதித் தலைவர் பெட்ரிக்கா மொகொரினி தெரிவித்துள்ளார்.இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்திக் கொள்ள தொடர்ச்சியான ஆதரவு வழங்…
-
- 3 replies
- 310 views
-
-
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விரக்தியடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் சிலர் இன்று இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கேட்டபோது, தான் இன்று (15) அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையின் பின்னர் தான் கடுமையாக விரக்தியடைந்துள்ளதாகவும், இதனால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் பணிகளை நிறுத்திவிட்டு தான் கொழும்பு திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 490 views
-
-
தனக்கு மைத்திரி தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான பல அனுபவமுள்ளவர்கள் இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.
-
- 6 replies
- 717 views
-
-
நல்லாட்சி பற்றி பேசும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தமது ஆறு மாதகாலத்தில் இருந்த நல் லாட்சியையும் அழித்து விட்டது. எமது தலைவர் மஹிந்தவை விமர் சிக்கும் தகுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. எம்மை விமர்சிக்க முன்னர் ரணிலும் அவரது கூட்டமும் தம்மை தாமே கண்ணாடியின் முன்னால் விமர்சித்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற எமது தலைவர் மைத்திரிபால சிறிசேனவே தூணாக இருந்தார். அவரே இம்முறை எமக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றார். ஆகவே எமது வெற்றி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற …
-
- 0 replies
- 202 views
-
-
பிரசார நடவடிக்கைகள் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல்கள் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் பிரதான கட்சிகள் தங்களின் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் அனைத்தும் இணைந்து பிரசாரங்களை நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரியநேத்திரன் கூறியுள்ளார். அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தனித்தனியே தங்களின் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார். http://www.pathivu…
-
- 1 reply
- 602 views
-
-
அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கல்வி கற்கும் கட்டடத்தின் மீது திங்கட்கிழமை (13) இரவு, மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பிட்ட கட்டடத்தில் இரவு மரம் முறிந்து வீழ்ந்தமையால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கட்டிடத்தின் மீதே வாகை மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது. கல்லூரியில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக காணப்படும் நிலமையில் தற்போது மரம் முறிந்து வீழ்ந்து கட்டடம் சேதம் அடைந்துள்ளமையால் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (14) வகுப்பறைகளுக்கு வெளியில் மரங்களின் கீழேயே கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உடனடியாக வடமாகாண கல்வித்திணைக்களம் இந்த மா…
-
- 0 replies
- 208 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் குருநாகலில் போட்டியிடுகின்றார். இரட்டைக் கொடி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.http://www.pathivu.com/news/41556/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.5k views
-