ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் நிறைந்த கடந்த காலத்தை திருத்திக்கொள்ளாமல் கடக்க இலங்கை முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற தொடர்பில் அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முனைப்பிற்கு இலங்கைத் தமிழர்க…
-
- 0 replies
- 127 views
-
-
நிமிடம் 10.16 பின்பு சூடாகின்றது .
-
- 2 replies
- 557 views
- 1 follower
-
-
"உங்களை காயப்படுத்துவதற்கான கேள்விகளோ, சந்தேகங்களோ அல்ல... நிலவுகின்ற சூழலை புடம் போடுவதற்கான வழிமுறையே..." நடராஜா குருபரன்... (ஆவணப்படம்) முள்ளிவாய்க்காலின் பின் முன்னாள் போராளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகள் சார்பில் பலருடன் தொடர்பு கொண்டிருக்கிறேன்.. இவர்களில் பலர் ஆண் போராளிகள்.. பலர் பெண் போராளிகள்... வாழ்வாதாரப் பிரச்சனைகள் காரணமாக துயரங்களை அனுபவித்தவர்களுக்கு சிலரிடம் இருந்து உதவிகளை பெற்று கொடுத்திருக்கிறேன்... இந்த பதிவைப் பார்க்கும் என்னுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு இதன் உண்மைத் தன்மை புரியும்... அண்மையில் முன்னாள் போராளி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பல விடயங்களை தொடராக குறிப்பிட்ட…
-
- 3 replies
- 400 views
-
-
வடக்கின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவி தேவை! - அமெரிக்காவில் விக்னேஸ்வரன் [Monday 2015-07-06 20:00] இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை குறைத்துள்ளதால்,தமிழர்கள் வளமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை தற்போது குறைத்துள்ளது. வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு நகைப்புக்குரியதாகவும், கேலிக்குரிய வ…
-
- 9 replies
- 527 views
-
-
மைத்திரியைக் காணவில்லை…! ரணில், சந்திரிக்கா அதிர்ச்சியில் நேற்று காலை 7 மணியளவில் தனது மகளான சத்துரிக்கா சிறிசேனவிற்கு சொந்தமான ஹோட்டல் பகுதி ஒன்றை திறக்கவென பொலன்னறுவை சென்ற ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகல் வேளையில் ஹிருணிகாவின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து இட கொழும்பு திரும்பியுள்ளார். அதன்பின் கண்டி நோக்கிச் சென்றுள்ள ஶ்ரீலங்கா ஜனாதிபதி தற்போது யாருக்கும் கண்டுபிடிக்க முடியாத அளவு காணாமல் போயுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பிரதமர் ரணிலும் பல தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் ஜனாதிபதியை அடைய முடியவில்லை. ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் பாதுகாப்பு தரப்பும் ஜனாதிபதி குறித்து தகவல் வழங்க மறுத்துள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் …
-
- 3 replies
- 329 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 1987 ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதையின்போது முன்னாள் இந்திய பிரதமரை தாக்கிய கடற்படை உத்தியோகத்தர் விஜித ரோகன விஜேமுனி பொதுபல சேனா சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். கம்பஹாவில் பொதுபல சேனா சார்பில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் கீழ் தேர்தலில்போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121741/language/ta-IN/article.aspx
-
- 3 replies
- 240 views
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வரை ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ளதுடன் மேலும், இரண்டு சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளதாக தாக யாழ்.மாவட்ட உதவி தேர்தல் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யும் கால எல்லை எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றது. இந்தநிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பபடிவங்களை உதவி தேர்தல் ஆணையாளர் பணிமையில் பெற்றுள்ளனர். எனினும் ஒரு அரசியல் கட்சியே இன்று வரையான காலப்…
-
- 1 reply
- 205 views
-
-
-
- 0 replies
- 364 views
-
-
முன்னாள் போராளிகள் தேர்தல் களத்தில் குதிப்பது மற்றும் இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆய்வாளரும் அரசியல் விமர்சகருமான யதீந்திரா அவுஸ்திரேலிய 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 06.07.2015 அன்று வழங்கிய நேர்காணல். ஒலிப்பதிவினை கேட்பதற்கான இணைப்பு: http://yourlisten.com/ttbsradio/jathindras-political-analysis
-
- 0 replies
- 592 views
-
-
கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் யுவதி ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அனுமதி பெறப்படாமல் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் அங்கு சென்ற பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்ட யுவதியைக் கைதுசெய்தனர். வவுனியாவைச் சேர்ந்த இந்த யுவதியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். http://www.malarum.com/article/tam/2015/07/08/10908/கொடிகாமம்-விடுதி-ஒன்றில்-விபசாரத்தில்-ஈடுபட்ட-யுவதி-கைது-.html#sthash.RqBSw4X6.dpuf
-
- 0 replies
- 203 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் மேல் மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பில் மனோ கணேசன் தலைமையிலான கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை புதன்கிழமை (08) சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான கூட்டமைப்புடன் நாங்கள் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். ஏனெனில் அவர்கள் எமது நட்பு…
-
- 4 replies
- 200 views
-
-
வடக்கில் கூட்டமைப்புக்கு எதிராக புதிய முத்தரப்புக் கூட்டணி? [Wednesday 2015-07-08 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் தனிநபர்களும் இணைந்து முத்தரப்பு கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் இந்த புதிய கூட்டணி போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு வழங்காமல் விடப்பட்ட உறுப்பினரையும் இணைத்துக் கொண்டே இந்த முத்தரப்பு கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண…
-
- 13 replies
- 517 views
-
-
யுத்தத்தில்தான் கைவிட்டோம்; கையெழுத்தாவது போடமாட்டோமா? இதுதான் தமிழனின் தலையெழுத்தா? தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத் தளங்களில் போடப்படும் பதிவுகளோடும்தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது. அன்பான தமிழ் மக்களே எங்களிடம் சிறந்த பேச்சுத்திறனும், அபூர்வமான நடிப்புத்திறனும் உண்டு அதனால் தான் நாம் எமது இனத்தினை இழந்து, கனவை சிதைத்து நிற்கின்றோம். இல்லையாயின் எங்கள் இதயத்தின் இலட்சியமான விடுதலைப் போராட்டத்தை இழந்து இன்று அரசியல் அநாதைகளாக நின்றிருக்க மாட்டோம்.வெளியிலிருந்து பேசுவதும் விமர்சனம் செய்வதும், எள்ளி நகையாடி மற்றவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்துவதிலும் நாங்கள் கில்லாடிகள். விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப்புலி…
-
- 4 replies
- 11.1k views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலினைத் தொடர்ந்து காரைதீவில், அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம்; திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா மேலும் பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121735/language/ta-IN/arti…
-
- 11 replies
- 474 views
-
-
குடும்ப உறவினர் இல்லாதவரிடமிருந்து சிறுநீரக நோயாளி ஒருவர் சிறுநீரகங்களை பெறுவதை இந்திய அரசாங்கம் தடைசெய்துள்ளதால் சிறுநீரஙகளிற்காக இலங்கை செல்வது அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.. சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை போன்ற நோயாளிற்கு பணம் ஓரு பிரச்சினையான விடயமல்ல, ஆனால் அவரது உறவினர்கள் மத்தியிலிருந்து சிறுநீரகமொன்றை பெறுவது அவரிற்கு சவாலான விடயமாக காணப்பட்டது. சட்ட மன்ற உறுப்பினரான அவரது கணவர் இந்திய சட்டத்தினை மீறிசெயற்படவும் துணியவில்லை,பெங்களுர் மருத்துவர்களும் தங்களால் எதுவும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டனர். எதுவும் சரிவராது, எல்லாம் முடிந்துவிட்டது என அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையே இலங்கைக்கா…
-
- 0 replies
- 141 views
-
-
சர்வதேச பொலிசாரின் உதவியை நாடவும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கடந்த 2010 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணு வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ வீரர் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிசார் மூலமாக அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். இநஃதப் பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 இராணுவ வீரர்களில் 3 பேர் வழக்கு விசாரணைகளில் ஆஜர…
-
- 0 replies
- 129 views
-
-
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பதை சாதகமான விடயமாக கருதவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனம் வழங்கப்பட்டால் நாங்கள் அதற்கு ஜனாதிபதிக்கு நன்றிசொல்லவேண்டும் மகிந்தராஜபக்சவிற்கு போட்டியிடுவதற்கான நியமனத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சி எதிர்த்துப்போட்டியிடுவதற்கு ஏற்ற வலுவான போட்டியாளரை களமிறக்குகின்றார். ராஜபக்ச கம்பஹாவில் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கிறேன் அவர் அங்கு போட்டியிட்…
-
- 0 replies
- 139 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்து போட்யிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு வேட்பு மனு வழங்கப்படாவிட்டால் தாம் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனியான ஓர் குழுவினை அமைத்து தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்த கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரசன்ன ரணதுங்கவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே பிரசன்ன குடும்பத்தில் இரண்டு பேர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுதவதனால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரசன்ன ரணதுங்கவிற்கு வேட்பு மனு வழங்கக் …
-
- 0 replies
- 125 views
-
-
முன்னாள் போராளிகளை போட்டியிடவைப்பது நெடியவனின் திட்டமாம்! - கண்டுபிடித்தது சிங்கள ஊடகம்.[Wednesday 2015-07-08 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வேட்புமனு வழங்குமாறு கோரியது, நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பாக செயற்பட்டு வரும் நெடியவனின் திட்டம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 25 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் இலங்கை முகவர் அண்மையில் நோர்வே சென்று நெடியவன் மற்றும் அந்நாட்டின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரை சந்தித்துள்ளார். தமிழ்த…
-
- 1 reply
- 292 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலையொட்டி நாவுல நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படம் பதிக்கப்பட்ட சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் வீசி சேதப்படுத்தப்பட்டிருப்பதாக நாவுல பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் நிமல சிறி பண்டார தெரிவித்தார். நாவுல நகரத்திலும் மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டிருந்த 500 இற்கும் மேற்பட்ட, மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படம் பதிக்கப்பட்ட சுவரொட்டிகள் மீது இவ்வாறு கழிவெண்ணெய் வீசி மிகவும் மோசமாக சேதமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நிமல சிறி பண்டார, இத்தகைய செயற்பாடுகளால் மகிந்தவின் வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்றார். http://www.thinakkural.lk/article.php?local/mhnoydtfxt2997a0b83c02d715414yk5zn20…
-
- 1 reply
- 157 views
-
-
தேர்தல் சட்டங்களை மீறுதல் தொடர்பான முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்க : தேர்தல் ஆணையாளர் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பாக தேர்தல்கள் செயலகத்திற்கு முறைப்பாடு செய்யும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அத்தகைய முறைப்பாட்டை உரிய மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களுக்கு சமர்ப்பித்தல் முக்கியமான விடயமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டங்களை மீறுதல் தொடர்பில் நேரடியாக உரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதும் பயனுடையதாகவிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள காலநடைமுறைகளின் படி தேர்தலுடன் தொடர்புடையதாக இருப்பினும், அல்லது நாட்டில் நிலவுகின்ற சாதாரண சட்டங்களை மீறுவது…
-
- 0 replies
- 264 views
-
-
மஹிந்தவின் சிறப்புரிமைகளை பறிக்கக்கோருகிறது ஐதேக! [Wednesday 2015-07-08 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைச் சலுகைகளை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரை ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது. சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே ஐ.தே.க.வின் பேச்சாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- தனக்கு 58 இலட்சம் மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அல்லது தலைமை வேட்பாளராக போட்டியிடவோ பிரதான பிரசார கராக செயல்படவோ கட்சி அனுமதி வழங்கவில்லை. அவர் பிறந்த அம்பாந்தோட்டை …
-
- 0 replies
- 196 views
-
-
மகிந்தவுக்கு மைத்திரி முன்வைத்துள்ள நிபந்தனைகள்! [Wednesday 2015-07-08 07:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்திய நீண்டபேச்சுக்களை அடுத்து, வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடிவு செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, அதற்காக பல நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக் குழுவுடன் நேற்று மைத்திரிபால சிறிசேன விஜேராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார். பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனைகளை அடுத்து, சில நிபந்தனைகளுடன் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதென மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெள…
-
- 0 replies
- 391 views
-
-
வவுனியா சிறையில் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்! [Wednesday 2015-07-08 07:00] வவுனியா சிறைச்சாலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூன் 1ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் இலங்கை கடற்பரப்பில் எல்லைமீறி மீன்பிடித்ததற்காக மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்து 14 மீனவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைந்துள்ளனர். மீனவர்களின் காவல் கடந்த வெள்ளிக் கிழமையோடு முடிவடைந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் 4 வது முறையாக மீனவர்கள்…
-
- 0 replies
- 334 views
-
-
வி.விக்னேஸ்வரன் அவர்களின் சிறப்பான பேச்சு.
-
- 0 replies
- 310 views
-