ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஹிருணிகாவின் திருமணத்தில் சாட்சியாக கையெழுத்திட்டார் மைத்திரி! [Monday 2015-07-06 20:00] மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவரே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார்.திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். திருமணத்திற்கு 20 பேருக்கு உட்படவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=135409&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 2.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் வாக்குகள் பிரிந்து பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு விடும் என்று கூறப்படும் நிலையில் த.தே.ம.முன்னணி தேர்தலில் இருந்து ஒதுங்கி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைப்பதற்காக கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை முற்றாக கைவிட்டிருந்ததுடன் தமிழ் மக்களின் கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டுவிட்ட கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்த்தரப்பிடமும் அம்பாறையில் தேர்தலில் இருந்து ஒதுங்கி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் ஓர் பகிரங்க வ…
-
- 3 replies
- 500 views
-
-
வட மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலகம்; சம்பிக்கவினால் திறந்துவைப்பு இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , இராஜாங்க அமைச்சர் பாலித ரங்ககே பண்டார , இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜயபால மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார ஆகியோர் கலந்துகொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். 250 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கான அடிக்கலினை கடந்த 2012 ஆம் ஆண்டு சம்பிக்க ரணவக்க நாட்டி வைத்திருந்தார். - See more at: http://onlineuthayan.c…
-
- 7 replies
- 411 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அராலி தெற்கு, அராலி எனும் முகவரியில் இருந்து தமிழரசுக்கட்சி வட்டுக்கோட்டை கிளையினரால் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அம்மடலின் பிரதி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை அலுவலகம் நீண்டகாலமாக திரு சிற்றம்பலம் வீட்டில் இயங்கிவருகின்றது. இந்நிலையில் கடந்த 28.06.2015 அன்று வட்டுக்கோட்டையில் திரு சேனாதிராசா தலைமையில் வேறு ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தமிழரசுக்கட்சி வட்டுக்கோட்டை கிளை என்று பெயர் போட்டுள்ளதால் குழப்பம் அடைகின்றோம். எனவே எது உண்மையான கட்சியின் கிளை அலுவலகம் என்பதை எழுத்து மூலம் அறிவுக்குமாறு வேண்டுகின்றோம். திரு.சி.க.சிற்றம்பலம் தலைவர் - வட்டுக்கோட்டை கிளை இலங…
-
- 4 replies
- 587 views
-
-
மகிந்த என்ன அவரது அப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பில்லை ; பாலித ரங்கே பண்டார மகிந்த ராஐபக்ச மட்டுமல்ல மந்தவின் தகப்பனே வந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட ஐ.தே.கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை என மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நல்லூர் தொகுதிக்கான அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் கடந்த ஐனவரி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த பொலிஸ், இரானுவம் சமுர்த்தி பணியாளர்கள் ,பிரதேச செயலர்கள், அரச அதிபர்கள், அரச சொத்துக்கள் மற்றும் அரச பணம் போன்ற அனைத்து அரசவளங்களையும்…
-
- 0 replies
- 183 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு இன்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது. அவசர ஏற்பாட்டில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் கருத்து கூறியதாவது, கூட்டமைப்புக்கும், எமது கட்சிக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவுகின்றது. இது ஒரு அவசர சந்திப்பு. கூட்டமைப்பு தங்களது ஆசன பங்கீடுகளை சிறப்பான முறையில் செய்து முடித்துள்ளதை அறிந்து நமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டோம். அதேவேளை தெற்கில் எமது கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் நடத்தி வரும் பேச்சுக்கள் தொடர்பில் நாம் கருத்து பறிம…
-
- 4 replies
- 319 views
-
-
அல்வாய் வடக்கு பகுதியில் பனங்காணியினுள் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பருத்தித்துறை மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (07) முற்றுகையிட்டுள்ளதாக பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்போது 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்ட போது அங்கு கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட 50 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பனவற்றை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நட…
-
- 0 replies
- 184 views
-
-
தனது சொந்த கடனை அடைக்க மாகாணசபை உறுப்பினர்களிற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்திய வடமாகாணசபையின் பெண் உறுப்பினர் தொடர்பினில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கூட்டமைப்பு சார்பு குறித்த மாகாணசபை உறுப்பினர் ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்;புவதாக கூறி தனது ஆதவாளர்கள் சிலரை முகவரொருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வழங்கியுள்ளார்.எனினும் குறித்த முகவர் இலட்சக்கணக்கினில் பணத்தினை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். இந்நிலையினில் தொழில்வாய்ப்பினை பெற்று வழங்குவதாக கூறி தரகராயிருந்த வடமாகாணசபை உறுப்பினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.இந்நிலையினில் வெளிநாட்டு பயணத்திற்கென முற்பணமாக வழங்கப்பட்ட பணத்தை தனது மாகாணசபை உறுப்பினர்களிற்கான ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கடன்களை சீர் செய்தமை அம்…
-
- 1 reply
- 310 views
-
-
அரசிலில் ஈடுபடும் இந்த நாட்டு சிங்கள எருமைகளுக்கு தேசத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து நாட்டை மீட்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டிலுள்ள ஹகீம்களும், ரிஷாட்களும் எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சர்களாக வருகின்றனர். மஹிந்தவின் காலத்திலும் இவர்கள் அமைச்சர்களாக இருந்து 9 வருடம் நாட்டை ஆக்கிரமித்தனர். மைத்திரியின் நல்லாட்சிக் காலத்திலும் இவர்கள் அமைச்சர்கள். மஹிந்தவின் காலத்தில் அரைவாசிக் காட்டை அழித்து ஆக்கிரமித்தவர்கள், மைத்திரியின் காலத்தில் மீதியை அழிக்கின்றனர். தற்பொழுது ரணில் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். அஷ்ரப் இருக்கும் போ…
-
- 9 replies
- 506 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் எமது கட்சி போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் ஆராய்வுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.pathivu.com/news/41428/57/13/d,article_full.aspx
-
- 0 replies
- 254 views
-
-
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் சம்பூரில் தமிழ்மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டது என்று ஊடகங்களில் கூறி வருகின்றார். ஆனால் எம்மால் அங்கு செல்லமுடியவில்லை எமது மீள்குடியேற்றம் நடைபெற்றால்தான் நாங்கள் கூட்டமைப்புக்கு வாக்களிப்போம்.இல்லாவிடின் மாற்று தெரிவுகளை தெரிவு செய்வோமென எச்சரித்துள்ளனர் சம்பூர் மக்கள்.அத்துடன் தமது வாக்களிப்பு நிலையமாக சம்பூர் மகாவித்தியாலயம் அமையவேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டினில் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்ட சம்பூர் மக்கள் தமது நில விடுதலையினை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவந்திருந்தனர்.இறுதியாக அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான ண்ணாவிரதப்போராட்டம் கூட்ட…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா? 32 நிமிடங்களுக்கு முன்னர்பகிர்க இலங்கையின் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லையென்றாலும் ஒற்றுமைக்காக இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக கட்சிகள் தெரிவித்துள்ளன.இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சி…
-
- 2 replies
- 289 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு அவர் பெரும் அச்சப்படுகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். ஜனவரி 8 ஆம் திகதி வெற்றி கொண்ட சவால்களை மீளவும் வெற்றிகொள்வது எமக்கு பெரிய சவால் அல்ல. எவர் தேர்தலில் களமிறங்கினாலும் நாமே பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய அரசா…
-
- 1 reply
- 176 views
-
-
கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் மூவர் திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளனர். மாணவிகள் காணமல் போனமை தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்துள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் திங்கட்கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை என மாணவிகளின் பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் காணமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மாணவிகள் காணமல் போனமை தொடர்பிலும் விசாரணைகளை முன்ன…
-
- 0 replies
- 135 views
-
-
UPFAயின் 20 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு இல்லை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- நிபந்தனை அடிப்படையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக் குழுவுடன் இன்றிரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எவ்வாறெனினும், பிரதமர் வேட்பாளராக மஹிந்த அறிவிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரச்சாரப் பணிகளுக்கு தலைமை தா…
-
- 0 replies
- 220 views
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனவும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 79 ஆயிரத்து 93 பெரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47 ஆயிரத்து 621 பேரும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 63 ஆயிரத்து 217 பேரும், மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 54ஆயிரத்து 567 பேரும், கோப்பாய் தேர்தல் தொகுதியில் 55ஆயிரத்து 891 பேரும், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 39ஆயிரத்து 204 பேரும், பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 36 ஆயிரத்து 138 பேரும், சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 51 ஆயி…
-
- 0 replies
- 194 views
-
-
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, நேற்று நடந்த கூட்டத்தில் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களை கூட்டமைப்பு வெற்றிகொண்டதைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இம்முறை 20 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 20 ஆசனங்களைக் கைப…
-
- 6 replies
- 643 views
-
-
வடக்கு - கிழக்கின் 05 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மேலும் நேற்று முழுநாளும் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் ஆசனப்பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போது ஆசனப்பங்கீடு தொடர்பில் இடம்பெற்று வந்த குழுப்பத்திற்கு நேற்று முடிவு கட்டப்பட்டு வேட்புமனுத்தாக்கலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு- கிழக்கின் 05 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரேநேரத்தில் வேட்புமன…
-
- 1 reply
- 257 views
-
-
வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 56 தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்ற தமிழ் தேசியக் சுட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை எடுக்க தமழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பின்னிற்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. http://www.lankadeepa.lk/index.php/top_story/330146 මුලතිව් තුනුක්කායි ප්රාදේශීය සභාවේ දෙමළ ජාතික සන්ධාන මන්ත්රීවරයකු බව කියන පුද්ගලයකු දුප්පත් කතුන් 56 දෙනකු සමඟ ගත් අසභ්ය වීඩියෝ රුපියල් 200 ගණනේ විකුණා ඇතැයි පොලිසියට පැමිණිලි කර ඇත. ඔහු එම කතුන් සමඟ සහවාසයේ යෙදී එම පින්තූර ගෙන ඇතැයි ද, රජයේ සුළු සුළු ආධාර දී ඔවුන් ඊට පොළොඹවාගෙන ඇතැයි ද එවැනි වීඩියෝවක් වන්නියේ සැමියකු හා පුතකු දැකීමෙන් පසු තුන් ද…
-
- 4 replies
- 439 views
-
-
தேர்தல் காலங்களில் அழகு தமிழில் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை கபடத்தனமாகப் பெற்று அரசியல் நடத்தும் காலம் இனிமேலும் தமிழ் மக்கள் மத்தியில் பலிக்காது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா குறிப்பிட் டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுடனான சந் திப்பு ஆலையடிவேம்பு பிரதேசத் தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பலவருடங்களாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களைச் சீரழித்த அரசியல் தலைமையை எமது மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். ஆண்டுக்கொருதடவை, ஆவணிக்கொரு தடவை நுனிப்புல் மேய்வது போல் இங்கு வந்து தமிழ் மக்களின் பிரச்சினைக…
-
- 0 replies
- 186 views
-
-
அளவெட்டி தெற்கு பகுதியில் முன்னாள் போராளியொருவரை நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை காவல்துறை அறிவித்துள்ளது. சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.இவர் புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லையெனவும் காவல்துறை அறிவித்துள்ளது. http://www.pathivu.com/news/41415/57//d,article_full.aspx
-
- 0 replies
- 396 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்களைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம் காரைதீவில் திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா மேலும் பலரும் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/41417/57//d,article_full.aspx
-
- 0 replies
- 316 views
-
-
மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள உல்லாசப்பயணிகள் தகவல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதன் வளாகத்தைச் சுற்றி எல்லையமைக்கும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின. 'கொய்க்கர்' அனுசரணையில் ரூபாய் 2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனையை ஏசியா பவுண்டேஷன் வழங்க மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார். இந்த நிலையத்தில் சுற்றுலா தகவல் விவரங்களாக மட்டக்களப்பின் மரபுரிமைமிக்க இடங்கள் அமையப் பெற்றுள்ள இடங்கள், அவற்றை அணுகும் வசதிகள், பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் அமையப்பெற்றுள்ள இடங்கள், பொழுது ப…
-
- 0 replies
- 201 views
-
-
அரசியல் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பெற்றோர்கள், திங்கட்கிழமை (06) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். வவுனியாவில், தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரின் நிலைப்பாடுகள் தொடர்பாக கூட்டமைப்பு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் இவர்களின் விடயங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், காணாமல் போனோரின் விடயங்கள் தொடர்பாக பெற்றோர்களிடம் உள்ள ஆதாரங்களை தொடர்பாகவும் கூட்டமைப்பின் தலைவர்…
-
- 0 replies
- 142 views
-
-
கூட்டமைப்பிடம் சில கேள்விகள் 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த நாடாளுமன்…
-
- 2 replies
- 536 views
-