Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாணவி கொலையின் பின்னால் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி; நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி புங்குடுதீவு மாணவியின் கொலை ஒரு பாலியல் வேட்கை அடிப்படையில் மட்டும் நடந்த கொலை என்றோ தனி மனித விரோதங்கள் காரணமாக மட்டும் நடந்த கொலை என்றோ நம்பி விடமுடியாது. இந்தக் கொலையின் பின்னால் ஒரு பெரும் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி இருந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இன்று நான் இந்தச் சபையில் மிகவும் மனம் நொந்தநிலையிலும் ஆத்மார்ந்த கோபத்துடனும் உரையாற்றவேண்டிய நிலையில் உள்ளேன். புங்குடுதீவிலுள்ள பள்ளி மாணவி ஒ…

    • 3 replies
    • 345 views
  2. தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு இலங்கையை தமிழ் அரசன் இராவணன் ஆண்டதற்கான ஆதாரபூர்வமான பல தடயங்கள் இலங்கையில் இருப்பதற்கான பல சான்றுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயங்கள், இராமனின் மனைவி சீதா தேவியை கடத்தியதன் புராதன சான்றுகளும் பல இலங்கையில் காணப்படுகின்றன. இது தொடர்பாக இப்போதைய அரசு ஆராய்ச்சி செய்து அதன் முழு விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க குறைந்தது ஒன்றரை வருடகாலம் செல்லும் எனவும், இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் இராவணனை பற்றிய பல சான்றுகள் நாட்டில் சகல பகுதிகளிலும் உள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கின்றது. tamilwin.com

  3. வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? - நிலாந்தன்:- 24 மே 2015 புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார் “சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு” என்று. ஆனால் இப்பொழுது? அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் த…

  4. 13 வயது சிறுமியொருவரை பெற்றொரிடமிருந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். புத்தளம் - குருணாகல் வீதியில் வசித்துவரும் சிறுமியொருவரே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். குறித்த சிறுமி வசித்துவரும் வீட்டிற்கு அருகில் வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்று அமைந்துள்ளது. தமது வாகனத்தில் உள்ள பழுதை சரிசெய்வதற்காக குறித்த சந்தேக நபர் இந்த பழுதுபார்க்கும் நிலையத்திற்கு வந்துள்ளார். வாகனத்தைத் திருத்துவதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் சந்தேக நபர் பல முறை குறித்த பழுதுபார்க்கும் நிலையத்திற்கு வந்துசென்றுள்ளார். இதன்போது சிறுமிய…

  5. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நேரடியாக தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர் உருவாக்கும் கூட்டணியில் மகிந்த தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவாவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மகிந்தராஜபக்ஷவுக்கான ஆதரவுகள் குறைவடைந்து வருகின்றன. இந்தநிலையில் மகிந்தவின் தலைமையில் உருவாகும் கூட்டணிக்கு தேர்தலில் வெற்றிபெற முடியுமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே அவரது கூட்டணி வெற்றியீட்டும் பட்சத்தில் மாத்திரமே அவர் தேசிய பட்டியலின் கீழ் நாடாளுமன்றத்துக்கு சென்று பிரதமர் பதவியை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்தராஜபக்ஷ அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யும் நோக்கிலும் இந்த தீர்மானத்தை மேற்கொண்ட…

  6. காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ள குழு, சிறிலங்காவின் உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டே இந்த குழு சிறிலங்காவுக்கு செல்வதாக கூறப்படுகிறது. எதிர்வரும் ஜுன் மாதம் முதல் உள்நாட்டு பொறிமுறை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் ஜனாதிபதி கூறி இருந்தார். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி இந்த குழு சிறிலங்கா செல்கிறது. எவ்வாறாயினும் சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு பெறப்படுகின்றமைக்கு உள்நாட்டில் குழப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.pathivu.com/news/40363/57//d,article_full.aspx

    • 0 replies
    • 519 views
  7. விழாக்களில் தேசியக் கொடிக்குப் பதிலாக விசேட கொடி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடியின் தவறான பாவனையினைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதற்குரிய கௌரவத்தினை உண்டு பண்ணுதல் ஆகிய நோக்கத்தை முன்னிறுத்தி உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்மொழிந்த யோசனையை ஏற்று விழாக்களின் போது அரசும் பொதுமக்கள் தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பl;ட விசேட அலங்காரக் கொடியை வடிவமைப்பதற்கு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது பற்றிய அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு:- 1986 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட தேசியக் கொடி பாவனைக்கான விதிக்கோவையில் விதித்துரைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு எதிராக இலங்கை …

  8. புங்குடுதீவு சம்பவம் - பொலிஸ்மா அதிபரிடம் விரிவான அறிக்கை கோரினார் அமைச்சர் ஜோன் அமரதுங்க! [Monday 2015-05-25 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸாரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபரிடம் இந்த அறிக்கையை கோரியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த நபர்களை தடுக்காத காரணத்தினால் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்…

  9. விரைவில் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம்! - ஜனாதிபதி மைத்திரி [Monday 2015-05-25 08:00] முப்படைத் தளபதி என்ற வகையில் நாட்டின் இராணுவச் சிப்பாய்கள் தொடர்பில் மிகவும் நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றேன். நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்புக் குறித்து புதிய பாதுபாப்புத் திட்டத்தை வகுக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் இராணுவத்தினர் முன்னிலையில் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர், 30 வருடங்களாக நாட்டில் இ…

  10. நான் இன்னும் சாகவில்லை! - மகிந்த ஆவேசம். [Monday 2015-05-25 08:00] நான் இன்னும் சாகவில்லை. அப்பா இன்னும் இருக்கிறேன் என்று கூறத்தான் இங்கு வந்தேன் என்று கூறி, அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸாவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததையடுத்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, அப்பா இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார். இவரின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்…

  11. பொதுத் தேர்தலுக்கு முன்னர் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் : தினேஸ் எம்.பி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன, இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றனர். அதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை விரைவில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த குணவர்தன, அந்த பிரேரணையை தூக்கி குப்பையில் போடாமல் அதனை விவாதத்துக்கு எடுப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு …

  12. மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார செயலமர்வு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு, சமூக சேவைகள் அமைச்சால் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் நடத்தப்படவுள்ளதாக சமூக சேவை அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எஸ்.இராமமூர்த்தி அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை அமைச்சால் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3,000 ரூபாய் உதவித் தொகையைப் பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலிருந்தும் தலா 40 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் தலா 43,500 ரூபாய் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதேச ச…

  13. புங்குடுதீவில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையாகிய வித்தியா ஒப்பந்த கொலை அடிபடையில் கொல்லப் பட்டதாயும். பிரதான குற்றம் சாட்டப் பட்ட நபர்க்கு வேறு ஒருவர் பணம் கொடுத்தே இதை செய்விக்க வைத்துளதாயும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளது. http://www.asianmirror.lk/news/item/8968-schoolgirl-from-punguditivu-raped-murdered-on-contract-reports

    • 23 replies
    • 2.1k views
  14. புதிய அரசு தருமென காத்திருப்பது மடமை: வட மாகாண முதலமைச்சர்:- யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தை தமிழர் பகுதியில் தொடர்ந்தும் அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை புதிய அரசில் உள்ள சந்திரிக்கா, ரணில், மைத்திரி தருவார்கள் என காத்திருப்பது மடமை என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்பு…

    • 18 replies
    • 1.1k views
  15. வித்தியா படுகொலை: காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை MAY 25, 2015 | 3:11by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணிப்புரை விடுத்துள்ளார். வித்தியா காணாமற்போனது தொடக்கம், அவர் படுகொலை செய்யப்பட்டது, அதையடுத்து ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமை உள்ளிட்டவற்றை அடங்கியதான விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணித்துள்ளார். வித்தியா படுகொலைக்கு சிறிலங்கா காவல்துறையினரின் பொறுப்பற்ற செயற்பாடும் ஒரு காரணம் எ…

    • 0 replies
    • 776 views
  16. புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் – முள்ளிவாய்க்கால் நினைவுவார வெளியீடு - 04:- போராட்டம் துப்பாக்கியை மாத்திரம் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு உலவவிடவில்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் …

  17. தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று நாள் அமர்வாக தொடங்கியுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து ஆற்றிய உரையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் மூன்றாவது நேரடி அமர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் மாவீரர்களை மனதில் இருத்தி எனது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமர்வு நாம் ஐரோப்பாவில் கூட்டும் இரண்டாவது நேரடி அமர்வு. புதியயேதார் அரசியற்சூழலில் கூட்டப்படும் அமர்வு. நாம் முன்னர் கூடிய நேரடி அமர்வுகளின் போது தாயகத்தில் இ…

    • 0 replies
    • 854 views
  18. அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விடுதலைப் புலிகளின் சிந்தனையை தான் சரியாக புரிந்து கொள்வதுடன் அதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கையில் இன மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸின் குழுவினர் சிறிசேன அரசாங்கத்தின் கீழான தற்போதைய நிலை குறித்து கூடி ஆராய்ந்துள்ளனர். இவர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச நெருக்கடி குழு,மனித உரிமை கண்காணிப்பகம், பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு போன்ற அமைப்புகள் விளக்கவுரை வழங்கியுள்ளன.. இங்கு உரையாற்றிய அமெரிக்க செனட் பிரதிநிதி பில்ஜோன்சன் இலங்;கையில் உண்மையான முன்னேற்…

  19. வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர், சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார். ஆயினும், வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படம்…

  20. இன்று (23.05.2015) மாலை சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வண்டியும் பருத்தித்துறையில் இருந்துவந்த கஜேந்திரனின் வாகனமும் நேருக்கு நேர் மேதியதிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. படுகாயங்களுக்குள்ளான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." from Gopi Ratnam's (Oru pappar) FB status.

  21. வடமராட்சி கிழக்கினில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினில் பொதுமகனொருவர் படுகாயமடைந்துள்ளார்.உடுத்துறை ஒன்பதாம் வட்டாரப்பகுதியினில் இடம்பெற்ற இச்சம்பவத்தினில் வேலன் சிவபாதசுந்தரம் (56 வயது) எனும் குடும்பஸ்தரே துப்பாக்கி சூட்டுக்குள்ளாகியுள்ளாதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அப்பகுதி அமைப்பாளர் காண்டீபன் தெரிவித்தார். அப்பகுதியினில் சட்டவிரோத மதுபாவனையை கண்டுபிடிக்கப்போவதாக புறப்பட்டு போன பொலிஸ் அணியினரே துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.சுமார் 15 பேர் வரையிலான பொலிஸார் அங்கு நின்றிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏதிர்பார்த்தது போன்று சட்டவிரோத மதுபானம் அகப்பட்டிராத நிலையினில் கணக்கு காட்ட அங்கிருந்த குடும்பஸ்தர்களுள் ஒருவரான வேலன் சிவபாதசுந்தரம் …

    • 0 replies
    • 564 views
  22. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாமல் தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தச் சூழ்ச்சியின் பின்னணியில், யாழ். மாவட்டத்தில் தீவுப்பகுதிகளை முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் மற்றும் முன்னைய ஜனாதிபதி மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்கிய கட்சிகள் மும்முரமாக செயற்படுவதாகவும் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் வெளிக்கிழமை நேரில் சந்தித்த…

  23. முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் ஐதேகவில் போட்டி! [sunday 2015-05-24 08:00] மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த எட்டு பேர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர். எட்டு பேரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தனித் தனியாக பேச்சு நடத்தியுள்ளனர். இவ்வாறு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் இருக்கையில், வெளியில் இருந்து வருபவர்களுக்கு வேட்பு மனு வழங்குவது ஏற்றுக்கொள்ளக…

  24. அரசியலமைப்பு சபை அடுத்த வாரம் நியமனம்! [sunday 2015-05-24 08:00] அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் அமைப்பு சபைக்கு உறுப்பினர்களாக பத்து பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த சபையில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்க உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, ஜோன் செனவிரட்ன, இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ஒருவரை பெயரிட உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பெயரிடப்பட உள்ளனர். பெரும்பாலும்…

  25. யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் அப்பாவிகளை விடுவிக்க வேண்டும்! - மாவை சேனாதிராசா கோரிக்கை [sunday 2015-05-24 08:00] யாழ்.நீதிமன்றக் கட்டடத்தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட 130 பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குற்றமிழைக்காத அப்பாவிகள் பலர் உள்ளனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும். என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.