Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் இடம்பெறும் அனைத்துக் குற்றச்செயல்கள் மற்றும் குழப்பகரமான செயல்களுக்கு பின்னணியில் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், வித்தியாவின் படுகொலைக்கும் இந்த ஆயுதக்குழுவே காரணமெனவும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். வடக்கில் இருக்கும் குறித்த ஆயுதக்குழுவை ஒழித்துக்கட்ட ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய அதேவேளை, மாணவி படுகொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, மாணவி வித்தியாவின் விடயத்தில் பொலிஸார் அசட்டையாக செயற்பட்டதாக குறிப்பிட்ட பிரதியமைச்சர் விஜயகலா, கடமையை உரிய…

    • 0 replies
    • 846 views
  2. திருகோணமலை சம்பூரில் தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியேற்றுமாறு கோரி, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை, சம்பூர் மக்கள் முன்னெடுத்துள்ளனர். கிளிவெட்டி நலன்புரி நிலையத்திலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அம்மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும்; ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், தமது பழைய இடங்களுக்குச் சென்று பற்றைகளை வெட்டித் துப்புரவாக்கிக் கொண்டிருந்த மக்களை பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காட்டி வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/146396#sthash.K7E2Zdjv.dpuf

  3. யாழ் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவில் படுகொலை தொடர்பில் இன்றைய யாழ் நிலவரம் தொடர்பிலும் சுவிஸ் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Mord an Schülerin (18) – Schweizer Tamile in Haft tamilwin கூகிள் மொழிபெயர்ப்பு ஆங்கிலம் The crimes committed against the young Vithiya shaken Sri Lanka. The 18-year-old was attacked on Pungudutivu, an island near Jaffna, by a group of men. They tied with the tie of her school uniform, raped and killed them. Her body was found on May 14 in an abandoned house. The crime has sparked mass protests in Jaffna. The popular…

  4. முள்ளிவாய்க்காலில் புலிகள் நினைவுகூரப்படவில்லை : ஜே.வி.பி புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் எதுவும் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவில்லையென ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இனவாதம்பிடித்த சிலரே முள்ளிவாய்க்காலில் புலிகள் நினைவுகூரப்பட்டார்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறினார். இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களே அங்கு நினைவுகூரப்பட்டுள்ளனர். உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கான உரிமை அங்குள்ள மக்களுக்கு உள்ளது. எனினும், இனவாதம் பிடித்தநபர்களே புலிகள் நினைவுகூரப்பட்டார்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனப்பாகுபாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த…

    • 1 reply
    • 502 views
  5. வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம் MAY 21, 2015 | 0:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. வித்தியா படுகொலை விவகாரம், யாழ்ப்பாணத்தில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறிலங்கா காவல்துறையினர் போதிய அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக தமிழ் மக்களாலும் அரசியல் தலைவர்களாலும் முன்வைக்க…

    • 0 replies
    • 1.6k views
  6. கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார். அதற்கான முன்னேற்பாடு, முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனையும் இந்தத் தடவை யாழ். மாவட்டத்தில் களத்தில் இறக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தீவிரமாக சிந்தித்து வருகின்றது எனத் தெரிகின்றது. கடந்த தடவை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் தீவுப் பகுதி சார்பில் இரா.சிவச்சந்திரன் போட்டியிட்டா…

    • 21 replies
    • 2k views
  7. பொதுமக்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய சில விசமிகள் எத்தணிக்கிறார்கள் : வடக்கு முதல்வர் புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும். நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை எரிப்பதும் பாரிய குற்றச் செயல்கள் ஆவன . இன்றைய இந்தச் சோகச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யார் யார் இந்த ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதை மக்கள் விழிப்பாய் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். பல காரணங்களின் நிமித்தம் அன்…

  8. கிளிநொச்சி ரயில் நிலையம் அருகில் இருந்து பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் வீதியால் சென்ற பொதுமக்கள் அழுகுரல் கேட்ட திசையை நோக்கிச் சென்று சென்று பார்த்தபோது அங்கே பெண் சிசு ஒன்று அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளது. சிசுவைக் கண்டெடுத்த அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கையளித்தனர். பொலிஸார் அந்த சிசுவை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். http://www.malarum.com/article/tam/2015/05/20/10167/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%A…

    • 0 replies
    • 390 views
  9. -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும் அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெனிஸ் வோர்கர் நெவில் கூன் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவிஸ் நாட்டின் உயர்மட்ட குழுவினருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற வர்த்தக மேம்பாடு தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன், தூதுக்குழுவுக்கு இலங்கை அரசும் சுவிட்ஸர்லாந்து அரசும் செய்துள்ள வர்த்தக இருதரப்பு உடன்படிக்கை தொடர்பாக விளக்கமளித்தார…

    • 0 replies
    • 368 views
  10. http://tv.tamil.com/ iphone, ipad உள்ளவர்கள் இச் செயலியை நிறுவுவதன் மூலம் இலகுவாக பார்க்கலாம். https://itunes.apple.com/us/app/tamilhub/id980752343?mt=8 உங்கள் நாட்டின் நினைவேந்தல்களையும் ஒளிபரப்ப விரும்பினால் hi@tamil.com இல் தொடர்பு கொள்க. நன்றி.

  11. யாழ் நீதிமன்ற வளாகத்தில் கலவர பூமியாக மாற்றியதற்கு யார் காரணம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன. புங்குடுதீவு மாணவியை கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் இன்றைய தினமும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று யாழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சந்தேக நபர்கள் அழைத்துவரப்பட்ட போது ஏற்பட்ட கலகத்தைத் தடுப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். நீதி கேட்டு வந்தவர்கள் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு குழப்பமடைந்தது ஏன் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. நீதிமன்றத்தை அண்மித்திருந்த பொதுமக்கள் மத்தியில் நின்றிருந்தவர்களில் அநேகமானோர் தலை…

    • 1 reply
    • 969 views
  12. நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற மோசமான வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். புங்குடுதீவு சிறுமி படுகொலையுடன் தொடர்புடைய மகாலிங்கம் சிவகுமார் நேற்று கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் அவருக்கு உதவினார் என சட்டக்கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவரையும் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருந்தது. அந்தநிலையில் நீதிமன்றத்தின் பிரதான வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியதுடன் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொலிஸாரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்கா…

    • 0 replies
    • 1k views
  13. மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கூட்டு வன்புணர்வுக் கொலைகாரர்களிற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் எனக் கோரியும் இன்று புதன்கிழமையும் யாழ்.குடாநாடு தழுவிய ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், பகிஷ்கரிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், வர்த்தகர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பெண்கள் அமைப்புக்கள் என பல தரப்பட்டவர்களும் எனப் பலதரப்பட்டவர்களும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அரச அதிபர…

    • 0 replies
    • 808 views
  14. அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் : மாணவிக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவோம் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நாளை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் நலன்கள் சார்ந்த விடயங்களுக்காக நான் உள்ளடங்கலான,சட்டத்தரணிகள், ஓ…

  15. புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர். மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர். மக்களுடன் மக்களாக ஈபிடிபி ஓட்டுகுழுக்கள் நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசி நீதி மன்ற …

    • 8 replies
    • 1.3k views
  16. தமிழ்நாடு அன்னையர் முன்னணி மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் சார்பில் முள்ளிவாய்க்கால் 6-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (18.05.2015) திங்கள் கிழமை மதியம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் காஞ்சி மக்கள் மன்ற தோழர் சங்கீதா மற்றும் தோழர் கௌதமன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்பாடல்களையும் தோழர் செங்கொடி நினைவு பாடல்களையும் பாடினார்கள். அதன்பின்னர் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தக்கோரி ஐ.நா. சபையை வலியுறுத்தி பதாகையில் அனைவரும் கையெழுத்திட்ட பின்னர் தமிழீழ விடுதலைப்போரில் சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது. நிகழ்வில் முள்…

  17. Published on April 28, 2015-5:05 pm · No Comments இலங்கையில் பொதுதேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இத்தேர்தலை இலக்கு வைத்து மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழீழமே தமது இறுதி இலக்கு என்று புலம்பெயர்நாடுகளில் செயற்படும் இந்த அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலில் கீழ் ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையுடன் செயற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ( அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்) வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு அங்கமாக மாற்ற…

    • 58 replies
    • 3.7k views
  18. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/201…

  19. எண்­ணி­ல­டங்­காத இரா­ணு­வத்­தி­னரை பலி­யிட்டு வெற்றிகொண்ட பாரிய கடல் பரப்­பி­னையும் இரண்டு மாகா­ணங்­களையும் மீண் டும் திருப்பிக் கொடுக்க ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது­வ­ரையில் புலி­க­ளிடம் அடி­ப­ணிந்து கொண்­டிருந்த அர­சாங்கம் ஒன்­றி­னையே காண முடிந்­தது. அதற்கு மாறாக தேசியக் கொடியை கையி­லேந்தி சுதந்­நிர காற்றை சுவா­சிக்க செய்­தது எமது அர­சாங்­கமே. நாம் ஒரு­போதும் நாட்டை காட்டிக் கொடுக்­க­வில்லை நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்­பந்­தங்­களும் செய்­ய­வில்­லலை எந்த ஒரு வெளிநாடும் எமது நாட்­டினை தீண்­டவும் ஒரு போதும் அனு­மதி வழங்­க­வில்லை. உலக நாடுகள் உணவுப் பஞ்சம். நிதிப்­பற்­றாக்­குறை போன்­ற­வற்றை எதிர்நோக்­கிய போதும் அவ்­வாறான நிலை­யினை எமது நாட்­டவர் காண இடம் …

  20. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த இராணுவ அணிவகுப்பை புறக்கணிப்பது என்ற தெளிவான நிலைப்பாட்டை, கூட்டமைப்பு எடுத்திருக்கிறது. ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், வெற்றி விழா நிழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே தெளிவான நிலைப…

    • 31 replies
    • 1.9k views
  21. அவர்களுக்கு தெரியுமா ?! "எப்பிடி போகுது... என்ன உங்கள் ஆட்சிதானே?!" பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால், நல்லவர். "ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அ…

  22. "எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.." என்று சற்று முன்னர் இன அழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணியளவில் வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்துதல் நிகழ்வு நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

  23. சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட காணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதித்திருந்த இடைக்கால தடையுறத்தரவை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது. சம்பூரிலுள்ள குறித்த காணிகள் தொடர்பில் ஏற்கன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து, அங்கு முகாம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத முற்பகுதியில் இணக்கம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த காணியில் முதலீடு செய்யதற்கு எதிர்பார்த்திருக்கும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு…

    • 0 replies
    • 431 views
  24. வெற்றியாகக் கொண்டாடப்பட வேண்டியது வடக்கு மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ளும் நாளை அன்றி, யுத்த நிறைவை அல்ல என்று புதிய தலைமுறை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ''யுத்தம் நிறைவுவடைந்ததே அன்றி அதுவொரு வெற்றியல்ல'' என்ற தலைமைப்பில் புதிய தலைமுறை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கொழும்பு விகாரமா தேவி பூங்காவில் அமைந்துள்ள தாமரை அரங்கில் நடைபெற்றது. ''இது யுத்தத்தின் நிறைவு. வெற்றியடைய இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. அது, அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து நாம் இலங்கையர் என சத்தமிட்டுச் சொல்வதாக இருக்கும்'' என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.tamil.srilankamirror.com/news/item/2699-2015-05-20-06-36-27

    • 0 replies
    • 419 views
  25. யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்புருபிட்டியவில் நேற்று (1) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆறு வடங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளை துடைத்தொழிக்க முடிந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். அன்று இராணுவத்தினர் தன் உயிர், உடல் உறுப்புக்களை தியாகம் செய்தமைக்கு காரணம் நாட்டை காப்பாற்றுவதற்காவே என்றும், எனினும் இன்று சிலர் அதனை மறந்து விட்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் நினைவுகூரப்பட்டதாக தெற்கிலுள்ள சில தரப்பினர் அங்கலாய்கின்றனர். மீண்டும் புலிகளின் தலைவரின் படங்களுடன், புல…

    • 0 replies
    • 667 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.