Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்த முடியாது – சிறிலங்கா அமைச்சர் APR 17, 2015 | 12:38by கி.தவசீலன்in செய்திகள் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியில் நேற்று நடந்த அரசியல் விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், அரசியலமைப்பில் பலவந்தமாக திணிக்கப்பட்ட, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது. …

  2. இன்றுடன் முடிகிறது சீன – சிறிலங்கா படைகளின் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ போர்ப்பயிற்சி APR 17, 2015 | 9:32by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீன – சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும், ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ என்ற குறியீட்டுப் பெயரிலான, இருபது நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது. சிறிலங்கா படையினரும், சீனாவின் மக்கள் ஆயுதக் காவல்படையும், இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியை கடந்த மாதம் 29ம் நாள் ஆரம்பித்திருந்தன. சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்டொங் பகுதியில் உள்ள, மக்கள் ஆயுதக் காவல்படையின் இராணுவப் பயிற்சித் தளத்தில், கடந்த 20 நாட்களாக நடந்து வந்த பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதில் பிரதானமாக, தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான பயிற்சிகள…

    • 0 replies
    • 1.3k views
  3. தெற்காசியா வேகமான வளர்ச்சி; சிறிலங்கா வேகமான வீழ்ச்சி- எச்சரிக்கும் உலக வங்கி APR 17, 2015 | 5:28by கார்வண்ணன்in செய்திகள் தெற்காசியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு, 6.9 வீதமாக குறைவடையும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானச் செயற்பாடகள் மந்தகதியை அடைந்துள்ளதை, உலக வங்கி முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளது. அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பினால், உயர்நுகர்வு மட்டம் அதிகரித்து, ஓரளவுக்கு தாக்கம் செலுத்தும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. முதலீடு தொடர்பான பொருளாதாரக் கொள்கை புதிய அரசாங்கத்தினால் மீளாய்வு செய்யப்படுவதும், பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்த…

    • 0 replies
    • 687 views
  4. ராமேஸ்வரம்: இலங்கைக்கு சென்ற அகதிகள் குடும்பம் ஒன்று மீண்டும் தமிழகம் திரும்பி வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை இன பிரச்னை முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன பின்னரும் அங்கு வாழும் தமிழர்களுக்கான பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படவில்லை என்பதே அங்கு வாழும் தமிழர்களின் குற்றசாட்டாக உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், இந்தியாவில் அகதியாக தங்கியிருந்து நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இலங்கைக்கு திரும்பி சென்ற ஒரு குடும்பம் இன்று மீண்டும் அகதியாக தமிழகம் திரும்பி வந்திருக்கிறது. இலங்கை திரிகோணமலை மாவட்டம் சம்பகிராமம் பகுதியை சேர்ந்த தமிழர் சத்தியசீலன். இவர் தனது மனைவி பரமேஸ்வரி, மகள்கள் மேரி, அஞ்சலிதேவி, விடுதலை செல்வி ஆகியோருடன் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்ச…

    • 0 replies
    • 660 views
  5. சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தடுக்காவிட்டால், தமிழ் மக்களால் மீண்டும் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன் செனேவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினரும், மைத்திரிக்கு ஆதரவான தரப்பினருமாக இரண்டு தண்டவாலங்களை போல செயற்படுகின்றன. இவ்வாறு இரண்டு தண்டவாலங்களை செயற்பட்டால் காங்கேசன் துறையிலோ, திருகோணமலையிலோ முடிவை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்த பிளவினைஏற்படுத்த வேண்டாம் என்று தாம் மகிந்தராஜபக்ஷவை கோரியுள்ளதாகவும், விரைவில் சந்திரிக்காவையும் இது குறித்து சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39292/57//d,article_full.as…

  6. அரசியல் சர்ச்சைகளால் இடைநிறுத்தப்பட்ட வடக்கு மாகாண சபையின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்றம் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆளுநர் பளிகக்காரவின் உத்தரவிற்கு அமைய இடமாற்றங்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையினில் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ. ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செ…

    • 0 replies
    • 496 views
  7. ஐரோப்பிய சந்தையில் சிறிலங்காவின் இடத்தை மாலைத்தீவு பிடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவில் இருந்து மீன்பிடி பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. இதனை அடுத்து ஐரோப்பிய சந்தையில் சூரை மீன்களின் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மாலைத்தீவில் இருந்து இந்த மீன்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்து விலையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களை மீறியமைக்காக சிறிலங்காவின் கடலுணவு பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/39290/57//d,article_full.aspx

    • 0 replies
    • 564 views
  8. சீனாவுடன் முரண்பாடு ஏற்பட மகிந்தவே காரணம் – ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு APR 17, 2015 | 2:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவைப் போல, விசாரணைக்குழுவொன்றை நியமித்து, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம் என்று தான் கூறிய ஆலோசனையை மகிந்த ராஜபக்ச நடைமுறைப்படுத்தியிருந்தால், ஐ.நா தீர்மானங்களை தவிர்த்திருக்கலாம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததற்குத் தானே முழுப்பொறுப்பு என்ற மமதை மகிந்த ராஜபக்சவை ஆட்கொண்டிருந்தது. அது, எவரது ஆலோசனையையும் கேட்கின்ற நிலைக்கு அவரை அனுமதிக்கவில்லை. அ…

  9. வலி.வடக்கு வறுத்ததலைவிளான் கிராமசேவையாளர் பிரிவில் மக்களின் 60 வீடுகளை கையகப்படுத்தி இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைத்துள்ளனர். கடந்த 1975 ம் ஆண்டு குடியேற்ற திட்டத்தின் கீழ் 2 அரை பரப்பு காணி வழங்கப்பட்டு அங்கு 99 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. பின்னர் 1986ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து இருந்தனர். பின்னர் 1989ம் ஆண்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மக்கள் திரும்பினர். அவ்வேளை ஜேர்மன் நாட்டின் நிதியுதவியின் கீழ் 99 குடும்பங்களுக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டன. அந்த வீடுகளில் 6 மாத காலம் கூட அவர்கள் வாழவில்லை. மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர். அன்று இடம்பெயர…

    • 2 replies
    • 1.1k views
  10. பரந்தனில் படையினர் வசமுள்ள காணியை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதத்தில் குதித்தார் பெண்! [Wednesday 2015-04-15 11:00] கிளிநொச்சி, பரந்தனில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள தனது 7 ஏக்கர் காணியை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 5 பிள்ளைகளின் தாயாரான திருமதி இந்திரா யோகேந்திரன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=130296&category=TamilNews&a…

    • 4 replies
    • 684 views
  11. "எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்'' என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒரு நாளும் வெற்றியளிகாது. அதிகாரங்கள் பங்கிடப்பட்டாலும் அதை மீண்டும் இலங்கை அரசு கைப்பற்றக்கூடும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை வைத்து தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இலங்கையில் தமிழர், சிங்களவர்களுக்கென இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழருக்கென்று தனியான தேசம் அமை…

  12. மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ். கைதடி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் டிலோஜன் (வயது 19) என்பவரே உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர். மஸ்கெலியா மொக்கோ தோட்டத்திலுள்ள தனது நண்பரின் வீட்டுக்கு வந்த இவர், நண்பரோடு நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், தன்னுடன் நீராடிக்கொண்டிருந்த மேற்படி நண்பர் திடீரென்று நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அவரின் நண்பர் மஸ்கெலியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் …

    • 0 replies
    • 425 views
  13. சிறிலங்கா நிதிஅமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- மகிந்த வீட்டில் தீர்மானம் APR 17, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் நேற்று நடந்த ஒன்றுகூடலிலேயே இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.. ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று இறுதி செய்யப்பட்டு, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையெழுத…

    • 0 replies
    • 659 views
  14. சிறிலங்காவின் நல்லிணக்கம், புனர்வாழ்வு குறித்து பேசினேன் – அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் APR 16, 2015 | 2:44by அ.எழிலரசன்in செய்திகள் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், தாம், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கான பயணத்தின் முடிவில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சென்னையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், அது பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். அவுஸ்ரேலியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து இ…

  15. அமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு - முன்னாள் தளபதி இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார். இந்திய இராணுவம்இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது என்ற முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே இலங்கையில் சண்டை நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்திய அரசு இலங்கை அரசுடன் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை குறிப்பிட்டுக் காட்டிய அவர், இந்திய இராணுவம் தான் பயிற்சியளித்த நபர்களுடன் மோத வேண்டிய சூழல் உருவானதாகவும், இது தர்மசங்கடங்களைத் தோற்றுவித்ததாகவும்…

  16. ஜேவிபியில் இருந்து விலகினார் சோமவன்ச – மீண்டும் பிளவுபடுகிறது கட்சி APR 16, 2015 | 13:42by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஜேவிபி மீண்டும் பிளவுபடும் நிலை தோன்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகிக் கொள்வதாக சோமவன்ச அமரசிங்க இன்று அறிவித்துள்ளார். அத்துடன், தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது இந்த முடிவு முற்றிலும் தனிப்பட்டதே என்றும், எவரும் தன்னை ஜேவிபியை விட்டு விலகுமாறோ, தம்முடன் இணைந்து கொள்ளுமாறோ கோரவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். …

  17. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படக் காரணமான மூன்று காரணிகள் – ஒரு அனைத்துலக ஆய்வு APR 13, 2015 | 11:47by நித்தியபாரதிin கட்டுரைகள் அனைத்துலகில் செயற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் வழி ஏற்றுமதி இறக்குமதிகள் மற்றும் கேந்திரம் முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் போக்குவரத்துப் போன்றவற்றை தடுத்து நின்ற போரியல் ஆற்றல் மிக்க ஒரு அமைப்பாக விளங்கியது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Peter Layton என்ற போரியல் நிபுணர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சிவாதிகளுடனான அன…

    • 37 replies
    • 3.5k views
  18. அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறுபவர்கள் சுய விருப்புடன் செல்பவர்களாக இருக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம் கூறுகின்றது. …

    • 4 replies
    • 925 views
  19. கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம் APR 11, 2015 | 1:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் தேர்தல் சட்டம் மற்றும் சிறிலங்கா மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற விதி முறைகளுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், கையெழுத்திட்டு, சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். “ 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ந…

    • 5 replies
    • 602 views
  20. சர்வதேச தொழி­லாளர் தின­மான மே தினத்­தன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவுடன் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியை சேர்ந்த மேலும் 40 உறுப்­பினர்கள் இணைந்து கொள்­ள­வுள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்களில் இருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழு­வி­லி­ருந்து நான்கு உறுப்­பி­ன­ர்கள் நீக்­கப்­பட்­டதை அடுத்து கட்­சிக்குள் பூ­சல்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் இத­னை­ய­டுத்தே மேற்­படி 40 உறுப்­பி­னர்கள் இணைந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. இதன்­படி எதிர்­வரும் மே முதலாம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கலந்துகொள்ளும் மே தின கூட்­டத்­திற்கு சுதந்­திர கட்சி அதி­ருப்­தி­யா­ளர்கள் 40 பேர் மேடை ஏற­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இர…

    • 2 replies
    • 473 views
  21. யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, சில்லாலை பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் கஞ்சாவை புதன்கிழமை (15) மீட்டதுடன், அதனை மறைத்து வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் 5 பொலித்தீன் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து மேலதிக விசாரணை மேற்கொண்டு அதேபகுதியை சேர்ந்த 19 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வீட்டில் மறைத்து வைத்த…

  22. தமிழருக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்முறைகள் – பாதுகாப்புச் சபையில் பான் கீ மூன் அறிக்கை APR 16, 2015 | 1:47by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போருக்குப் பின்னரும், பாலியல் ரீதியான வன்முறைகள் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. உலகில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்தும், சிறிலங்கா உள்ளிட்ட 19 நாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், கடந்த திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையில், தற்போதும் மோதல்கள் நடந்து வரும், ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொலம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு, ஈராக், லிபி…

    • 5 replies
    • 873 views
  23. கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக செய்கைக்குத் தேவையான நீர், 14ஆம் திகதி திறந்துவிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய குளமான அக்கராயன் குளத்தின் கீழ் இந்த வருடம் 2,500 ஏக்கரில் நெல் மற்றும் உபபயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செய்கைக்குத் தேவையான நீரானது திறந்து விடப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டால் சிறுபோக செய்கையில் 4000 ஏக்கரில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ள முடியும். குளத்தை முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு 1,000 மில்லியன் ரூபாய் தேவையென பொறியலாளர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/144048#sthash.Axo0ahSy.dpuf

    • 0 replies
    • 588 views
  24. இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த தனது தாயினால் ஜப்பான் கொண்டுசெல்லப்பட்ட 5 வயதுச் சிறுமி தனது ஜப்பானிய தந்தையுடன் இலங்கையில் வாழ்வதற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என ஒரு அரசாங்க அதிகாரி ஜப்பான் டைம்ஸ் பத்திரிகைக்கு புதன்கிழமை கூறினார். 1980 சர்வதேச சிறுவர் கடத்தலின் சிவில் அம்சம் பற்றிய ஹேக் சமவாயத்;துக்கு அமைய ஒரு பிள்ளை தான் வழமையாக வாழும் நாட்டுக்கு திரும்ப செல்வதற்கு அதிகாரமளிக்கும் நீதிமன்ற கட்டளையை ஜப்பான் முதல் தடவையாக புதன்கிழமை நிறைவேற்றியது. தமது பெற்றோர்களில் ஒருவரினால் சர்வதேச எல்லை தாண்டி பிழையான வழியில் கூட்டிச் செல்லப்பட்ட பிள்ளைகளை விரைந்து மீளக்கொண்டு வர இந்த சமவாயம் வழி சமைத்துள்ளது. இந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் ஜப்பானியர்கள். இந்த பிள்ளை இல…

    • 0 replies
    • 440 views
  25. இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சடம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26), கைதடி நுணாவிலைச் சேர்ந்த துரைராஜசிங்கம் தயாபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். வேகமாக சென்ற பிக்கப் குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இ.போ.ச. பஸ்ஸுடன் மோதியதாகத் தெரியவருகின்றது. படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பர…

    • 0 replies
    • 439 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.