Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு இம்மாத இறுதிப் பகுதியில் இலங்கை வரவுள்ளார். சுஷ்மா சுவராஜின் விஜயம் உறுதியாகியுள்ளதாகவும் எனினும் திகதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பையேற்று இலங்கை வரவுள்ள சுஷ்மா சுவராஜ் இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழு அமர்வில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு அரச விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயண ஏற்பாடுகள் குறித்தும் சுவராஜ் ஆராயவுள்ளார். அது மட்டுமன்றி இலங்கை இந்திய நாடுகளுக்க…

  2. இலங்கை அரசின் உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையுடனேயே நடக்க வேண்டும். இல்லையேல் மகிந்த ஆட்சிக்கு ஏற்பட்ட நிலையே இந்த ஆட்சிக்கும் ஏற்படுமென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லைன்றும் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்; காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லை. இந்த ஆணைக்குழுவின் ச…

    • 3 replies
    • 708 views
  3. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத் தாளை வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பில் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றுவீத பிரிவுக்கு தெரியப்படுத்தி, அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியை சேர்ந்த சந்தேகநபர் கடந்த 16ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், வெளிநாட்டுப்பணத்தை மாற்றுவதற்கு முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர்.…

    • 1 reply
    • 819 views
  4. இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கின்றார். சில நேரங்களில், உணர்ச்சிகள் - நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடம…

  5. சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்- ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர். அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன் தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன். இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை என…

  6. கொழும்பில் சில தினங்களாக பல பிரதேசங்களில் கை, கால்கள் இல்லாத சடலங்கள், கால் துண்டிக்கப்பட்ட சடலங்களின் பாகங்கள் மீட்கப்பட்டன. எந்த காரணத்திற்காக இந்த கொலைகள் நடந்தன என்பது மர்மமாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அரசியல் ரீதியாக கடந்த அரசாங்க காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்தன. புதிய அரசாங்கம் பொறுபேற்றுள்ள நிலையில், ஏன் இவ்வாறான கொலைகள் நடக்கின்றது என்று மர்மமாக இருப்பதாக கூறப்படுகிறது. உடல் பாகம் இல்லாத சடலம் ஒன்று மாதிவல தியவன்னா ஓயாவில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலத்தில் ஒரு கை இருக்கவில்லை. இதற்கு முன்னர் தெமட்டகொடை பிரதேசத்தில் ஆறு ஒன்றில் இருந்து இரண்டு மனித கால்கள் மீட்கப்பட்டதுடன் வெலிக்கடை நாவல ஆற்றில் ஒரு மனித கை ம…

  7. பளைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை நெல்லியடிப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற லொறியின் முன்பக்க ரயர் வெடித்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றது. லொறிச் சாரதியான புத்தூர் வடக்கைச் சேர்ந்த குகதாசன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கரணவாய் வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த தெ.ரெங்கநாதன் அந…

  8. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு லெப் டொப், 10 புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன. இதில் வீரகேசரி பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், புகைப்பிடிப்பாளர் சலீம், வீரகேசரி ஊடகவியலாளர் மின்காஜ் ஆகியோருக்கு மடிக்கணனி வழங்கப்பட்டது. அத்துடன், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சின்னத…

  9. உயர்பாதுகாப்பு வலையமாக இருந்த வளலாய் பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது. எங்கள் நிலங்கள் விடுவிப்பது எப்போது என மயிலிட்டி மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வளலாய் மக்களை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியமர்வதற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதி மக்கள் தங்களது காணி ஏல்லைகளைத் தேடுவதிலும் , காணிகளைத் துப்புரவு செய்வதிலும் முனைப்புக்காட்டி வருகின்றனர். இந்தநிலையில், மயிலிட்டி மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் சந்தித்து கலந்துரைய…

    • 3 replies
    • 432 views
  10. வடக்கில் இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் சத்தம் சந்தடியற்று முன்னெடுப்பது அம்பலமாகியுள்ளது. ஒருபுறம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது மெதுவாக நடை பெற்று வருகின்றது. அதற்கு பெரும்பிரச்சாரம் செய்யப்படுகின்றது .மறுபுறத்தே கடந்த இரண்டு மாத காலத்தில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று வார காலப் பகுதியினுள் மட்டும் வடக்கில் 20 காணித் துண்டுகள் படைத் தரப்பின் பாவனைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னைய அரசின் காலத்தில் வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்கு மேலதிகமாக பல்வேறு இடங்களிலும் முப்படையினரின் தேவைக்காக காணிகள் சுவீகரிப்பதற்கு அடையாளப…

    • 18 replies
    • 1.1k views
  11. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறுவப்பட்டுள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் டைடர் புர்காட்லர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகத்திற்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்து வரும் முனைப்புக்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை புதிய அரசாங்கம் காண்பித்து வரும் சிரத்தை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினரும் இணைந்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதன் மூலம் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் ஊடாக 300 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான கொடுக்கல் வா…

  12. இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார். வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலு…

  13. வளலாய்ப் பகுதியிலிருந்து பொதுமக்களின் கிணறுகளைத் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்த இராணுவத்தினர், காணிகளை மக்களிடம் விடுவிப்பதற்கு முன்பாக அவற்றை மூடியுள்ளனர் என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். 25 வருடங்களாக இராணுவத் தி னரால் கையகப்படுத்தி வைக்கப்பட் டிருந்த வளலாய் கிராம சேவை யாளர் பிரிவின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் தமது காணிகளைத் துப்புரவு செய்து வருகின்றனர். அதன்போதே, இராணுவத்தினரால் கிணறு கள் மூடப்பட்டுள்ள விடயம் வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இது தொடர்பில் தற்போது அந்தப் பகுதியை துப்புரவு செய்துவரும ஒருவர் கூறுகையில், எனது வீட்டுக் கிணற்றை இரா ணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர். …

  14. யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பிரிவினரால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதனால் எங்களுடைய உண்மையான மனநிலையை கூட வெளிப்படுத்த முடியவில்லை என முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் வருகை குறித்து இந்திய தூதரகமே எமக்கு அறிவித்திருந்தது. எனினும் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து டெல்லியே தீர…

  15. சுதந்­தி­ர­ம­டைந்த காலம் முதல் தற்­போது வரையில் தமிழ் மக்­களை குழி­தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்த மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் தமிழ்த்­தே­சிய அர­சியல் சக்­தி­களை ஒன்­று­ப­டுத்தி தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­னார். இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் விரு­து­வ­ழங்கும் விழாவும் கௌர­விப்பு நிகழ்வும் நேற்­றைய தினம் கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் இடம்­பெற்­றன. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்­நி­கழ்வில் சிறப்பு விருந்­தி­னர்­க­…

    • 0 replies
    • 271 views
  16. யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகத் பெருந்தமிழர் திரு.நாகலிங்கம் அவர்களின் மறைவிற்கு பழ நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை. http://www.pathivu.com/news/38542/57//d,article_full.aspx

  17. இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிநிற்பதை இலங்கையில் வாழ்கின்ற சகலரும் எதிர்க்கின்றனர். அந்த கோரிக்கை இலங்கைக்கு அபகீர்த்தியானதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் ஐ.பி.டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர், மேலும் தெரிவித்திருப்பதாவது, அவ்வாறான சம்பவம் தொடர்பில் ஐ.நா அமைப்பின் ஊடாக சர்வதேச விசாரணையை கோருவது இலங்கைக்கு ஏற்படுத்துகின்ற அபகீர்த்தியாகும். இலங்கையினால் மேற்கொள்ளப்படும் தேசிய விசாரணைக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்ததாக…

  18. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிமீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு உரிமையுள்ளது என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதற்கு அமைச்சரவை பேச்சாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை பிரதமரின் இந்த கருத்தினை தான் அங்கீகரிக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனரத்தின இந்தியன் எக்ஸ்பிரசிற்கு தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க ஏன் மீண்டும் இவ்வாறு கருத்துவெளியிடவேண்டும் என்ற கேள்விக்கு ரணில்விக்கிரமசிங்க இந்திய மீனவர்களின் ஊருடுவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் இ;நத கருத்தை வெளியிட்டிருக்கலாம் என ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார். மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனான …

  19. வடக்கில் இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் இன்று புதுக்குடியிருப்பினில் மக்கள் போராட்டமொன்றையடுத்து கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிலஅளவையாளர்கள் குழுவொன்று தப்பித்து ஓடியுள்ளது. ஒருபுறம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது மெதுவாக நடை பெற்று வருகின்றது.அதே வேளை கடந்த மூன்று வார காலப் பகுதியினுள் மட்டும் வடக்கில் 20 காணித் துண்டுகள் படைத் தரப்பின் பாவனைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன. பதிவு இணைய செய்தி முன்னைய அரசின் காலத்தில் வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்கு மேலதிகமாக பல்வேறு இடங்களிலும் முப்படையினரின் தேவைக்காக காணிகள் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. …

  20. கொழும்பு போட் சிட்டி திட்டத்தை சீனா தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதித்தால் அதற்கு மேலாக உள்ள வான்பரப்பு முற்றுமுழுதாக சீனாவிற்குரியதாகிவிடும்; என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விமானப்போக்குவரத்து அதிகார சபையை சேர்ந்த அதிகாரிகளே இதனை சுட்டிக்காட்டியுள்ளனர். 1944 சிக்காக்கோ பிரகடனத்தின் படி குறிப்பிட்ட பகுதியின் வான்பரப்பு உரிமை சீனாவிற்கே செல்லும், இலங்கை கேள்வி எழுப்ப முடியாத நிலை உருவாகலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.முன்னைய அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையே இந்த அபாயகரமான நிலைக்கு வழிவகுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள இந்த விடயம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…

  21. நாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம். எம்மை வளப்படுத்தி செழுமைப்படுத்துவது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தற்கால நலனும் வருங்கால நலனும் கொண்டதாகும். கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனைத் அனைவரும் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 26 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக்கருத்தினை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகம் ஒன்றிற்கு நான் வழங்கியுள்ள செவ்வியில் உண்மைக்கு புறம்பான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அது குறித்த விளக்கத்தை சபையில் வழங்க …

  22. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்ஸவின் சேவை அவசியமானது என முன்னாள் அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கிராமங்களில் தொடர்ந்தும் பிரபல்யமாக திகழ்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமா இல்லையா என்பது பற்றி கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்காக போட்டியிடப் போவதாக ராஜபக்ஸ எந்த இடத்திலும் இதுவரையில் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவும…

  23. இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுகின்றனர். முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பாகவும் அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரிக்க குழு அமைத்துள்ளார்கள். ஆனால், இரகசிய முகாம்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தாது இராணுவ தளபதியும் கடற்படை…

  24. இத்தாலி செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கடவுச்சீட்டு விஸாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இவ்விருவரும் பஹ்ரைனூ டாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட் டனர். மிஹின் லங்கா விமான சேவையினூடாக பஹ்ரைன் செல்வதற்காக நேற்று முன்தினம் இவர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்த ஆவணங்களை சோதனையிட்ட போது ஒவ்வொருவரும் இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பது தெரியவந்தது. ஒரு கட…

    • 1 reply
    • 275 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.