Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 17 Sep, 2024 | 08:19 PM பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160ஆவது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தர் சிலையொன்றை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் கையளித்திருந்ததுடன், இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார். நான்கு அடிகள் உயரமும் 330 கிலோ நிறையினையும் கொண்ட இந்தச் சிலையானது இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களது கோரிக்கைக்கு அமைவாக கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் விசேடமாக வழங்கப்பட்டதாகும…

  2. Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 04:56 PM ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா போதை பொருள் அடங்கிய மூட்டைகளை சட்டவிரோதமாக தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி செல்ல காத்திருந்த போது நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமில் வைத்து ம…

  3. Published By: Digital Desk 3 17 Sep, 2024 | 04:52 PM தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று புதன்கிழமை (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள் .தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள் அம்மக்களுக்கு இருக்கின்றது.சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள…

  4. 16 SEP, 2024 | 05:27 PM பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். "நாடு அநுரவோடு" என்கிற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உ…

  5. 17 Sep, 2024 | 08:06 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அகில இலங்கை இளைஞர் அமைப்பின் உப தலைவர் சட்டத்தரணி தினேஷ் தலைமையில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் …

  6. Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 03:34 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த பாராளுமன்ற உறுப்பிரான ரவிராஜின் மனைவியான சசிகலா மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகனானா கலைஅமுதன் ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். https://www.virakesari.lk/article/193943

  7. Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:00 AM "சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. …

  8. Published By: DIGITAL DESK 3 17 SEP, 2024 | 02:57 PM நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் காலை 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனால் வைத்திய சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்படலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும், உதவி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு …

  9. வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, இளைஞரால் துஷ்பிரயோகம் Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 04:36 PM வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட…

  10. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு! ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ…

  11. 16 SEP, 2024 | 07:09 PM (நா.தனுஜா) தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எ…

  12. (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எ…

  13. Published By: VISHNU 16 SEP, 2024 | 07:34 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இட…

  14. 16 Sep, 2024 | 01:58 PM கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அனைத்து சிவில் சமூக ஒன்றிய நிலைப்பாடு மற்றும் வடக்கு பிரதேச செயலக போராட்டம் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை பாண்டிருப்பு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும் தெரிவித்ததாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிம…

  15. கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது 16 Sep, 2024 | 06:02 PM கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அலுவலகம் கடந்த 10ஆம் திகதி அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதனுள்ளிருந்த பொருட்கள் சிலவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் …

  16. 01 JUN, 2024 | 08:12 PM ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை (01) மாலை மூன்று மணியளவில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என …

  17. Published By: VISHNU 16 SEP, 2024 | 02:37 AM விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை (15) உயிர்மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். அவனது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அளவெட்டி அருணோதயாவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்…

  18. தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதானது மக்கள் தங்கள் ஜீவிய உரித்தான வாக்கை அவர்களே குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயல் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (15) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பரப்புரையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனநாயகத்திலே ஒவ்வோரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வரும் போது, ஒரு பிரஜைக்கு தான் அளிக்கின்ற அந்த புள்ளடி நாட்டிலே மாற்றத்தையும், விருப்பமான ஆட்சியாளனை தேர்ந்தடுக்கின்ற உரித்தை வழங்குகிறது. அவ்வாறானதொரு உரித்தை வீணடிப்பதற்கான பல விதமான …

  19. Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:08 AM போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு ஒரு விசேட புனர்வாழ்வு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமையம் வவுனியா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 100 பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்க முடியும். நீதிமன்ற உத்தரவுக்கமைய போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். இந்த புனர்வாழ்வு மையம் குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி, போதைப் பொருளுக்கு அடிமையான பெண்களை புதிய புனர்வாழ்வு மையத்துக்கு புனர்வாழ்விற்காக …

  20. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்குழு கூட்டம் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இவ்வாறு, மக்க…

  21. Published By: VISHNU 16 SEP, 2024 | 02:43 AM கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர். அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலும் ஒரு பொதி கஞ…

  22. Published By: DIGITAL DESK 2 15 SEP, 2024 | 10:01 PM இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் (X) தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார். சர்வதேச ஜனநாயக தினமான இன்றையதினத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிற…

  23. 15 SEP, 2024 | 09:38 PM (இராஜதுரை ஹஷான்) தேசியம், பௌத்தம் பற்றி நாமல் ராஜபக்ஷ மாத்திரமே பேசுகிறார். ஏனைய வேட்பாளர்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் நான் உறுதிப்படுத்தினேன். அபிவிருத்திகளை துரிதமான மேற்கொண்டு தேசிய பொருளாதாரத்…

  24. ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்! ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்…

  25. Published By: RAJEEBAN 14 SEP, 2024 | 10:36 AM தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.