Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பு சார்பு வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் இன்று இரு மணிநேரம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜராக விடுக்கப்பட்ட பணிப்பினையடுத்து சமூகமளித்திருந்த நிலையினிலேயே இரண்டு மணிநேரம் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டார்.பதிவு இணைய செய்தி நீதிமன்ற உத்தரவை மீறி மக்களுக்கு கழிவு ஒயில் கலந்த நீர் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் நீதிபதியால் கடுமையாக அவர் எச்சரிக்கப்பட்டார். கழிவு ஓயில் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மாற்றீடாக குடிநீர் வழங்குவதாக தெரிவத்து அதே கழிவு ஓயில் கலந்த குடிநீரை …

  2. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தலைமையில் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  3. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை நேற்று முன்தினம் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு கூறப்பட்டுள்ளது. எனினும் விசாரணைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ரவிகரன் தெரிவித்தார். இதேவேளை, ரவிகரனின் வீட்டில் இராணுவத் தளபாடங்கள் உள்ளன என்று கூறி கடந்த 5 ஆம் திகதி வீட்டைச் சோதனையிட முற்பட்டிருந்தமை குறி…

  4. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் மாற்றம் இல்லை என்பதே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என, அவரது பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் சிறந்த முறையில் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பது செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126511&category=TamilNews&language=tamil

  5. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பதிவு இணைய செய்திகள் வொசிங்டனில் நேற்று பிற்பகல் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அவர் வெளிப்படையாக கூறாவிடினும், சூசகமாக முறையில் அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். “அறிக்கையைத் தாமதிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது. ஆனாலும், இதுபற்றி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், மற்றும் ஐ…

  6. சிறிலங்காவின் உள்ளக விசாரணைகள் சர்வதேசத் தரத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்ரீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஜனநாயகம், அமைதி மற்றும் பொறுப்புக் கூறுதல் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைக்கும். இந்த விடயத்தின் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது. இதற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்று முன்தாகவே ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும் சிறிலங்கா உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அது சர்வதேச தரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் உ…

  7. http://youtu.be/pfkkYH6guY4 யாரிந்த நபர் இவரை எத்தனை உலகத் தலைவர்களுக்குத் தெரியும்?கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் தான் ஏதோ பெரிய மேதாவி மாதிரி பேசுகிறார்.இவரைப் போய் பாலா அண்ணருடன் ஒப்பிட்ட ******** யார்? நியானி: ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது.

  8. தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலை என்ற தலைப்பில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசின் நிலைப்பாடு அல்ல என்றும், சர்வதேச விசாரணைக்கு ஒரு போதும் இடமில்லை என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் காத்திரமான வகையில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியை எம்மால் வழங்கமுடியும். இலங்கை மீது சர்வதேச விசாரணையை அனைத்துலக சமூகம்…

  9. வடமாகாண சபையில் இனவழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. சர்வதேச விசாரணையில் சிறிலங்காவில் 1948ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை ஏற்க மறுத்து வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தற்போது அதனை வரவேற்றுள்ளார். எனினும் இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.http://www.pathivu.com/news/37753/57//…

  10. கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பிலேயே வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் நல்லுறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என வலியுறுத்தி வட மாகாணசபையில் நேற்றுமுன்தினம் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்- கடந்த அரசாங்கம் மக்களைத் துன்புறுத்தியுள்ளது என்பதற்காகவே அதனை மாற்றும் தீர்மானத்துக்கு மக்கள் வந்தனர். இதனாலேயே புதிய அரசாங…

  11. நாவற்குழியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்ற மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் சிறு பகுதி கூட தமக்கு வழங்கப்படுவதில்லை என அந்த பகுதியில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் 110 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களிற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. அருகில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு செய்யப்படுகின்ற உதவிகளில் சிறிதளவு கூட அவர்களிற்கு செய்யப்படுவதில்லை. வாழ்வாதாரம் அற்ற நிலையில் வீட்டு திட்டங்கள் கூட வழங்கப்படாத நிலையில் இப்பகுதியில் அக்குடும்பங்கள் வாழ்கின்றன தம்மை இங்கு குடியேற்றும் போது எமக்கு மாளிகைகள் கட்டி தருவது போல கூறியே எம்மை இங்கு அழைத்து வந்து குடியேற்றினார்கள். ஆனால் இதுவரை மலசலக…

  12. வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும் ஆகியிருக்கிறது. அந்தவகையில் கௌரவம் மிக்க இந்தச் சபையி;ல் இதுபற்றிச் சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சுன்னாகம் அனல் மின்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில், இலங்கை தரநிர்ணய நிறுவகத்தால்(Srilanka Standard Institute) குடிநீரில் இருக்கலாம் என அனுமதிக்கப்பட்ட எண்ணெய் மாசின் அளவைவிட (1மில்லிகிராம் இலீற்றர்) அதிக அளவில் எண்ணெய் மாசாக உள்ளது என 2012 ஆம் ஆண்டே தேசிய நீர்…

  13. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டாமென முன்பு எதிர்த்தவர்கள், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென கோருவது, ஆரோக்கியமான மாற்றம் என, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு அனைத்து உறுப்பினர்களும் முன்வந்துள்ளனர். இது எத்தகைய போக்கினை காட்டுகின்றது. ஏன் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள். தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பலபேருக்குள் ஏற்பட்டுள்ள கொள்கைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கலாம் என நம்புகி…

    • 2 replies
    • 619 views
  14. ஓர் இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஓர் இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்தியாவை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்கு அங்குள்ள பண்டைய சிற்பங்களும் தற்போது எழுச்சி பெற்று வரும் சிற்பங்களுமே காரணம். ஆனால் இந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்கள் வந்து செல்கின்றனர். அதன் அயல்நாடான இலங்கையில் அந்த நிலை இல்லை என்ற கவலை சிற்பாச்சாரியர்களிடம் நிறைந்தே உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் வவுனியா, நொச்சிமோட்டையில் ''ஸ்ரீ கிருஸ்ணன் சிற்பாலயத்தில்'' சிறப்பக்கலையில் ஈடுபட்டு வரும் தர்மலிங்க…

  15. குடிநீரினில் கலந்துள்ள கழிவு ஓயில் தொடர்பிலான பிரச்சினை நாள் தோறும் பூதாகர நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையினில் தூயநீருக்கான விசேட செயலணி வினைத்திறனற்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களது நலன்களிற்காக போராடும் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தினில் அவ்வமைப்பு இன்று வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.சந்திப்பினில் இது பற்றி கருத்து வெளியிட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போதைய பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கான தற்காலிக குடிநீர் விநியோக ஏற்பாடுகள் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளினை முன்வைத்திருந்ததாகவும் ஆனால் அவற்றினை முன்னெடுப்பதில் தூயநீருக்கான விசேட செயலணி போதிய பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கவில்லையென…

  16. ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் நிலையினில் தமிழ் சிவில் சமூக அமையம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அக்கடிதத்தினில் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டதொடர் தொடர்பில் தங்களிற்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம். இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற 100க்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் வலையமைப்பாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது, இலங்கையில் நேர்மையான சமாதானத்திற்காகவும் நீதிக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைப்பாகும். மனித உரிமை ஆணையாளார் அலுவலத்தினால் நடாத்தப்படும் இந்த விசாரணையில் எமது அமையத்தின் பங்களிப்பு தாங்கள் அறிந்ததே. அந்த வகையில் அவ்விசா…

  17. அவுஸ்ரேலியா இருந்து இலங்கை வருகை தந்தவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து கடந்த 2012 /8/12 படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று இரண்டரை வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பி வந்தவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத் தக்க இவர் கடந்த 2012 /8/12 சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றுள்ளார். மேலும் 64 பேருடன் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி 28 நாட்கள் கடலில் பயனித்து, அங்கு சென்று வீடு ஒன்றில் பணிபுந்து வந்த போது சுய விருப்பத்தின் பேரில் தான் இலங்கைக்கு திரும்பி வந்ததாக குற்றப் புலனாய்வு …

  18. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுடைய 81 படகுகளும் நீதிமன்றங்களின் ஊடாக நாளைய தினம் துணைத்தூதரகத்திடம் பாரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எல்லைதாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டிலும் படகு பழுதடைந்த நிலையிலும் மீட்கப்பட்டவை என இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் 81 படகுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் புதிய அரசு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய அரசுக்கும் இடையில் படகு விடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனையடுத்து கடந்த காலங்களில் அரசிடம் இருந்த படகுகள் …

  19. தனது சகோதரரான யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் யோஷித ராஜபக்சவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் யோஷித ராஜபக்ச, டுபாய்க்கு பயணமாகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித ராஜபக்சவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது சகோதரர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் குறிப்பிட்டார்.பாதுகாப்பு அமைச்சில் சாதாரண பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெற்றுக் கொள்ளக்கூடிய விடுமுறை அனுமதியினைப் பெற்றுக்கொண்டே தனது சகோதரர் தனிப்பட்ட காரணத்துக்காக டுபாய் சென்றார் என்றும் நாமல் எம்…

  20. அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி FEB 11, 2015 | 13:35by கார்வண்ணன்in செய்திகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அகதிகளை திரும்ப அழைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த 26 ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருப்பதும், மீள்குடியமர்வுக்கு காணி சுவீகரிப்பு ஒர…

  21. வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்ட 133 பெண்களும் 20 அமைப்பினரும் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாம், போரினால் மற்றும் வன்முறைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் என்பவற்றினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை கண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் உண்மையான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளனர்.இதன்மூலம் இலங்கையில் உண்மையையும் நீதியைய…

  22. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதியின் செலவுக்கென கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கீடு, விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, மற்றும் ஊழல் மோசடி உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு எதிராக அரசு பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றினூடாகத் தெரிவித்திருந்தார். …

  23. இராணுவ சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டமை தொடர்பில் மகிந்த மற்றும் கோட்டாபயவிடம் விசாரணை செய்வதற்கான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவ தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோரிடமும், முன்னாள் பிரதமர் நீதியசரர் மொஹான் பீரிஸிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பான கோப்புகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடரின் அவரின் ஆலோசனைக்…

  24. இன அழிப்பு மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பினில் வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு சிலரை தவிர கூட்டமைப்பிலுள்ள ஒட்டுமொத்த தரப்புக்களதும் ஆதரவை பெற்றதொரு தீர்மானமே.அத்தீர்மானத்தை வெற்றிகரமாக தொடர்ந்து முன்னெடுக்க நாம் அனைவரும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் இது பற்றி தெரிவிக்கையினில் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரேரணையினை வரவேற்றிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதொன்று.எதிர்வரும் காலங்களினில் இணைந்து செயற்படுவதற்கான நம்பிக்கையும் உள்ளது. இதே வேளை தமிழ் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.