ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கட்டார் டோஹாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தது பற்றியும் இறந்தவர்கள் இலங்கையர்களாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.. அது பற்றிய முழு விபரம்.கட்டாரில் டோஹா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை தமிழ் பிரிவு பெரிய நீலாவணை கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நீலாவணைக் கிராமத்தில் இருந்து வெளிநாட்டில் தொழில் புரிவதற்காகச் சென்ற இளைஞர்களே இவ் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நான்கு இளைஞர்கள் காரில் பயணித்துள்ளனர். எதிர்பாராத விதமாக முன் டயர் வெடித்துள்ளதுடன் பெ…
-
- 1 reply
- 560 views
-
-
2015 ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருள) எனும் கண்காட்சி நடத்தப்படமாட்டாது என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கண்காட்சி, சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரையும் நடத்தப்பட்டது. 2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 20010ஆம் ஆண்டு கண்டியிலும் 2011ஆம் ஆண்டு மொனராகலையிலும் 2012ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும் 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலும் 2014ஆம் ஆண்டு குளியாப்பிட்டியவிலும் நடத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு மாத்தறையில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்…
-
- 0 replies
- 628 views
-
-
வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பினை முடித்த வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான வழிமுறையில் ஒன்று கூடவுள்ளனர். குறித்த ஒன்றுகூடல் எந்தவொரு அரசியல் பின்னணிகளும் இன்றி வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் மட்டும் அடங்கிய மகஜர்களை வடமாகாண முதலமைச்சர்,வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=415653819119505484
-
- 0 replies
- 391 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்ததை காரணமாகவே றோ அமைப்பின் அதிகாரி ஒருவர் இலங்கையில் இருந்து திருப்பியழைக்கப்பட்டார் என்ற செய்தியை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.இந்திய வெளியுறவு பேச்சாளர் அக்பருதீன் இந்த நிராகரிப்பை நேற்று புதுடில்லியில் வெளியிட்டுள்ளார். குறித்த அதிகாரி, மூன்று வருடகால சேவை முடிந்த நிலையிலேயே திருப்பியழைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலர், தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தரும் தகவல்களை கொண்டு வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124898&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 326 views
-
-
நாட்டில் ஜனநாயகம் மலர ஆட்சிமாற்றம் கட்டாயமானது என்பதை தமிழ் மக்களும், சிங்கள மக்களுக்கும் விரும்பியமையால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 08ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான, தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு, பருத்தித்தறை நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(18) மாலை நகரசபை தவிசாளர் சபா.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றபோதே, சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்…
-
- 4 replies
- 431 views
-
-
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவை ஆராயும் பொருட்டு 9 பேர் கொண்ட குழுவொன்று வடமாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, அவைத்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு, எண்ணெய் கசிவு தொடர்பில் ஆராய்ந்து வடமாகாண சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. இந்தக் குழுவின் செயற்பாட்டில் வினைத்திறனையும் சிறப்பான முடிவையும் பெறும் பொருட்டு அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடமுடியாது என அவைத்தலைவர் குறிப்பிட்டார். சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்தி…
-
- 1 reply
- 445 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினர் நெருங்கிய சகாக்கள் சீசெல்ஸ் நாட்டில் சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தொடுhபில் விசாரணை நடத்தப்படும் பிரதி பொருளாதார அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். பல்வேறு வழிகளில் இந்த சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் கணக்காய்வாளர்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கூட விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக வங்கியின் ஒத்துழைப்பையும் இதற்காக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீட்கும் திட்டத்தின் அடிப்படையில் …
-
- 0 replies
- 420 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின் கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம் அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன. இந்தியாவின் பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார். மைத…
-
- 27 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமது நிலைப்பாடு தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கில் தமிழ் மக்கள் சார்பாக 11 உறுப்பினர்கள் மாகாண சபையில் உள்ளனர். இருந்தும் கடந்த கலங்களில் இந்த சபை தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டமை வேதனைக்குரியது.…
-
- 0 replies
- 325 views
-
-
நாம் பேச்சுவார்த்தைக்கு தயார் புதிய அரசு தீர்வு திட்டத்தை உருவாக்க தயாரா?சுரேஸ் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: வவுனியா:- வவுனியா நாம் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் புதிய அரசு தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசி தீர்வு திட்டத்தை உருவாக்க தயாராக உள்ளதா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் என்ற தொனிப்பொருளிலும் வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது மக்களுடனான் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர். ம…
-
- 1 reply
- 428 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இராணுவப் பொருட்கள் மற்றும் அது சார்ந்தவற்றை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபைக்கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய யுத்த உபகரணங்கள், வெடி மருந்துகள் , இராணுவ சீருடைகள் மாதிரியான ஆடைவகைகள் மற்றும் தொலைகாட்டி போன்ற உபகரணங்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே வடக்கு, கிழக்கிற்கு கொண்டு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்ட சில பொருட்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://onlineuthayan.com/News_More.php?id=148343817218456971
-
- 1 reply
- 563 views
-
-
அரச ஊழியர்களுக்கு, 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு. அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய அரசின் 100 நாள் திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் .இதில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பும் இடம்பெறவுள்ளது. நன்றி உதயன்.
-
- 0 replies
- 1.5k views
-
-
தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கையின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. எனினும் அதில் உண்மையில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று மல்வத்த மகாநாயக்கரை சந்தித்தபோது அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். tamilwin.com
-
- 6 replies
- 912 views
-
-
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் உருவாக வழி வகுக்குமென முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ஸ தெரிவித்துள்ளார். பத்திரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சி தலைமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் செல்வாக்கு கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு திட்டமிட்…
-
- 14 replies
- 886 views
-
-
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப விரைவில் நடவடிக்கை? – புதுடெல்லியில் முக்கிய பேச்சு JAN 19, 2015 | 1:32by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவது குறித்து, இந்திய-சிறிலங்கா அரசாங்கங்கள் மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன. போரினால், இடம்பெயர்ந்த தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து, புதுடெல்லியில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களிலே, அகதிகளை மீண்டும் சொந்த இடங்க…
-
- 0 replies
- 406 views
-
-
‘றோ’வினால் தேர்தலில் வெற்றி பெறவில்லை – மங்கள சமரவீர JAN 19, 2015 | 1:04by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது, மக்களாலேயே தவிர, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வினால் அல்ல என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் ‘றோ’ அதிகாரி முன்னின்று செயற்பட்டதாக, நேற்று அனைத்துலக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். புதுடெல்லியில் நேற்று மாலை கருத்து வெளியிட்ட மங்கள் சமரவீர, “அந்த அறிக்கையில் அர்த்தம் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றது மக்களால் தானே தவிர, ‘றோ’வினால் அல்ல. இந்திய வெளிவிவக…
-
- 0 replies
- 365 views
-
-
இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!!! மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்ததினம் இன்று!வாழ்க அவர புகழ்!!!
-
- 23 replies
- 1.5k views
-
-
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக, கட்சியின் உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமாகிய திருமதி அனந்தி சசிதரனை, கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவை தொடர்பில் அனந்தியின் கவனம் ஈர்க்கப்படுவதாகவும், அவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இம்மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். ‘நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் (2015) பொது எதிரணி வேட்பாள…
-
- 56 replies
- 2.9k views
-
-
ரியர் - நிர்வாகி, பார்வைகள் - 296 மகிந்த ராஜபக்ச நியமனம் செய்த அனைத்து ஆளுநர்களையும் இன்று ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவுக்குள் தமது பதவிகளை தாமே இராஜினாமாச் செய்யுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச நியமித்த ஆளுநர்கள் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி காணப்படுவதாகவும் பொருத்தமான ஆளுநர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியின் இடத்திற்கு பளிக்கார நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவம் சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க இந்த நியமனம் வழங்கப்பட்டது. இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியை தழுவிய நிலையில் மாகாண சபை ஆட்சியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந் நிலையிலேயே மகிந்தவால் நிய…
-
- 0 replies
- 385 views
-
-
இதுதான் கோட்டபாயவின் கப்பல்: இன்று பிற்பகல் மாட்டிக்கொண்டது ! சற்று முன்னர் காலி துறைமுகத்தில் 12 கொள்கலன்களில்(கண்டேனரில்) ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. காலி துறைமுகத்தில் "மஹ நுவர" என்னும் கப்பல் சில நாட்களாக நங்கூரமிட்டு நிற்கிறது. இந்த கப்பலினுள் உள்ள பல கெண்டேனர்களில் ஆயுதங்கள் இருப்பதாக அங்கே வேலைசெய்யும் சிலர் பொலிசாரிடம் புகர் கூறியுள்ளார்கள். இதனையடுத்து சி.ஐ.டி பிரிவினர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் துறைமுகத்திற்கு விரைந்துள்ளார்கள். குறித்த கப்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கப்பலை அங்கிருந்து அகற்றி, சர்வதேச கடல் பரப்புக்கு கொண்டுசெல்ல சில அரசியல்வாதிகள் திட்ட…
-
- 0 replies
- 716 views
-
-
பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கு கூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர். நாங்கள் பயந்தவர்கள் என ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிற…
-
- 0 replies
- 523 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகும் மாவை.சேனாதிராசாவின் கனவு மீண்டும் பொய்த்துள்ளது.மைத்திரியின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின்போது இணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடரமுடியாத நிலையில் அந்தப்பதவியை பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அடுத்த பொதுத் தேர்தல் வரையான காலப்பகுதிவரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன், பிரதி அமைச்சர் விஜயகலாவும் இணைத்தலைவராகச் செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 11 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை அங்கிருந்து அகற்று வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமது பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகித்து வந்த நொதெர்ன் பவர் என்ற இந்த நிறுவனத்தின் மின்நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எ…
-
- 6 replies
- 482 views
-
-
முக்கியமான கொலைகளுக்கு, கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா. நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காரணம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இரு சந்தர்ப்பங்களில் நான் ஊடகங்களுக்கு எதிராக கூடாத வசனங்களை பயன்படுத்திவிட்டேன். நான் யோசித்து, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவற்றை கூறவில்லை. என் அடிமனத்திலிருந்த கோபத்தினாலும் எனது ஆவேசமான செயற்பாட்டினாலும் நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அதற்காக சகல ஊடகங்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன். நான், ருகுணு பெலியத்தையைச் சேர்ந்த நல்லதொரு சிங்கள பௌத்தன். என்னிடம் வ…
-
- 7 replies
- 2.5k views
-
-
கப்பலில் இருந்து 3000 துப்பாக்கிகள் மீட்பு காலித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து 3000 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ‘மாகாநுவர நவுகாவ’ என்ற பெயரில், சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பலில், 12 கொள்கலன்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரி-56 துப்பாக்கிகள் 84 அடங்குவதாகவும், ஏனையவை அரை தன்னியக்க மற்றும் தன்னியக்கத் துப்பாக்கிகள் என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் கோத்தாபய ராஜபக்சவினால், மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்டது…
-
- 2 replies
- 642 views
-