ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மஹிந்த ஆட்சியை ஒழித்து இன்று நாம் பெற்றுள்ள இந்த வெற்றி ஒரு முதல் கட்ட வெற்றியாகும். நமது இந்த அரசாங்கம் தொடர்ந்து நிலைக்க வேண்டும். இது நம் அடுத்த கட்ட இலக்கு. இந்த இலக்கை நாம் அடையாவிட்டால், மஹிந்த ராஜபக்ஷ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்தில் பிரதமராக வந்து அமர்ந்து மீண்டும் ஆட்சி செய்ய தொடங்கி விடுவார். மஹிந்த பெரும்பான்மை இன பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை இன சிறுபான்மை வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டுள்ளார். இதுதான் உண்மை. எமது அரசு நிலைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மை இன பெரும்பான்மை வாக்குகளை நாம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெற வேண்டும் என்பதை இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் மைத்தி…
-
- 0 replies
- 575 views
-
-
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி 16 ஆம் திகதி காலை நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த நிறுவனம் முன்னாள் அமைச்சரும், ஈபிடிபி கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=…
-
- 0 replies
- 826 views
-
-
முப்படையினரின் பாதுகாப்பு எந்தவொரு அமைச்சருக்கோ பிரதி அமைச்சருக்கோ வழங்கப்படக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களே அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து ஆராயும் நோக்கில் குழுவொன்றை பிரதமர் நியமிக்க உள்ளார். இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வாகனத் தொடரணிகளுடன் பயணம் செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமா…
-
- 0 replies
- 683 views
-
-
எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நியமிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நியமனத்துக்கு கட்சிக்குள் அதிக ஆதரவு இருப்பதாகவும், பாப்பரசரின் விஜயம் முடிந்தவுடன் இதுதொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சிரேஸ்ட நிலை என்ற அடிப்படையில் ஜோன் செனவிரட்னவின் பெயரும் இந்த பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து அவரை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் நிமல் சிறிபால டி சில்வாவே பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவராவார் என்று முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம…
-
- 0 replies
- 448 views
-
-
பிரி்த்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தேர்தல் குறித்து இன்று விவாதம்! [Wednesday 2015-01-14 08:00] இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலை நடத்த இணங்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை …
-
- 0 replies
- 358 views
-
-
மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும் - மயா அருள்பிரகாசம் குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும் - மயா அருள்பிரகாசம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக யுத்தக் குற்றச்செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என பிரபல பொப்பிசைப் பாடகி மயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்த கு…
-
- 1 reply
- 735 views
-
-
விரைவில் கொழும்பு செல்கிறார் மோடி – உறவைப் பலப்படுத்துவதில் இந்தியா தீவிரம் JAN 14, 2015 | 1:02by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிக விரைவாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்தே, இந்தியப் பிரதமரின் பயணத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வருகிறது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரும் 18ம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் மாலை வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே, அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய இந்திய வெளிவிவகார …
-
- 1 reply
- 485 views
-
-
பாப்பரசர் வருகையின் போது சிறிலங்காவில் நிகழ்ந்த 3 ஆட்சி மாற்றங்கள் JAN 14, 2015 | 1:25by கார்வண்ணன்in செய்திகள் பாப்பரசர்கள் பயணம் மேற்கொண்ட தருணங்களில், சிறிலங்காவில் மூன்றுமுறை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஒரு விநோதமான விடயம் என்று ஊடகங்கள் விபரித்துள்ளன. சிறிலங்காவுக்கு கடந்த நான்கு பத்தாண்டுகளில் பாப்பரசர் பயணம் மேற்கொண்ட மூன்று தருணங்களிலும், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிறிலங்காவுக்கு முதல்முறையாக பாப்பரசர் ஒருவர் பயணம் மேற்கொண்டது, 1970ம் ஆண்டு டிசெம்பர் 4ம் நாளாகும். அப்போது பாப்பரசராக இருந்த நான்காவது போல், கொழும்பு வந்த போதும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தது. பாப்பரசருக்கு சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ஐதேகவைச் சேர்ந்த பிரதமரான டட்லி ச…
-
- 1 reply
- 752 views
-
-
சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகளை வலியுறுத்துகிறார் பாப்பரசர் JAN 14, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையையும், உண்மையான நல்லிணக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரையாற்றும் போதும், நேற்றுமாலை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த மதத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போதும், இதனை வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், கடந்தகால மனித மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “சிறிலங்கா அழகி…
-
- 0 replies
- 438 views
-
-
சீன-அமெரிக்க உறவுகளின் பண்புகள் மற்றும் அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் : ஓர் ஒப்பீடு JAN 13, 2015 | 17:34by புதினப்பணிமனைin கட்டுரைகள் இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 2014ல் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றி, இந்தியாவை பெரிய அளவிலான அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை செய்வதற்கும், உள்ளக அளவிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான திறனைக் கொண்ட அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி. கிழக்காசிய மற்றும் அவுஸ்திரேலிய பகுதி கடந்த ஆண்டு இறுதி விடுமுறை நாட்களுக்கு முன்னதாக உலக வல்லரசுகளின் தலைவர் எல்லோரதும் பயண மையமாக இருந்தது. ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் கூட்டம், ஆசியான் நாடுகளின் கூட்டம், பெரிய இருபத…
-
- 0 replies
- 462 views
-
-
புலம் பெயர் தேசத்தில் இருந்து நடுநிமையோடு செய்திகளை உடனுக்குடன் வாசகா்களுக்கு தந்து வந்த செய்தி இணையதளம் கடந்த 2014 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் இலங்கையில் அறிவித்தல் எதுவுமின்றி அப்போதைய அரசாங்கத்தால் தடைப்படுத்தப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இலங்கையில் தற்போது திடீர் ஆட்சிமாற்றம் ஏற்ப்பட்டு புதிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாகியுள்ள நிலையில் எமது இணையதளம் மீதான தடை முடிவை மறுபரிசீலணை செய்யுமாறு கோரியதற்கமைய - இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து தமிழ் சிங்கள ஆங்கி மொழி ஊடகங்கள் மீதான தடைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக புதிய அரசு பதிலளித்திருந்தது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செய்தி இணையதனம் உள்ளிட்ட 7 தமிழ் இணையத்தளங்களது தடை அகற்றப்பட்டு இல…
-
- 0 replies
- 552 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு, சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்தும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து பாப்பரசர் பிரான்ஸிஸ் பதில் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இதனை வலியுறுத்தியுள்ளார். இது சம்பந்தமான கடிதம் ஒன்றை அவர் அண்மையில் பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் இனப்படுகொலைகளை சந்தித்த மக்களை பார்த்து, உண்மை நிலவரங்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.pathivu.com/news/36920/57//d,article_full.aspx
-
- 2 replies
- 691 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக மு…
-
- 21 replies
- 3.6k views
-
-
இலங்கையில்தான் இருக்கிறேன்: குமரன் பத்மநாபன் By dn, கொழும்பு First Published : 12 January 2015 02:29 AM IST புகைப்படங்கள் "இலங்கையில் இருந்து நான் வெளியேறும் திட்டம் இல்லை' என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரான "கே.பி' என அழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறினார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், "நான் இலங்கையில்தான் இருக்கிறேன்' என்று அவர் தெரிவித்தார். இலங்கை வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சியில் உள்ள தனது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: போரினால் பாதிக்கப்பட்ட மக்க…
-
- 18 replies
- 1.3k views
-
-
கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த JAN 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து. இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்ததுடன், சி…
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தமது வாக்குப்பலத்தைப் பிரயோகிப்பதற்காக எந்தவித தயக்கமுமின்றி செயற்பட்ட லட்சக்கணக்கணக்கான வாக்காளர்களை கனடா பாராட்டுவதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவையும் கனடா வரவேற்றுள்ளது. புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கனேடிய அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயாட் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலின் போது பிரதான பங்கினை வகித்த இலங்கையின் குடியியல் சமூகம் மற்றும் குடியியல் சமூகம் சார்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகளை கனடா மதிப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்கள் தங்களின் வி…
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இலங்iயில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென பிரபுக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விவாதம் நடத்தப்பட உள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கடந்த மாதமும் விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கண்காணிப்பாளர்களை தேர்தலின் போது ஈடுபடுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்றில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. http://tamil24news.com/news/2015/01/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 411 views
-
-
ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் கூறுவதைப் போல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில் பதவியை விட்டு விலகிச் செல்லவில்லையென, ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் இதனை இராஜதந்திர முறையில் அணுகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டு மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்திலேயே நான் இதனை கூறுகிறேன். மேலும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், 6 வருடங்களின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடந்ததே நமக்கும் நடக்கும். ஜனாதிபதி மைத்திரி புலிகளின் வாக்குகளால் வெற்றியீட்டியதாக முன்னாள் ஜனாதிபதி கூறும் கூற்றில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். h…
-
- 2 replies
- 608 views
-
-
புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவை விவரங்கள் ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் கபீர் ஹாசி…
-
- 20 replies
- 1.6k views
-
-
வரும் 18ம் நாள் புதுடெல்லி செல்கிறார் மங்கள சமரவீர – வேகமெடுக்கும் உறவு JAN 13, 2015 | 10:27 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று வரும் 18ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார். நேற்றுமாலை வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற, மங்கள சமரவீரவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றிரவு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 18ம் புதுடெல்லி வருவதாக அறிவித்துள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் உறுதிப்படுத்தியிருக்கிறார். முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜகபக்சவின் காலத்தில்,…
-
- 0 replies
- 532 views
-
-
மக்களால் நிராகரிக்கப்பட்டு தேர்தலில் தோல்வியடைந்த ஒருவரினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூடி என்னை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்தனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக கட்சியின் சிரேஸ்ட உப தலைவராக நான் கடமையாற்றியிருக்கின்றேன். இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் தலைவரும், செயலாளரும் தனித்தனியாக போட்டியிட்டனர். நான் தலைவரின் வெற்றிக்காக உழைத்தே…
-
- 0 replies
- 510 views
-
-
நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச தலைமையிலான நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார். நீலப்படையணி ஊடாக அரச நிறுவனங்களுக்காக வெற்றிடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இளைஞர், யுவதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சம்பிக்க தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மையில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சம்பிக்கவின் குற்றச்சாட்டை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர…
-
- 0 replies
- 547 views
-
-
அமைச்சர்கள் பதவியேற்பின் போது சுவாரஷ்ய சம்பவங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பின் போது சில சுவாரஷ் யமான சம்பவங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்களுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்க ப்பட்டன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதங்களை வழங்கும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் அதிகாரி ஒருவர் அமை ச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடங்கிய அனைத்து கோப்புக்களையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி …
-
- 1 reply
- 1.7k views
-
-
தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள கிணறுகளில்; எண்ணெய் கசிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் தலைமையில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது. அளவெட்டி, மல்லாகம், கட்டுவன், இளவாலை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர். தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் உரையாற்றுகையில்; பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 1200க்கும் மேற்பட்ட கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நீரை குடிநீராகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிப்படைந்த குழந்தைகளாக பிறக்கும் என…
-
- 0 replies
- 458 views
-
-
மகிந்தவை படுகுழியில் தள்ளியவரும் சிங்கப்பூருக்கு பயணம் JAN 12, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் நாளை நிர்ணயித்தது, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்து, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தது என எல்லாவற்றையும் மகிந்த ராஜபக்சவின் சோதிடரான சுமணதாசவே மேற்கொண்டிருந்தார். மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த 8ம் திகதி மிகவும் நல்ல நேரம் என்றும், அது அவருக்கு ராஜ யோகத்தை அ…
-
- 1 reply
- 1k views
-