ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றி, தமிழ்ஈழம் வரைபடத்துக்கு சமமானது என்று முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இது குற்றச்சாட்டு இல்லை. சிறுபான்மைக்கட்சிகள் முழுமையாக பிரிவினையை கோரி நிற்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் சமஸ்டியை வலியுறுத்தி வருகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இதற்கு ஆதரவு வெளியிடுகிறார். இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் இருந்து 450, 000 வாக்குகள் மைத்திபாலவுக்கு கிடைத்துள்ளன. எனவே இது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல என்று கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124397&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 790 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்து மும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று கொண்டார். கொழும்பிலிருந்து இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து மல்வத்தை , அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்று கொண்டார். இதற்கு பின்னர் கண்டி ஆயர் இல்லத்திற்கு சென்று ஆயர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிகளையும் பெற்றுகொண்டார். மேலும் கண்டியில் உள்ள மீராமக்காம் பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இந்த விஜயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.virakesari.lk/articles/2015/01/11/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D…
-
- 1 reply
- 480 views
-
-
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முழுமையாக ஜனநாயகமானதல்ல என பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பு குழுவின் தலைவர் டொக்டர் பாரத் ஜக்டோ தெரிவித்துள்ளார். ஜனநாயகத் தேர்தலுக்கான நியமங்களுக்கு புறம்பான செயற்பாடுகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரான காலப்பகுதியில் அதாவது பிரச்சார காலத்தில் இவ்வாறான நிலைமையை அவதானிக்க முடிந்தது. 81.52 வீதமானவர்கள் வாக்களித்துள்ளமை இலங்கை மக்களின் ஜனநாயக செயன்முறைக்காக ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. தேர்தல் முடிவுகளை அநேக தரப்பினர் ஏற்றுக்கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றது. கடுமையாக அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதுடன், எதிர்க்கட்சி வேட்…
-
- 0 replies
- 273 views
-
-
நாட்டுக்கு தேவை ஓர் மன்னரின் சேவையல்ல, மெய்யான மனிதரின் சேவை என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதலாவது உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்கள் நாடாளுமன்றம், நீதிமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். விவசாய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரமான அரச சேவையொன்று, பக்கச்சார்பற்ற பொலிஸ் சேவையொன்று உருவாக்கப்படும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள தொழிலாளர்ளின் பொருளாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் அபிவிருத்தியில் காணப்படும் ஊழல், மோசடிகள் முறைகேடுகள் இல்ல…
-
- 0 replies
- 272 views
-
-
வடக்கில் புலிக் கொடியா? நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என, நான் மகாநாயக்க தேரரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுகிறது. புலிக்கொடி எங்கும் இல்லை எனவும், தமிழர் கூட்டமைப்பு புலிக்கொடியை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. நாட்டுக்குள் தமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருமாரே கோருகின்றனர். யாழ்ப்பாண நிலமை குறித்து அந்த பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் …
-
- 1 reply
- 675 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் முன்னரைப் போன்றே பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இருவருக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கும் முன்னரைப் போன்றே இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தல் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன் போது இராணுவப் பாதுகாப்பு …
-
- 0 replies
- 258 views
-
-
மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் இப்போது எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான பங்கைப் பெற்ற முல்லைத்தீவின் ரகசியம் என்ன? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதி. அமைதியான அந்த சிறுநகரத்து இளைஞர்கள் சில பட்டாசுகளை வாங்கிக் கொழுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன் வெடிசத்தத்தை மீறி அங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் சந்தோசக் கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் புலிகளின் கோட்டையாக இருந்த இந்த நகர இளைஞர்கள் நீண்ட இடைவெளியின் பின்னர் இப்படி…
-
- 1 reply
- 2k views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆக்கபூர்மான வழிகளிலும், நம்பகத் தன்மையுடனும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலம்பெயர் சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டுமென குளோபல் தமிழ் போரம் அமைப்பு கோரியுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சிறுபான்மை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்த விடயம் தெளிவாக புலப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கில் மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் ஆதரவளித்த போதிலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் …
-
- 0 replies
- 276 views
-
-
புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம் பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36811/57//d,article_full.aspx
-
- 17 replies
- 1.9k views
-
-
மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/137427#sthash.fa3rU62K.dpuf
-
- 0 replies
- 540 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவுதினம், சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் முன்னுள்ள முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கேசிவஞானம், மற்றும் வடமாகாண சபையின் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். http://www.tamilmirror.lk/137420#sthash.OotoVFxG.dpuf
-
- 3 replies
- 410 views
-
-
முக்கிய அமைச்சர்கள் 16 பேரின் தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய மகிந்த! நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதிய அமைச்சர்கள் 16 பேர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, அதவுல்லாஹ், எஸ்.பி. திஸாநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, டிலான் பெரேரா, மஹிந்தானந்த அளுத்கமகே, மேர்வின் சில்வா, ரெஜினோல்ட் குரே ஆகியோர் உட்பட மற்றும் பல அமைச்சர்களின் தொகுதிகள் இதில் அடங்குகின்றன. http://www.deepamnews.com/details.php?nid=3&catid=22829&hit…
-
- 2 replies
- 395 views
-
-
தேர்தலின் பின்னரான தமிழர் அரசியல் நிலைப்பாடு தொடர்பான கேள்விகள்: -அ.நிக்ஸன்- இலங்கைத் தேசியம் என்ற நீரோட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து விட வேண்டும் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான இடத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டது என்ற நம்பிக்கையும்; உண்டு. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த தோல்வியடைந்தார். -அ.நிக்ஸன்- 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றிய…
-
- 1 reply
- 287 views
-
-
அரசாங்கத்தை சுதந்திரமாக விமர்சிக்கலாம் - ராஜித - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மாற்றுக்கருத்துடையோர், மற்றும் ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின வெப்தளங்கள்மீதான தணிக்கையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,இது தவிர தொலைபேசிகளை இடைமறித்து ஓட்டுக்கேட்டல்,ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை கண்காணித்தல் போன்றவற்றையும் உடனடியாக கைவிடுமாறு கேட்டுள்ளார், என தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடி…
-
- 19 replies
- 832 views
-
-
நெருக்கடியில் மைத்திரி: நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல்! இன்று அமைச்சரவை நியமனம் நடக்குமென அறிவிக்கப்பட்ட போதும், அது பெரும்பாலும் தள்ளிப் போகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதில் மைத்திரி இன்னும் வெற்றியடையாததால், மைத்திரி தரப்பில் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது மைத்திரி பக்கம் 98 பாராளுமன்ற உறுப்பினர்களும், மகிந்த ராஜபக்ச பக்கம் 118 உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைப்பதற்கு 115 உறுப்பினர்கள் தேவையென்ற நிலையில், இதுவரை அந்த இலக்கை மைத்திரி தரப்பு எட்டவில்லை. இதனால் அமைச்சரவை நியமனம் சில தினங்கள் தள்ளிச் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுதவிர, ஏற்கனவே அறிவ…
-
- 1 reply
- 592 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன் என வடமாகாண மு தலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே கௌரவ மைத்திரிபால சிறிசேன. அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். அதுமட்டுமல்ல. அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாதிருக்கும் …
-
- 12 replies
- 1.4k views
-
-
அடுத்தமாதம் புதுடெல்லி செல்கிறார் மைத்திரி JAN 11, 2015 | 0:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, அடுத்தமாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அவர் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருக்கிறார். அடுத்த மாதம் மைத்திரிபால சிறிசேன இந்தியா செல்வார் என்று, அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சிறிலங்காவில காவலில் வைக்கப்பட்டுள்ள 15 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுக…
-
- 2 replies
- 580 views
-
-
சிறிலங்காவில் இரண்டு பிரதமர்கள் – சர்ச்சையில் ரணிலின் நியமனம் JAN 11, 2015 | 0:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகப் பதவியேற்றதும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்திருந்தார். ஆனால், முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண தனது பதவியை விட்டு விலக மறுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால், தாம் பதவி விலகத் தய…
-
- 2 replies
- 1.4k views
-
-
கருணாவின் உதவியாளர் இனியபாரதியை மட்டக்களப்பை விட்டே அடித்து துரத்திய மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) வீட்டை வெள்ளிக்கிழமை(09) முற்றுகையிட்ட பிரதேச மக்கள் அவரை பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்துடன், வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு தர்மஅடி கொடுக்கவும் முனைந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைத்துள்ள அவரது விட்டை முற்றுகையிட்டு, சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலைமை மோசமடைந்து செல்வதையடுத்து, அங…
-
- 4 replies
- 1.1k views
-
-
கொழும்பு: கருணா உட்பட 3 முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெளிநாட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன நேற்று பதவியேற்றார். அதேபோல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ராஜபக்சே தமது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அம்பாந்தோட்டையில் உள்ள தமது ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் சென்று தஞ்சமடைந்துவிட்டார் ராஜபக்சே. இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்த கருணா மற்றும் 2 முக்கிய அரசியல…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தீவிரம் காட்டியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் இந்தத் தகவலை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை வேளையில் பாதுகாப்புச் செயலாளர் கடும் கவலையுடனும் கோபத்துடனும் காணப்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோல்வியை ஏற்றுக்கொள்வதில் பாதுகாப்புச் செயலாளருக்கு உடன்பாடு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆட்சி மாற்றத்திற்கு உடன்பட்டதாகவும் கோதபாய அதனை விரும்பவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. கோதபாய ராஜபக்ஸ யாருடனும் பேசவில்லை எனவும், கடும் அதிர்ச்சியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுக…
-
- 10 replies
- 925 views
-
-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின், துபாய் ஊடான அமெரிக்காவின் லோஸ்ஏஞ்சல் நகருக்கான விமானத்தில் அவர் பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவும் இதன்போது பயணித்துள்ளார். (அத தெரண தமிழ்)
-
- 0 replies
- 602 views
-
-
மகிந்தவின் திட்டத்தை சிறிலங்கா இராணுவமே தோற்கடித்தது JAN 10, 2015 | 14:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பு நகரில் சிறிலங்கா இராணுவத்தை நிலைநிறுத்த இறுதி நேரத்தில் மகிந்த ராஜபக்ச முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது உத்தரவுக்கு இராணுவத் தளபதி இணங்க மறுத்து விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். “கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார். அவசரகாலச்…
-
- 3 replies
- 951 views
-
-
அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே இன்னமும் இருக்கிறார் கோத்தா JAN 11, 2015 | 1:46by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, செய்திகள் வெளியாகிய போதிலும், அவர் தொடர்ந்தும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து, கோத்தாபய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், அவர், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், இன்னமும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே …
-
- 0 replies
- 952 views
-
-
தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தின் முத்த அதிகாரிகள் கொழும்பு திரும்புகின்றனர் JAN 11, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும், பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகியோரே நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா தோல்வியடைந்ததையடுத்து, சிறிலங்கா அரசாங்கத்தினால், கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். தற்போ…
-
- 0 replies
- 2.3k views
-