ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143541 topics in this forum
-
சுழிபுரத்தில் அனந்தி வீட்டின் மீது அதிகாலையில் தாக்குதல் JAN 06, 2015 | 0:28by கார்வண்ணன்in செய்திகள் தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்கார்டியன், ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் வெளியிட்டுள்ளார். சுழிபுரம் வடக்கம்பரையில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 1.30 மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டதாகவும், தான் எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து தாம், தொலைபேசி மூலம், காவல்துறையினருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் …
-
- 14 replies
- 828 views
-
-
வங்கிக் கிளைகளின் அடர்த்தியில் வடக்கு மாகாணமே முதலிடம் – சுரண்டப்படும் தமிழர் நிதி JAN 06, 2015 | 10:13by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிற்குப் படையெடுத்த வங்கிகள், கடன்களைக் கொடுத்தும், தமிழர்களின் முதலீடுகளைச் சுரண்டியும் வருவதாக கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் வெளியிட்டுள்ள மாகாண வங்கிக் கிளைகளின் அடர்த்தி தொடர்பான அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. இது வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கள் வங்கிக் கிளைகள் திடீரெனப் பெருகியுள்ளதை வெளிப்படுத்தியிருக்கின்றன. மேல் மாகாணத்தை விடவும், வடக்கு மாகாணத்திலேயே வங்…
-
- 0 replies
- 481 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ளமை குறித்து ஐநா கரிசனை வெளியிட்டுள்ளது:- 06 ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வன்முறைகள் தீவிரமடைந்துள்ளமை குறித்த தனது கரிசனத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனெ; துஜாரிக் இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்களை, ஏன் இன்று நடைபெற்ற சம்பவங்களை கூட நாங்கள் அவதானித்துள்ளோம், நல்லிணக்கத்தையும், அரசியல் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்குமாறும், தேர்தல்கள் அமைதியானவையாகவும், சிறுபான்மையினர் அச்…
-
- 3 replies
- 691 views
-
-
செவ்வாய், ஜனவரி 6, 2015 - 08:23 மணி தமிழீழம் | சயந்தன் இராணுவத்தல் சுவீகரிக்கப்பட்ட காணிகளை வாக்குகளைப் பெறுவதற்காக மீளக் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம்! இராணுவ முகாம்களை நிர்மாணிப்பதற்காக சம்பூர் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகளை, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மீளக் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது, கிட்டத்தட்ட வடக்கிலிருக்கும் படையினரை விலக்குவதற்கு ஒப்பானது என ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டினார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எங்களது உயிரைப் பணயம் வைத்து அப்பகுதிகளுக்குச் சென்று, இராணுவத்தினரை ஊக்கப்படுத்திய எங்களுக்கு புலி…
-
- 1 reply
- 622 views
-
-
நாட்டை பிரிப்பதற்கே எதிரணி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்றுவது அனைத்து மக்களதும் கடமையாகும். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி விடக்கூடாது. அவ்வாறான சூழ்நிலை உருவானால் மஹிந்த ராஜபக் ஷ உட்பட அனைவரும் பருப்பு சாப்பிட வேண்டியேற்படும் என பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; பொது எதிரணியினர் நாட்டை மீண்டும் பழை…
-
- 0 replies
- 724 views
-
-
1cae5c1f8899f5a8b75fbfde83d45933
-
- 2 replies
- 582 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு தலைவர்களான மகிந்த ராஜபக்சவும் சரி, மைத்திரி சிறீசேனாவும் சரி ஒரு நாயணத்தின் இரு பக்கங்கள் என தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளரும் தமிழின உணர்வாளருமான அய்யநாதன் அவர்கள் கூறியுள்ளார். பதிவு இணையத்திற்காக அவர் வழங்கிய கருத்துப் பகிர்வை கீழே முழுமையாகக் கேட்கலாம். http://www.pathivu.com/news/36663/57//d,article_full.aspx
-
- 0 replies
- 410 views
-
-
மஹிந்தவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர் மீது வாள்வெட்டு 06-01-2015 12:35 AM -பொ.சோபிகா யாழ். கோப்பாய் மத்தி பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தை சேர்ந்த ஏ.சந்திரகுமார் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போதே இவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/137069#sth…
-
- 1 reply
- 690 views
-
-
இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று தகவல்கள் கூறுகின்றன. நீருக்கடியில் முதலாவது தேடுதல் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் …
-
- 5 replies
- 538 views
-
-
அரசிலிருந்து சில தவளைகள் பாய்வதினால் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை. எனினும் இந்த நாட்டின் மக்கள் அங்கும் இங்கும் பாயக்கூடியவர்கள் அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது பாருங்கள் இங்கிருந்து சென்ற அனைத்து அவன், அவள்களும் உயிர் அச்சுறுத்தல் என்றே சொல்கிறார்கள். நன்றாக சொல்லிக் கொடுத்து சொல்லப்படுவதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஒருகாலத்தில் என்னை ஹிருனிகா தந்தை எனக் கூறிக்கொண்ட ஒருத்தி, உயிர் அச்சுறுத்தல் என கூறிவருவதாகவும் அவளை தாம் ஒருத்தி என கூறமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறியவர்கள் பற்றி தாம் பேச போவ…
-
- 6 replies
- 3.7k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என சுயாதீன சோதிடர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் சோதிடர்களான நாத்தாண்டியே பீ.டி. பெரேரா, காமினி புளத்சிங்கள, கே.ஏ.யூ. சரத்சந்திர ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் எனவும், பெண் ஒருவர் இதற்கு தலைமையேற்பார் என்றும், எதிர்பாராத நபர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தாம் கூறிய சோதிட எதிர்வுகூறல் உண்மையாகியுள்ளதாகவும் நாத்தாண்டியே பீ.டி. பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு பல ராஜயோகங்கள் இருப்பதனால் ஜனாதிபதித் தேர்தலில்…
-
- 2 replies
- 850 views
-
-
திடீரெனப் பலமிழந்தவராக தோற்றமளிக்கும் சிறிலங்கா அதிபர் – பிபிசி JAN 06, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இளைத்து – பலவீனமானவர் போலத் தோற்றமளிப்பதாக, பிபிசியின் செய்தியாளர் சாள்ஸ் ஹவிலன்ட் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிரணியினர், பொருத்தமான வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு முன்னதாக, தேர்தலை நடத்தி விடவேண்டும் என்று முந்திக் கொண்டு தேர்தலை அறிவித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். சிறிலங்காவில் ஆளும்கட்சியை நோக்கி கட்சி தாவுவது வழக்கம் என்றாலும், தற்போது நிலைம…
-
- 0 replies
- 832 views
-
-
தாவல்களின்றி முடிந்தது மைத்திரியின் இறுதி பரப்புரை கூட்டம் JAN 06, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான நேற்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று எந்த கட்சித் தாவல்களும் இடம்பெறவில்லை. நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வரவிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு மருதானையில் இடம்பெற்றது. இந்த இறுதிப் பரப்புரை மேடையில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பில் இருந்து பலர் கட்சி தாவலாம் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன. எனினும், அரசதரப்பில் இருந்து எவரும் நேற்றிரவு எதிரணியின் மேடையில் இண…
-
- 0 replies
- 455 views
-
-
களைகட்டாத மகிந்தவின் கடைசிப் பரப்புரை மேடை JAN 06, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது. நேற்றைய இறுதிப் பரப்புரைக் கூட்டத்தில், எதிரணியின் முக்கிய தலைவர்கள் சிலர், ஆளும்கட்சியுடன் இணையலாம் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன. சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, ஹரின் பெர்னான்டோ உள்ளிட்டோர், அரசதரப்புக்குத் தாவலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், எதிரணியினரோ, ஆளும்கட்சியின் முக்கிய தலைவர்களோ இல்லாமல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இறுதிப் பரப்புரை மேடையில் அமர்ந்திருந்தார். விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் மட்டு…
-
- 0 replies
- 512 views
-
-
மைத்திரியின் இறுதிப் பரப்புரைக் கூட்டத்துக்கு கடும் பாதுகாப்பு JAN 06, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மருதானையில், நேற்றிரவு நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டம், நள்ளிரவு வரை இடம்பெற்றது. இரவு 11.30 மணியளவில் பரப்புரை கூட்ட மேடைக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, குண்டுதுளைக்காத கண்ணாடிக்குப் பின்பாக நின்றே உரையாற்றினார். மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்பதால், சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் நேற்றைய கூட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். அவரைச் …
-
- 0 replies
- 394 views
-
-
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தினார் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் தமது தேர்தல் பிரசார பணிகளுக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயற்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறினார். தாம் வெற்றியீட்டினால் நாடு பிளவுபடும் என சு…
-
- 34 replies
- 2.2k views
-
-
கடந்த 2ம் திகதி இணையத்தளமொன்றில் எமது கட்சி ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட போகின்றது என்றும் அதற்காக இராஜபக்சவிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றிருப்பதாகவும் அவதூறான செய்தி ஒன்றினை திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றது. இச்செய்தியினை எமது கட்சி வன்மையாக மறுப்பதுடன் இது போன்ற மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுகின்றமைக்கு நாம் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாம் இத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம். ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வென்றும், தமிழ் மக்களிற்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் என்பவற்றிற் கெதிராக விசாரணை எதுவும் நடாத்தப் போவதி…
-
- 4 replies
- 481 views
-
-
"அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கும் ஊடகமே இத்தகைய பொய்யான செய்திகளை பரப்பிவருகின்றது" 05-01-2015 கடந்த 2ம் திகதி இணையத்தளமொன்றில் எமது கட்சி ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட போகின்றது என்றும் அதற்காக இராஜபக்சவிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றிருப்பதாகவும் அவதூறான செய்தி ஒன்றினை திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றது. இச்செய்தியினை எமது கட்சி வன்மையாக மறுப்பதுடன் இது போன்ற மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுகின்றமைக்கு நாம் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாம் இத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம். ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வென்றும், த…
-
- 2 replies
- 341 views
-
-
வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதற்கும் சோரம் போனவர்கள் அல்லர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் நின்று அதன் தீர்மானத்தை ஏற்று செயற்படுபவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; இந்த நாட்டிலே 6 தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை. இரண்டு தடவைகள் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான…
-
- 1 reply
- 327 views
-
-
‘ மகிந்தவை வெளியேற்ற ஒன்று திரளுங்கள்’ – முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு JAN 05, 2015 | 0:26by புதினப்பணிமனைin செய்திகள் வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். அதிபர் தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளோம், அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது. இந்த …
-
- 5 replies
- 743 views
-
-
நாம் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் அரசியல் போராளிகளாக இருந்து கொண்டு மக்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். உரிமைக்கு குரலும் உறவுக்குக் கரமும் கொடுக்கும் எமது இணக்க அரசியல் ஊடாக, மக்களின் தேவைகள் இனம்காணப்பட்டு அவற்றுக்கு உரிய முறையில் தீர்வுகாணும் அதேவேளை, நீடித்த நிலையான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதே நோக்கமாகுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். மானிப்பாய் கலாசார மண்;டபத்தில் நேற்று (04) வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையி…
-
- 4 replies
- 563 views
-
-
காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ மற்றும் பிரசங்கவின் வீடுகளுக்கு முன் நாய்த்தலைகள் இனம் தெரியாத நபர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிடோ பெர்ணான்டோ, தாம் உட்பட தமது குழுவினர் நாடு முழுவதும் நடத்தி வரும் வீதியின் எதிர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பாக இது இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். வடக்கிலும் இவ்வாறு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான முனைப்புகளை மேற்கொள்ளும் நபர்களின் வீடுகளுக்கு எதிரில் நாய் தலைகள் வைக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/36644/57//d,arti…
-
- 2 replies
- 483 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (04) வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. இன்றையதினம் தீர்த்தோற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவுறுகின்றது http://www.tamilmirror.lk/136982#sthash.WSXrfJUL.dpuf
-
- 0 replies
- 2.6k views
-
-
ஊவா முதல்வர் சஷீந்திர ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்! – தப்பியோடத் தொடங்கினர் ராஜபக்ஷக்கள் [Monday 2015-01-05 19:00] ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 11.35 மணியளவில் ஸ்ரீலங்கன் விமானம் யூஎல்-846 மூலம் அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். எனினும் அவர் எங்கே புறப்பட்டுச் சென்றார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் விசாலமான பயணப் பொதிகளை எடுத்துச் சென்றதாகவும், விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வாயில் ஊடாக இவர்கள் விமானத்திற்குள் பிரவேசித்ததாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 8ம் திகதி ஜ…
-
- 10 replies
- 769 views
-
-
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் உருவத்தை கொண்ட ஏ. ஆர் சிறிசேனா என்ற ஒருவரின் படத்தினையும் கொடிச்சின்னத்தினையும் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36637/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.6k views
-