Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்தேவி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சுமார் 10 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.ரயில் நிலைய அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார். 24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான ரயில் சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார். அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவு…

    • 22 replies
    • 1.2k views
  2. சனிக்கிழமை, 18 ஒக்டோபர் 2014 11:42 0 COMMENTS -வடமலை ராஜ்குமார் தென்னைமரவாடி கிராம மக்களின் காணி விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும் தழிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினருமான சி.தண்டதயுதபாணி கிழக்கு மாகாண சபையின் 21ஆம் திகதிய அமர்விலே தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளார். தென்னைமரவாடி கிராம மக்களின் பூர்வீக வயல் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்த பெரும்பான்மை இன விவசாயிகளுக்கும் அக்காணியை பங்கிட்டு வழங்க முயற்சி செய்துவரும் கிழக்;கு மாகாண காணி ஆணையாளரின் செயற்பாடு குறித்து கிழக்கு மாகாண எதிர் கட்சித் தலைவரும் தழிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் விடுத்துள்…

    • 0 replies
    • 320 views
  3. -பொ.சோபிகா யாழ்.மாவட்டத்தில் விற்கப்பட்ட ஒருவகை ஷம்போவில் இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்டமை தொடர்பில் அந்நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாவனையாளர் அதிகார சபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்தார். இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்ட ஷம்போ வகையொன்று யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு, குறித்த அந்த ஷம்போ நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது, நீதவான் 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், இவ்வாறு இரண்டு காலா…

    • 5 replies
    • 627 views
  4. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தான் கடந்த வாரம் விடுத்திருந்த, ''பிரிவினைவாதத்தை விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர்தமிழர்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கைவிடவேண்டும்'' என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் 24 மணிநேரத்துக்குள் தனது உறுதிமொழியை நிறைவேற்ற தான் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- புலம்பெயர் தமிழர்களினதும், தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் முக்கிய நிபந்தனையாக நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு காணப்படுகிறது. எனது நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அமைச்சரவை ஊடாக நான் எனது உறுதிமொழியை நிறைவேற்றுவேன். ஐரோப்பிய ஒன்றிய ந…

  5. -எஸ்.றொசேரியன் லெம்பேட் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அண்மைக்கால கருத்துக்கள் எமக்கு சந்தேகங்களையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. இது போன்ற கருத்துக்களுக்கு கையைக் கட்டிக்கொண்டிருந்தாலும் வாயைப் பொத்திக்கொண்டிருக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை வன்முறையாளர்கள், விரும்பத்தகாதவர்கள் என பொதுமக்கள் மத்தியில் குற்றஞ்சாட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (19) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசாங்கத்தின் கருத்திற்கும் முதலமைச்சரின் கருத்திற்…

  6. "தமிழீழ எண்ணத்திலிருந்து விடுபட்டால் மட்டுமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளமை மிகவும் கீழ்த்தரமானது. சிங்களக் கோமாளியின் கதை போன்றதே ஜனாதிபதி மஹிந்தவின் அறிவிப்பு உள்ளது." - ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "சட்டவிரோத தேர்தலில் போட்டியிட்டாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தப்புக் கணக்கு போடக்குகூடாது. ஏற்கனவே இழைத்த தவறை ரணில் மீண்டும் மீண்டும் இழைக்கக்கூடாது". குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தப் போராடும் மஹிந்தவை தனிமைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ …

  7. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் தொண்டமான் பெருந்தோட்ட சமூகத்திற்கு ஜனாதிபதி அளித்த உதவிக்காக நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி, வீடமைப்பு, உள்சார் கட்டமைப்பு பிரச்சினைகளை பெருந்தோட்ட சமூகம் எதிர்கொண்டிருந்தது. அவற்றிற்கு ஜனாதிபதி தீர்வைக் கண்டுள்ளார் என அமைச்சர் தொண்டமான் கூறியுள்ளார். இதேவேளை செந்தில் தொண்டமான் ஊவா மாகாண சபை அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார். http://thinakkural.lk/article.php?local/xq3muubexo3222687fd5c7e012176zddqu142dfb2da70e5083b3c6a7lwpcd#sthash.eVajUEQR.dpuf

  8. அடிக்கல் நாட்டு விழா மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் தொங்கு பாலததுக்கு அருகாமையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள சுற்றுலா உணவகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/130471-2014-10-19-15-16-44.html

  9. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலரிமாளிகையில் நடைபெற்ற ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்குகொண்ட கூட்டத்திலேயே ஹக்கீம் இவ்வாறு உறுதியளித்திருக்கின்றார். அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தான் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக அங்கு அறிவித்தார். அதன்போதே ஹக்கீம் தன்னுடைய நிலையை விளக்கியதாக சிங்களத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் டியூ குணசேக்கர இந்தத் தேர்தல…

  10. பேய்கள் ஆடும் கரகத்தில் தாடிச்சாத்தானும் குட்டிச்சாத்தான்களும் பாடுகின்றன: சிறிதரன் பேய்கள் ஆடும் கரகத்தில் சாத்தான்கள் பாட்டு பாடுகின்றன. தாடியோடு ஒரு சாத்தானும் அதனோடு சேர்ந்து குட்டிச்சாத்தான்களும் பேய்களுக்காக பாட்டுப்பாடுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார். தமிழசுரக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையின் மாவட்ட மாநாடு, நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'தமிழர்களுக்கு தீர்வு தமிழீழம் என 1976ஆம் ஆண்டில் தந்தை செல்வா கூறினார். இன்று அவர் உயிருடன் இல்லை. அதையே பிரபாகரன் சொன்னார். ஆனால் அவர் இன்ற…

  11. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர்விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று 18.10.2014 காலை 11.30 மணியளவில் யாழ். ஏழாலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் வீட்டுக்குச்சென்ற சீருடை அணிந்த இராணுவத்தினர் மாகாணசபை உறுப்பினரிடம் விசாரணைகளிலீடுபட்டுள்ளனர். வசாவிளான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பண்டார எனத்தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அதிகாரியே விசாரணைகளிலீடுபட்டுள்ளார். வீட்டுக்கு வந்த பண்டார தலைமையிலான 03 சீருடை அணிந்த இராணுவத்தினர் அவரது தந்தையிடம், உங்கள் மகன் எங்கே, அவரை விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர். பின்னர் உறுப்பினரை விசாரணை செய்த அவர்கள் உங்களுக்கு த…

  12. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாகவும், தமிழ் தேசிய தலைமையாகவும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வதாக பிரகடனப்படுத்தியிருந்தார்களென அம்பலப்படுப்படுத்தியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி. மஹிந்தவிற்கு மீண்டும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தினில் மேலும் தெரிவிக்கையினில்: தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலம்; பெயர்ந்த மக்களும் பிரிவினை கோருவதையும், தமிழீழம் அமைப்பதையும் கைவிடுவார்களேயானால் தாங்களும் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தமையானது நாட்டிலுள்ள பல்லின மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் ஆதிக்கம் செலுத்துகின்ற புலம்பெயர்ந்தவர்களும் அவர்களில் தங்கியிரு…

  13. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல்களை இரண்டு முக்கிய நாடுகள் ஒட்டுக்கேட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலம் பொருந்திய இரண்டு நாடுகளினதும் உளவுப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல்களை தொடர்ச்சியாக ஒட்டுகேட்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு நாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பதனால், கோத்தபாயவின் தொலைபேசி உரையாடல்கள் தெளிவற்று போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 8-10 நிமிட உரையாடல்களின் பின்னர் தொலைபேசி தெளிவற்று போவதுடன் இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் இரகசியமாக ஒட்டு கேட்பதனால் இவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோ…

  14. வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க நீதிமன்றம் செல்வோம்– TNA 19 அக்டோபர் 2014 வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்லத் தடை விதித்தமைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகத் தெர…

  15. –வடிவேல் சக்திவேல் 'எமது வட, கிழக்கு தாயகத்தில் 1766ஆம் ஆண்டுக்கு முன்னர் 26,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் இருந்தது. 1976ஆம் அண்டுக்குப் பின்னர் 11,700 சதுர கிலோமீற்றர் நிலம் இருந்தது. தற்போது 2014ஆம் ஆண்டு 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் மாத்திரமே உள்ளது. இந்த 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலமும் 2020ஆம் ஆண்டு வருகின்றபோது இல்லாமல் போவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கொக்கட்டிச்சோலை கலாசார ம…

  16. வடக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டுப் பிரஜைகள் பயணம் செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விதித்துள்ள வரையறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்ட வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் காணப்பட்ட தடை கடந்த 2011ம் ஆண்டு நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்திற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மீளவும் வட மாகாணத்திற்கு பயணம் செய்வது தொடர்பில் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை ஆரோக்கியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பினால்…

  17. திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பாக 3 சாட்சிகளைத் தேடி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவுக்கு சமர்ப்பித்த ஆவணத்திலேயே இதனை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த மூவருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்றின் பதிவாளர் இது குறித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்ற வேளை வெளிவிவகார அமைச்சினூடாக சாட்சிகளை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்…

  18. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது அவசியம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான நீதியான - நியாயமான விடயங்களை ஆராய்ந்து அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக தடையை நீக்கியுள்ளது. தமிழரசுக் கட்சி மாநாட்டின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்காது விட்டால் திட்டமிட்டபடி தொடரப்படும் அறவழிப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர் சமூகம் ஜனநாயக ரீதியில் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கான வி…

    • 4 replies
    • 762 views
  19. புலிகளின் தடை நீக்கத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்! – வெள்ளவத்தையில் துவங்குகிறது. [sunday 2014-10-19 08:00] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் கையொப்பம் பெறும் நடவடிக்கையை தனியார் போக்குவரத்து அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை வெள்ளவத்தையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர் நாடாளாவிய ரீதியில் இது முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=118978&category=TamilNews&language=tamil

  20. போரின் போது காணிகள், வீடுகளை இழந்தோரின் விபரங்களைத் திரட்டுகிறது பாதுகாப்பு அமைச்சு! [sunday 2014-10-19 08:00] வடக்கு மாகாணத்தில் போரினால் தமது காணி, வீடுகளை இழந்து இதுவரை குடியேற்றப்படாத மக்கள் தொடர்பான விபரங்களை பாதுகாப்பு அமைச்சு திரட்டுகிறது. 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் இருந்து இதுதொடர்பான விபரங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. தற்பொழுது குடியேற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. காணி மற்றும் வீடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்பவர்கள் தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின…

  21. http://tamilnet.com/art.html?catid=13&artid=37436 தீர்ப்பின் ஆங்கில வடிவம்: http://curia.europa.eu/jcms/upload/docs/application/pdf/2014-10/cp140138en.pdf Deutsch: http://curia.europa.eu/jcms/upload/docs/application/pdf/2014-10/cp140138de.pdf French: http://curia.europa.eu/jcms/upload/docs/application/pdf/2014-10/cp140138fr.pdf

    • 200 replies
    • 13.6k views
  22. தமிழ் இனத்தின் காவல்நாய்களாகவே இருக்க விரும்புகின்றோம்:- வடமாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக மனதளவில் கூட நான் எண்ணியிருக்கவில்லை. எம்மை ஆயுத போராட்ட குழுக்களென அவர் அடையாளப்படுத்த முற்பட்டமையாலேயே எம்மிடம் அவ்வாறான 13 உறுப்பினர்கள் உள்ளதாக கூறியிருந்தேன் என கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். தெளிவுபடுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் சில சிங்கள ஊடகங்களும், அரசசார்பு தமிழ் ஊடகங்கள் சிலவும் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நான் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக் நம்பிக்கையில்லா தீர…

  23. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பானது தமிழ் மக்கள் தமது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைப்பதற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வெள்ளிக்கிழமைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத தடைப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு மேற்கொண்ட முறைமை தவறானது என ஜரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறித்து வினவிய போதே இதனை அவர் தெரிவித்திருந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=118958&category=TamilNews&language=tamil

  24. கிளிநொச்சி நோக்கிப் பயணம் செய்த ஐ.நா. உயர் அதிகாரி ஒருவரை பாதுகாப்புத் தரப்பினர் ஓமந்தையில் தடுத்து நிறுத்தி திரும்பி அனுவைத்துள்ளதாக தெரியவருகிறது. உலக உணவு தின நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி செல்லும் வழியிலேயே இந்த அதிகாரி திரும்பியனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஐ.நாவின் உணவு, விவசாய ஸ்தாபனத்தின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான வதிவிடப்பிரதிநிதி குரோபோர்ட் பேர்த் அம்மையாரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இலங்கையில் வடமாகாணத்திற்குச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தேவை என்று கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே குறித்த அதிகாரி கடந்த வியாழக்கிழமை திரும்பியனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து ஐக்கிய நாடுகள…

    • 0 replies
    • 483 views
  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் யாழ். ஏழாலைப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் வீட்டுக்குச் சென்ற சீருடை அணிந்த இராணுவத்தினர் மாகாணசபை உறுப்பினரிடம் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். வசாவிளான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பண்டார எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அதிகாரியே விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கு வந்த பண்டார தலைமையிலான 03 சீருடை அணிந்த இராணுவத்தினர் அவரது தந்தையிடம், உங்கள் மகன் எங்கே, அவரை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர் உறுப்பினரை விசாரணை செய்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.