ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
வடக்குக்கு மூன்றுநாள் பயணமாக வந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துவைத்தார். நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, பின்னர் நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். இதேவேளை வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். அத்துடன் மிக்சார சபையின் பாவனையாளர் அலுவலகத்தையும் அவர் திறந்துவைத்தார். இதேவேளை, நயினாதீவு நாகவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாகவிகாரை விகாரதிபதியையும் சந்தித்தார்…
-
- 0 replies
- 265 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பொது வேலைத் திட்டமொன்றை முன்வைக்க மாதுவாவே சோபித்த தேரர் தீர்மானித்துள்ளார். இந்த வேலைத் திட்டம், விரைவில் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் நேற்று (13) நடைபெற்ற விசேட சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பொருளாதார, சமூக, அரசியல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளை உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுவரும் இந்த வேலைத் திட்டத்திற்கு, பகிரங்க மேடையில் அரசியல் கட்சிகளின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சோபித்த தேரர் இந்தச் சந்திப்பின்போது கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிப…
-
- 0 replies
- 390 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பதவி, முன்னாள் காவல்துறை மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரியவிற்கு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து இந்த பதவி மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அமைச்சின் தற்போதைய செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சிக்கு இராஜதந்திரி பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் ஆலோசகரும், எம்.பியுமான சஜின்வாஸ் குணவர்தனவினால் தாக்கப்பட்ட பிரித்தானியாவின் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ்நோனிஸ் அண்மையில் பதவி விலகியிருந்தார். தற்போது வெற்றிடமாகவுள்ள குறித்த பதவி நந்த மல்லவாரச்சிக்கு வழங்கப்படக்கூ…
-
- 0 replies
- 373 views
-
-
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தில் மசகு எண்ணெய் சுத்திகரிப்புத் தொகுதியின் ஒருபகுதி நிர்மாணப் பணிகள் மேலதிக தொகையுடன் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளின் மதிப்பீட்டைவிட 700 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக செலவிலேயே இந்த நிர்மாணப் பணிகள் Sinopect Engineering என்ற சீன நிறுவனத்திடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள் இந்த நிர்மாணப் பணிகளுக்கான கேள்விமனுக் கோரல்களை சமர்ப்பித்திருந்தபோதிலும் மதிப்பீட்டுக் குழுவினர் நான்கு நாடுகளை மாத்திரமே முன்னர் தேர்ந்தெடுத்திருந்தனர். ஜேர்மனியின் Marveg, ருமேனியாவின் IPIP, அமெரிக்காவின் Vantec மற்றும் தென் கொரியாவின் Keangnam ஆகிய நிறுவனங்களே தேர்ந்தெடுக்கப…
-
- 0 replies
- 302 views
-
-
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றிஇ முப்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தலை நடத்தியதாகவும், ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் போதிய அளவு நிதியை வழங்கியுள்ள போதிலும், அதனை மக்களுக்குப் பயன்படுத்தத் தவறியுள்ளதுடன், அரசாங்கமாகிய தாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களையும் அவர்கள் செய்ய விட…
-
- 5 replies
- 1.3k views
-
-
திருகோணமலை மாவட்டம், குச்சவெளிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள தென்னமரவடிப் பகுதி மக்கள், யுத்தம் முடிந்து தமது இடங்களுக்கு மீளத் திரும்பிய பின்னரும் தமது நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் இல்லை. பதவி சிறிபுர கொலனி குடியேற்றக்காரர்கள் இந்த மக்களின் காணிகளில் தாங்கள் பலவந்தமாக செய்கை பண்ணிக் கொண்டு, இந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வருகின்றார்கள். எனவே இவ்விடயத்தில் உடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். - இத்தகைய சாரப்பட கடிதம் ஒன்றை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும், கிழக்கு மாகாண காணி அமைச்சருக்கும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமா…
-
- 1 reply
- 601 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்யுமாறு அரசாங்கத்தின் ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். பொறுப்பான மற்றும் செயற்பாட்டுத் திறன்கொண்ட ஒருவர் பிரதமர் பதவியை வகிப்பது தேர்தல் காலத்தைப் பொருத்தவரை மிக முக்கியமானது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர்களும், முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், தனிபட்ட அலுவலக உறுப்பினர்களும் இன்று (13) அலரி மாளிக்கைக்கு விசேடமாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டம் பொருளாதார…
-
- 0 replies
- 348 views
-
-
வட பகுதிக்கு செல்லும் வெளிநாட்டுக் கடவுச் சீட்டுடன் வடபகுதிக்குச் செல்வோர் இராணுவனத்தினரால் கண்காணிக்கப்படுகின்றனர். வெளிநாட்டுக் கடவுச் சீட்டுடன் வடபகுதிக்குச் செல்பவர்கள், அங்கு தங்கியிருந்து தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுவதாக கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இவ்வாறு கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வீ.எப்.எம். என்ற வானொலியொன்றுக்கு இராணுவ அதிகாரியொருவர் வழங்கியுள்ள செவ்வியில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வடபகுதிக்குச் சென்று தங்கியிருப்பவர்கள் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக்கொண்டே இந்தக் கண்காணிப்பு…
-
- 1 reply
- 549 views
-
-
அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சுப் பதவி குறித்து எதுவும் பேசப்படவில்லை என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்துழைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்திய போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக வாக்குறுதியளிக்கவில்லை என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதற்கு இன்னமும் காலம் இருப்பதாக சரத் பொன்சேக்கா மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், மகிந்த ராஜபக்ஷவின் போட்டியில் திறமைகளும் அதேபோன்று குறைப்பாடுகளும் இருப்பதாகவும், அதேபோல எமது மக்களும் திறமை…
-
- 0 replies
- 554 views
-
-
இஸ்லாம் மார்க்கத்தின் அல்-குரான் புனித நூலை முடக்குவதற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) நடவடிக்கை எடுத்து வருவதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையில் இஸ்லாமிய மத செயல்பாடுகள் குறித்து தீர்மானங்களை எடுக்கும் ஜம்யத் உலமா சபையின் தலைமையகத்திற்குள் அண்மையில் நுழைந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவர், புனித அல்-குரானின் இரண்டு பிரதிகளையும், அதன் மொழிபெயர்ப்பையும் பெற்றுத்தருமாறு குறித்த சபையின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இவ்வாறு குரானின் இரண்டு பிரதிகளையும், மொழிப்பெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதன் பின்னணியில் அடிப்படைவாதிகளின் செயல்திட்டம் ஒன்று இருக்கின…
-
- 0 replies
- 482 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்தத் தீர்மானம், அரசியல் ரீதியாக பலவீனமானது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவொரு துரஷ்டவசமான, ஏமாற்றமளிக்கும் தீர்மானம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று இன்று (13) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தானோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி ஒருவரோ இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில…
-
- 1 reply
- 561 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு சிங்கள மக்கள் மத்தியிலுள்ள மதிப்பு குறையத்தொடங்கியுள்ள தருணத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதாக இருக்காது என ஏராளமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர். அத்துடன், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தாவிடின், அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக சில அமைச்சர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். ஆளும் கட்சிக்குள் மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஐத் தாண்டியுள்ளதாக அரசாங்கத்தின் தற்போதைய உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றுக் குழுவினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாத அளவிற்கு நிலைமை …
-
- 0 replies
- 457 views
-
-
நகைகளை மீளளிப்பதாக கூறி ஏமாற்றிய ஜனாதிபதி மஹிந்த! [Monday 2014-10-13 09:00] தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்த 2352 பேருக்கு அவர்களது தங்கத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிளிநொச்சில் வைத்து மீளளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று கிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி வெறும் 25 பேருக்கு மாத்திரமே அவற்றை மீளளித்தார். இதனால் தாங்கள் அடகு வைத்த நகைகள் மீள கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காலை முதல் கால் கடுக்க காத்திருந்த 2352 பேர் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். எனினும் இவர்களுக்கான நகைகளை அவர்களுக்கு உரிய இராணுவ சிவில் அலுவலகங்களில் ஒட்டப்பட்ட பெயர் விபரம் உறுதிப்படுத்தப்பட்டத்தை அடுத்து விரைவில் வழங்குவோம் என்று அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, புலிகளிடம் நகைகளை அடகுவை…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடுத்த பிரதமர் மைத்திரிபால? திங்கட்கிழமை, 13 ஒக்டோபர் 2014 10:01 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என, அரசியர் நிபுணர்கள், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவியை, மிகவும் பொறுப்பு வாய்ந்த மற்றும் செயற்திறன் மிக்கதொரு அமைச்சர் பொறுப்பேற்பதானது, தேர்தல் காலத்துக்கு மிகவும் அவசியமானது எனவும் அந்நிபுணர்கள் சுட்;டிக்காட்டியுள்ளனர். இதன்பிரகாரம், நாட்;டின் அடுத்த பிரதமராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படலாம் என்றும் அவரின் பெயர் அப்பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பிரதமர் பதவியை…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யத் தேவையில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் கூறியிருப்பார் என்று நான் நம்பவில்லை என்று தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் நாம் இல்லை என்றும் தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யத் தேவையில்லையென அண்மையில் இங்கிலாந்தில் வைத்து மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்பட்டு வருவதுடன், அக்கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகிறார்கள். எங்களுடைய மக்களுடைய கருமங்களை பொறுத்தவரையில்…
-
- 1 reply
- 791 views
-
-
குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் ஐயா.சச்சிதானந்தம் மறைவு! யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் ஐயா. சச்சிதானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். இவர் ஈழநாடு, யாழ்.தினக்குரல், தினகரன், வாரணம் இணைய வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடகங்களில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இவர் பணியாற்றியவர்.யாழ்ப்பாணத்தில் நிலவிய நெருக்கடியான காலப்பகுதியிலும் ஊடக சுததந்திரம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமயத்திலும் தான் சாரந்த ஊடகங்களில் துணிச்சலுடன் செய்திகளை வெளிகொண்டு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilleader.com/?p=42570
-
- 14 replies
- 678 views
-
-
வெளிநாட்டவர்கள் வடக்கே செல்லத் தடை! – ஓமந்தையுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர். [sunday 2014-10-12 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடபகுதிக்கான மூன்று நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்போர் வடபகுதிக்கு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்கபாட்டி சண்டே ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்போர் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு காரணமாக வடக்குக்கு செல்ல ஆயத்தமாகியுள்ள பல வெளிநாட்டவர்கள், தமது பயணத்தில் மாற்றங்களை …
-
- 2 replies
- 779 views
-
-
யாழ்.பல்கலையில் மலர் வளையம் news யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு என்று எழுதப்பட்ட வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை யார் வைத்தார்கள் என்பது அங்கள்ள எவருக்கும் தெரியாதுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக குறித்த மலர் வலையம் வைக்கப்பட்டுள்ளது. 12 அக்டோபர் 2014, ஞாயிறு 9:15 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=429823536…
-
- 1 reply
- 3.8k views
-
-
படையினரை வெளியேற்றும் அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வெளியிட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை. [sunday 2014-10-12 08:00] தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களிலிருந்து படையினரை உடனடியாக வெளியேற்றி, எதிர்காலத்தில் சிவில் விவகாரங்களில் படையினர் தலையீடு செய்யமாட்டார்கள் என்ற அறிவிப்பை நாளை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி வெளியிட வேண்டும். என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வரும்போது நாம் எதிர்பார்ப்பது என்ன? போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் இன்னமும் எந்த ஒ…
-
- 0 replies
- 399 views
-
-
அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது... என்ற இந்தக் கடிதம் 18 மார்ச் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளியாகி இருந்தது. சம காலத்தின் பிரதிபலிப்புகளோடு இந்த பதிவு தொடர்பு படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானிய சிறுமி மலலாவிற்கு சர்வதேச சமாதானத்திற்கான உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தமையிட்டு உலகம் கொண்டாடுகின்றது.. அந்த மகிழ்வில் நாமும் இணைகிறோம்... இந்த வேளையில், எங்கள் மண்ணில், இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வஞ்சிக்கப்படும் எங்கள் குழந்தைகளை - விபூசிகாக்களை உலகம் கண்டு கொள்ளவில்லையே என்ற எங்களின் தவிப்பு நியாயமானதே. தன் அண்ணாவை தாருங்கள் என்று கேட்டதற்காக இந்த ஈழத்து மலலாவும், தன் மகனைத் தா என்று கேட்டதற்காக அவளது அம்மாவும் தனித்தனியாக பிரித்தெறியப் பட்டார்…
-
- 10 replies
- 1.1k views
-
-
இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் என்று இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதுர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. மதுர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்லான சந்திப்பு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வலய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இராணுவ பிரிவுகளிலான பயிற்…
-
- 4 replies
- 552 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட, குஞ்சுக்குளம் தொங்குபால பகுதியில், புதிய தங்கும் விடுதி ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர்; பா.டெனிஸ்வரன், நேற்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் வட மாகாண முதலமைச்சரின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிதியிலேயே புதிய தங்கும் விடுதி ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை…
-
- 0 replies
- 513 views
-
-
சிற்றரசியான உலகநாச்சியாரின் ஆதாரங்களை அழிப்பதில் பிள்ளையான், கிழக்கு மாகாணத்தின் முதல் சிற்றரசியான உலகநாச்சியார், மட்டக்களப்பு – மண்முனை பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை அழிப்பதற்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் துணைபோயுள்ளார். உலகநாச்சியார் கி.மு.312ம் ஆண்டளவில் மண்முனை பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரது கோட்டை இந்த பகுதியில் உள்ள ஆரம்யம்பதி – கோவில்குளம் பிரதேசத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இது குறித்து ஆய்வு நடத்துமாறு, அதற்கான சான்றுகளுடன் பிள்ளையான் குழுவினர் சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்திடம் மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவுக்கு உடனடியாக பதில் வழங்கியுள்ள தொல்பொருள்…
-
- 0 replies
- 585 views
-
-
உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் தமிழ்ப் பெண்களே என்பதுடன், இதை வரலாற்றில் இன்று காணக்கூடியதாகவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 46 மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு ஒந்தாச்சிமடம் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (04) தலா 100,000 ரூபாய் படி நிதியுதவி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ‘10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான் வழிநடத்தியுள்ளேன். பெண்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள், உணர்வு, சோர்வு, திடகாத்திரம், செயற்பாடுகள் அனைத்தையும் நான் நன்கு அறிவேன். உலகத்துக்கு வீரத்தை …
-
- 125 replies
- 8.6k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி விஜயங்களின் போது இங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி எஸ்.செனரத் விடுத்துள்ள அழைப்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் கடிதத்தில், மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத்தினவினால் 2014 செப்ரம்பர் 23ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும் அட்டவணைப்படுத்தப்படும் விசேட மாவட்…
-
- 2 replies
- 526 views
-